Friday, October 23, 2015

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும் வரும் 26.10.15 இரவுமுதல் 27.10.15 மாலைக்குள், இந்த அன்னாபிஷேக நிகழ்வை உணர்ந்து அனுபவித்து வழிபடவேண்டி இப்பதிவு.

சிவ சொந்தங்கள் பாதம் பணிகிறேன், 
நமச்சிவாய

உணராமல் வழிபடுவதைவிட உணர்ந்து வழிபடவேண்டி, எதோ அன்னாபிஷேகம் பார்த்தால் நல்லது என்று யாரோ சொல்வதை கேட்டு வழிபடுவதை காட்டிலும், அந்த நிகழ்வு எதனால் நிகழ்கிறது அதன் உட்கருத்து உணர்ந்துகொண்டு வழிபட்டால், அதன் பயன் நாம் நன்றாக பெற முடியும்,

அன்னாபிஷேகம் – அன்னமாகிய அரிசியை சமைத்து அதை சிவனுக்கு அபிஷேகம் செய்வது.

அன்னம் – அரிசி நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது, அந்த அரிசின் ரூபம் பாணலிங்கம் என்று சொல்லக்கூடிய சிவருபமே, ( நங்கள் வெளிநாட்டில் உள்ளோம் இங்கு அரிசி கிடையாது என்று சொல்வது கேட்கிறது கோதுமையும் அதே ரூபம்தான் ).

நமக்கு அனுதினமும் அன்னம்பாலிக்கும் (உணவு அளிக்கும்) இறைவன் கருணையை உணர்ந்து அவருக்கு அந்த அன்னத்தை கொண்டு செய்யப்படும் அபிஷேகம்.

இந்த அபிஷேகதின் உட்பொருளை பார்த்தால்,
பல லட்சம் லிங்கம் கொண்டு ஒரு லிங்கத்திற்கு அபிசேகம்,
லிங்கத்தை உணவாககொண்டு,
லிங்கமாகிய கருவில் இருந்து உறுப்புகொண்டு உருவம் பெற்ற ஆன்மா,
தான் இன்று ஜீவிக்க காரணமான அன்னாமாகிய ( லிங்கத்தை – சிவத்தை ) கொண்டு தன்னை ஒரு உருக்கொண்டு வாழ்விக்கும் சிவத்திற்கு நன்றியுடன் செய்யவேண்டிய அபிசேகம்.

எப்படி செய்வது :
தம்மை தூய்மைப்படுத்தி கொண்டு சிவநாமம் சொல்லிக்கொண்டு அரிசியை அன்னமாகி சுடு ஆரியாவுடன் சிறிது தண்ணீர்விட்டு நாம் இல்லத்தில் உள்ள லிங்கதிருமேனிக்கு அந்த அன்னதைகொண்டு அபிஷேகம் செய்து திருமுறைகள் பாடி வழிபாடு செய்தபின்பு அந்த அபிசேகம் செய்த அன்னத்தை அனைவருக்கும் வழங்கி சிவத்தை சுவையுங்கள்.

திருக்கோவில் செய்யப்படும் அன்னாபிஷேகம் நிகழ்வில் பங்குகொண்டு, அன்னாபிஷேக நிகழ்வுக்கு தங்களால் முடிந்த உதவிசெய்து, பலலட்சம் சிவத்தை கொண்டு ஒரு சிவத்திற்கு செய்யப்படும் அபிசேகத்தை மனதார கண்டு பயன்பெற வேண்டுகிறேன்.

எல்லாம் வல்லவன் கருணையால் எந்த ஆகம விதியும் அறியாத அடியேன் எண்ணத்தில் ஈசன் திருவருளால் தோன்றிய பதிவு,

ஆகம விதியில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும்.

