Friday, February 27, 2015

நோய்களை குணமாக்கும் சமயபுரம் மாரியம்மன்

நோய்களை குணமாக்கும் சமயபுரம் மாரியம்மன் 


தமிழகத்திலேயே பக்தர்கள் வருகை அதிகமாகவும், அறநிலையத் துறைக்கு அதிக வருமானமும் பெற்றுத் தரும் சில கோயில்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கியமானது. தாலி வரம் வேண்டி தாலி தங்கம் இங்கு மிக அதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது. இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு அன்று மாரியம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வை குறையுள்ளவர்கள் அம்மனை வணங்கினால் குணமாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குடும்பங்களை ரட்சிக்கும் அகிலாண்டேஸ்வரி

திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில். அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியானதால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். இங்கு ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் அருள்புரிகின்றனர். கோயிலுக்குள் நுழைந்தால் பிரமாண்ட மண்டபங்களை காணலாம். உள்ளுக்குள் சிறிய மூர்த்தியாக இருக்கின்ற ஜம்புகேஸ்வரர், ஒரு முதிர்கன்னி வடிவத்தில் அழகாக நிற்கின்ற அகிலாண்டேஸ்வரி தாயார் இருவரையும் தரிசித்துவிட்டு வரலாம். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரி தாய் குடும்பங்களை ரட்சிக்கிறவள். குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைப்பவள். இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் அகிலாண்டேஸ்வரி தாயின் தரிசனத்தால் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்தக் கோயில் மிகப் புராதனமானது. மிக வலிமையான அதிர்வுகளை கொண்டது

திருமண தடை, புத்திர தோஷம் நீக்கும் வெக்காளியம்மன்

அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமா கும். திருச்சி உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். இந்த கோயில் விமானம்(மேற்கூரை) இல்லாத ஒரு கோயிலாகும். வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.

அம்மை நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்தார். இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களில் ஒன்றாகும். அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் சிறப்பு. இதுதவிர தோல் வியாதி, கண் நோய், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள். அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள்.

வியாபார சிக்கலுக்கு தீர்வு தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில். குலோத்துங்க சோழனால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.


Wednesday, February 25, 2015

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"

ஸ்ரீ வாஞ்சியம்
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.
இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர்
இறைவி-மங்கள நாயகி
தீர்த்தம்-குப்த கங்கை
புனித நீராடல்:
திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள்.
காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
முதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.
சிறப்பம்சம்:
திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது. சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.
உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.
இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகிஆகியோர்.
பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம்.இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.
இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.
பொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.
இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.
ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.
திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை
என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.
கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.
இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.
இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.
கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள் உபாதைகள் நீங்கப் பெறுவர். சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.
ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்

ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்
உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் //
பயன்கள்:
ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.

மதுரை அழகர் கோவில் - ராமதேவர் சித்தர் தரிசனம்

மதுரை அழகர் கோவில் - ராமதேவர் சித்தர் தரிசனம்

>> மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் . அழகர்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்புதங்கள் நிறைந்த அழகர் மலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்து வந்துள்ளார் .ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயில ஆரம்பித்தார்.

>> சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்..ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள் அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி உபதேசம் செய்தார்கள். யாக்கோபு வெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர் சேர்ந்தனர். பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின் திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார். சமாதி மூடப்பட்டது.
>> ராமதேவன் கற்பக மூலிகைகளின் துணை கொண்டு யார் கண்ணிலும் படாமல் அங்கிருந்து மறைந்தார். காடு மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார். அந்தக் காலத்தில் காலாங்கி நாதர் சமாதியைத் தரிசித்தார். உடனே கைகளைக் கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே தியானம் செய்ய ஆரம்பித்தார்.தியானம் சித்தியான நிலையில் காலாங்கி நாதர் ராமதேவருக்குத் தரிசனம் தந்து அனுபவ ரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு அநுபூதி நிலை கை கூடியது. யாக்கோபு என்ற பெயரில் மெக்காவில் எழுதிய பதினேழு நூல்களைத் தமிழில் பாடினார். சதுரகிரியில் சிலகாலம் தங்கியிருந்து தவமியற்றினார்.

>> பத்து ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன் உண்மைச் சீடன் சமாதியருகிலேயே இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தார். நான் மறுபடியும் சிறிது காலம் சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர வேண்டும், என்று தெரிவித்து விட்டு சமாதியானார்.

>> முப்பதாண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு சதுரகிரி வனத்தில் தங்கி வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார். ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால் அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே வழங்குகிறது.அதன் பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும் தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது.
>> யாக்கோபின் அன்புக்குரிய சீடனை அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப் போதித்து இனிதான் திரும்ப மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன் என்று கூறி மெக்காவில் மவுன சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு தமிழகம் வந்து அழகர் மலையில் சமாதியடைந்தார்.
>> ராமதேவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில், சிவலிங்க வழிபாடு, ஒவ்வொரு சனிக்கிழமையும் பகல் 12 மணிக்கு நடக்கிறது. இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற இடத்தில் சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான, செங்குத்தான மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல வேண்டும். மேலும், மிருகங்கள் நடமாட்டம் மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து பேர் சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு 7 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு கிடைக்காது. உடலை வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர் சித்தர், வேண்டிய வரம் தந்து காத்தருள்வார்.. ஒரு முறை வந்து பாருங்கள் ...

