Tuesday, October 22, 2013

சூரனை அழித்த சுடர் வடிவேலன்

ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை சஷ்டியே கந்தர் சஷ்டி எனப்படும். முருகப்பெருமான் சூரபத்மனை வதைத்த சூரசம்ஹார (8.11.2013 அன்று) திருவிளையாடலைத்தான் கந்தர் சஷ்டியாக வழிபடுகிறோம். முருகன் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமை முதல் ஆறு நாட்கள் போர் புரிந்து ஆறாவது நாள் சஷ்டியன்று மாமரமாக நின்ற சூரபத்மனை தன் சக்திவேலால் இரண்டாகப் பிளந்தார். பிளவுபட்ட சூரபத்மனை மயிலாகவும், சேவற்கொடியாகவும், தானே ஏற்று அருளினார். இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வைப் பார்த்துவிட்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.

இந்த விரதத்தில் முருகனுக்கு பால், பழம், தினைமாவும் தேனும் கலந்து நிவேதிப்பது விசேஷமானது. சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் எனும்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது ஐதீகம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. ஆறு என்பது ஐஸ்வர்யத்தைத் தரும் எண் என்று எண் கணித சாஸ்திரம் கூறுகிறது. 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். இவர் திருமகளின் அம்சமாக வணங்கப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு போன்றவற்றைத் தரக்கூடியவரும் சுக்கிரனே. எனவே, சஷ்டி விரதம் இருந்தால் 16 செல்வங்களையும் பெறலாம். அமரர் இடர் தீர்த்த குமரனின் தாளடிகளைப் போற்றுவோம்.

பதவிக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கும் பரமேஸ்வரன்!

 அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில்,

தனிச் சிறப்பு வாய்ந்தது. இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜ  ஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவி, காமாட்சி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம். திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். மரத்தின் சருகுகள்  விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது. அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு  வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.

இதுகண்டு வெகுண்ட  சிலந்தி இன்னொரு வலை பின்னியது. மறுபடி யானை அறுத்தெறிந்தது. இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள்  யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந் தியும் இறந்தது. அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் (கோச்செங்க சோழன்). இவர் தன்  முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி  மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இது ‘யானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது. திருவானைக்காவிற்கு கிழக் கேயுள்ள அரங்கநாதபுரம்  கஜாரண்யேஸ்வரர் கோயில் இச்சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். 1750 ஆண்டுகள் பழமையானது. மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து  வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்த ருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு யானை மீது  வஜ்ராயுதத்தை ஏவினான்.

அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது. விழுந்த இடத்தில் நீரு ற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது. வஜ்ராயு தத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான். இத்தலத்தின் மகிமையை அறிந்த காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலின் தட்சிணா மூர்த்தி சந்நதிக்கு எதிரில்  அமர்ந்து தியானம் செய்தார். அதன் நினை வாக அங்கு ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர், வள்ளி-  தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவன் கிழக்கு  நோக்கி அமைந்திருக்கிறார். எதிரில் நந்திதேவர். தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன். மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டு ள்ளது சிறப்பு. இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும். 25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந் தது. 2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை  ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன்
கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும்  சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார். ஐராவதம் மற்றும் இந்திரன் வழிபடும் இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆப த்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில்  வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது. ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத  அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள். இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம்  மேற்கொள்ளலாம். ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 94439 70397.

Monday, October 21, 2013


சிதம்பர ரகசியம்
****************

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் "திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

Wednesday, October 16, 2013

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.




கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும்.....
காமம்,
ஆசை,
குரோதம் (சினம்),
லோபம் (கடும்பற்று),
மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
பேராசை,
மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),
எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.

சாமியாரின் கனவில் வந்த புதையல் 1000 டன் தங்கத்தை தோண்ட தொல்பொருள் அதிகாரிகள் முடிவு


உன்னவோ: உ.பி. மாநிலம் உன்னவோ நகர் அருகே தான்டையா கேதா எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள மிகப்பழமையான கோட்டை ராஜா ராவ் ராம் பகஸ்சிங் எனும் அரசரின் அரண்மனையாக இருந்தது. 1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட அரசர் இறந்துவிட்டார். இதற்குபின் கோட்டை சிதிலமடைந்துகொண்டே வந்தது.இந்தக் கோட்டையில் ஆயிரம் டன் தங்கப்புதையல் இருப்பதாக இறந்த அரசர், தனது கனவில் வந்து கூறியதாக சுபோன் சர்கார் என்ற சாமியார் கூறினார். மறைந்த அரசர் பகஸ்சிங், கோட்டையில் ஏராளமான தங்கத்தை தான் புதைத்து வைத்திருப்பதாக என் கனவில் வந்து சொன்னார். 1000 டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று சாமியார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சாமியார், மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த் திடம் கூறினார். கனவில் வந்த தங்கப்புதையல் விசயத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இரண்டு முறை சர்காரின் ஆசிரமத்திற்கு சென்று, இது குறித்த தகவல்களை சேகரித்தார். தேவையான உதவிகளைச் செய்வதாக சாமியாருக்கு உறுதியளித்தார்.இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும், இந்திய புவியியல் ஆய்வு மையமும் இணைந்து இக்கோட்டையில் ஆய்வு செய்ய முடிவு செய்தன. கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகள் முழுவதும் சர்வே செய்யப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் கோட்டையின் அனைத்து பகுதியிலும் தோண்டிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்

  ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்

நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவகிரகங்களில் பிரசித்தி பெற்றதும், பிரதானமாக இருப்பதும் சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை தருபவராக திகழ்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார் கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.

இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானைச் சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைகூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜ தந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். இவர் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவன் இல்லை, 30 ஆண்டுகள் தாழ்ந்தவன் இல்லை என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு ஜாதகத்தில் தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.

அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை," "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒருசமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம் என்று கேட்டார். அதற்கு சனிபகவான் ‘‘நான் நீதிமான், எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது,’’ என விளக்கம் தந்தார். ‘‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு,’’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரரும் அந்த காலத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்தபிறகு சாக்கடையில் இருந்து வெளியே வந்த தேவேந்திரன் சனீஸ்வரரிடம் சென்று "உங்கள் பார்வையிலிருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா?" என்று பெருமையடித்துக் கொண்டார். அதற்கு சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சிம்மாசனத்தை விட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே அதுகூட என் பார்வை  பீடிப்பினால்தான்" என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனியின் கோச்சார பலன்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சியும் உண்டு. ஆனால், சனிக்கு கோச்சார கிரக பெயர்ச்சி பலம் அதிகம். காரணம் இவர் ஒரு ராசியில் சுமார் இண்டரை வருடங்கள் தங்கி இருந்து பலன் தருவார். ஒரு ஜாதகத்தில் 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், எட்டாம் வீட்டிற்கு வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை சூரியன் பிடித்து ஆட்டுகிறான். உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசாபுக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட-நஷ்டங்களைத் தருகின்ற தன்மை, அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால், சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் பொதுவாக பரவலாக நம்மிடையே தவறாக ஏற்பட்டு
விட்டது.

ஏழரைச் சனியில் சுபம்

சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும்.

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்யம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும்.

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை 'கரிநாக்கு' என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள்.
ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம்.

வழிபாடு - பரிகாரம்

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், சனீஸ்வரருக்கு மிகவும் பிரீதியானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை  வரும் பிரதோஷ  தினத்தில் சிவனுக்கு வில்வத் தளங்களால் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் எற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கித் தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

பலன் தரும் ஸ்லோகம் : (விருப்பமெல்லாம் நிறைவேற, கண்ணன் திருவருள் கிட்ட!)



ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

பொதுப் பொருள்:

எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

(கிருஷ்ண ஜெயந்தியன்று (28.8.2013) இத்துதியை பாராயணம் செய்தால் விருப்பமெல்லாம் நிறைவேறும்; கிருஷ்ணனின் திருவருள் கிட்டும்.)

பலன் தரும் ஸ்லோகம் : (விபத்துகள் நேராமல் காக்க...)


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
(நமசிவாய துதி)

பொதுப்பொருள்:

நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அப்பர் பல கடும் சோதனைகளைக் கடந்தார். அவர் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும்  என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மந்திரம் தன்னை ஜபிப்பவரை வழித்துணையாக வந்து காக்கும்.

பலன் தரும் துதி : (பஞ்சமற்ற, சுக வாழ்வு கிட்ட...)


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

பொதுப்பொருள்: மூவடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமனுடைய சிறப்பை பாடியபடி பாவை நோன்பு நோற்போம். இவ்வாறு அவன் புகழ் பாடினால், உலகம் முழுதும் மும்மாரி மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். நெல் செழித்தோங்கி வளரும். மீன்கள் வயல்வெளிகளில் துள்ளிக் குதிக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேனருந்தி கிறங்கிக் கிடக்கும். பசுக்கள் பாலை நிரம்பத் தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த பாசுர பாராயண பலன் தரும்.

(வாமனஜெயந்தி அன்று (16.9.2013) இப்பாடலைப் பாடி வாமனரின் பேரருளால், ஆண்டாளின் திருவருளால் பஞ்சம், பட்டினி அற்றப் பெருவாழ்வு பெறுவோம்.)

பலன் தரும் ஸ்லோகம் : (தீவினைகள் அகல, திருமால் திருவருள் கிட்ட...)



செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

(பெரியாழ்வார் திருமொழி)

பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.

(இத்துதியை புரட்டாசி சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வர தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.)

எண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி மாலை


காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத்  திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமுகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த  விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே  அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது. ஆகவே இப்பாடல்களுக்குத் தனியே விளக்கவுரை தேவைப்படாது. 

பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ் செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொரு
முறைமை
பொங்கும் உழுவ லால் கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

இந்த காரிய சித்தி மாலையை தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்தால் சகல காரியமும் சித்தி பெறும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் அரசர்களும் வசியமாவர். கல்வி, செல்வம் விருத்தியாகும் என விநாயகப்பெருமானே திருவாய் மலர்ந்தருளிய துதி இது.

