Tuesday, August 17, 2021

நாகலிங்கப்பூ விசேஷங்கள்

நாகலிங்கப்பூ விசேஷங்கள் 
இதுவே கடவுள்.   இந்தப் பூவுக்குள்ளே தானே இறைவன் இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.

நாகமுமிருக்கிறது …………..உள்ளே 🌹🌹🌹லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு 🌹மினியேச்சர் 🌹கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும். கயிலாயம் கண்ணுக்குள் விரியும்
சிவபூஜைக்கு உரிய அஷ்ட மலர்களில் இது இடம் பெற வில்லை. பூமிக்கு வந்த சிவ மலர் என்பதாலோ என்னமோ விசேஷமான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க வடிவத்தைப் பெற்றுள்ளது.  பாம்புகள் விரும்பி தஞ்சம் புகும் மரமாக நாகலிங்க மரம் உள்ளது . 

 விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக  வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று ….தான் பூப் பதற்கு  என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
“💞ஷல்பூல்” என்றும் “💞கைலாஷ்பதி” என்றும் வடநாட்டவரும்  “நாகவல்லிப்பூ” ” 💞மல்லிகார்ஜுனப்பூ”💕என்று தெலுங்கர்களும் பய பக்தியுடன் அழைக்கிறார்கள். வந்காலமோ இதனை “💖நாககேஷர்”💖என்கிறது. நாகலிங்க மரத்திற்கு ஏனைய தாவரங்களைப் போல பருவகால மாற்றங்கள் கிடையாதாம். என்றும் பசுமையான மரம் என்று போற்றப்படுகிறது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
நாகலிங்கப் பழம் மகா விசேஷம்  ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம். 

அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் 🌈🌈🌈🌈துர்தேவதைகளிலிருந்துகாக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் 🌹🌹🌹🌹செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. மேலும் இந்த மரம் ⭐⭐மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான 🌠🌠சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ 👍👍👍ஜுரத்துக்குமருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.சிவாயநம 💕🌠🌠🌠🌳🌳🌳🌳🌠திருச்சிற்றம்பலம்🌠🌠🌳


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? 

தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் எப்படி இருக்கும் ?

ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வருமா ? 

படித்து பாருங்கள் உங்களுக்கு மெய் சிலிர்த்துபோகும் !!

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? 

ஒரு அறிவியல் பூர்வமான அலசல்.

படித்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன் !

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. 
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். 

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தகோயில்களின் சரியான லொகேஷன். 

இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். 

இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 

அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும்
பாஸிட்டிவ் எனர்ஜி. 

பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும். 

அது எதற்கு தெரியுமா? 

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும்
தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். 

இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும்
ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். 

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. 

ரெகுலராய் கோயிலுக்கு செல்லும்
ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும்
என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும்
காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான்
மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 

இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்.. 

அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்).. 

அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும்
அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும்
கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். 

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு,
தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள்
செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய்
போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம்
செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது..
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த
எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். 

பூக்கள்,
கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்),
குங்குமப்பூ (சேஃப்ரான்), கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம்
ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல்
எங்கும் கிடைக்காது. 

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட
அதில் உள்ள மகிமை மிக அதிகம்.

இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை. 

இதை மூன்று தடவை கொடுக்கும்
காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க; 

மீதி இரண்டு சொட்டு உங்கள்
உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும்
இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அற்புதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும்
போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த
ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள். 

அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்.

அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும்
போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். 

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட
கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். 

மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம்
இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன்
எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். 

இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.

எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின்
மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால்
அது மிகையாகது..

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். 

கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட
லைட்னிங் அரெஸ்டர்ஸ்..

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும்
இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில்
கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால்
எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம். 

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். 

நல்ல மானிடர்..

இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். 

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான்..

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும்
சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது.. 

சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த
எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்ற
மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி...

பூசலார்_நாயனார். சிவனாருக்கு_மனதில் கோயிலமைத்தவர்...