அகத்தியரும் பொதிகை மலையும்;

அகத்தியரும் பொதிகை மலையும்;
( படங்கள் மற்றும் போதிய தகவல் தந்து உதவிய அருமை நண்பர் பாலாஜி ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் )
>> அகத்தியர் மலை தென்னிந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது பொதிகை மலை, அகத்தியர் மலை, தமிழ் மலை, தென்மலை போன்ற பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இங்கு அகத்தியர் வாழ்ந்ததால் இது அகத்திய மலை என்று வழங்கப்படுகிறது.

>> இம்மலையில் பல சிற்றாறுகளும், அருவிகளும் உள்ளன.இங்கு ஏலம், காப்பி, தேயிலை, சந்தணம், அகில், தேக்கு ஆகியவற்றுடன் பல மூலிகைகளும் நிறைந்துள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதிகளையும், குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும் உடையது இம்மலை.. அகத்தீஸ்வரர், குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர் இயற்றிய அகத்தியம் தமிழ் இலக்கியத்தில் முதலாவதாக கருதப் படுகிறது. தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின..
>> பொதிகை மலைத்தொடரில் தான் தமிழகம் எங்கும் கோயில் கொண்டுள்ள சாஸ்தாக்களுக்கெல்லாம் மூல சாஸ்தாவான சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. ஐயப்பன் பிறப்பும் வளர்ப்பும் இங்கு நிகழ்ந்ததாக கர்ண பரம்பரை கதை உள்ளது.
>> கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
>> அகத்தியர் தமிழ் முனிவர்: அகத்தியர் தமிழ் முனிவரைத் தரிசிக்க திருவனந்தபுரம் (கேரளம்) பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (Guide) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

>> இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

>> தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்

Monday, February 23, 2015

சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!

ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே
ராமாயண
சரணடைந்தோரைக் காக்கும் விரதம் கொண்ட அதிசய புருஷன் ராமன்!
ராமாயணத்தில் ஒரு ஸ்லோகம் யுத்தகாண்டத்தில் 18ஆம் ஸர்க்கத்தில் 33வது ஸ்லோகமாக அமைகிறது:

வீண் பழியும் இலவம் பஞ்சும்

வீண் பழியும் இலவம் பஞ்சும்
ஒரு ஊரில் புகழன் என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.
பின், வீட்டிற்கு வந்த புகழனின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.
என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே!
நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.
புகழன் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.
உடனே துறவி, “புகழன்! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.
புகழன் மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட புகழன் திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.
“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.
துறவி சிரித்துவிட்டு, “புகழன் ! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது.
திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,”
என்று கூறினார்.
புகலனுக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் புகழன் .
நாமும் பிறரை குறை சொல்லி பழிசுமத்தி வாழ வேண்டாம் என்பதை உணருங்கள்

நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன்?நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?விதுர நீதி :
நுறு வருடங்கள் வாழ முடிவதில்லயே .. ஏன் ..?
எவையெல்லாம் நம் ஆயுளை குறைகின்றன ...?
விதுர நீதி :
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே...இது ஏன்..? என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன - குறைகின்றன என்றார் ...
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
போன்றவை என்றார்
விதுரர் கூறீய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும் ? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும் ...?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்; கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன் , அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள், தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.

Saturday, February 14, 2015

சிவராத்திரி மகிமைசிவராத்திரி மகிமை 

வேடனுக்கும் காட்சியளித்த சிவன்மகாசிவராத்திரி தினத்தன்று நான்கு கால அபிஷேகம், பூஜையில் கலந்து கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இதனை கதைகள் மூலமாகவும் மக்களுக்கு சொல்லிவைத்துள்ளனர். 

புராணங்களில் மகாசிவராத்திரியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டாலும் வேடனுக்கு சிவன் காட்சியளித்த கதை கொஞ்சம் விஷேசமானது. மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு விலங்கு கூட அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன், வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான். ஏதாவது விலங்கு அந்த நீர்நிலைக்கு வரும். அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது. வேடன் உறங்காமல் வரப்போகும் விலங்கிற்காகக் காத்திருந்தான். அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், "''வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே'' என்று வேண்டியது. அதற்கு வேடனோ, "மானே, என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்றான். அதற்கு அந்தப் பெண்மான், "''அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்' என்றது. மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந் தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது. அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, "''வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்' என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான். மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன. வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், "''ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்'' என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான். தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. "''வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்'' என்று ஒரு மான் சொல்ல, "''இல்லை, நான்தான் போவேன்'' என்றது இன்னொன்று. இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத்தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன. பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன. நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன. நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான். நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது. அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து, "வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்' என்றார். ஈசனைப் பணிந்த வேடன், "ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்' என்றான். அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, "''வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்குவருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்'' என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார். சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.