பலன் தரும் மந்திரம் : (பாவங்கள் நீங்க, நோய்கள் அகல...)


நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் -
நேர்மை இலா
வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
பிள்ளைப்பெருமாள்
ஐயங்கார் பாசுரம்.

பொதுப்பொருள்:

திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப் போரிட்டவர்களும்கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற, கொடிய மனம் கொண்ட அடியேன் செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.

(இத்துதியை மஹாளய அமாவாசை(4.10.13) அன்று ஆரம்பித்து ஒவ்வொரு அமாவாசையன்றும் துதித்து வர பாவங்கள் நீங்கும். தீராப்பிணிகளும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருவருளால் தீரும்.)

எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக

பலன் தரும் மந்திரம் : (எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக)

கருத்துகள்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ கூறிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி
காமாட்சி.
துக்க நிவாரணி அஷ்டகம்

பொதுப்பொருள்:

வாட்டி வருத்தும் தொல்லைகள் இனிமேல் இல்லை என்ற ஆறுதலான உன் அமுத மொழியை எனக்குக் கூறிடுவாய் அம்மா. சுடர்  போன்ற ஒளி பொருந்திய அமுதம் போன்றவளே, உன் இனிய மொழியால் ஆறுதல் அளித்து எனக்கு சுகத்தை அளிப்பாய். என்னை வாட்டும்  வினைகளை, இருட்டில் ஒளிபோல் வந்துப் பொசுக்கி விரட்டிடம்மா. சங்கரி, கௌரி, க்ருபாகரி, சர்வ துக்க நிவாரணியான காமாட்சியே, எனக்குத் திரு வருள் புரிவாய் அம்மா.

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்


ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி. ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.

 மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.

‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். இன்றும் அந்த நிகழ்விற்கு சத்திய சாட்சியாய் கேரளாவில் அந்த வீடு ‘ஸ்வர்ணத்து மனை’ எனும் பெயரில் திகழ்கிறது. வரலட்சுமி தினத்தன்று ஆரம்பித்து இத்துதியை அனுதினமும் பாராயணம் செய்தால் அனைவரும் சகல செல்வவளங்களும் பெறுவது உறுதி.

அங்கம் ஹரே: புளக பூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:


பொதுப் பொருள்: மகாவிஷ்ணுவின் திருமேனி நீலமேக வண்ணம் கொண்டது. அதாவது, மேகம்போல கருத்திருக்கும். ஆனால், தனக்கு நேர்
எதிரான, பொன் போன்று தகதகக்கும் திருமேனி கொண்ட மகாலட்சுமி, தனக்கு மனையாளாக அமைந்திருக்கிறாளே என்ற பெருமகிழ்ச்சியில் அவர் உடலே சிலிர்க்கும். அந்த சிலிர்ப்பில் உண்டான ரோமாஞ்சனம் எப்படி இருக்கிறது? சிறு சிறு மலர் மொட்டுகள் போலிருக்கிறது! மகாவிஷ்ணுவின் இந்த மகிழ்ச்சியை மகாலட்சுமி தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

அந்த விழிகள் பொன்வண்டுகள் போன்றிருக்கின்றன. தமால விருட்சம் என்ற தேவலோக மரத்தின் மீது அரும்பியிருக்கும் மலர்மொட்டுகளிலிருந்து தேனை உண்ண அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்துவரும் பொன்வண்டுகள் போன்ற கண்கள் ஸ்ரீதேவியினுடையது. எப்படி பொன்வண்டுக்கு மொட்டிலுள்ள தேன் மட்டுமே தோன்றுகிறதோ, அதேபோல தன் பக்தனின் நற்குணங்களை மட்டுமே மகாலட்சுமி கவனிக்கிறாள். அவனுடைய தோஷங்களை அவள் பொருட்படுத்துவதில்லை. மகாவிஷ்ணு தமால விருட்சம் போன்றவர்.

எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக்கும் நிழல் கொடுத்து அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ அது போன்ற கருணை கொண்டவர் மகாவிஷ்ணு. இத்தகைய மகாவிஷ்ணுவின் ரோமாஞ்சனத்தைத் தன் கடைக்கண்ணால் நோக்கும் மங்கள தேவதையான மகாலட்சுமியின் அந்த கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்லது. அந்த லட்சுமி கடாட்சம் எனக்கு எல்லா நலன்களையும், சௌகர்யங்களையும் வழங்கட்டும்.
(லட்சுமி கடாட்சத்துக்கு இந்த கனகதாரா ஸ்தோத்திரமே பிரதான உபாயமாகும். அதிலும் இந்த முதல் ஸ்லோகம் மிகவும் அந்தரங்கமான உபாயம் என்றும் சொல்லப்படுகிறது)

முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி
மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸாமே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