பூசலார்_நாயனார். 
சிவனாருக்கு_மனதில்_கோயிலமைத்தவர்🙏
           
தொண்டை நாட்டில் (பல்லவர்களின்  நாட்டில்)
திருநின்றவூரிலே  அந்தணர் குலத்தில்   ஐப்பசி மாதம்,  அனுஷ நட்சத்திரத்தில்  தோன்றியவர் பூசலார் . இவர் சிவனடியார்களுக்குத்  தொண்டு செய்தலே பிறவிப்பயன் என்று  பொருள்தேடி   சிவனடியவர்களுக்கு  அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று  எழுப்ப மிகவும்  விரும்பினார்  பூசலார் நாயனார்..   அதற்குத்  தன்னிடம் பொருள் இல்லாததால்,  தன்  மனத்திலேயே  சிவபெருமானுத் திருக்கோயில் அமைக்க எண்ணினார்!   பூசலார்  நாயனார்.
          எனவே  மனத்திலேயே  சிறிதுசிறிதாகப் பெரும்பொருள் சேர்த்தார் நாயனார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும்,  பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் மனத்தில் தேடிக்கொண்டார் பூசலார். 
             நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும்  அமைத்தார்.  ஓர்  ஆலயம்  அமைய  என்னென்ன  திருப்பணிகள்  நடைபெறுமோ,  அத்தனைச் செயல்களும்  நடைபெறுவதாக,  மனத்தினுள்ளேயே  வரிசைக்கிரமமாக நினைத்துக் கொண்டார் பூசலார்  நாயனார்.  சுதைவேலை முடித்து அக்கோயிலினுள்ளே கிணறு திருக்குளம், மதில் முதலான எல்லாம்   முறைப்படி  மனத்திற்குள்ளேயே அமைத்தார் பூசலார்  நாயனார்.   இவ்வாறு தம்மனத்தில் உருவாகிய திருக்கோயிலுள் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதற்கேற்ற நல்லநாளும் வேளையும் நிச்சயித்தார்!  பூசலார்  நாயனார்.
          பூசலாரின்  திருப்பணி இவ்வாறு மனதினுள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், காஞ்சி நகரத்து  மன்னன் காடவர்கோன்,  இறைவனுக்குத் திருக்கற்றளி(கற்கோயில்) தன் பெரிய பொருள் முழுவதையும் செலவழித்து  மிகப்  பெரிய  ஆலயம்  ஒன்று  சிவபெருமானுக்கு  உருவாக்கியிருந்தார். அத்திருக்கோயிலில்  சிவபெருமானை எழுந்தருளுவிப்பதற்குப் பூசலார்  நாயனார்,  தன்  உள்ளத்தில்  குறித்த  அந்த நாளையே மன்னனும் குறித்தார். மன்னனுக்கு  அதுவரைப்  பூசலாரைப்  பற்றி  தெரியாது. 
           பூசலாரது அன்பின் திறத்தை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங் கொண்ட கருணைக்கடலான  சிவபெருமானும்,  அந்நாளின் முதல் நாள்  நள்ளிரவில் காடவர் கோமான் முன் கனவில் எழுந்தருளி,  திருநின்றவூரில்  வாழும் பூசலார்  என்ற அன்பனின்  அன்பில்  யான்  கட்டுண்டேன்.  அவன்  நீண்டகால மாக    நினைந்து, நினைத்து. உருவாக்கிய  நன்மை மிக்க ஆலயத்துள் நாளை நான்  புகப் போகிறேன்!  நீ இங்கு  என்னப்  பிரதிஷ்டை செய்ய நினைத்த  தினத்தை   நாளை  வைத்து கொள்ளாது,  மற்றொரு நாளில் செய்வாயாக!  என்று பணித்தருளி மறைந்தருளினார்!  எம்பெருமான்.
        பல்லவர்கோனும்  திகைத்து,  கண்விழித்தெழுந்தான்.  இறைவன்   மனமகிழும்  வண்ணம்    பெரியதிருக்கோயிலை அமைத்த பெருந்தகையாரைச் சென்று காணவிரும்பித் திருநின்றவூரை அடைந்தான்!   பல்லவ  மன்னன்.  அங்குள்ளவர்களை   நோக்கி, ‘பூசலார் அமைத்த கோயில் எங்கே உள்ளது?’ என்று கேட்டார்!  மன்னர்.. அதுகேட்ட திருநின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லையே?  என்றனர். மன்னன் அவ்வூர் மறையவர்களை அழைத்து ‘பூசலார் யார்’ எனக்கேட்டறிந்து, வேதியராகிய அவர் இருக்குமிடத்திற்குத் தானே சென்று அவரை வணங்கி, ஐயா!  தாங்கள்  அமைத்த திருக்கோயில் யாது? அக்கோயிலில் சிவபெருமானை எழுந்தருளச் செய்யும் நாள் இந்த நாள் என்று இறைவன்  எனக்குத் தெரிவித்தருளினார்;  அதனாலேயே  தங்களைக் கண்டுப் பணிதற்கு வந்தேன்’ என்றார்!  பல்லவ மன்னன்.  
             அரசன் கூறியதைக் கேட்டு மருண்ட  பூசலாரோ,   சிவபெருமான்,  என்னையும்  ஒரு பொருட்டாக எண்ணி  அருள்செய்தார்  என்றால்,   தானமைத்தக்  பெருமை எத்தகையது? என்று தமக்குள்ளேயே சிந்தித்துத்  தான் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார்!  பூசலார்  நாயனார்.   அரசனும்  அதிசயித்துப் பூசலாரின்  முன் சிரம் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச் சென்றான்.
             பூசலார் நாயனார் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைப்  பிரதிஷ்டைச்  செய்து,  பூஜைகளை  எல்லாம் பெருஞ்சிறப்புடன்  மனத்துள்ளேயே செய்து  வந்தார்.  பூசலாரின்  பக்தியின்  சிறப்பை  அறிந்து  அனைவரும்  அவரை  வாழ்த்தவும்,  ஒரு  நன்னாளில்   சிவபெருமான் திருவடியை  அடைந்தார்!   பூசலார்  நாயனார்.  நாடாளும்  மன்னன்  கட்டிய  கோயிலைவிட எளியவரான  பூசலார்,  பக்தியினால்  தன்  மனத்திற்குள்ளேயே  கட்டிய  ஆலயத்தில்  குடிகொள்ள  இறைவனே  ஓடோடி வந்தான்!  என்றால்  தூய பக்தியின்  சிறப்பு எதுவென  நாம்  அனைவரும்  உணரலாம். 🙏
        #ஓம்நமசிவாய 🙏