திருச்சிற்றம்பலம்

அடியேன்
அங்கமுத்து குமார்

Thursday, October 22, 2015

ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலா புராணம் ஆகும்.ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே துலா ஸ்நானம் வழிபாடாகும்.இதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி 2 நாட்களில் நீராடுவது மிகவும் சிறப்பு.காவிரியில் புனித நீராடிய பிறகு துலா புராணத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு பகுதியாகவோ தினமும் படிப்பது சகல நலன்களையும் தரும்.பொதுவாக 2 நதிகள் கூடும் இடத்தை கூடுதுறை அல்லது சங்கமம் என்று கூறுவோம்.தமிழ்நாட்டில் பவானி,உ.பி.யில் அலகாபாத்,கர்நாடகாவில் திருமுக்கூடல் ஆகியவைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கம இடங்களாகும்.
63 கோடி தீர்த்தம்:இந்தியாவில் கங்கை உள்பட 63 கோடி தீர்த்தங்களும் தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது.துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும்,விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு அல்லது முடவன் முழுக்கு என்று பெயர்.பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலமாதலால் மாயூரம் என்று வடமொழியிலும் மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படுகிறது.இத்தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது.திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார்.அப்போது எமன்(தர்மதேவன்)மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான்.எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இடபத்தின் செருக்கு:ஒரு சமயம் சிவன் தன் வாகனமான இடபத்தின் மீது ஏறி உலகை சுற்றி வந்தார்.அப்போது இடப வாகனம் செருக்கடைந்து சுற்றி வந்து காவிரியின் நடுவில் தங்கி விட்டது.அதன் கர்வத்தை அடக்க சிவன் தன் கால் விரலை ஊன்றி அதை பாதாளத்தில் அமிழ்த்தி விட்டார். பிறகு இடபம் மனம் வருந்தி இறைவனை வேண்ட சிவனும் மனமிறங்கி அந்த இடபத்தை அங்கேயே இருந்து காவிரியில் நீராடுவோர்க்கு அருள்புரிந்து வருமாறு கட்டளையிட்டு மறைந்தார்.வானா அரசன் வாலி சிறந்த சிவபக்தன்.அவன் காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடு துறையில் அருளுகின்ற சிவனை வழிபட்டு வந்தான் என்றும், அவனே பிற்காலத்தில் ராவணனை ஒடுக்கியவன் என்றும் திருஞானசம்பந்தர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.காவிரியிலிருந்து வெகுதூரத்தில் இருப்பவர்கள் ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட செல்லலாம். இயலாதவர்கள் தாங்கள் நீராடும் நதியையே காவிரியாக கருதி நீராடுவது நல்லது.ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி.ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