பெரியதாக, நறுமணமிக்கதாக உள்ள நீலோத்பல மலரின் தேனை சுவைப்பதற்காக வண்டுகள் அணிவகுத்து வருவதும் பிறகு ரஸம் அருந்தித் திரும்புவதுமாக இருப்பதுபோல மகாலட்சுமியின் விழிகள் தன் நாயகனின் மலரனைய முகத்தின் மீது பார்வையாய் அமர்வதும், பிறகு வெட்கம் காரணமாக மீள்வதுமாக இருக்கின்றன. அதாவது, பக்தனின் மேன்மையான குணத்தால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு தன் பார்வையால் அனுக்ரகம் புரிய வரும் மகாலட்சுமி, அவனது குறைகளைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டுவிடுவாள். இந்தகைய பெருந்தன்மையுள்ள மகாலட்சுமி அனைத்து ஐஸ்வர்யங்களையும் எனக்கு வழங்க வேண்டும்.

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்தம் அநிமேஷம் அனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந்மம புஜங்கஸயாங்கனாயா:


பேரழகு மிக்க இந்த மகாலட்சுமியைத் தன் மனையாளாக அடைந்த ஆனந்தத்தினால் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு. இதனால் அவர் பேரானந்தத்தை அடைகிறார். ஆனால், மகாலட்சுமியின் கண்களோ கருவிழிகளாலும் இமைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீர்க்கமாக விளங்குகின்றன. இப்படி மகாவிஷ்ணுவிற்கே பேரானந்தத்தை அளிக்கும் லட்சுமிகடாட்சமானது எனக்கும் எல்லா வளங்களையும் அருளட்டும்.

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


மகாவிஷ்ணுவின் மார்பில் கௌஸ்துப மாலை துலங்குகிறது. அதனை மிகுந்த வாஞ்சையுடனும் மதிப்புடனும் மகாலட்சுமி நோக்குகிறாள். உத்தம பத்தினியான அவளுடைய கருமை மிகுந்த விழிகள் நீல மணிபோல பிரகாசிக்கின்றன. அவளுடைய கடாட்சத்தாலேயே மகாவிஷ்ணுவும் எல்லா மேன்மைகளையும் பெற்றவராகிறார். அத்தகைய மகிமைமிக்க லட்சுமி கடாட்சம் எனக்கும் எல்லா மங்களங்களையும் அருள்வதாக.

காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:


நீருண்டு, கருத்து, வானில் நிறைந்திருக்கும் மேகத்தினூடே மின்னல் கொடியாக மின்னுவதுபோல நாராயணனுடைய திருமார்பை ஸ்ரீதேவி ஆலிங்கனம் செய்கிறாள். பார்க்கவ மகரிஷியின் மகளான அவள் எல்லா உலகங்களுக்குத் தாயாகவும் விளங்குபவள். அவளுடைய பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்! அந்த சௌந்தர்ய தேவி எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதுனி மன்மதேன
மய்யாபதேத்ததிஹ மந்தரம் ஈக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலகன்யகாயா:


எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன் முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் குளுமை மிக்க கடைக்கண் பார்வை என்மேல் கொஞ்சம் பட்டு எனக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.

விஸ்வாமரேந்த்ரபத விப்ரமதானதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணம் ஈக்ஷணார்த்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் சிறி


தளவாவது பெற்றவன், ஒரு சக்கரவர்த்தி போன்று, இந்திரன் போன்று அகண்ட ஐஸ்வர்யத்தோடு கூடியவனாகத் திகழ்வான். இந்தப் பார்வை, முரனை வென்ற திருமாலுக்கும் ஆனந்தப் பெருக்கை உண்டாக்கக்கூடியது. நீலோத்பல மலரின் உள் மென்மை போன்ற மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷண நேரமாவது என் மேல் விழட்டும்.

இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதரதீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:


அச்வமேதம் முதலிய யாகங்களினால்கூட சுத்தமாகாத மனதை உடையவர்களையும் தன் கருணைப் பார்வையால் தூய்மையாக்குபவள் மகாலட்சுமி. அந்தப் பார்வையால் அத்தகையவர்களும் சொர்க்கப் பதவி அடைவார்கள்! நன்கு விரிந்த தாமரை மலரின் நடுப்பாகம் போன்ற தண்மையான, மென்மையான அந்த கனிவுப் பார்வை, என் மனதைத் திருத்தி, சித்தியை அருளட்டும்.

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மிந்நகிஞ்சன விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம்புவாஹ:
கருணையாகிற அனுகூலக் காற்றுடன்


மகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், கொடிய வறுமையால் துன்பப்படும் இந்த ஏழைக்கும் கருணை காட்டட்டும். மழைத் துளிக்காக
ஏங்கி நிற்கும் சாதகப் பறவை போல என்னிடமும் தோன்றும் பாவ கர்மமாகிய தாபத்தை என்னிடமிருந்து விலக்கி, மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, பொருள் மழையைப் பொழியட்டும்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவனைககுரோஸ்தருண்யை