Friday, February 13, 2015

**சதுரகிரிமலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்**

**சதுரகிரிமலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்**

சதுரகிரிமலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலைசதுரகிரி.
ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோவில் இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ பயணித்தால் வத்திராயிருப்பு வரும்.அங்கிருந்து 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறையை அடையலாம்.இதுதான்சதுரகிரிஅடிவாரம்.இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்றால்சதுரகிரிசுந்தரமஹாலிங்கம்,சந்தன மஹாலிங்கம் கோயிலை அடையலாம். சுனை,அருவி என ரம்மியமாக இருக்கிறது
சதுரகிரிமலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் நடந்தாலும் அலுப்பு தெரியாது.கால் வலிக்காது இதுதான் அதன் அபூர்வ சக்தி.முதன் முறையாக மலையேறிய என் நண்பரும் இதையே சொன்னார்.
அமாவாசை ,பெளர்ணமியில் 40,000 பக்தர்கள் வரை வருகிறார்களாம்.
மலைப்பாதயில் குரங்குகள் அட்டகாசம் அதிகம்.சந்தன மஹாலிங்கம் அருகில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது.மாலை 6 மணி.நானும் என் நண்பரும்தான் அங்கு இருக்கிறோம்.அதன் அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தில் சித்தர் உருவமும் தெரிகிறது.அதில் விபூசி பூசி அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.,
மொத்தமாக 4 மணி நேரத்தில் மலையேறிவிட்டோம்.வழியெல்லாம் இப்போது கடைகள்.அமாவாசை மற்றும் ஞாயிற்றுகிழமை மட்டும்தானாம்.நெல்லிக்காய் சாப்பிட்டுக்கொண்டே நடந்தால் நாவல் ஊற்று சுனையில் தண்ணீர் குடிக்கும்போது அவ்வளவு சுவை
மலையுச்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல்லி மரங்களாக இருக்கிறது..
இங்குள்ள ஒரு வகை மரத்தின் பால் முகத்தில் பட்டால் முகம் வீங்கி கொண்டே செல்லுமாம்.அதன்பெயரே மொகரை வீங்கிதான்.மூன்று தினம் சந்தனம் பூசி வந்தால் வீக்கம் குறைந்துவிடுமாம்.
மரத்திற்கு மரம் தாவும் அணில் .இது ரொம்ப பெரிதாக இருக்கிறது
`சதுரகிரிஎன்ற பெயர் ஏன் வந்தது?
சதுரகிரிமலையானது மேரு முதலிய எட்டு வகை மலைகளுக்கும் தலையானது என்கிறதுசதுரகிரிபுராணம்.கிழக்கு திசையில் இந்திரகிரி,மேற்கு திசையில் வருணகிரி,வடக்கு திசையில் குபேர கிரி ,தெற்கு திசையில் ஏம கிரி இப்படி ஒரு சதுரம் போல அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் சிவகிரி,விஷ்ணு கிரி,சித்த கிரி,ஆகிய்ட நான்கு மலைகள்.
மகாலிங்கம் கோயிலுக்கு தென்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் தவசி குகை அவசியம் செல்ல வேண்டிய இடம்.செல்லும் வழி அடர்ந்த காடு.கரடிகள் நிறைய உலாவும் இடம்.மலைவாசிகள் துணையோடு செல்வது நலம்..
அங்கு கூட்டி செல்லும் கைடுக்கு 400 ரூபாய்..கரடி வந்தா உசார் பண்றதுதான் அவரின் முக்கிய வேலை.
தவசி குகை செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மரம் இருக்கு.அந்த மரத்தில் இருந்து வடியும் பால் ரத்த சிவப்பாக இருக்கிறது.அதன் கீழே தேங்கியிருக்கும் பால் ஆட்டு ரத்தம் கொட்டியது போல திகில் கிளப்பியது.மரத்தின் பெயர் என்ன தெரியுமா? ரத்த காட்டேரி மரம்.
தவசி குகையின் அருகில் மஞ்சள் நீர் நிறம்பிய சுனை இருக்கிறது.தங்கம் போல அந்த நீர் மினு மினுக்கிறது...தங்க பஸ்பம் போல...குடிச்சா வேலை செய்யுமோ.
அரையடி அகலமுள்ள பலகை கல்லால் இன்னொரு கல் கொண்டு செதுக்கப்பட்ட அபூர்வமான வினாயகர் சிலையையும் அந்த அடர்ந்த காட்டுக்குள் பார்த்தோம்.தபசு பாறை என்பது சித்தர்கள் மீட்டிங் போடும் இடம் மாதிரியாம்.அத்ற்கேற்றவாறு வட்ட வடிவான அமரக்கூடிய பலகைகள் 12 இருக்கின்றன...
சந்தன மகாலிங்கம் ,சுந்தர மகாலிங்கம் என இரு லிங்கங்கள் தனித்தனி கோயிலாக உள்ளன..
கோரக்கர் குகை வந்தால்தான் பாதிதூரம் வந்ததாக அர்த்தம்.ஆனா அதுவரை நடப்பதற்குள் உடலில் உள்ள நீர் எல்லாம் வியர்வையாக வந்துவிடும்.கோரக்கர் குகையில் இப்போது சாமியார் பெண்ன்மணி வய்தானவர் இருக்கிறார்.
சந்தன மகாலிங்கம் கோயிலில் சட்டை முனி குகையில் சந்தனகட்டை எரிப்பர்..இந்த வருடம் இல்லை.பெளர்ணமி அன்றும்,அமாவாசை தினம் மட்டும்தானாம்.,
சுந்தரமகாலிங்கம் தானே உருவான லிங்கம்.யானை வழிபட்ட,சித்தர்கள் பூஜித்த லிங்கம்.அங்கு நின்று தரிசனம் செய்யும்போது உடலெங்கும் சிலிர்ப்பு.அந்த லிங்கம் அபூர்வமானது அதிக சக்தி வாய்ந்தது என்பதை நாம் அதன் முன் நிற்கும்போது உணரமுடியும்.
கஞ்சி மடம்...இதை மறக்க முடியாது...பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு போட்டு,தங்கவும் அனுமதிக்கிறார்கள்...இப்போது கோயில் அருகில் பெரிய மண்டபம் இருப்பதால் அங்கு இரவு தங்கலாம்
ஒவ்வொருவரும் சதுரகிரிசெல்ல வேண்டும்.10 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடக்கும்போது மூலிகை காற்று அனுபவித்து மூலிகை நீர் அருந்தி செல்வதால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும்.உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.அதிக உயிர் சத்தும் அதிக வசியமும் ,தெளிவான மனநிலையும் உண்டாகும்...
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா!
-Ganesan Pondicherry-