தகவல்-ஹரிஹரன்- பதிவு-ஆன்மீக சிந்தனையில்  அடியேன் -கணேசன் பாண்டிச்சேரி


Saturday, October 10, 2015

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !
திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம்.
எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான்.
இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது.
பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம்.
கார்த்திகை தீபத்தின் மூலத் தலம்.
ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம்.
இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !
அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.
கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது.
இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.
142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார்.
பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன.
காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.
அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான்.
அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்.
இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.
அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான்.
ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான்.
திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான்.
அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம்,
கிளி கோபுரம் (81 அடி உயரம்);
தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்),
தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்),
மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்);
வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்),
வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார்.
இதை காந்த மலை என்பர்.
காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்).
கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர்.
இப்பாதையில் 20 ஆசிரமங்களும்,
360 தீர்த்தங் களும்,
பல சந்நிதிகளும்,
அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.
மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.
அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன.
இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள்.
ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி.
இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.
அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார்.
அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.
அவ்வாறே உமையும் தவம் செய்தாள்.
கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது.
அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.
இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மலையளவு பயன்!
நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை.
காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள்.
அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது.
அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.
கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால்
முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும்,
மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும்.
திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும்.
மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.
கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது.
இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும்.
இதனால் குழந்தைப்பேறு கிட்டும்;
கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
மலையின் கிழக்கே இந்திரலிங்கம்,
தென் கிழக்கே அக்னிலிங்கம்,
தெற்கே எமலிங்கம்,
தென்மேற்கே நிருதிலிங்கம்,
மேற்கே வருணலிங்கம்,
வடமேற்கே வாயுலிங்கம்,
வடக்கே குபேரலிங்கம்,
வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.
இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும்.
பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு.
அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.
கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.
அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும்,
அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம்.
அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது.
கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன.
மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது.
தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.
திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில்
இடைக்காட்டு சித்தர்,
அருணகிரிநாதர்,
ஈசான்ய ஞானதேசிகர்,
குரு நமச்சிவாயர்,
குகை நமச்சிவாயர்,
ரமணமகரிஷி,
தெய்வசிகாமணி தேசிகர்,
விருப்பாட்சிமுனிவர்,
சேஷாத்ரி சுவாமிகள்,
இசக்கிசாமியார்,
விசிறி சாமியார்,
அம்மணியம்மன்,
கணபதி சாஸ்திரி,
சடைசாமிகள்,
தண்டபாணி சுவாமி,
கண்ணாடி சாமியார்,
சடைச்சி அம்மாள்,
பத்ராசல சுவாமி,
சைவ எல்லப்பநாவலர்,
பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.
கார்த்திகை ஜோதி மகத்துவம்!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்),
சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),
பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.
திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.
எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால்,
சிவனின் அருளுடன்,
மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
இதன் அடிப்பாகத்தில்
பிரம்மா,
தண்டு பாகத்தில்
மகாவிஷ்ணு,
நெய், எண்ணெய்
நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.
எத்தனை எத்தனையோ அரசர்கள்,
கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,
கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும்,
இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள்,
இடையூறுகளையும் ஏழரை சனி,
அஷ்டமச்சனி
போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,
வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்

பிரதோஷம். மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும். அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.


பிரதோஷம். மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும். அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1. தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

இன்று மாலை அடியேன். சென்னையில் இதுவரை தரிசிக்காத ஒரு 2, 3 ஞானியர் அதிச்டானங்களை தரிசிக்கலாம் என்று இருக்கிறேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