சரஸ்வதி தேவி என்றும், கருட வாகனனாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்றும் சாகம்பரியாகிற பூமிதேவி என்றும் பார்வதி என்றும் போற்றித் துதிக்கப்படுகிற மகாலட்சுமியே, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பெரும்பணிகளை விளையாட்டாக செய்து பிரபஞ்சத்தையே பரிபாலிக்கிறவளே, மூவுலகிற்கும் குருவான நாராயணனுடைய பத்தினியே, நமஸ்காரம். என் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸூத்யை
ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை


நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியே நமஸ்காரம். அழகிய குணங்களுக்கு இருப்பிடமான ரதிதேவியே, நமஸ்காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணியே, நமஸ்காரம். புருஷோத்தமனுடைய மனைவியான புஷ்டி தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து நாளீகநிபானனாயை
நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயணவல்லபாயை


தாமரை போன்று மலர்ந்து சிரிக்கும் முகம் கொண்ட தேவியே நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவியே நமஸ்காரம். தாபத்தை நிவர்த்தி செய்யும் சந்திரன், மரணமிலாப் பெருவாழ்வளிக்கும் அமிர்தம் இவற்றோடு தோன்றிய தேவியே, நமஸ்காரம்.

ஸ்ரீமந்நாராயணனுக்கு மிகவும் பிரியமான தேவியே
நமஸ்காரம்.
நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


தங்கத் தாமரையை ஆசனமாகக் கொண்ட தேவியே நமஸ்காரம். பூமண்டலத்திற்குத் தலைவியே நமஸ்காரம். தேவர்களுக்குக் கருணை
காட்டும் தேவியே நமஸ்காரம். சார்ங்கபாணியான மகாவிஷ்ணுவின் இதய தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
பிருகு ரிஷியின் புத்திரியான தேவியே


நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியே நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாகக் கொண்ட லட்சுமியே நமஸ்காரம். தாமோதர
மூர்த்தியான மகாவிஷ்ணுவின் பிரியத்துக்குப் பாத்திரமான தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


ஜோதி மயமானவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தேவி, நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியே, உலகங்களைப் படைத்தவளே, தேவி, நமஸ்காரம். தேவர் முதலின அனைவராலும் பூஜிக்கப்படும் தேவியே, நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் பிரிய நாயகியே நமஸ்காரம்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே


தாமரைபோன்ற கண்களை உடையவளே, எல்லோராலும் பூஜிக்கப்படுகின்றவளே, தாயே, நமஸ்காரம். உன்னை நமஸ்கரித்தால் என் எல்லாவித பாவங்களும் தொலைந்து நான் பரிசுத்தவானாகிறேன். உனக்கு நான் சமர்ப்பிக்கும் நமஸ்காரம், சகல சம்பத்துகளையும் கொடுக்கிறது; எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது; மாபெரும் சாம்ராஜ்ய பொக்கிஷத்தை அருள்கிறது. என் நமஸ்காரங்கள் என்றென்றும் உனக்கே உரித்தாகும்.

யத்கடாக்ஷஸ முபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத:
ஸந்தனோதி வசனாங்கமானஸை:
த்வாம் முராரி ஹ்ருதயேச்வரீம் பஜே


தேவி, உந்தன் கடைக்கண் கடாட்சம் உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும் எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும். முராரியான மகா விஷ்ணுவின் ஹ்ருதய நாயகியான உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவளதமாம் ஸுககந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்


தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரையைக் கைகளில் ஏந்தியவளே, பிரகாசிக்கும் வெண்மை வஸ்திரம், சந்தனம், மாலை இவற்றால் ஒளிர்பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச்செய்பவளே, மூவுலகத்திற்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்கும் கருணை செய்வாய் அம்மா!

திக்கஸ்திபி: கனககும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்


எல்லா திசைகளிலிருந்தும் தங்கக் குடங்களில் நிரம்பிய கங்கையின் பரிசுத்தமான நீரினால் திருமஞ்சனம் செய்யப்பட்டவளே, உலகங்களுக்கெல்லாம் தாயே, எல்லா உலகத்திற்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் பத்தினியே, பாற்கடலின் புத்திரியே, உன்னைக் காலைப் பொழுதில் நமஸ்கரிக்கிறேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூரதரங்கிதைரபாங்கை:
அவலோகய மாம கிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
தாமரை போன்ற கண்களை உடைய மகா


விஷ்ணுவின் இதயத்துக்கு நெருக்கமானவளே, மகாலட்சுமியே, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால், வறுமை பிடித்தாட் கொண்டிருக்கும் என்னையும், உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.

ஸ்துவந்தி யே ஸ்துதிபி ரமீபி பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகின:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:


மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே,  மூவுலகிற்கும் தாயுமான மகாலட்மியே, இந்த ஸ்தோத்திரங்களினால் தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர், இவ்வுலகில் எல்லா நற்குணங்களும்  நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும், சான்றோர் கொண்டாடும் புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள். உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே!

Tuesday, October 15, 2013

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.


சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.

உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?

டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.

அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.

மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!

இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!”

இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

Sunday, October 13, 2013

ஆரோக்கியமும் புண்ணியமும் ....