சதுரகிரிமலையில் இருந்த அதிசய மூலிகைகள்*

சதுரகிரிமலையில் இருந்த அதிசய மூலிகைகள்*

சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு அனுமன் பறந்து சென்றபோதுசதுரகிரிசித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்துசதுரகிரிஅருகே விழுந்தது. அதுவே சஞ்சீவிகிரி என்பது. இந்த சஞ்சீவி மலையில் இருக்கும் அதிசய மூலிகைகள் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!
கருடக்கொடி என்றொரு மூலிகை. இதனை முறைப்படி பக்குவப்படுத்தி ஒருவர் உட்கொண்டால் அவரது உடல் இரும்பு போல் உறுதியாக மாறுமாம்! அவரை அரிவாளால் வெட்டினால் வெட்டின அரிவாளே இரண்டாக உடையுமே தவிர அவர் உடலில் எந்தக் காயமும் ஏற்படாதாம்!
இவை தவிர சதுரகிரியிலும் சில அபூர்வ மூலிகைகள் இருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!
“கனையெருமை விருட்சம்’ என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்!
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், கனி நாய்க்குட்டி போலும் இருக்குமாம்! அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்!
இவையெல்லாம் சித்தர்கள் காலத்தில் இருந்தவை. இப்போது பயன்பாட்டில் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது!

Thursday, February 12, 2015

ஐந்து முக முருகன்

ஐந்து முக முருகன்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஓதிமலையில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டுக் கரங்களுடனும் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 

இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறாத பிரம்மதேவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்த பகுதி என்று தல புராணம் கூறுகிறது. எனவேதான் இந்த இடத்திற்கு 
‘இரும்பொறை’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

நந்தியின் கையில் வாள்நந்தியின் கையில் வாள்
பொதுவாக அதிகார நந்தியின் வடிவங்கள், சிவனை வணங்குவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருநாகேஸ்வரத்தில் உள்ள அதிகார நந்தி வாளுடன் இருப்பது போன்ற வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகிறது.
கருங்கல் மண்டபத்தின் வலதுபுறம் உள்ளது இந்த விக்கிரகம். இத்தலத்தில் நந்திக்கு வீரவாள் அளிக்கப்பட்டதாகவும், ஆகையால்தான் நந்திதேவர் 
வாளுடன் காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

Sunday, February 8, 2015

மர்ம குகைகளும் ராஜநாகமும்மர்ம குகைகளும் ராஜநாகமும்


சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாழ்ந்த மலைக் குகைகளில், அவர்கள் தவம் செய்து இறைவனை அடைந்த நிலையும் அவர்களுக்கு துணையாகவும், காவல் தெய்வமாகவும் ஒரு ராஜநாகம் அவர்களோடு பவுர்ணமி நாட்களில் தவம் இருந்த வரலாறு வேலூர் மலையில் நடந்துள்ளது.

இன்றும் அந்த ராஜநாகம் தவம் செய்து வருகிறது என்பதற்கு வேலூர் மலையையும், அதில் உள்ள நூற்றுக்கணக்கான குகைகளையும் உதாரணமாக கூறலாம். 

கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் ஒரே நேரத்தில் 100 விலங்குகள் தங்கும் விலங்கு உறங்கும் பாறை, ஆயிரம் அகோரிகள் குடிகொண்டு தவம் செய்யும் அகோரி குகை, படுத்து தவழ்ந்து செல்லும் தவகுகை, இப்படி பல குகைகள் உள்ளன.

அதோடு அடர்ந்த காட்டுப்பகுதியாக அக்காலத்தில் இருந்துள்ளது. சூரிய கதிர்கள் பூமியை தொடாத சூரியன் புகா காடு என்றும், அனைத்து மிருகங்களும் வாழ்ந்த ஒரு வனமாக இந்த மலை இருந்துள்ளது.

மன்னர்கள் படையெடுப்பில் காடுகளில் பதுங்கிய வீரர்கள் மலைகுகைகளில் வாழ்ந்த அகோரிகளை விரட்டி அதில் தங்கி போர் வியூகங்களை வகுத்துள்ளனர். அதோடு அடர்ந்த காடுகளை வெட்டி அழித்து குடில்கள் அமைத்துள்ளனர். மேலும் பெரிய பாறைகளை உடைத்து கோட்டையும் கட்டியுள்ளனர். இதனால் அடர்ந்த காடு அழிக்கப்பட்டு பாறைகளும் உடைக்கப்பட்டு பல குகைகள் அழிக்கப்பட்டுவிட்டன.

வேலூர் கோட்டை, விரிஞ்சிபுரம் கோவில் இன்னும் பிற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள் கொண்டு செல்லப்பட்டது. மலைமீது கட்டப்பட்ட அழகான ராணிக்கோட்டை பாறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், தேக்கு, சந்தனமரங்கள் கொண்டு அழகு சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணி அந்தபுரத்தில் நின்று இயற்கையை ரசிக்கும்போது தென்றல் காற்றில் சந்தன வாசனையில் இயற்கை அழகை ரசித்ததாக வரலாறு கூறுகிறது.

ராணியை காப்பாற்ற மன்னர்கள் வீரர்களை மட்டும் நம்பாமல், ராணி கோட்டையின் நுழைவு வாயிலில் ஆள் விழுங்கும் விஷ மூலிகையை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷ செடி ஆட்களின் வாசனை பட்டவுடன் அவர்கள் இருக்கும் பகுதி நோக்கி நகர்ந்து அவர்களை மூடி கொண்டு ரத்தம் உறிஞ்சி சாகடித்து விடுமாம்.

