Thursday, March 31, 2016
Wednesday, March 30, 2016
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் நிகழும் சில அதிசய நிகழ்வுகளைக் காண்போமா?

குலுங்கும் மலை, திருக்கூடாச்சலம் என்று புராணப் பெயர் பெற்ற திரிகூடமலையே பின்னாளில் திருக் குற்றாலமென விளங்குகிறது. ஆதிகாலத் தில் இது வைணவத் தலமாக இருந்தது. மாமுனிவர் அகத்தியர் இங்கிருந்த பெருமாளுக்கு மூலிகைச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, "குறுகுக... குறுகுக... குறுகுக...' என்று பெருமாள் தலையில் கைவைத்து அழுத்தி சிவலிங்கமாக மாற்றினார் என்பர். அகத்தியரின் விரல் சிவலிங்கத்தில் பதிந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அகத்தியர் அழுத்தியதாலும், அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் ஓசையாலும் குற்றாலநாதருக்கு தலைவலி ஏற்பட்டதாக ஐதீகம். அது நீங்க, அரிய வகை மூலிகைகள் கொண்டு தைலம் தயாரித்து காப்பிட்டு அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதை இன்றும் தரிசிக்கலாம். கருட பார்வையில் இத்தலம் சங்கு வடிவில் காட்சி தரும். அதனால் சங்கக் கோவில் என வானோர் கொண்டாடுகிறார்கள்.
இவ்வாலயத்தின் தலமரம் குறும்பலா. இதன் ஒரு பகுதியை இன்றும் கோவிலில் காணலாம். சக்தி பீடங்களில் ஒன்றாக வும் இது போற்றப்படுகிறது. பராசக்தி யோகத்திலிருப்பதால், இதை யோகபீடம் என்பர். பஞ்ச சபைகளில் இது சித்திரசபை. இச்சபையில் சித்திர வடிவில் நடராஜரின் நடனக் கோலத்தை தரிசிக்கலாம். இங்குள்ள சித்திர சபைக்கு நவநாயகர்கள் அனுதினமும் எழுந்தருளி ஆராதனை செய்வதாக ஐதீகம். குபேரனுக்குப் பிடித்தமான வட வருவி, சித்திராநதி, மதுகங்கை என்ற தீர்த்தங்களுடன் பிரதான அருவியும், ஐந்தருவிகளும் கொண்ட திருத்தலம்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி குற்றால நீர்வீழ்ச்சிக்கு அருகில், மலையடி வாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகுற்றாலநாதர் ஆலயம். வனதேவதையான செண்பகா தேவியின் ஆலயம் மலையடிவாரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ளது. சித்திரை மாதப் பௌர்ணமியன்று செண்பகாதேவிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்நாளில் இரவு வேளையில் மலைமேல் சந்தன (மஞ்சள் நிறத்தில்) மழை பெய்யுமென்று தலபுராணம் கூறுகிறது. இதனை அவ்வூர்ப் பெரியவர்களும் உண்மையென்று வலியுறுத்துகிறார்கள். இக்கோவிலுக்கு மேலேயுள்ள மலைமீது, மதுகங்கை என்ற தேனருவியில் கங்கையானவள் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்து வழிபடுவதால், தேன்துளிகள் சந்தன (மஞ்சள்) வண்ண மழையாய்ப் பெய்கிறது என்பது ஐதீகம். சந்தன மழை பெய்ததற்கு அடையாளமாக இரவுவேளையில் சந்தனமணம் வீசுமாம். சிலசமயத்தில் சிறுசிறு துளிகள் சாரல்போல் விழுவதும் உண்டாம். அடுத்தநாள் ஏறிச் சென்றால் மழைத்துளிகள் விழுந்த இடங்களைக் காணலாம் என்கிறார்கள். பாறையின்மேல் விழுந்த மழை நீர் மறைந்து போனாலும், அந்த அடையாளங்கள் மணல் பகுதியுள்ள சில இடங்களில் சந்தன நிறத்தில் காட்சி தருவதைக் கண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த மணலை சேகரித்துவந்து பூஜித்து நெற்றியில் இட்டுக்கொள்வார்களாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறுமென்று கூறப்படுகிறது.
வேலூர் மாவட்டம் திருவல்லத்திலிருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ளது கஞ்சன் மலை. இது திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம். இங்கு சுயம்புலிங்கமான ஸ்ரீவில்வநாதீஸ்வரருக்கு மலைமேல் உள்ள அருவியிலிருந்துதான் அபிஷேக தீர்த்தம் கொண்டுவருவார்கள். ஒருமுறை கஞ்சன் என்ற அரக்கன் இதைத் தடுத்தான். அதனால் பக்தர்கள் சிவபெருமானை வேண்ட, ஈசன் நந்தியை அனுப்பினார். நந்திக்கும் கஞ்சனுக்கும் கடும்போர் நடந்தது. கோபம்கொண்ட நந்தி கஞ்சனை துண்டுதுண்டாகப் பிய்த்தெறிந்தார். கஞ்சன் சிவபக்தனாக கடுந் தவமிருந்து வரங்கள் பெற்றவன். அந்த அகந்தையில் தவறாகச் செயல்பட்டதால் வீழ்ச்சி யடைந்தான்.