வணக்கம் நண்பர்களே !
காலைல எழுந்து வேகமாக  நடை பயணம் போகிறோம் . உடல் ஆரோக்கியத்திற்காக வைற்றை குறைக்க ... பிறகு அதற்க்கு தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்ட எப்டி விறு குறையும் ... கொஞ்சம் யோசிங்க ... உடல் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் ....அதன் கூட புண்ணியமும் சேரும் ...அதெப்டி என்றுகேட்கிரீர்கள ....
உடல் ஆரோக்கியத்திற்கு .... காலை வேளையல்.சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும் அதுவும் வெறும் பாதத்தில்  மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான  ஒரு உணர்வை ஏற்படுத்தும் , வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும்  வெறும் பாதத்தில்  நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல்  ஆரோக்கியம் அடையும் .இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன , பீச்  மற்றும்  சாலைகளில் நடப்பதை தவிர்த்து ,வெறும் பாதங்களில்  கோவிலை வலம் வாருங்கள் , புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும் .இதற்க்க்காகத்தன் வெளிபிரகாரங்களை அமைத்து இருக்கிறார்கள் , நம் முன்னோர்கள் , சிதம்பரம் நடராஜர்  கோவிலின் வெளி பிரகாரத்தில் பார்த்தல் உங்களுக்கே தெரியும் .புதுவை அதாவது பாண்டிச்சேரி அருகில் உள்ள வில்லியனூர் ,திருகாமீச்வரர் ஆலயத்திலும் காணலாம் , இதுதான் 2இன் 1 ,நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தவைகளை நாம் மறந்து போனோம்,  காலம் நாகரீகம் அடைந்ததால் ,எல்லாமே மாறி போச்சிபா ...சிவாலயங்கள்  மட்டுமல்லாது ,மன்னர்கள் காலத்து கோவில்கள்  அனைத்திலும்  காணலாம்


பாண்டிச்சேரி  கணேசன்


திருவோணம் நட்சத்திரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

திருவோணம் நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
மூலவர்:வரதராஜப்பெருமாள்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பெருந்தேவி
தல விருட்சம்:-
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை:-
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பசுபதிகோவில்
ஊர்:பசுபதிகோவில்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மார்கழி கேட்டை, புரட்டாசி சனிக்கிழமைகள்
தல சிறப்பு:
ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 97903 42581, 94436 50920
பொது தகவல்:
இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
பிரார்த்தனை
கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இத்தல பெருமாளுக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை போன்ற பதார்த்தங்கள் வைத்து, நெய் தீபம் ஏற்றுகின்றனர். மேலும், மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது இன்னும் விசேஷ பலன் தரும்.
தலபெருமை:
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
தல வரலாறு:
ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.
பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்அதிசயத்தின் அடிப்படையில்:ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.
இருப்பிடம் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி :
தஞ்சாவூர்

Saturday, October 12, 2013

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக சிவன் ஸ்தோத்திரம்


குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .

நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோ
நமஸ்தே ப்ருதிவீஸ்ராய விஸ்வாதி
காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய ஸ்ரீகாள
கண்டாய க்ருபாகராய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய ஆஸாம் பராய
அம்பர வர்ஜிதாய திகம்பராய
அம்பிகாய யுதாய குணத்ரயாத்யை:
அபவர்ஜிதாய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய மாயா விகாராதி
விவர்ஜிதாய மாயாதி ரூடாய
தபஸ்திதிய கலாதி ரூடாய கபர்தினே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய

தினசரி திதிப் பிள்ளையார் வழிபாடு



ஓம் காலஸ்வரூபாய வித்மஹே காலாதீதாய
தீமஹிதந்தோ கலயோக ஷோடக ஷோடக
கணபதி ப்ரசோத்யாத்

- ஸ்ரீவிநாயகர் திருவுருவத்தை எந்த இடத்தில் தரிசித்தாலும் அன்றைய திதிக்குரிய கணபதியின் நாமத்தை ஆத்மார்த்தமாக ஸ்மரித் அளித்து, தோல் வியாதிகளை தடுக்கும். முதுகெலும்பையும், மார்பு எலும்பையும் சீராக இயக்குகிறது. சில ஜீரண பிரச்சினைகளை சரி செய்கிறது

அருள்தரும் பொள்ளாப் பிள்ளையார்


களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது.

`பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர். இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், "இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா'' என்றார். மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத்தைப் படைத்தான்.

`அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக்குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா' என்றான். பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா? அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார்.

பையனுக்கு அழுகை வந்தது. "இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்'' என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான். அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார்.

தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார். அவரிடம், "விநாயகா! எப்படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப்பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்'' என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத்தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர். மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது.

அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான். அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

சௌபாக்கிய லட்சுமி ஸ்லோகம்

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா:
பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ:
ஸுவஸனீ: ஸீமந்தனீஸ்
ஸுப்ரியா: ப்ரேம்ணா புத்ரகிருஹாதி
பாக்யவிபவை: ஸம்யோஜ்ய
ஸம்ரக்ஷதீம் ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம்
சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.

