Thursday, October 9, 2014

பத்மநாபசாமி கோவில் புதையல் வரலாறும் வருங்காலமும்:.

பத்மநாபசாமி கோவில் புதையல் 
வரலாறும் வருங்காலமும்:.


அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்
என்று சொல்கிறார்கள். ஆனால், இன்னும் யாரும்
அவற்றை முறையாக மதிப்பிடவில்லை.

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலிலின்
பாதாள அறைகளில் பாதுகாக்கப் பட்டிருந்த தங்க-
வைர அணிகலன்கள், பொற் காசுகள், ஐம்பொன்
சிலைகள் உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களும்
அவற்றின் மதிப்பும் இந்தியாவையே ஆச்சரியப்
படுத்தியிருக்கிறது.



மிகப் பழமையான பத்மநாபசாமி கோவில், 3-ஆம்
நூற்றாண்டில்
கட்டப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
ஆழ்வார்கள் இத்திருக்கோவில் பற்றி பாடியிருக்
கிறார்கள். எனினும், இன்று அக்கோவில் பெற்றுள்ள
தோற்றம், 18-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர்
சமஸ் தானத்தை ஆட்சி செய்த மன்னர் மார்த்தாண்ட
வர்மாவால் கட்டமைக்கப்பட்ட தோற்றமாகும்.

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலின் வடிவமைப்பின்
அடிப்படையில் இக்கோவிலை அமைத்திருக்கிறார்
மார்த்தாண்ட வர்மா.

தமிழறிஞரும் வரலாற்றுப் பார்வை கொண்டவருமான
முனைவர் அருகோ, திருவனந்தபுரம் கோவில்
குறித்தும், மார்த்தாண்ட வர்மாவின் முன்னோர்கள்
குறித்தும் தெரிவிக்கும் கருத்துகள்
முக்கியமானவை.

புரத்தை உள்ளடக்கிய
திருவி தாங்கூர் சமஸ்தானம்
எனப்படுவது "வேணாடு' எனும் தமிழ் மன்னர்கள்
ஆட்சி செய்த பகுதியாகும். கி.பி. 1677-ஆம் ஆண்டில்
மூன்றாம் ஆதித்தவர்மன் திருவடி என்ற தமிழ் மன்னர்
தந்திரமாக விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடைய 5 பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர்.
அரசரின் மனைவி உமையம்மமை, எதிரிகளின்
சூழ்ச்சிகளை முறியடித்து, ஆட்சிப் பீடம் ஏறினார்.

இவரது தொடர்ச்சியாக, நான்காவதாக ஆட்சிக்கு வந்த
பாலமார்த்தாண்டவர்மன் திருவடி என்ற மன்னர்,
மேலைச்சேர நாடு முழுவதும்
வேணாட்டு அரசை விரிவு படுத்தியிருக்கிறார்.

அவருக்குக் கடவுள் பக்தி அதிகம்.
திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாதசாமியிடம் அளவற்ற
பக்திக் கொண்டிருந்தார்.

தமது தலைநகரான
திற்பாப்பூர் என்ற நகரை பத்ம நாதபுரம் என்று பெயர்
மாற்றம் செய்தார். அத்துடன் பத்மநாதசாமிதான்
தனது நாட்டுக்கு அரசர் என்றும், அரச பரம்பரை யினர்
அனைவரும் கடவுளுக்கு அடிமைகள் என்றும்
அறிவித்தார். இதனையடுத்து, கோவிலில் அர்ச்சனை,
நிர்வாகம் உள்ளிட்ட
வற்றை நம்பூதிரி சமுதாயத்தினரும் நாயர்
சமுதாயத்தினரும் அதிகளவில் கொண்ட
குழு ஏற்றுக் கொண்டது.

கடவுள்தான் அரசன் என
அறிவிக்கப்பட்டதால், கடவுள் இருக்கும்
கோவிலிலின் நிர்வாகமும் நாட்டின் நிர்வாகமும்
மெல்ல மெல்ல மலையாளிகளின் கைகளுக்குள்
சென்றது.

வேணாட்டின் கடைசித் தமிழ் மன்னராகக்
கருதப்படும் பாலமார்த்தாண்ட வர்மனுக்குப்
பிள்ளைகள் இல்லாமல் போனதும் இத்தகைய
மாற்றங்களை எளிதாகச்
செய்வதற்கு வசதியாகவிட்டது.
என்பதே முனைவர்
அருகோவின் ஆய்வு முடிவாகும்.

1733-இல் திருவனந்தபுரம்
பத்மநாபசாமி கோவில், தற்போதுள்ள
வடிவத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

நாட்டின் சொத்துக்கள் அனைத்தும்
பத்மநாபசாமிக்கே சொந்தம் என மன்னர்
அறிவித்ததால், அரண்மனையிலிலிருந்த
ஆபரணங்கள், அணிகலன்கள், தங்கம்-
வெள்ளியிலான பொருட்கள் அனைத்தும்
கோவிலில் அமைக்கப்பட்ட 6 பாதாள
அறைகளில் வைக்கப்பட்டன.

இந்த
அறைகளை மலையாளத்தில் "கல்லறா'
என்று அழைக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பல
கோவில்கள் அந்தந்த மாநில அரசுகளின்
நிர்வாகத்திற்குட்பட்டன. ஆனால்,
திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவில்,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச
பரம்பரையினரின்
கட்டுப்பாட்டிலேயே நீடித்தது.