ஆப்பிரிக்கா காடுகளில் மட்டுமே இருக்கும் இந்த விஷ கொடி அக் காலத்தில் வேலூர் மலையில் மன்னர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போதும் இந்த ஆள் விழுங்கும் மூலிகை விஷ கொடி ராணிக்கோட்டை நுழைவு வாயிலில் உள்ளது. இதை அறியாத பலர் அந்த கொடியால் ஈர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதோடு ராணிக்கோட்டையில் மரங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், வாசல் கதவுகள் சன்னல்கள் தற்போது கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டன. அக்காலத்தில் அகோரிகள் நிர்வாணத்துடன் தவம் கொண்டதால் இவர்களுக்கு துணையாக ராஜநாகம் ஒன்று பவுர்ணமி நாட்களில் இவர்களோடு படம் எடுத்து தவம் கொண்டுள்ளது. அந்த நாட்களில் மலையை சுற்றிலும் மல்லிகை பூ வாசம் வீசுவதுடன் அகோரிகள் எலுமிச்சம்பழம் மேல் கற்பூரம் வைத்து ராஜநாகத்தை வணங்குவார்களாம். அப்போது எலுமிச்சை பழம் விபூதியாக மாறிவிடுமாம். அந்த விபூதியை நெற்றியில் பூசி கொள்வதுடன் உடல் எங்கும் பூசி கொண்டால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாவதாக கூறப்படுகிறது.

அதோடு காட்டில் அரியவகை மூலிகைகளை ராஜநாகம் துணைகொண்டு கண்டுபிடித்ததாகவும், அதற்கு சித்தர்கள் சிறப்பு யாகங்கள் நடத்தி ராஜநாகத்தை வழிபட்டதாக கூறப்படுகிறது. இன்றும் அகோரிகள் தவம் செய்த குகைகளில் நிர்வாண சாமியார்கள் தவம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் அவர்களுக்கு துணையாக அந்த ராஜநாகம் தவம் செய்கிறது. சித்தர்கள் நடமாட்டம் இருந்தாலும் அவர்கள் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில் உள்ள மர்ம குகைகளில் இன்றும் மணியோசை கேட்பதுடன், சாம்பிராணி, விபூதி ஊதுவத்தி மல்லிகை பூ வாசனைகள் மாறி, மாறி, வீசுவதாகவும், வாசனை வீசும் குகைகளில் சித்தர்கள் வாழ்வதாகவும் நம்பப்படுகிறது.

மலையடிவாரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சித்தர்களால் கட்டப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தில் அகத்தியர் தவம் இருந்து வழிபட்டதோடு சித்த மருத்துவம் குறித்தும் அதன் பயன்பாட்டை குறித்தும் தனது சீடர்களுக்கு எடுத்து கூறியதோடு அதனால் நீங்கும் நோய்கள் குறித்தும் விளக்கி உள்ளார். அகத்தியர் அருளிய மூலிகைகளை மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக வழங்கி வந்துள்ளனர் அவரது சீடர்கள்.

மருத்துவமணைகள் இல்லாத நாட்களில் இவர்கள் கொடுத்த மூலிகையை அப்போது எல்லா நோய் களையும் தீர்த்துள்ளது. இந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான அகத்திய சீடர்களின் ஜீவசமாதிகள் உள்ளன. அதோடு அகத்தியர் தவம் செய்த குகையும் உள்ளது. அகத்திய முனிவர், அத்திரிமுனிவர், ஜனகாதி முனிவர் போன்ற முனிவர்கள் தவம் செய்த குகைகள் உள்ளன. இந்த குகைகள் அனைத்தும் செடி, கொடிகளில் மூடப்பட்டு இருந்தாலும், இதன் அருகில் செல்லம்போது இப்போதும் தெய்வீக மனம் வீசுவதாக கூறுகின்றனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மலைமேல் உள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள புற்றுக்கு பால் ஊற்ற பவுர்ணமி தோறும் சென்று வந்த ஒரு பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தவறான எண்ணத்துடன் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு நாள் அதே பெண் பவுர்ணமி அன்று சாமி தரிசனம் செய்து புற்றுக்கு பால் உற்றி வரும் போது அந்த வாலிபர் வழிமடக்கி தகராறு செய்துள்ளார். அவரிடம் இருந்து விடுபட்டு ராஜநாகத்தை நினைத்து காப்பாற்று என கூச்சல் போட்டுள்ளார் அந்தப் பெண். பின்னர், பின் தொடர்ந்து வந்த வாலிபர் அந்த பெண்ணின் கண்களில் தெரியவில்லையாம். இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபர் நாகம் கடித்து இறந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள பார்த்து கூறியுள்ளனர்

. இந்த அதிசயத்தை இன்னும் அப்பகுதி மக்கள் வியப்போடு கூறுகின்றனர். சித்தர்களுக்கு மட்டும் காவல் தெய்வமாக இருக்கும் ராஜநாகம் நம்பி வருபவர்களுக்கும் காப்பாற்றும் தெய்வமாக வேலூர் மலையில் இருந்து வருகிறது.

நவக்கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் உண்டாகும் தீமைகள் நீங்கவும்;a

நவக்கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் உண்டாகும்

தீமைகள் நீங்கவும்;

மனம்,மொழி ,மெய் ஆகியவற்றால் உண்டாகும்

குற்றங்கள் நீங்கவும்,

உலக மக்கள் யாவரும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்

உடைய ஆதி மூர்த்தியாம் சிவபெருமானையே

வணங்கவேண்டும் .