இத்திருத்தலத்தில் எல்லா பௌர்ணமியிலும் அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடைபெறும். இதில் சித்திரைப் பௌர்ணமியன்று இரவு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும், இரவு பதினோரு மணிக்கு மேல் பன்னிரண்டு மணிக்குள் வடதிசையில் ஒரு ஜோதி தென்படும் என்கிறார்கள். முதலில் மூன்றடி உயரத்தில் தென்படும் இந்த ஜோதி கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து பதினெட்டு அடி உயரம் வரை விரிந்து மறைந்துவிடும் அதி சயத்தை இன்றும் காணலாம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.
சேலம் மாவட்டத்தில் கஞ்சன்மலை மிகவும் புகழ்பெற்றது. இந்த மலையடி வாரத்தில் சித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலைமீதும் ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த மலையில் சித்தர்கள் பலர் வசிப்பதாக நம்பப்படுகிறது. அந்த சித்தர் பெருமக்கள் சித்திரைப் பௌர்ணமியன்று மலைக்கோவில் அருகிலுள்ள நீரூற்றிலும், சித்தேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடி, வான்வழியாக கஞ்ச மலையை வலம்வருவார்களாம். நட்சத்திர ஒளிபோல இது தென்படும் என்கிறார்கள்.
இரவு பதினொரு மணியிலிருந்து விடியற் காலை நான்கு மணி வரை இந்த நட்சத்திர ஒளி மெதுவாக நகர்ந்துகொண்டே வருமாம். இதை தரிசிப்பதற்காக பக்தர்கள் கூட்டம் அன்று நிறைந்து காணப்படும். மேலும் சித்தர்கள் அமானுஷ்யமாக யார் கண்ணிலும் படாமல் அங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதால், பௌர்ணமிக்கு அடுத்த நாள் பக்தர்கள் அந்தத் தீர்த்தக் கட்டங்களில் நீராடி ஸ்ரீசித்தேஸ்வரரை வழிபடுகிறார்கள். சித்தேஸ்வரர் கோவிலைச் சுற்றி பத்து தீர்த்தங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசித்தேஸ்வரர் கோவிலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தியானமலை உள்ளது. அந்த மலைக்கு ஒற்றையடிப் பாதையில்தான் சிரமத்துடன் செல்ல வேண்டும். இந்த தியான மலையின் மேற்பரப்பில் ஒரு பெரிய பாறை உள்ளது. சித்திரைப் பௌர்ணமியன்று இரவு அந்தப் பாறைமீதமர்ந்து, விடியற்காலை வரை சித்தர் ஒருவர் தவம் செய்வதாக நம்பப்படுகிறது. பௌர்ணமிக்கு அடுத்த நாள் சூரியன் உதித்ததும் பக்தர்கள் அங்குசெல்கிறார்கள். சித்தர் அமர்ந்திருந்த பாறையிலிருந்து ஒருவித ரீங்கார ஒலி காலை 6.30 மணி வரை கேட்குமாம். அந்த வேளையில் அந்தப் பாறைக்கு மலர்களை சமர்ப்பித்து தொட்டு வழிபடுகிறார்கள். இதனால் சித்தரின் ஆசீர்வாதம் கிட்டுவதுடன் உடல்நலம் வளம்பெறுவ தாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பாறைக்கு எதிரில் அருள்மிகு சந்தனமகாதேவன் என்ற பெயரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. தலமரமாக சந்தன மரம் உள்ளது.
சித்திரைப் பௌர்ணமியன்று மூலிகைச் செடிகள் நிறைந்த பகுதிகளில், முழுநிலவு வெளிச்சத்தில் பூமியிலிருந்து ஒரு வகை உப்பு பூரித்துக் கிளம்பும். இந்த உப்பு நிலவொளியில் மினுமினுவென்று ஒளிரும்.
இதை பூமிநாதம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். அந்த உப்பு சித்த மருந்துகளுக்கு அதிகமான சக்தியை ஊட்டும் திறன் கொண்டது. இந்த உப்பு சித்திரைப் பௌர்ணமியன்று வெளிப்படுவதை சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்ததால், இந்த நாள் ஆதியில் சித்தர் பௌர்ணமி என்றே பெயர் பெற்றிருந்தது. மாறாத இளமையும், மரணமில்லாத வாழ்வையும், நரை, திரை, மூப்பற்ற நலமிக்க உடலையும் பேணிக்காக்கும் சக்தி கொண்டதாம் அந்த உப்பு.
இப்படி பல மகிமைகள் நிறைந்த சித்திரைப் பௌர்ணமியன்று விரதம் மேற்கொண்டு, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், பேறுகள் பல பெற்று வளமுடனும் ஆரோக்கியத் துடனும் வாழலாம் என்பது பெரியோர் வாக்கு!

கஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )
கஞ்சமலை சித்தர்கோவில்
அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.
கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.
இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப் படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.
கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங்களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள். இங்கு விளைந்த கரு நெல்லியைத்தான் மன்னன் அதியமான் ஔவை யாருக்கு அளித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.
கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு.
கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர்களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.
முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.
இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக “கரபுரநாதர்’ புராணம் சொல்கிறது.
பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும் கஞ்சமலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.
அற்புதங்கள் நிறைந்த இந்தக் கஞ்சமலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இந்த மலைக்கு மேற்குப் பகுதி யில்தான் புகழ் பெற்ற சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சித்தேஸ்வரர் என்றதும் கருவறையில் சிவலிங்கம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இங்கு வாழ்ந்த- தற்பொழுதும் வாழ்ந்து கொண்டி ருக்கிற சித்தர்களில் ஒருவருக்குத்தான் கோவில் கட்டி அவர் திருவுருவை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூல ஸ்தானத்தில் அருள்புரியும் சித்தேஸ்வரரின் திருவுருவம் ஓர் இளம் யோகியின் திருவுருவம் ஆகும். சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவர் அருள்பாலிக் கும் கருவறைக்கு அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் நந்தியெம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.