Wednesday, September 9, 2015

பதினாறு திருக்கரங்களுடன் திகழும் உக்ர நரசிம்மர்அயோத்தி அரசன் நிமி. புகழும் பெருமையும் மிக, நல்லாட்சி நடத்தி வந்தான். நிமியின் பெருமையில் பொறாமை கொண்டிருந்தான் அசுரன் ஒருவன். வலிமையால் வெல்ல இயலாத அசுரன், நிமியை வீழ்த்த தக்க நேரம் பார்த்திருந்தான்.
ஒரு முறை முன்னோர் சிராத்த நாளில் வசிஷ்டரை அழைத்தான் நிமி. அவன் அழைப்பில் அரண்மனை சென்று, சிராத்தம் முடிந்து உணவருந்த அமர்ந்தார் வசிஷ்டர். நிமியை வீழ்த்த நேரம் பார்த்திருந்த அசுரன், சமையல்காரன் வேடத்தில் அரண்மனையில் புகுந்து, சிராத்த உணவில் மாமிசம் கலந்து பரிமாறினான். இதனைக் கண்ட வசிஷ்டர் மிகுந்த கோபமுற்றார். அரசனைப் பார்த்து, ""எனக்கு புலால் உணவு படைத்த நீ அசுரனாகக் கடவது'' என்று சாபமிட்டார்.
ஆனால், பின்னர் உண்மை உணர்ந்த அவர் பெரும் துயரடைந்தார். மனம் கலங்கிய நிலையில், ந்ருஸிம்ஹ வனம் வந்து மனம் அமைதி பெற குகை ஒன்றில் தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவத்துக்கு மெச்சிய நான்முகன், அவர் முன் தோன்றி, மனம் அமைதி பெற்று இயல்பு நிலையில் வாழ வரம் அருளினார்.
அதன் பின்னர் வெளியே வந்த முனிவர், மேனகையுடன் வாழ்ந்துவந்தார். தன் இலக்கும் தவமும் கலைந்து போனது பற்றி அவர் அறிந்தாரில்லை. ஒரு நாள், வசிட்டரின் காதில் அசரீரி ஒன்று கேட்டது. "வசிட்டனே... உனது தவம் தடைப்பட்டு விட்டது. நீ உண்மையில் உன் தவத்தின் பயனைப் பெற வேண்டுமானால், ஓர் உபாயம் கூறுகிறேன். கேள். நீ நரஸிம்ம வனத்தின் உட்பகுதிக்குச் செல். அங்கே நிருஸிம்ஹ ரூபியாக ஸ்ரீவிஷ்ணுவை தரிசிப்பாய். அவரை எண்ணி தவம் செய். அங்கே கோயில் கொண்ட விஷ்ணுவின் அருளால் பலர் தவமியற்றி சித்திபெற்றிருக்கிறார்கள்' என்றது.
வசிஷ்டரும் அவ்வாறே ந்ருஸிம்ஹ வனத்தின் உள்ளே சென்றார். சிங்கப் பெருமானை தரிசித்து, வலம் வந்து, தவம் புரியத் தொடங்கினார்.
வசிஷ்டர் மீண்டும் கடுந்தவம் செய்யத் தொடங்கியதைக் கண்ட தேவர்கள், இந்திரனிடம் தெரிவித்தனர். இதனால் அவரது தவத்தைக் கலைக்க மீண்டும் முயன்றான் தேவேந்திரன். ஐராவத யானை மீதேறி, ஆயுதம் எடுத்துத் தாக்கி, முனிவரின் தவத்தைக் கலைக்கத் தொடங்கினான்.
ஆனால், தான் செய்வது தவறெனத் தெரிந்தது இந்திரனுக்கு. தன் தவறைப் போக்க, நிருஸிம்மர் சந்நிதி கொண்ட பாவன விமானத்தின் கீழ்ப் புறம் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, நீராடி தவம் புரியத் தொடங்கினான். இந்திரன் தோற்றுவித்த தீர்த்தம் இந்திரபுஷ்கரிணி எனப்படுகிறது.
இது புராணப் பெருமை பெற்றுள்ளது. இதன் கரையில் தவம் செய்த யக்ஞகுப்தருக்கு பிரகலாதன் தரிசனம் தந்து, ஆசியளித்தானாம். கெüதமரின் சாபத்தால் துன்புற்ற தேவேந்திரன் இதில் நீராடி பாவம் நீங்கப் பெற்றானாம். தீர்த்தச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில், பாவன விமானத்தின் தென்புறத்தில் ஜமதக்னி தீர்த்தம் உள்ளது.
ஜமதக்னியின் புத்திரர் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தம். தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீர்யார்ஜுனனையும் அவனைப் போன்ற துஷ்ட அரசர்களையும் கொல்ல அருள் வேண்டி இங்கே பரசுராமர் நிருஸிம்ஹரை நோக்கி தவம் செய்து, வில்லும் அம்பும் பெற்றார்.
மார்கண்டேய புராணத்துள், நிருஸிம்ஹவன மாஹாத்மியத்துள் உள்ளது இந்தத் தலத்தின் புராணம். ரிஷி ஜைமினி தமக்கு நற்கதி கிடைக்க வழி கேட்டு பிருகு முனிவரை அணுகினார். ""இதே கேள்வியை நாரதரும் பிரம்மாவிடம் கேட்டார். அவர் கூறிய பதிலை உனக்குக் கூறுகிறேன்'' என்று சொல்லி, இந்தத் தலத்தின் மகிமையை ஜைமினிக்கு பிருகு சொல்வதாக அமைந்துள்ளது இந்தத் தல புராணம்.
