http://aanmeegamarivom.blogspot.in
நவராத்திரியின் 8ஆம் 12.10.2013 நாளான துர்காஷ்டமி என்று சொல்வார்கள். துர்கைக்கு உகந்த அஷ்டமியாகும். சனிக்கிழமை துர்காஷ்டமி வருகிறது.
நேற்று செய்த அலங்காரத்தில் சிறிய மாற்றம் செய்து இன்று நரசிம்ஹி வடிவத்தில் தேவியை அலங்கரித்து பூஜிக்க வேண்டும்.
கரும்பை கையில் இணைக்க வேண்டும். கொலு பொம்மைகளில் புத்தகம், பேனா, வீணை, தாமரை மலர், அன்னப் பறவை இடம்பெறச் செய்ய வேண்டும்.
சும்பன் தூதனுப்பியது போல் சண்டிகா தேவியும் சும்பனிடம் சிவபெருமாளையே தூதாக அனுப்பி அசுரர்கள் இனி தேவர்களின் செயலில் தலையிடக்கூடாதென்றும், மீறினால் போரில் தேவியின் ஆயுதங்களுக்கு இறையாக வேண்டியது தான் என்று தெரிவிக்கச் செய்ததனால் "சிவதூதி" என்ற பெயரையும் பெற்றாள்.
சும்பனின் மருமகனான இரத்தபீஜன் என்ற கடும் அரக்கன் முதலில் போரில் மாண்டான். இவனுடைய இரத்தத் துளி விழும் இடத்தில் மீண்டும் ஒரு அரக்கன் உருவாவான். இது அவன் பெற்ற வரம். சண்டிகாதேவி தன் சூலத்தால் இரத்தபீஜனை அடிக்க, பெருகி வந்த இரத்தம் சாமுண்டிதேவியின் வாய்க்குள் புகுந்தது. மேலும் மேலும் தேவியின் ஆயுதங்களால் தாக்கப்பட்ட இரத்தபீஜன் மாண்டொழிந்தான். அவனுடைய இரத்தத்திலிருந்து தோன்றிய அரக்கர்களும் மாண்டனர்.
நரசிம்ஹி அம்மனுக்கு உரிய பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாட வேண்டும்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை செய்வது சிறந்தது.
சனிக்கிழமையாதலால் சிவப்பு, வெளிர் சிவப்பு, பிரவுன் வண்ணம் கலந்த ஆடைகளை அணிவிக்கலாம். செம்பருத்தி, ரோஜா மற்றும் சிவப்பு நிற மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.
பருப்பு பாயாசத்தை நைவேதியம் செய்யலாம். சுண்டல், அவல், பொரிகடலை, சர்க்கரை சேர்த்து கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கலாம்
No comments:
Post a Comment