மூலன் என்ற பெயர் கொண்ட சித்தர் ஒருவர் தன் தேகத்தை காயசித்தி முறையில் இளமை யாக்கிக் கொள்ள தன் வயதான சீடருடன் கஞ்ச மலைக்கு வந்தார். தன் சீடரிடம் சிற்றோடைக்கு அருகில் சமையல் செய்யச் சொல்லிவிட்டு, காயகல்ப மூலிகையைத் தேடிச் சென்றார். குருவின் கட்டளைப்படி அந்தச் சீடர் சமையல் செய்ய ஆரம்பித்தார். சோறு கொதித்துப் பொங்கியது. அப்போது சுற்று முற்றும் பார்த்த சீடர் ஒரு செடியைப் பிடுங்கி, அருகில் ஓடிய நீரோடையில் அந்தச் செடியைக் கழுவி சுத்தம் செய்து, அகப்பை போல் சோற்றினைத் துழாவினார். பொங்கிய சோறு அடங்கியது. ஆனால், சோறு கறுப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்டு அஞ்சிய சீடர், குரு வந்தால் கோபித்துக் கொள்வாரே என்ற அச்சத்தில் அந்தச் சோற்றினைத் தான் உண்டு விட்டு, புதிதாக சோறு சமைத்தார். சிறிது நேரம் கழித்து குரு அங்கு வந்தபோது சீடரைக் காண வில்லை. அங்கு ஓர் இளைஞன்தான் நின்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், “”இங்கிருந்த முதியவர் எங்கே?” என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், “”குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உங்கள் சீடன்” என்றார்.
அதிசயமுற்ற குரு, “”நீ இப்பொழுது மிகவும் இளமையாகக் காட்சி தருகிறாயே, எப்படி?” என்று விவரம் கேட்டார். சீடர் சோறு பொங்கும் போது நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்.
அதைக் கேட்ட குரு, “”அப்படியென்றால் அந்த மூலிகைச் செடி எப்படி இருந்தது? அந்தச் செடியின் பகுதி எங்கே?” என்று கேட்டார்.
“”குருவே, தாங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று எண்ணி அந்தச் செடியை உடனே அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்” என்றார் சீடர்.
“எந்த மூலிகையைத் தேடி வந்தேனோ அது இங்கேயே இருப்பதை அறியாமல் போனேனே’ என வருந்தினார் குரு. சில அரிய மூலிகைகள் தங்களைப் பறிக்க வருகிறார்கள் என்பது தெரிந்த தும், கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் பதுங்கிக் கொள்ளும். ஆனால், ஏதுமறியாத சீடர் திடீரென்று அந்த காயகல்ப மூலிகைச் செடியைப் பறித்து விட்டதால் இந்த அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் குரு.
தன் சீடரை அழைத்த குரு, “”நீ உண்ட சோற்றினை என் கையில் கக்கு” என்றார். சீடனும் சிரமப்பட்டு தான் உண்ட சோற்றைக் கக்க, அதனை உண்டார் குரு. உடனே முதுமை மாறி இளம் உருவத்தைப் பெற்றார். இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமை பெற்றதால், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊர் “இளம் பிள்ளை’ என்று பெயர் பெற்று இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.
இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.
சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.
இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.
இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.
இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.
ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.
இக்கோவில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மண்டபத்தில் ஒரு பெரிய மேடை உள்ளது. அந்த மேடையில் நாகர் சிலைகள் பல உள்ளன. மேலும், சர்ப்பக் குடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் உள்ளார். அதேபோல் சர்ப்பக் குடையின்கீழ் நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் தனித்து நிற்கிறார். இந்தச் சிலைகள் எல்லாம் நாக தோஷங்கள் நீங்குவதற் காக பக்தர்கள் கோவில் குருக்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டவையாம். மேலும் இத்தலம் பாம்பாட்டிச் சித்தரின் அருள் பெற்ற தாகவும் சொல்வர்.
இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்லணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந்தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.
அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.
சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.
சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.
இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.
அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.
இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, March 25, 2016
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்... தென் பொன்பரப்பி
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்...
-------------------------- -------------------------- -----------------------
ஆறகழூரில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் ஆத்தூர் டூ சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது தென் பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்..இந்த ஆலயமும் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட வாணகோவரையர்களால் கட்டப்பட்டது..இந்த கோவில் பற்றி சில தகவல்கள்...
-------------------------- -------------------------- -------------------------- ----------------
மூலவர் : சொர்ணபுரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : உமையாள், சொர்ணாம்பிகை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : தென்பொன்பரப்பி
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
இந்த தலத்தின் சிறப்பு...
-------------------------- -----------
இங்கு சிவன் சோடஷ லிங்கம்(16 பட்டைகளுடன் கூடிய லிங்கம்) அருள்பாலிக்கிறார். ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
பொது தகவல்கள்..
-------------------------- -------
இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. குருபகவான் சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.
இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது. ..
இந்த தலத்தின் பெருமை..
-------------------------- --------------------
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று.
காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.
லட்சுமி அம்ச அம்பிகை: இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.
தலவரலாறு..
-----------------------
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.