வேறு வழிபாட்டு முறைகள் ,பரிகாரங்கள் யாவும்

பயனற்றவை என்று

திருஞானசம்பந்தப் பெருமான் கூறுவதை உணரவேண்டும் .

உலகம் நலம் பெறட்டும்.

தர்ப்பையின் மகிமை -தர்ப்பையின் மகிமை -
தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.
உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர்஠ ?ான் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.
இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.
யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுக஠ ?றது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:
தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்க
தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
சங்க இலக்கியம்:
‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்

Friday, February 6, 2015

எல்லாம் சிவமயம் சிவனின்றி ஓர் அணுவும் அசையாது வயிற்றை சுத்தம் செய்வது எப்படி? கோரக்கர்,

எல்லாம் சிவமயம் சிவனின்றி ஓர் அணுவும் அசையாது 
வயிற்றை சுத்தம் செய்வது எப்படி?
கோரக்கர், 


புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்ற குறள் உடலின் தூய்மை . இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.

அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், நீங்கும் என்கிறார்

பித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன?


பித்ரு தோஷம் - ஒரு விளக்கம்


பித்ரு தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.

ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.

அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது

பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும் !!!

பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும் !!!

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

குழந்தை வரம் பெற உதவும் ஆலயங்களும்,வழிபாட்டு முறைகளும்

குழந்தை வரம் பெற உதவும் ஆலயங்களும்,வழிபாட்டு முறைகளும்
**********************************************

சிவபுரம் என்றழைக்கப்படும் ” திருச்சிவபுரம் “
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப் பெற்ற இத் தலம் மகப் பேறு அருளும் தேவார திருத்தலமாகும். சிவபுரத்தில் வீற்றிருந்து அருளும், ” சிங்காரவல்லி, ஆர்யாம்பாள், பெரியநாயகி ” என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகைக்கு, வெள்ளிக் கிழமைகள் தோறும், தன்னால் இயன்ற, அளவு முறையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர். இத் தலம், புத்திர நோய்கள் அகற்றும் தலமாகவும் விளங்குகிறது. குழந்தைகள் சம்பந்தபட்ட நோய்கள், இத் தல அம்மனை வழிபடுவதன் மூலம் முற்றிலும் நீங்குகின்றன. ஆதி சங்கரரின் பூர்வீகமான, இத் தலத்தில், பூமியின் கீழ் ஒரு ஒரு அடிக்கும் ஒரு சிவ லிங்கம் உள்ளதாக ஐதீகம். இத் தலம், கும்பகோணத்தில் இருந்து, சாக்கோட்டை வழியே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது

ஆதி கும்பேஸ்வரர் திருக் கோயில் ” நவநீத கணபதி”
காமதேனு தன் சாபம் நீங்க, இத் தலத்தில் விநாயகருக்கு வெண்ணெய் பூசி வழிபட்டதால் இவர் ” வெண்ணெய் கணபதி ” ஆனார். காமதேனு தன் கால் குளம்பால் உருவாக்கிய ” குர ” தீர்த்தத்தில் நீராடி, இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய் சார்த்தி வழிபட்டு, பின்னர் ” மந்திர பீடேஸ்வரியாய் ” அமர்ந்திருக்கும் மங்களநாயகியையும், கிராத மூர்த்தியையும் (கிராத மூர்தி சந்நதி அருகிலேயே உள்ளது). வணங்கினால் புத்திர பக்கியம் கிடைக்கும். சகல பாவங்களும் நீங்கும். கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்றான, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இத் திருக்கோயில், நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில் ” நவ கன்னியர் வழிபாடு ”
நவ நதிகளும், தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயில் நவ கன்னியர் வழிபாட்டுக்கு சிறந்த தலம். 12 வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து, வாசனை மலர்கள் , எண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பால் சோறு, தேங்காய், வாழைப்பழம் போன்றவை வைத்து நவ கன்னியரை வணங்கி, முடிந்த அளவு சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்தால் மகப் பேறு இல்லாதோர், நன் மக்களைப் பெறுவர். திருமணமாகாத பெண்களுக்கு, விரைவில் மணம் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். தீரா நோய் கொண்டோர், நோயிலிருந்து விடுபடுவர். பருவம் அடையாத பெண்கள் பூப்பெய்துவர்.

மகப் பேறு அருளும் ” பாணபுரீஸ்வரர் திருக்கோயில் “
பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை, கிராத உரு கொண்டு முக்கண்ணன் அம்பெய்ததால், கும்பத்திலிருந்த பல மங்கள பொருட்கள் சுயம்பு லிங்கங்களாக உருவெடுத்து, பல சிவ தலங்கள் தோன்றின. கயிலை நாதன், அம்பெய்யும் பொருட்டு நின்ற இடம் பாணதுறையானது. தல நாயகன் ” பாணபுரீஸ்வரரானார் “. இத் தலத்தில், சோமகமலாம்பாள் சமேதராய் வீற்றிருக்கும் நாதனை வழிபட்டால் புத்திர பேறு கிட்டும். கடும் வியாதிகள் நீங்கும். சூரசேனன் எனும் வங்க தேச மன்னன் ஒருவன், தன் மனைவி காந்திமதியுடன் இத் தல ஈஸ்வரனை வழிபட்ட்தால், தீராத தன் ” குஷ்ட நோய் ” நீங்கி, புத்திரப் பேறும் பெற்றான். இத் தலம், நகருக்கு பெருமை சேர்க்கும் புண்ணிய தீர்த்தமாம், மகாமகக் குளக் கரையில் அமைந்துள்ளது
ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள ” குழந்தை கிருஷ்ணன் “.
3 வது திவ்ய தேசமாக விளங்கும் சாரங்கபாணி கோயிலின் கருவறையில், ஆதிஷேசன் மீது பள்ளி கொண்டுள்ள குழந்தை உருவ கிருஷ்ணன் விக்கிரகம் ஒன்று உள்ளது. நீண்ட நாட்களாய் குழந்தைச் செல்வம் இல்லாதோர், மகப் பேறு வேண்டுவோர், இந்த கிருஷ்ண விக்கிரகத்தை, தங்கள் மடியில் வைத்து, பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள மாலவனை எண்ணி மனமுருக வேண்டினால், குழந்தைப் பேறு நிச்சயம். தம்பதியர் சமேதராய் வந்து வேண்டுவது மிகச் சிறப்பு.