புராணப் பெருமை பெற்ற இந்தத் தலம் சிங்கிரிக்குடி, சிங்கர்குடி, சிங்கர்கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அபிஷேகப்பாக்கம் என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இங்கே லட்சுமிநரசிம்மர் அபூர்வமான கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மூலவர் 16 திருக்கரங்களுடன் திகழும் உக்ர நரசிம்மர். ஒவ்வொரு கரத்திலும் ஓர் ஆயுதம் தாங்கியுள்ளார். வலதுபுற 8 கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், குத்துக் கத்தி, பாணம் ஆகியவற்றைத் தாங்கியும், அசுரனின் தலையை அறுத்த நிலையில், கத்தியால் அசுரன் ஒருவனைக் குத்தியவாறு, இரண்யன் காலை அழுத்திப் பிடித்தபடி, இரண்யன் குடலைக் கிழிப்பது போல் எனவும் ஆக எட்டு கரங்களும், இடதுபுற கரங்களில், குடல் மாலையைப் பிடிப்பது, சங்கம், கேடயம், வில், கதை ஆகியவற்றுடன், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்தபடி, குடலைக் கிழிப்பது என இடதுபுற 8 கரங்களுமாய் உக்ர ரூபத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர்.
பிரகலாதனுக்கு அருள் புரிந்த நிலையில், பிரகலாதன் நரசிம்மரின் கீழே வலப்புறத்தில் கைகள் குவித்துத் தொழுதபடி உள்ளான். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட்ட இரணியன் மனைவி நீலாவதி, வசிஷ்டர், சுக்கிரன், மூன்று அசுரர்கள் ஆகியோரும் உடன் உள்ளனர்.
கனகவல்லித் தாயார் தனி சந்நிதியில் உள்ளார். பிரகலாத வரதனாக உற்ஸவ மூர்த்தி. கிருஷ்ணாரண்ய úக்ஷத்ரம் என்ற புராணப் பெயர் கொண்ட தலம். "ஆல்' தல விருட்சமாகத் திகழ்கிறது. ஜமதக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு(பார்க்கவ) தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.
புரட்டாசியில் புண்ணியம் தரும் அட்டநரசிம்மத் தலங்கள்: இரணியனை சம்ஹரிக்க திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து தங்கள் துயர் தீர்த்ததைக் கொண்டாடிய தவ முனிவர்கள், பின்னர் தாங்கள் எப்போதும் நரசிம்ம அவதாரக் கோலத்தைத் தரிசிக்க வழி செய்யுமாறு கோரினர். முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலம் காட்டினார் பெருமாள். அவ்வாறு தமிழகத்தில் நரசிம்ம அவதாரக் கோலம் காட்டிய எட்டு இடங்கள் அட்ட நரசிம்ம தலங்கள் எனப்படுகின்றன. இவற்றில் நடுவில் அமைந்துள்ள பூவரசங்குப்பத்தைச் சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கர்குடி, சித்தனைவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கர்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல்ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு. அருகருகே இருப்பதால், விழுப்புரத்தை மையமாக வைத்து இவற்றை ஒரே நாளில் நாம் தரிசிக்கலாம்.
இந்த சந்நிதி கருவறையில் 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், பாலநரசிம்மர் என மூன்று நரசிம்ம மூர்த்திகளை தரிசிக்கலாம். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்ஸவர் பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார். வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ராஜராஜ சோழன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் உள்ளிட்டோர் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். ஆற்காடு நவாப், பிரெஞ்சு அதிகாரிகள் உள்ளிட்டோரும் நரசிம்மருக்கு அணிகலன்கள் பல அளித்துள்ளனர்.
இங்கே கனகவல்லித் தாயாரை வழிபட்டால் மனநலன் பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை.
வேண்டுதல்: இது ஒரு பரிகாரத் தலமும்கூட. நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் - பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சியில் துன்புறுபவர்கள் நலம் பெற இங்கே வேண்டிக் கொள்கின்றனர். சுவாதி நட்சத்திரம், பிரதோஷ நாள், செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரையில் நரசிம்மரை தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல் நிறைவேறும். நரசிம்மர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றுவது பலன் தரும் நேர்த்திக்கடன்.
தரிசன நேரம்: காலை 7.30- 12 மணி வரை, மாலை 4.30- 9.00 மணி வரை
விழாக்கள்: சித்திரை சுவாதி நரசிம்மர் ஜயந்தியன்று தேர்த் திருவிழா, மாசி மகத்தில் புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி மாலை கருட சேவை, மாட்டுப் பொங்கலன்று தீர்த்தவாரி.
அமைவிடம்: புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவு. அபிஷேகப்பாக்கம் என அழைக்கப்படுகிறது.