சிறப்பம்சம்
---------------------
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சோடஷ லிங்கம் (16 பட்டைகளுடன்) அருள்பாலிக்கிறார் ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது
--------------------------

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம்!!!
16 முகங்களுடன் கூடிய சிவலிங்கம்!!!
சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர் பிரதிஷ்டை செய்த சோடச லிங்கம்!!
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்.
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனத்தை ஒரு பிரதோஷ நாளில் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதி, மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார்.
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவன் பதினாறு பட்டைகளுடன் இருப்பதால் பதினாறு முக லிங்கம் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக பதினாறு முக லிங்கத்தில், அதன் பாணம் மட்டுமே 16 பட்டைகளுடன் இருக்கும். ஆனால், இங்கு ஆவுடையாரும் பீடமும் 16 பட்டைகளுடன் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.
உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.
எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).
இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம்== சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.
இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம்.
ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள்.
கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி. சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.
இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.
புகைப்படங்கள்===
01.,02.,03.அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்.
04.,05.,06.,07..நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட 16 முக சோடச லிங்கம்===அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் .
08.அருள்மிகு சுவர்ணாம்பிகை.
09.,10. "பால நந்தி''
11.அருள்மிகு விநாயகர்.
12.ஆறுமுகமாக காட்சியளிக்கும் அருள்மிகு முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன்.
13.அருள்மிகு மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
14.அருள்மிகு தட்சிணாமூர்த்தி.
15.அருள்மிகு துர்க்கை .
16.அருள்மிகு சண்டீசர்.
17.,18.,19.,20.சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், மற்றும் ஜீவ சமாதி.
21.தென்பொன்பரப்பி அமைவிடம்.
Friday, March 11, 2016
இந்துக்களின் 16 சடங்குகள்
இந்துக்களின் 16 சடங்குகள்
இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.
அகத்தின் எட்டு (8) சடங்குகள்:
1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை
புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:
1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.
2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
3) கருவுற்றல் (பும்சவனம்) –
கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
4) வளைக்காப்பு (சீமந்தம்) –
கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.
5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்)
– குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.
6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) –
குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.
7) குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) –
குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.
8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) –
குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.
9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) –
குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) –
குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.
12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) –
குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.
13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்)
–வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.
14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) –
ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) –
உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.
(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)
16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) –
ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.
இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. புற சடங்குகளின் உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, அகசடங்குகளைக் கடைப்பிடித்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். காலச்சுழற்சியில் மற்ற சில சடங்குகள் அரிதாகி விட்டன.
“எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஒருசில புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, March 10, 2016
ஹோமம் பலன்கள்:
ஹோமம் பலன்கள்:
ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்
2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி
3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம்
4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி
5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்
6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி
7. பூசணிக்காய் – சத்ருநாசம்
8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி
9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி
10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி
11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)
12. நெல் பொரி – பயம் நீக்குதல்
13. சந்தனம் – ஞானானந்தகரம்
14. மஞ்சள் – வசீகரணம்
15. பசும்பால் – ஆயுள் விருத்தி
16. பசுந்தயிர் – புத்ர விருத்தி
17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி
18. நெய் – தனலாபம்
19. தேங்காய் – பதவி உயர்வு
20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி
21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்
22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்
23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.
Wednesday, March 9, 2016
கொடுப்பதும் சனி – கெடுப்பதும் சனி – யாரை விட்டது சனி ?
சனீஸ்வரனை நோக்கி, ”பார்த்தாயா சனீஸ்வரா… உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?” என்றார்.
”இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்” என்றார்.
‘சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான். ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ”பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.
‘எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்’ என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.
”சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்” என்றான் அனுமன்.
”ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?”என்று கேட்டார் சனீஸ்வரன்.
”என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
”சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ”ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்’ என்றார் சனீஸ்வரன்.
”இல்லை, இல்லை… இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?’ என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,
”அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார். ”ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.
பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ”ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
Tuesday, March 8, 2016
கிரகணம் என்றால் என்ன?"
கிரகணம் என்றால் என்ன?"
இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.
அடுத்து, சூரிய கிரகணம், சந்திரகிரகணம் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது, பூமியிலிருந்து பார்க்கும் போது, சூரியனும், சந்திரனும் வான் இணைதலில் இருந்தால் சூரிய கிரகணும் தோன்றும். இந்த நிகழ்வைத்தான் அமாவாசை நாள் என்கிறோம்.
இந்த நாளில் சூரியன் முழுவதுமோ, ஒரு பகுதியோ மறைக்கப்படும் முழுவதுமாக மறைக்கப்படுவது, ழுழு சூரிய கிரகணம் கொஞ்சமாக மறைக்கப்படுவது பகுதி சூரிய கிரகணம். சந்திரனுக்கும், பூமியை ஒரு தடவை சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இப்படி சுற்றி வரும் போது, பூமியில் உள்ளோருக்கு பல வகையாகக் காட்சியளிக்கிறது.
புது நிலவு என்பது அமாவாசையைக் குறிக்கும். புது பிறை நான்காம் நாள் தோன்றும். முதல் கால் பிறை - ஏழாம் நாள், வளர்மதி - பத்தாம் நாள், முழு நிலவு - பதினான்காம் நாள், தேய் மதி - பதினெட்டாம் நாள், இறுதி கால் பிறை - இரு பத்தியிரண்டாம் நாள், பழைய பிறை - இருபத்தியாறாம் நாள், திரும்பவும் புது நிலவு - இருபத்தி ஒன்பதாவது நாள் தோன்றும்.