கரு வளர்க்கும் ” கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி ”
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக் கோயில், கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் மருதாநல்லூர் என்ற கிராமத்தை அடுத்து உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாக புற்று மண்ணிலிருந்து தோன்றியதால், சாம்பிராணித் தைலமும், புணுகும் மட்டுமே சார்த்தப்படுகிறது. பல வருடங்களாக குழந்தை இல்லாதோர், இங்கு வந்து, அம்மனின் முன் உள்ள வாசற்படியை நெய் கொண்டு மெழுகி வழிபடவேண்டும். பிரசாதமாக தரப்படும் மஞ்சளை, பெண்கள் தினந்தோறும் பூசி குளித்திட மகப் பேறு கிடைக்கும். கல்யாண வைபவங்கள் நடைபெறவும், இத் தல நாயகி அருளுகிறாள்.
நின்ற நிலையில் வீற்றிருக்கும் ” திருமணஞ்சேரி ராகு பகவான் ”
கும்பகோணத்தை அடுத்துள்ள மாயவரத்தை அடுத்துள்ளது ” மணவரம் அருளும் திருமணஞ்சேரி “. கல்யாணப் பேறு அளிப்பது ” கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் ” என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் ” ராகு பகவான் “. அமாவாசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது. தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், திரும்ப தரப்படும் தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்கரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாட்டை மூன்று அல்லது ஐந்து அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

மகப்பேறு தரும் ” தலைச்சங்காடு சங்கராண்யேஸ்வரர் ”
திருக்கடையூரிலிருந்து சும்மர் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, சங்கு வடிவில் உள்ள ” தலைச்சங்காடு “. சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் அருளும் தலம் இது. திருமாலுக்கு சங்கு கொடுத்ததால் இந்த ஈசன் ” சங்கரான்யேஸ்வரர் ” ஆனார் . அம்பிகை ” சௌந்தரநாயகி அம்மன் “. பௌர்ணமி தோறும், இந்த அம்மனுக்கு, குழந்தை வரம் வேண்டி. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சார்த்தப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சந்தான பிரசாதத்தை சிறிது உண்ண குழந்தைப் பேறு கிடைக்கும். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், வழிபாட்டின்போது, பௌர்ணமி விரதம் இருப்பது நல்ல பயன் அளிக்கும்.

கரு தந்து காத்திடும் ” திருக்கருகாவூர் கர்பரட்சாம்பிகை ”
கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் பாபநாசம் அருகே உள்ளது, கருச் சிதைவை தடுத்து , கருவினை நன்முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் ” கர்பரட்சாம்பிகை ” திருக்கோயில். இங்கு வசித்து வந்த தனது பக்தரான, முனிவர் ஒருவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, சிதைந்த அவர் மனைவியின் கருவை காத்து, சுகப் பிரசவம் அருளியவள் இந்த அம்பிகை. திருமணத் தடை நீக்கி, மணவரமும், குழந்தை பேறும் அருள்பவள். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களும், பல ஆண்டுகளாக குழந்தை செல்வமற்ற பெண்களும் இத் தலம் வந்து, அம்பாள் சந்நதியில் நெய் கொண்டு மெழுகி கோலம் இட்டால் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும்.இங்கு, அம்பாளின் திருவடியில் வைத்து அர்ச்சித்து தரப்படும் ” பசுநெய் ” பிரசாதத்தை 48 நாட்கள் தம்பதியர் உட்கொள்ள கரு உண்டாகும். அம்மனுக்கு சார்த்தி தரப்படும் ” விளக்கெண்ணெய் ” பிரசாதத்தை, கருவுற்ற பெண்கள் தங்கள் வயிற்றில் தேய்த்து வந்தால் சுகப்பிரசவம் பெறுவர்.புற்று மண்ணினால் ஆன, இத் தல லிங்கத்தை புனுகு சார்த்தி வழிபட, தீரா நோய் அனைத்தும் தீர்கிறது.திருமண வரம் தந்து, கரு கொடுத்து, அதை நல்ல முறையில் காத்து, சுகப் பிரசவம் அளித்திடும் இந்த அம்பிகையும், தீரா நோய் தீர்க்கும் ஈசனும் வெகு நிச்சயமாக தரிசிக்கப்பட வேண்டியவர்கள்.

கதிராமங்கலம் ” வனதுர்க்கை ”
கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற சிற்றூரின் அருகில் உள்ளது, கம்பரும் அகத்தியரும் வழிபட்ட வனதுர்க்கை குடிகொண்டுள்ள ” கதிராமங்கலம் “. ராகு கால வேளை என்பது, ராகு பகவான் துர்க்கையை வழிபடும் நேரம், எனவே ராகு திசை வழிபாட்டிற்க்கான சிறந்த நேரம் ராகு காலமே. இந்த துர்க்கையை எலுமிச்சம்பழத் தோலில் நெய் விளக்கேற்றி, எலுமிச்சம் பழ மாலை சார்த்தி 9,11 அல்லது 21 வாரங்கள் வழிபட ” புத்திர பாக்கியம் ” கிட்டும் என்பது நிச்சயம்.