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்!!!
பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்!!!

மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் பரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன் அடையலாம்.

இதை வெள்ளிக்கிழமைகளில் 8-9 மணிக்குள் செய்தால் பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) வைத்து விடவும்.
தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம்.
இவை தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில் மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப

பலன் பெற சில வழிகள்பண வரவிற்கு:
மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை 
எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். 
தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு 
மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.

தடைகள் விலக தாந்த்ரீக முறை :
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய 
வேண்டும். ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ
 (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ 
முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி 
முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். 
இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் 
பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். 
பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்

வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு
 மிளகாய்களை எடுத்து கொண்டு வேலை மாற்றத்திற்காண
 வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து
 விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். 
இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.

சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள் (1)
வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட
 இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் 
பலன் நிச்சயம்.
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது 
வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை
 இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் 
செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 
7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள
 யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 
7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து 
விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய 
உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற 
பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து
 விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட 
சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.
பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து
 பார்ப்பதில் தவறென்ன 

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை
 காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" 
என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள
 மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் 
விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர 
பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை
 வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல்
 வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண 
உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள 
அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. 
இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக 
விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும்
 மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

திடீர் பண வரவிற்கு :
பவழமல்லி செடியின் வேரை சிறிது எடுத்து அதோடு 11 சிகப்பு குன்றி
 மணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து உடம்பில் படும் படி 
கழுத்தில் அணிய திடீர் பண வரவு உண்டாகுமாம்.
மேற்கண்ட செடியின் வேரை எடுக்க எந்த வித சாப நிவர்த்தியும் கிடையாது