புது நிலவன்று, அதாவது அமாவாசை தினத்தில் நிலவைப் பார்க்க முடியாது. அப்போது பூமியை நோக்கியுள்ள நிலவில், சூரியனின் ஒளிபடாது. அடுத்ததாக சந்திர கிரகணம். சந்திரன், பூமியின் பின்னால் நகர்ந்து செல்லும்போது, பூமி, சந்திரனின் மீது, சூரியக் கதிர்கள் படுவதை மறைத்து விடுகிறது.
அப்போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். பூமியானது, சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் இருக்க வேண்டும். முழுநிலவில் மட்டுமே, அதாவது பௌர்ணமியில் மட்டுமே, சந்திர கிரகணம் ஏற்படும்.
சரி, இப்போது ஜோதிட விஷயத்திற்கு வருவோம். சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும்.
கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது பொதுவான ஜோதிட கணிப்பு. சூரியனும், ராகுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ முழு சூரிய கிரகண தோஷம்.
சூரியனும், கேதுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ, பகுதி சூரிய கிரகண தோஷம். சந்திரனும், கேதுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ பூரண சந்திர தோஷம். சந்திரனும், ராகுவும் ஒரே வீட்டில் இருந்தாலோ, நேர் எதிர் வீடுகளில் இருந்தாலோ பகுதி சந்திர தோஷம்.
பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்றாலும். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தைப் பொதுவாகப் பார்த்து, கிரகண தோஷம் இருக்கிறது என்று சொல்வதைவிட, நன்றாக அனைத்து அம் சங்களையும், யோகங்களையும் ஆய்வு செய்து, பலன் சொல்வது தான் சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக சூரியன், ராகு சேர்ந்திருந்தால், இதில் நான்குவிதமான சேர்க்கைகள் இருக்கும். நல்ல நிலையில் அல்லது நற்பலன் தரும் நிலையில் சூரியனும், ராகுவும் சேர்ந்திருப்பது, கெடுபலன் தரும்.
சூரியன் மற்றும் கெடுபலன் தரும் ராகு, கெடுபலன் தரும் சூரியன் கெடுபலன் தரும் ராகு, இந்த நான்கு அமைப்புகளில், கடைசி இரு அமைப்புகள் மட்டுமே கிரகண தோஷம் உள்ள அமைப்புகளாகக் கருதப்படும். நற்பலன் தரும் ராகு, கெடுபலன் தரும் சூரியனோடு இணைந்திருந்தாலும் தோஷம் ஆகாது.
காரணம் நற்பலன் தரும் கிரகங்கள். ஜாதகத்தில் எதிர்மறை பலன்களைத் தருவதில்லை. மேலும் கடைசி இரு அமைப்புகளில், சூரியனும், ராகுவும் நன்கு வலுப்பெற்றிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஒட்டுமொத்த கிரகச் சேர்க்கையின் பலன், பலவீனம், சூரியன், ராகுவின் மீது, பிற கிரகங்களின் நல்லது அல்லது கெட்டது தாக் கத்தையும் அறிய வேண்டும்.
இரு கிரகச் சேர்க்கைக்கான பலனைச் சொல்லும்போது, ஜாதகத்தில் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய வேண்டும். அதனுடைய பலம், ஏற்படுத்தும் தாக்கம், தாக்கம் ஏற்படுத்தும் காலகட்டம் ஆகியனவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். சூரியன் - கேது, சூரியன்-ராகு, சந்திரன்-கேது சேர்க்கைகளை மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, இறுதி முடிவுக்கு வர வேண்டும்.
ஏனெனில் நற்பலன் தரும் சூரியனும், கேதுவும் ஜாதகத்தில் இருந்தால், அது நல்ல அமைப்பு தானே. அதனால் நற்பலன்கள் தான் கிட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். பதவி, அதிகாரம், எதனையும் ஆழமாக ஊடுருவிப் புரிந்து கொள்ளுதல், புத்திசாலித்தனம், நிர்வாகத்திறன் போன்ற நற்பலன்களை, சூரியனும், ராகுவும் ஜாதகத்தில் வலுப்பெற்றிருக்கும் போது வழங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
சூரியனோடு சந்திர னோடு, ராகுவோ அல்லது கேதுவோ வலுப்பெற்றிருக்கும் போது சேர்ந்திருப்பது என்பது சில ஜாதகத்தில் அபூர்வமாக நிகழ்வதுண்டு. அது தோஷஜாதகமல்ல, யோக ஜாதகமே.
கிரகண தோஷத்தினால் ஏற்படும் தாக்கத்தினால் விளையக் கூடிய பலன்கள் என்னவாக இருக்கும் என்றால் - குழந்தைப் பேறின்மை, கருச்சிதைவு ஏற்படுதல் அல்லது வீட்டில் இருக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல், தொடர்ந்து பெண் குழந்தைகளாகப் பிறப்பது, வீட்டில் தொடர்ந்து காரண, காரியமில்லாமல் நிலவும் பிரச்சனைகள்,
பணியிடத்தில், வியாபாரம் செய்யுமிடத்தில் தொடர்ந்து ஏமாற்றம், வீட்டிலும், வெளியிலும் அமைதியின்றி, எப்போதும் பதட்டத்துடன் இருத்தல், எவ்வளவு தான் சிறந்த முயற்சி எடுத்தாலும், கொஞ்சம் கூட அதற்குரிய பலன் கிடைக்காமல் இருத்தல், வேலையை, வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பதில் குளறுபடி, உடலாலும், மனதாலும் நோய் மற்றும் பல பிரச்சனைகள் சூழ்ந்தபடியே இருத்தல் என்று கெடுபலன்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.
