Saturday, September 24, 2016

மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்

தேய்பிறை  அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும்
மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை  அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன்.  ஈசனருளால் பயன் படுத்தி  அனைவரும் பலன்பெற அவன் தாள் வணங்கி வாழ்த்துகிறேன்.இதுவும்  பலர் பபயன்படுத்தி வரும்  ஓர்  ரகசிய வழிபாட்டு முறையாகும்.

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்.அவரவர்களுக்கு தற்போதைய நடப்பு திசா கிரகத்தை அறிந்து கொண்டு கீழே உள்ள படி அந்த கிரக வழிபாடுகள் செய்ய கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் பைரவர் அருளால்  பெருகும் .

                            🌻🌻🌻
சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்

"ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்"

"ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்"

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
                 
செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி

"ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்"

செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வராஹி ப்ரசோதயாத்"

புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

"ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்"

குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.

○○○○○○○○○○○○○○○○○○○○○○○

சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி

"ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்"

சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.

□□□□□□□□□□□□□■□■

சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி

"ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்"

சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧

ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ

"ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ: சண்டி ப்ரசோதயாத்"

ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

"ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; காளி ப்ரசோதயாத்"

கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

No comments:

Post a Comment