புண்ணியம் என்பது என்ன?

புண்ணியம் என்பது என்ன?
நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.

மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.

அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.

ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.

உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.

இது தான் புண்ணியம்.

மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.

உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.

இறைவனை துணைக்கு அழையுங்கள்.

 மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.

தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.

அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.

உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.

இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?

ஒன்றுமில்லையே. 

பைசா கூட செலவு செய்யவில்லை. 

எங்கும் அலையவில்லை. 

யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. 

பொய் கூறவில்லை. 

யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. 

யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. 

எதையும் இழக்கவில்லை. 

எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.

சரி,

இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.

இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.

தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.

எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.

நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.

நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.

அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.

யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற #எண்ணிக்கொள்ளுங்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.

தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.

அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.

வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.

உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.

ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.

இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.

எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,நல்ல எண்ணங்களுடன் கூடிய மனம்இருந்தால் போதும்.

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், திருநீலக்குடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், திருநீலக்குடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர் – நீலகண்டேஸ்வரர்
அம்மன் – ஒப்பிலாமுலையாள்
தல விருட்சம் – 5 இலைவில்வம், பலாமரம்
தீர்த்தம் – தேவிதீர்த்தம்
பழமை – 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – தென்னலக்குடி
ஊர் – திருநீலக்குடி
மாவட்டம் – தஞ்சாவூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – திருநாவுக்கரசர்

யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான தலம். மொத்தம் ஏழு ஆதாரங்கள் (சக்கரங்கள்) உள்ளன. அவை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் முதலியன. இந்த ஏழு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம். குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் விசேஷ சக்தி படைத்த சிவதலம் இது.

மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அப்போது நாரதர் மார்க்கண்டேயரிடம் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார். மார்க்கண்டேயரும் இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி என்ற வரம் தரப்பட்டது. அதற்கு நன்றிகடனாக மார்க்கண்டேயர் இறைவனைப் பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இத்தலத்து சித்திரைத்திருவிழா நடத்தப்படுகிறது.

திருநீலக்குடி நீலகண்டேஸ்வர் என்றாலே, எண்ணெய் அபிஷேகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு, இந்த அபிஷேகம் சிறப்பும் புகழும் கீர்த்தியும் வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனை எண்ணெயும் சிவலிங்கத்திற்குள்ளேயே (உறிஞ்சி) இறங்கி விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிசேகம் செய்தாலும், குடம் குடமாக கொட்டி அபிஷேகம் செய்தாலும் கூட அத்தனையும் உறிஞ்சி விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்தநாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதாலும் சிவலிங்கத்திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்குப் பதிலாக சொர சொரப்பாகவே இருக்கிறது. இறைவனுக்கு சிகை முடி வளர்ந்திருப்பது போல் உள்ளது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால், அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.

இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம் என்றாலும் கூட கோவிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். அம்மரத்தில் காய்க்கும் பலாபழத்தை முழுப்பழமாக எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது. அதை மீறி எடுத்துச் செல்பவர்கள் இறைவனால் தண்டனை அடையப்பெறுவார்களாம். பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டாம்.
தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து, இறைவனோடு ஒன்றுபட்டார்.

பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன், காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம். வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம். அப்பர் பெருமானால் ஆத்மார்த்தமான தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம்.

 “கல்லினோடு அவன் கையர்” என்று தன்னைக் கல்லோடு கட்டிப் போடும்போது அப்பர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது.
 
தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம். இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார்.

இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர். ஒப்பில்லா முலை அம்மன்(அனுபமஸ்தினி) திருமணக்கோலத்தில் உள்ளார். மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் (பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார்.

தேவாரப்பதிகம்:

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக்குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழல் சோதியே.

–திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 32வது தலம்.

திருவிழா:

சித்திரை மாதம் – பிரம்மோற்சவம் – 18 நாட்கள் திருவிழா – வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் வீதியுலா செல்வார். அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார். 18 வது நாளில் எலந்துறை(பவுண்டரீகபுரம்)என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை ஆகிய நாட்கள் இத்தலத்தில் விசேஷமாக இருக்கும். மாதாந்திர பிரதோஷ நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

பிரார்த்தனை:

பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். இந்த பிரார்த்தனைக்காக பக்தர்கள் இத்தலத்துக்கு பெருமளவு வருகின்றனர். இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், இராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. திருநீலகண்டரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். ஆயுள் ஆரோக்கியம், கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

இத்தலத்தில் சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்வது மிகவும் விசேயம். அத்துடன் சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேஷ்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிவற்றை செய்யலாம்.

ௐ நமசிவாய

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோவில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்.

மூலவர் – கோகிலேஸ்வரர், கோழம்ப நாதர்
அம்மன் – சவுந்தரநாயகி
தல விருட்சம் – வில்வம், முல்லைக்கொடி
தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம்
பழமை – 2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருக்கோழம்பம்
ஊர் – திருக்கோழம்பியம்
மாவட்டம் – தஞ்சாவூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – அப்பர், சம்பந்தர்

சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர, பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியைப் பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து, மீண்டும் தன் கணவனை அடைந்தாள். 

சிவன் ஒருமுறை பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார்.

சந்தன் என்னும் வித்யாதரன், தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் “கோகிலேசுவரர்” என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க, பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்

இத்தலத்தை சுற்றி திருநல்லம் (கோனேரிராஜபுரம்), வைகல் மாடக்கோயில், திருநீலக்குடி, தென்குரங்காடுதுறை, திருவீழிமிழலை, திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன. திருவீழிமிழலையில் மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவன். 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது.

தேவாரப்பதிகம்:

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 35வது தலம்.

திருவிழா:

கார்த்திகை சோமவாரம், பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

சாபங்கள் தீர பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மி. சென்றால் கோயிலையடையலாம். திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மி. ஆட்டோ மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

ௐ நமசிவாய