இதனால் பாதிப்படைந்த நபர் மீது பிறருக்கு நல்ல அபிப்பிராயமே ஏற்படாது. கிரகண தோஷத்தின் தாக்கம் முழுமையாக சிலருக்கு இருக்காது. சிசேரியன் என்ற அறுவைச் சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தை, குறைப் பிரசவம் ஆகி, இன்குபேட்டரில் வளர்ந்த குழந்தை, டெஸ்ட் டியூப் பேபி, உத்திராயண,
தட்சாயண சந்திப்பில் பிறந்த குழந்தை, லக்ன சந்திப்பில் பிறந்த குழந்தை, நட்சத்திர சந்திப்பில் பிறந்த குழந்தை ஆகியனவற்றிற்கு, கிரகண தோஷத்தின் கெடுபலன்கள் முழுவதுமாக இருக்காது. ஜாதக பலன்களும் பூரணமாக ஒத்து வராது என்பது பொதுவான ஜோதிட விதியாகும்.
Monday, March 7, 2016
சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய ஆலயம்
சுகப் பிரசவம் ஆக வழிபட வேண்டிய ஆலயம்
தன்னையே நம்பித் துதித்த ஒரு பெண்ணுக்கு, அவளது பேறு காலத்தில் தாயாக உருவெடுத்து பிரசவம் பார்த்தார் இறைவன்.
அப்படித் தாயும் ஆன இறைவனே தாயுமானவர். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் தாயுமானவரின் புராணக் கதை என்ன?
பூம்புகாரில் வணிகர் குலத்தில் பிறந்த ரத்தின குப்தன் என்பவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. அப்பேறு வாய்க்க இறைவனை வழிபட்டு வந்தான். இறைவன் அருளால் ஓர் அழகிய புதல்வியைப் பெற்றான். அந்தக் குழந்தைக்கு ரத்னாவதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.
ரத்தினாவதி மணப் பருவம் எய்தினாள். அவளுக்கு நல்ல வரன் பார்க்கத் தொடங்கினான் ரத்தின குப்தன். தனகுப்தன் என்ற வணிகன் திருசிராமலையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தன் மகளை மணம் செய்வித்து ரத்தினகுப்தன் ஏராளமான சீர் வரிசைகளுடன் அவளை திருசிராமலைக்கு அனுப்பி வைத்தான்.
தனகுப்தனுடன் திருசிராமலை வந்த ரத்தினாவதி தன் கணவனுடன் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வந்தாள். திருசிராமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் செவ்வந்தி நாதரை நாள்தோறும் வழிபட்டு வந்த ரத்தினாவதி, தாயாகும் பேறு அடைந்தாள்.
பேறு காலம் நெருங்கியது. இத்தகவலை பூம்புகாரிலிருக்கும் தன் தாய்க்கு தெரியப்படுத்தி அவளை உடனே புறப்பட்டு வரும்படி சொல்லி அனுப்பினாள் ரத்தினாவதி. தாயும் பூம்புகாரிலிருந்து புறப்பட்டாள். மகளுக்கு வேண்டிய மருந்துகள் எண்ணெய் போன்ற பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து திருசிராமலைக்கு பயணமானாள் அந்தத் தாய்.
காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அந்த அன்னையால் திருசிராமலைக்கு வர இயலவில்லை. மகள் ரத்தினாவதியோ தன் தாயின் வரவை நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள். தாய் இன்று வருவாள், நாளை வருவாள் என மகள் காத்திருக்க, காவிரியின் வெள்ளமோ தாயின் வருகையைத் தாமதப்படுத்தியது.
மகளோ ஏக்கம் கொண்டாள். தாயைக் காணவில்லையே எனக் கவலைக் கொண்டாள். தன் கவலையை தான் வணங்கும் செவ்வந்தி நாதரிடம் கண்ணீருடன் முறையிட்டாள்.
இறைவன் தனது பக்தையின் கண்ணீரைக் கண்டார். கவலையையும், வேதனையையும் கண்டார். அவர் மனம் கரைந்தது. உடனே ரத்தினாவதியின் தாய்வேடம் பூண்டார். செவ்வந்தி நாதர் ரத்தினாவதியின் வீட்டை அடைந்தார். தாயைக்கண்ட மகளின் மனமெல்லாம் பூரிப்பு. ஆனந்தம், அவளது கவலை எல்லாம் பறந்தோடியது. தாயாக வந்த இறைவன் ரத்தினாவதியுடன் தங்கினார்.
பிரசவத்துக்கான உரிய நேரம் வந்தது. மகளுக்கு தாய் மருத்துவம் பார்த்தாள். மகள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகளோடு சில நாட்கள் தங்கிய தாய் மகளையும், சேயையும் கண்போல் பராமரித்தார்.
இடையில், காவிரியில் வெள்ளம் வடிந்தது. உண்மையான தாய் ஆற்றைக் கடந்து தன் மகள் வீட்டிற்கு வந்தாள். அவளைக் கண்ட ரத்தினாவதி திகைத்தாள்.
இரண்டு தாய்களா? இதில் உண்மையான தாய் யார்? அவளது குழப்பம் நீங்குவதற்குள் இறைவன் மறைந்தார். வானில் இறைவி மட்டுவார் குழலம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார்.