ஸ்ரீ பைரவ தியானம்

ரக்த ஜூவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷ கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

நரசிம்மர் ஸ்லோகம்


சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோச காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பாலு, இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம்.

இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான,

“ஓம் வ்ஜர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி
தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்”

என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்.

சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்


இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது. வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். 

பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம்.

வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம். அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
 சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்

தத்தாத்ரேயர் ஸ்லோகம்

மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம்!!!

பொருள் :

மாலையையும், கமண்டலத்தையும் இரண்டு கைகளிலும், உடுக்கை மற்றும் ஈட்டியை இரு கைகளிலும், சங்கு சக்கரத்தை மேலே உள்ள இரு கைகளிலும் தாங்கியுள்ள ஆறு கைகளை உடைய அத்ரி குமாரனான தத்தாத்ரேயப் பெருமானை நான் தியானிக்கிறேன்.

கணேச பஞ்சரத்தினம் படியுங்கள்

கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம். படியுங்கள். பலன் பெறுங்கள்.

தனக்கு மேல் வேறு ஒரு தலைவன்
இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே !
கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !
அற்புதம் நிகழ்த்துபவனே !
மோதகம் ஏந்தியவனே !
சந்திரனைத் தலையில் சூடியவனே !
உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !
உன்னை நம்பும் அடியவர்களின் தீவினை களைப்
போக்கி கருணை காட்டும் கணபதியே !
உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !
பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !
வல்லமை நிறைந்தவனே ! ஆனைமுகனே !
கருணை மிக்க இதயம் கொண்டவனே !
அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !
எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும்
பாக்கியத்தை அருள்வாயாக. ஓங்கார வடிவினனே !
கருணாமூர்த்தியே ! பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !
எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !
பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !
அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !
நித்ய வடிவினே ! உன்னை வணங்குகிறேன்.
கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே !
சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த
சிவபெருமானின் புதல்வனே ! பக்தர்களின் துயர் களைபவனே !
ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !
செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே ! உன்னை சரணடைந்து போற்றுகின்றேன். ஒற்றைக் கொம்பனே ! கணபதீஸ்வரா ! சிவ பெருமானின் பிள்ளையே !
ஆதிஅந்தமில்லாதவனே ! துன்பம் துடைப்பவனே !
யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !
உன் திருவடிகளை எப்போதும் திருவடியில்
வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.

இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும். தோஷங்கள் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்
Ganesan Pondicherry

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷபதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

தினமும் பெண்கள் கூற வேண்டிய ஸ்லோகம்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே
த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இதைக் கூறி மங்கள சண்டிகையை வழிபட்டு வரவும்.

நோயை விரட்டும் தியான சுலோகம்

அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:    
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:   
 காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:    
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:    
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.
tamil matrimony_INNER_468x60.gif

வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம்

பெண்களுக்கான பெண் தெய்வத்திற்கான ஒரு உற்சவமே நவராத்திரி விழா. ஆனி அமாவாசைக்கு பிறகு வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாத அமாவாசைக்கு பிறகு வருவது மகா நவராத்திரி. தை அமாவாசைக்கு பிறகு வருவது மகா நவராத்திரி. பங்குனி மாத அமாவாசைக்கு பிறகு வருவது வசந்த நவராத்திரி.
புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் காலதேவனுடைய கோரைப்பற்கள் என்கிறது அக்கினிப்புராணம். ஜீவராசிகள் அக்கோரைப் பற்களில் அகப்பட்டு அவதியுறாதிருக்க நவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
முதல் மூன்று தினங்களில் துதிக்கப்படும் தேவியின் கோப சக்தியே துர்க்கை. மகாவிஷ்ணுவின் வாயிலாக மதுகைடபர் என்ற அரக்கர்களை வதம் புரியச் செய்தவள். அக்கொடியவர்களை வதம் புரிந்தமை குறித்துச் செய்யப்படும் ஆராதனையே முதன் மூன்று தினங்களில் நடைபெறுகிறது.
அடுத்த மூன்று தினங்களில் வழிபாடு செய்யக்கூடிய தேவியே மகாலட்சுமி. அத்தேவியே கோபமாக மாறியபோது மகிஷாசுரமர்த்தினியாகத் தோன்றி மகிடாசுரன் என்னும் அசுரனை சம்ஹாரம் பண்ணினாள். அவளே நாராயணி எனவும் லட்சுமி துர்க்கை எனவும் கூறுவர்.
கடைசி 3 தினங்களில் துதிக்கப்படும் தேவியே சரஸ்வதி தேவி. சாந்தமான அத்தேவியே துஷ்டர்களான சும்ப நிசம்பர்களை சம்கரிக்க ஆக்ரோஷமாகத் தோன்றி வந்தாள் சரஸ்வதி துர்க்கையாக.
நவராத்திரியின் நிறைவு நாளே சரஸ்வதி பூஜை. கற்றவர் போற்றும் கலித்துவ நாயகி, கலைவாணி, கலா ரூபமயில் என்று கூறும் அறிஞர்கள் இத்தேவியை கலைச்செல்வி, பாரதி, வாலைப்பெண், கலைவாணி, நான்முகன் தேவி, வாக்தேவி, சாவித்திரி, வித்யாரூபிணி எனவும் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
ஆயுத பூஜை அன்று அத்தேவிமார்களின் போர் ஆயுதங்களை நினைவுபடுத்தும் வகையில் அன்றாடம் நாம் கையாளும் பொருட்களையும், பிற ஆயுதங்களையும், அவற்றுடன் புத்தகங்கள் போன்றவற்றையும் அழகுற அடுக்கி வைத்து வணங்குவது அவற்றின் மீதும் இறை கடாட்சம் பெற வேண்டும் என்பதற்கே.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கொப்ப தொழிற்தெய்வம் என்றழைக்கப்படும் சரஸ்வதியை பிரதானப்படுத்துகிறோம். தொழிலாளர் போற்றும் தெய்வமாக உள்ள தேவியை வணங்கி வழிபடுதல் சிறப்புக்குரியது.
சரஸ்வதி பூஜையின் அடுத்த நாளான தசமி நாளில் விஜயதசமியைக் கொண்டாடுகிறோம். அசுராதியர்கள் வதம் முடிந்து திருப்திகரமான மங்கள காரியங்கள் நடைபெறத் தொடங்கிய இன்பமான நாளே தசமி தினம். முப்பெரும் தேவியரும் கொடிய கோபம் கொண்ட நிலை மாறி சாந்த குணமடைந்த பொன்னாள். கல்வி பயின்றிட, இசைப்பயிற்சி, நடைப்பயிற்சி, அஸ்திரப்பயிற்சி, புதிய தொழில் தொடங்க வியாபாரம் போன்ற நற்காரியங்களை செய்வர். நவராத்திரியை வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதை காண்போம்.
இங்கு எவ்வித உடல் குறையும் இல்லாத அழகிய சிறுமிகள் ஒன்பது பேரை தெரிந்து ஒன்பதுவித காய்கறிகளுடன் சமைத்து விருந்து வைத்து புசித்து விழாவை கொண்டாடுகின்றனர்.
விஜய தசமியன்று சமி என்னும் ஒருவகை மரத்துக்குப்பூஜையும் செய்கின்றனர்.
சுமேரியர்கள் அம்பாளை மலைமகளுக்கு அதிபதியான பர்வதர்த்தினியாக பாவித்துக் கொண்டாடுகின்றனர்.
பாபிலோனியாவில் ‘உமை’ என்னும் பெயரை ‘உம்மா’ என்று கூறி வழிபடுகின்றனர்.
ஆர்க்கேடியாவில் ‘உம்மி’ என்று அழைக்கப்படுகிறாள். ஸிரியோவில் ‘உம்மோ’ என்று அழைக்கப்படுகிறாள்.
வட நாட்டில் ராமாயண ரீதியாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்றுதான் ராவணனை ராமன் சம்ஹரித்து வெற்றிவாகை சூடினான் என்பது ஐதீகம். அதனால்தான் ‘‘ராம்லீ’’ உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவங்களை வீதி வலமாக எடுத்து வருவார்கள். அதுமட்டுமின்றி அந்த மூவரைப் போல வேஷம் தரித்து வீதிகளில் நாடகமாடியும் செல்வர். கடைசி நாளான விஜயதசமியன்று ராவண கும்பகர்ண உருவங்களை கொளுத்தி வாண வேடிக்கை நடத்துகின்றனர்.
காளிமாதாவின் பிறந்தகம் வங்காளம். வங்காளியின் இஷ்ட தெய்வம் காத்யாயனியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு ஆண்டுக்கு ஒரு முறை ஒன்பது நாட்கள் அவளுடைய பிறந்தகமான வங்காளத்திற்கு வந்து விட்டுப்போக வேண்டும் என்று சம்புவன் கேட்டுக்கொண்டான்.
பத்தாவது நாள் திரும்பத் தாங்கள் அழைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அதைத்தான் வங்காளிகள் ‘துர்க்கா பூஜை’யாக பத்து நாட்கள் கொண்டாடுகின்றனர். திருமணமான பெண்களை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து ஆனந்தமாய் கொண்டாடுகின்றனர்.
இங்கு பொம்மைக் கொலு வைப்பர். அப்போது சுந்தரகாண்டம், சீனிவாச கல்யாணம் படிப்பர். மைசூர் மாநில மக்களின் இஷ்ட தெய்வம் சாமுண்டி, அவளை மகிடாசுரமர்த்தினி என்று போற்றித் துதிக்கின்றனர். மைசூர் அரசர்கள் ஆட்சிக்காலத்தில் தசராப் பண்டிகையின் போது நாட்டுக்கலைஞர்களை தர்பாரில் அழைத்து பரிசளித்து கவுரவித்தனர். அப்போது நடைபெறும் அரசரின் யானை பவனியை காணக்கண்கோடி வேண்டும்.