6 பாதாள
அறைகளில் ஒன்றிரண்டு மட்டும் பூசைப்
பொருட்களை எடுப்பதற்கும் வைப்பதற்கும்
திறந்து பயன்படுத்தப்பட்டது.

மற்றவை,
பூட்டியே கிடந்தன.
பத்மநாபசாமி கோவிலை கேரள மாநில
அரசு கையகப்படுத்தவேண்டும் என்றும் அங்குள்ள
பாதாள அறைகளைத் திறந்து அதிலிலிருக்கும்
பொருட்களை கணக்கிட வேண்டும் என்றும்
டி.பி.சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கு,
உச்சநீதி மன்றம் வரை சென்றது.

அவரது மனுவை திருவிதாங்கூர் அரச குடும்பம்
எதிர்த்தது.
கோவிலை அரசு ஏற்பதற்கு அனுமதியளிக்க மறுத்த
உச்சநீதிமன்றம், பாதாள அறைகளைத்
திறந்து அங்குள்ள பொருட்களை மதிப்பீடு செய்ய
அனுமதி அளித்தது.

இதற்கான
ஆய்வை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட
குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்
சி.எஸ்.ராஜன், எம்.என்.கிருஷ்ணன், கூடுதல்
தலைமைச் செயலாளர் கே.ஜெயக் குமார், கோவில்
நிர்வாக அதிகாரி ஹரிகுமார், வழக்கு தொடுத்த
வழக்கறிஞர் டி.பி.சுந்தரராஜன் (இவர் அண்மையில்
மரணமடைந்துவிட்டார்), கேரள
தொல்பொருள்துறை இயக்குநர் ரெஜிகுமார்
இவர்களுடன் அரச குடும்பத்து பிரதிநிதி ஒருவரும்
இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.

போலீஸ் பாதுகாப்பு,
வீடியோ பதிவு ஆகியவற்றுடன் 2011 ஜூன் மாதம்
27ந் தேதி 5 பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத்
திறக்கப்பட்டு, அதிலுள்ள பொருட்கள்
ஆய்வு செய்யப்பட்டன.

தங்கக்குடங்கள், மணிகள் பதித்த
தங்கக்கிரீடம், தங்கச்சங்கிலிகள், வைர-ரத்னக் கற்கள்
பதிக்கப்பட்ட 18 அடி நீள தங்கச் சங்கிலிலி,
பொற்காசுகள், தங்கத்தால் செய்யப்பட்ட யானை,
தங்கத்திலான கைத் தடிகள், பிரெஞ்சு-ஆங்கில
அரசுகளின் நாணயங்கள் உள்ளிட்டவை இந்த 5 பாதாள
அறைகளில் குவிந் திருந்தன.

ஆறாவது பாதாள
அறையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம்
தற்போது சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

பாதாள அறைகளில் உள்ள பொருட்களுக்குத்
துல்லிலியமாக மதிப்பு போடப்படாவிட்டாலும்,
அவற்றின் மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டும்
என்பது பொதுவான மதிப்பீடாக இருக்கிறது.

இதுவரை, அதிகப் பண மதிப்பு உள்ள கோவிலாக
திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான்
இருந்து வருகிறது.

திருவனந்தபுரம் பத்ம
நாபசாமி கோவிலில் உள்ள
பொருட்களை மதிப்பிடும்போது, இந்தியாவின்
பணக்காரக் கோவிலாக இக்கோவிலே திகழும்
என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

பாதாள அறைகளில் உள்ள பொருட்கள் மன்னர்
குடும்பத்திற்குச் சொந்தமானவையா,
கோவிலுக்கே உரியதா, அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டிற்குட்பட்டதா என்று விவாதங்கள்
நடைபெற்று வருகின்றன. மன்னர் குடும்பத்தினரின்
உடைமைகள் இந்த பாதாள அறைகளில்
வைக்கப்பட்டதுபோலவே,
வேணாட்டை விரிவு படுத்துவதற்காக
மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளின்
போது எதிரி நாடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட
தங்கம்- வைரம் ஆகியவற்றாலான பொருட்களும்
இங்கே வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆங்கிலேயர்கள்,
டச்சுக் காரர்கள், மைசூரை ஆண்ட திப்புசுல்தான்
போன்றோ ரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
மீது படையெடுத்து வந்தார்கள்.

அவர்களிடமிருந்து அரசின் கஜானாவைக்
காப்பாற்றுவதற்காக அதிலிலிருந்த பொருட்களும்
இந்த பாதாள அறைகளில்தான்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

அரச நிர்வாகத்தின் கீழிருந்த கருவூலம், கோவில்,
பிறநாட்டிலிருந்து கொண்டு வந்தவை என
அனைத்தும் கோவிலிலின் பாதாள அறைகளில்
சேமித்து வைக்கப் பட்டிருப்பதை வரலாற்றினைப்
புரட்டும்போது அறிய முடிகிறது.

இந்தியாவில்
மன்னராட்சியும் மன்னர் குடும் பத்துக்கான
மானியமும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தப்
பொருட்கள் அனைத்தும் அரசுக்கே உரியதாகும்
என்கிறார்கள் வரலாற்று வல்லுநர்கள் பலரும்.

அரிய
ஆபரணங்களை அருங்காட்சியகத்திலும்,
வழிபாட்டுக்கான
பொருட்களை கோவில்பயன்பாட்டிற்கும்,
மீதமுள்ளவற்றை மக்கள் நலன் சார்ந்த
திட்டங்களுக்காகவும் பயன்
படுத்துவதே பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும்
இருக்கும்....

No comments:

Post a Comment