அதுமுதல் திரிசிராமலை செவ்வந்தி நாதர் தாயுமானவர் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படலானார். இறைவனை மனமுருக வேண்டி வழிபட்ட ரத்தினாவதியும் தல அடியார்களுள் ஒருவராக இத்தலத்தில் விளங்குகிறாள்.
இதனை விளக்கும் வகையில், செட்டிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த லீலை திருச்சி தாயுமானவர் ஆலய சித்திரைப் பெருவிழாவில் 5ம் நாள் விழாவாக நடைபெறுகிறது.
இங்கே, குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் தாயுமானவருக்கு வாழைத்தார் படைத்து, பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். வாழையடி வாழையாக குடும்பம் தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில், வாழையை கருவறையில் வைத்து பூஜித்து, பின்பு அதை பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
சுகப்பிரசவ வழிபாடு: மட்டுவார்குழலி அம்பாள் தனி சந்நிதியில் இருக்கிறாள். கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் வந்து, இந்த அம்பிகைக்கு 21 கொழுக்கட்டை, 21 அப்பம் படைத்து, ஒரு துணியில் மஞ்சள், குங்குமம், வெற்றிலையை கட்டி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
சுகப்பிரசவ சுலோகம்:
கர்ப்பிணிகள் தாயுமானவர், அம்பிகையை வேண்டி, இந்த சுலோகத்தை தினமும் 3 முறை சொல்லி வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதிநாத
மன்னாத ஸும்ப சசிசூட ஹர திரிசூலின
சம்போ ஸுகப்ரசவ க்ருத் பவ மே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலய மாம் நமஸ்தே
சுகபிரசவம் ஆக விரும்பும் பெண்கள் தாயுமானவரை வணங்கினால் தாங்கள் விரும்பியபடி சுகப்பிரசவம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Ganesan Pondicherry

பேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன்
பேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன்
பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வேண்டுபவர்களுக்குப் பேச்சுத் திறனையும், கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கல்வியில் சிறப்பிடத்தையும் வழங்கி அருளுகிறார் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் பேச்சியம்மன்.
பேச்சியம்மன் வரலாறு
ஒரு குடும்பத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இளைய சகோதரன் ஒருவன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான். அவனுக்கு அந்த ஊரிலிருந்த பேச்சி எனும் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பின் தொடர்ச்சியாக அவன், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இந்தத் திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த தம்பதியரால் ஊரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தனர்.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி, அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். தம்பியைப் பற்றி விசாரித்தபோது, அவன் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், ஊரார் எதிர்ப்பு தெரிவித்ததால், காட்டுப் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதனால் மிகவும் கவலையடைந்த அவர்கள் காட்டுக்குள் வசிக்கும் தங்கம் சகோதரனைத் தேடிச் சென்றனர். அங்கு ஆடு மேய்க்கும் சிலர், அவர்களுடைய சகோதரனும், அவன் மனைவியும் காட்டுக்குள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர்.
அந்த இடத்திற்குச் சென்ற அவனது சகோதரர்கள், தங்கள் சகோதரனையும், கர்ப்பிணியான அவன் மனைவியையும் பார்த்தனர். பின்னர் சகோதரனை மட்டும், தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். அவன் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை விட்டு வர முடியாது என்று மறுக்க, கோபம் கொண்ட அவனுடைய மூத்த சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து அவனது மனைவியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் கொன்றுவிட்டனர். அவர்களைத் தடுக்கச் சென்ற சகோதரனும் கொல்லப்பட்டான்.
இதைக் கண்ட ஊர்க்காரர்கள், ‘கருவுற்ற பெண்ணைக் கொன்றதால் தங்கள் ஊருக்கு ஏதாவது தீயசெயல்கள் நடந்து விடக்கூடாதே?’ என்று அச்சமடைந்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் பேசி, அந்தப் பெண்ணுக்கு ஒரு கோவில் எழுப்பி வணங்கி வர முடிவெடுத்தனர். அந்த வழிபாடே பேச்சியம்மன் வழிபாடு என்று கூறப்படுகிறது. செவி வழிக் கதையாக இது உள்ளது. அதே நேரத்தில் காளியம்மனின் மற்றொரு தோற்றம்தான் பேச்சியம்மன் என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
இது தவிர மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்க்கலாம்.
வல்லாளன் என்ற அரசன் மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். அவனுடைய எல்லா கொடுமைகளுக்கும் அவனுடைய மனைவியும் உறுதுணையாக இருந்தாள். இதனால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். அவனது மனைவியின் பிரசவ நேரத்தில், அவனுக்குப் பிறக்க இருக்கும் குழந்தையின் உடல் இந்தப் பூமியைத் தொட்டவுடன் அவன் அழிந்து விடுவான் என்றும், மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்குப் பிறகு அவனுக்கு அழிவே இருக்காது என்றும் அவன் ஒரு சாபம் பெற்றிருந்தான். இந்தச் சாபத்தை அறிந்த அந்நாட்டு மக்கள், அவனுக்குப் பிறக்கும் குழந்தை தன் கொடூரத்தால் நாட்டையே அழித்து விடும் என்று பயந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவனது மனைவி கருவுற்றாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டுவிட்டால் தனக்கு மரணம் ஏற்படும் என்றாலும், அந்தச் சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால், மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியைத் தொடாதபடி பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.