தஞ்சாவூர் மேல வீதி ” சங்கர நாராயணன் ”
கரிகால் சோழனின் வழி வந்த, பீம சோழ மன்னனால் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்துவது. வலப்புறம் பார்வதியையும், இடப் பக்கம் லஷ்மியையும் கொண்டு 5 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இத் தல மூர்த்தியின் சிலை சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே கொண்டது. இத் தலம் ” குழந்தைப் பேறு அருளும் ” புண்ணிய ஷேத்திரமாக விளங்குகிறது.

குழந்தை செல்வம் பெற ” திருவெண்காடு”
நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத தம்பதியர் இத் தலத்தில் உள்ள முக்குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்தால் குழந்தைச் செல்வம் பெறுவர். இத் திருத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அச்சுதகளப்பாளர் என்னும் சிவனடியாருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
ஒரு நாள் அவர், திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டு பதிகத்தை படிக்க, அதில் கூறியுள்ளாவாறு திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள சூரிய, சோம மற்றும் அக்னி என்ற மூன்று குளங்களிலும் நீராடி பரம்பொருளை வழிபட, அவர் வேண்டுதளுக்கிணங்க பெருமானும் குழந்தைச் செல்வத்தை அளித்தார். அக் குழந்தைதான், “சிவஞானபோதம்” எனும் பன்னிரு சூத்திரத்தை தந்த “மெய்க்கண்டார்” என்ற சிவஞான சித்தர். குழந்தை செல்வம் பெற விரும்புபவர்கள், திருவெண்காடு சென்று அங்குள்ள முக் குளங்களிலும் நீராடி சிவ பெருமானை வழிபட வேண்டும். தினமும் காலை வேளைகளில் பசுவிற்கு ஒரு பிடி புல் அல்லது பழம் அளிப்பது மேலும் சிறப்பு.

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் - உண்மைகளும் !!!

பைரவர் வழிபாடு - கட்டுக்கதைகளும் - உண்மைகளும் !!!

பைரவர் வழிபாடு என்பது மிகப் பழமையானதும், மிகவும் ரகசியமாகவும் வைக்கப்பட்டதுமான ஒரு அரிய முறை ஆகும். ஆனால் அன்னியர்களின் படையெடுப்பினால் இந்த அரிய முறைகள் பின்பற்றப்படாமல் மறைக்கப்பட்டன. தற்போது பைரவர் வழிபாடு மீண்டும் தழைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலத்தில் இணையத்தில் பைரவ வழிபாட்டிற்கு ஆதரவாகவும், பைரவர் வழிபாட்டிற்கு எதிராகவும் வலைப்பூக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உண்மையை சொல்லப்போனால் பைரவ வழிபாட்டிற்கு எதிராக ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

பைரவ வழிபாடு பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் இப்பதிவில் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள் இவற்றை காண்போம்.கட்டுக்கதை – 1:

பைரவரை வணங்கினால் வீட்டின் தலைமகனை காவு வாங்கி விடுவார்.

உண்மை:

பைரவர் அசூரர்களை அழிக்க அவதாரம் செய்த சிவனின் வடிவம். அவர் தம்மை வணங்குபவர்களையும் அவரது பரம்பரையையும் காத்து நிற்கும் உன்னதமான சிவ வடிவம். மனிதர்களை அழிக்க அவதாரம் செய்யவில்லை. மனிதர்களை காக்கும் கடவுளே பைரவர் ஆவார்.கட்டுக்கதை – 2:

பைரவரை வீட்டில் வழிபாடு செய்யக்கூடாது.

உண்மை:

பொதுவாக பைரவ வடிவங்களில் வீட்டில் வைத்து வழிபட தக்கவர் தன் மடியில் சொர்ணதாதேவியை அணைத்தவாறு உள்ள சொர்ணபைரவர் ஆவார். மற்ற பைரவர்களை வழிபாடு செய்யும் இடங்களும், காலங்களும் வெவ்வேறானவை. மற்ற பைரவர்களை ஆலயங்களில் வழிபாடு செய்வதே சிறப்பானது.கட்டுக்கதை – 3:

பைரவரை சந்நியாசிகள் தான் வழிபாடு செய்ய வேண்டும்.

உண்மை:

எல்லா பைரவர்களையும் எல்லோரும் வழிபாடு செய்யலாம். எல்லா பைரவர்களுக்கும் சக்தியர் உள்ளனர். அவர்கள் யோகினிகள் எனப்படுவர். பைரவர்கள் சிவசக்தி வடிவமாக உள்ளனர். சிவசக்தி வடிவங்களை யார் வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம். பைரவர்களின் வழிபாட்டு முறைகளை குருமுகமாக தெரிந்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்தது.கட்டுக்கதை – 4:

பைரவருக்கு அசைவம் படைக்கலாம்.

உண்மை:

அசைவம் படைப்பது என்பது பெரும் பாவம் ஆகும். ஜீவகாருண்யமே சிவ வடிவங்களின் உண்மையான குணம் ஆகும். மாமிசம் என்பது பேரீச்சம்பழமே ஆகும். பேரீச்சம்பழத்தினை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.கட்டுக்கதை – 5:

பைரவருக்கு மது படைக்கலாம்.

உண்மை:

மதுவினை படைத்தலும் பெரும் பாவமே ஆகும். உண்மையில் மது என்பது தேன் ஆகும். தேனை பைரவருக்கு படையலாக வைக்கலாம்.