Monday, September 7, 2015

சோழ மன்னன் கரிகால் சோழன் கட்டிய ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட கோயமுத்தூர்‌ பட்டீஸ்வரர்!-சோழ மன்னன் கரிகால் சோழன் கட்டிய ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட கோயமுத்தூர்‌ பட்டீஸ்வரர்!-
அளப்பரிய அபூர்வ தகவல்கள்!
ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என்னும் பாடல் பெற்ற‍ தலம்.
நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம்
என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது
அவர் காலில் அணிந்திருந்த சில சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்...
1 இறவாத பனை
2.பிறவாத புளி
3.புழுக்காத சாணம்
4.எலும்பு கல்லாவது
5. வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து
இதுதான் அந்த அதிசயங்கள்.
1.இறவாத பனை...
பல ஆண்டுகாலமாக இன்றும் பசு இளமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று 
கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
2.பிறவாத புளி...
அடுத்து பிறவாதபுளி, என்று போற்ற‍ப் படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தே இல்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டில் இருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முளைக்க‍வே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.
3.புழுக்காத சாணம்...
மூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போ ன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லை யாம்.
மனித எலும்புகள் கல்லாவது...
4.எலும்பு கல்லாவது....
அடுத்து மனித எலும்புகள் கல்லாவது இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங் குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப் படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்க‍ப் படுகிறதாம். என்ன‍அதிசயமாக இருக்கிறது அல்ல‍வா? 
அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.
5.வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து
இதுதான் அந்த அதிசயங்கள்.
த‌மது வலது காதை மேல் நோக்கி வைத்த ‍படி மரணிப்ப‍து...
ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோவில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும் போது கிடைத்த‍வர்தான் நமது பட்டீஸ்வரர்.
கிடைக்கும் போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர். இவரின்
திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன• இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர்
மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன•
ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் திப்பு சுல்தான். இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்க‍டி அசையும் என்று, இதை நம்பாமல் சிவா லயத்தின் மீது கை வைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் திப்பு சுல்தான்.அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன• நெருப்பின்மீது கைகள் வைப்ப‍து போல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.
கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப் படுகின்றன•
இக்கோயிலின் ஸ்தல வி ருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வரனின் சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்களைப் பார்போம்.
இங்குள்ள‍ அம்ம‍னின் பெ யர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக
எழுந்தருளியிருக்கிறாள்.
அன்னையின் அன்பு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க‍லாம். அவ்வ‍ளவு அழகு...
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின்
ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அத‌ன் வாயினு ள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து. ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.
இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் தத்ரூபமாக வடிவமைக்க‍ப் பட்டுள்ள‍ன• குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் றன•
சிற்பங்களால் வடிவமைக்க‍ப் பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍. தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெரு மையால் நமது நெஞ்சு
நிமிர்கின்றது. மேலும் கோயிலின் வட மேற்கில் பிரம்ம‍ குண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.
அருள் நிரம்பிய இந்த ஆலயத்தைப் பஞ்ச பாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி,கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ முருகன் பழனியில் உள்ள‍தை ப் போன்றே மேற்கு நோக்கி தண்ட பாணித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.
நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங்குள்ள‍ பட்டீஸ்வரரை வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போதுமே சுந்தரரிடம் ஒரு நல்ல‍ குணம் உண்டு. எந்த ஊர் சென்றாலும் வழிச் செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறை வனின் தோழன் அல்ல‍வா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.செல்வச் செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒரு முறை பேரூரில் பணம் தட்டுப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
நிலத்தில் நாறும் நடும் கூலித் தொழிலாளியாய் பச்சையம்ம‍னுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து
விடுகின்றார். அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.
அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது. அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்.
பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!
சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன் அதைக்
கண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். சுந்தரர் பாடிய இறைவனை மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.
பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் ஆனி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
என்ன‍ இப்போது உங்களுக்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்.!.

அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் வந்திருக்குமே!.
சரி, கோயிலுக்குப் புறப்படுங்கள். ஆனால் ஒரு சின்ன‍ செய்தி அவனிடம் பணம் கேட்டுப் போகாதீர்கள்.
ஓடி ஒளிந்து கொள்வான்.
அருள் வேண்டி போங்கள்.
மனமிறங்கி அருளை அள்ளித் தருவான்.
இதை அனுபவிக்கும் பிறவியில் நாம் பரவசமடைவோம்.
பகிருங்கள்.

Tuesday, March 17, 2015

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதற்கான காரணம்:

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதற்கான காரணம்:
பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும்.
வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும். அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள
தூய பக்தியை குறிக்கிறது.
விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும்.
இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும். பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.
அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
Ganesan Pondicherry

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு
12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்

சித்திரை- மது: 


சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்: வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோகராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?
உலகம் அறிந்தது அறிவியல் நமக்கு இந்து மத பொக்கிஷம்
பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது,அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது.இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது.
இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்காக நிற்க்கும். இதை,இயற்பியல் மின்காந்த புலம்,காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம்,காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும்.தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல்
இதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும்.தூங்கும் போது தெற்கே தலை வைத்து கொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும்.
ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி,தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும்
எனவேதான்,வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது.நம்ம முன்னோர்கள் சொல்வது பழைய பஞ்சாங்கம் என்று ஓதுக்கினால் பாதிக்க படுவது நாம் தான்
இது ஓலைச்சுவடி என்ற ஒரு நூலில் அழகாக விஞ்ஞான பூர்வமாக போட்டுள்ளனர். இது மட்டுமன்று நாம் அன்றாடம் செய்ய வேன்டியவை செய்ய கூடாதவைகள் அனைத்தும் அதில் அடங்கும்..

உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-

உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்:
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,நல்வாக்கு,நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே..

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில்.....

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே மரக்கிளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த காகமும், கொக்கும் அவரது உக்கிரப் பார்வையினால் எரிந்து சாம்பலாகின. தனது தவ ஆற்றலைக் கண்டு துறவிக்கு மிக்க மகிழ்ச்சி.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். கொஞ்சம் பொறு என வீட்டினுள் இருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. அப்போது அத்துறவி, ஓ, என்னைக் காக்க வைக்கும் இப்பெண்மணிக்கு எனது தவ வலிமை தெரியவில்லை என எண்ணினார். இப்படி அவர் நினைத்ததுதான் தாமதம், வீட்டின் உள்ளிருந்து, ஓ மகனே, இங்கிருப்பது காக்கையுமல்ல, கொக்குமல்ல என்ற குரல் வெளிப்பட்டது.
துறவி அதிர்ந்து போனார். கடைசியில் அப்பெண்மணி வெளியில் வந்தபோது, துறவி அவளது கால்களில் வீழ்ந்து, எப்படி அவர் தனது எண்ணங்களை அறிந்தார் எனக் கேட்டார். அதற்கு அவள், மகனே, எனக்கு உன்னைப் போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. எனது நோயுற்ற கணவருக்குத் தவறாது எனது பணிவிடைகளை மனப்பூர்வமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு முன் என் பெற்றோர்களுக்கு என் கடமையைச் செய்தேன். கடமைகளைச் செய்து வந்ததாலேயே எனது ஞானக்கண் திறந்துவிட்டது. இதற்கு மேலும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், அருகிலுள்ள நகரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு இறைச்சி வியாபாரியைக் கேட்டுத் தெரிந்து கொள் எனக் கூறினாள்.
துறவியும் அப்பெண்மணி குறிப்பிட்ட இறைச்சி வியாபாரியைத் தேடிக் கண்டுபிடித்தார். அடக் கடவுளே, அசுரன் போல் தோன்றும் இவனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வது என அவர் நினைத்தார். அதற்குள், துறவியைக் கண்ட அந்த இறைச்சி வியாபாரி, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது பொறுங்கள், எனது வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.
இங்கே என்ன நடக்கப் போகிறதோ என நினைத்தவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழிந்தது. வியாபாரியின் வேலை முடிந்ததும், அவன் துறவியை அழைத்துக் கொண்டு தனது இல்லத்திற்குச் சென்றான்.
அவர் அமர இருக்கை ஒன்றை அளித்து விட்டு, வீட்டிற்குள் சென்று அவனது வயது முதிர்ந்த பெற்றோர்களைக் குளிப்பாட்டி, உணவளித்து, அவர்கள் மனம் மகிழும்வண்ணம் அவர்களுக்கு எல்லா சேவைகளையும் செய்தான், பின்னர் துறவியிடம் வந்தான். துறவி அவனிடம் ஆன்மாவைக் குறித்தும், கடவுளைப் பற்றியும் கேள்விகள் கேட்டார்.
அந்த இறைச்சி வியாபாரி அதற்கு அளித்த விளக்கங்களே வியாதகீதை என மகாபாரதத்தில் உள்ளது. பின்னர் துறவி அந்த வியாபாரியிடம், ஏன் இந்த இழிதொழிலைச் செய்கிறாய்? எனக் கேட்டபோது, அவன் அவரை நோக்கி, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ, கேவலமானதோ இல்லை.
என்னுடைய பிறப்பு என்னை இந்தச் சூழலில் வைத்துள்ளது. நான் பற்றின்றி எனது தொழிலைச் செய்து எனது பெற்றோர்களுக்குத் தொண்டு செய்கிறேன். எனக்கு தவமோ, யோகமோ தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எனது கடமைகளைப் பற்றின்றி செய்தல் ஆகும் என்றான்.
இக்கதையைத் தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைப் பற்றின்றி செய்தலாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்நிலையை அடைந்துவிடலாம்.
Ganesan Po