அவனது மனைவிக்குப் பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்கத் தகுந்த மருத்துவச்சியை அழைத்து வரச் சென்றான். அப்போது அவன் எதிரில் வயதான ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யாரென்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.
அரசன் மகிழ்ச்சியடைந்தான். அவளிடம், ‘நான் இந்நாட்டின் அரசன். எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டால், நிறைய பொன்னும் பொருளும் தருவதாகச் சொன்னான். வயதான அந்தப் பெண் மணியும் அதற்குச் சம்மதித்து அவனுடன் அரண்மனைக்குச் சென்றாள்.
அந்தப் பெண்மணி அரசிக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்து, குழந்தையைப் பூமியில் பிறக்கும்படியாக விடாமல், தன் கைகளில் ஏந்திக் கொண்டாள். அரசனின் விருப்பப் படியே பிரசவம் பார்த்த அவள், தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் உடனடியாகத் தரும்படி அவனிடம் கேட்டாள். அவன் அதைத் தராமல், அவளைத் தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட அந்தப் பெண்மணி, பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள். அரசனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் மிதித்துக் கொண்டு, அவன் மனைவியைத் தூக்கித் தன் மடியில் போட்டுக்கொண்டு அவள் வயிற்றைத் தன் கரங்களால் பிளந்தாள். அந்த அரசனையும் காலால் மிதித்துக் கொன்றாள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும், அவன் மனைவியும் அழிக்கப்பட்டார்கள் என்று அறிந்த அந்நாட்டு மக்கள், அனைவரும் அங்கு ஒன்று கூடினர்.
அரசனையும், அவன் மனைவியையும் அழித்து, தங்களைக் காப்பாற்றியது ‘பெரியாச்சி’ என்ற பெயரில் வந்திருந்த காளியம்மன் என்பதையும் தெரிந்து கொண்டனர், அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அம்மனுக்கு ‘பெரியாச்சியம்மன்’ என்ற பெயரிலேயே கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். இந்தப் பெரியாச்சியம்மன் என்பதே நாளடைவில் ‘பேச்சியம்மன்’ என்றாகிப் பல இடங்களில் கோவில் கொண்டு விட்டார் என்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறு தோற்றம்தான் பேச்சியம்மன். பேச்சு அம்மன் என்றிருந்ததே பின்னர் பேச்சியம்மன் என்று மருவிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
பேச்சியம்மன் குறித்த வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் வேறாக இருந்தாலும், பேச்சியம்மனுக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலும் அதிகமான கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைந்த கோவில்களில் மதுரை, சிம்மக்கல் பகுதியில் அமைந்திருக்கும் பேச்சியம்மன் கோவிலும் ஒன்று.
பேச்சியம்மன் கோவில்
மதுரை மாநகரின் சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சுயம்பு மூர்த்தியாவார். இந்த ஆலயத்தில் உள்ள பேச்சியம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும், காலில் அரக்கனை மிதித்து இருப்பது போன்றும் இருக்கிறது. இந்தப் பேச்சியம்மனைச் சரஸ்வதியின் மற்றொரு தோற்றமென்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயம் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆலய வளாகத்தினுள் பேச்சியம்மன் தவிர, விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர், நாகர் உள்பட 21 தெய்வங்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள், பேச்சாற்றல் வேண்டுபவர்கள் இந்த அம்மனை வணங்கினால் குறைகள் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுதோற்றமாகக் கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டு மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பிடத்தைப் பெற முடியும். ராகு, கேது தோஷமுடையவர்கள் இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள நாகரை வழிபட்டு, அதன் பிறகு அம்மனை வணங்கி நற் பலன்களைப் பெறலாம்.
சிறப்பு வழிபாடு
பேச்சியம்மனுக்கு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இது தவிர, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மதுரை மாநகரின் மத்தியப் பகுதியான சிம்மக்கல் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்திருக்கிறது. மதுரை நகரில் இயக்கப்படும் பெரும்பான்மையான நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகச் செல்கின்றன.

Sunday, March 6, 2016
108 லிங்கம் போற்றி
108 லிங்கம் போற்றி
1. ஓம் சிவ லிங்கமே போற்றி
2. ஓம் அங்க லிங்கமே போற்றி
3. ஓம் அபய லிங்கமே போற்றி
4. ஓம் அமுத லிங்கமே போற்றி
5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
6. ஓம் அனாயக லிங்கமே போற்றி
7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
9. ஓம் அப்பு லிங்கமே போற்றி
10. ஓம் ஆதி லிங்கமே போற்றி
11. ஓம் ஆதார லிங்கமே போற்றி
12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி
15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
17. ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி
18. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
19. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
20. ஓம் உக்ர லிங்கமே போற்றி
21. ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
22. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
23. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
24. ஓம் கனக லிங்கமே போற்றி
25. ஓம் காருண்ய லிங்கமே போற்றி
26. ஓம் காசி லிங்கமே போற்றி
27. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
28. ஓம் காளத்தி லிங்கமே போற்றி
29. ஓம் கிரி லிங்கமே போற்றி
30. ஓம் குரு லிங்கமே போற்றி
31. ஓம் கேதார லிங்கமே போற்றி
32. ஓம் கைலாச லிங்கமே போற்றி
33. ஓம் கோடி லிங்கமே போற்றி
34. ஓம் சக்தி லிங்கமே போற்றி
35. ஓம் சங்கர லிங்கமே போற்றி
36. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
37. ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
38. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
39. ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
40. ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
41. ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி
42. ஓம் சாந்த லிங்கமே போற்றி
43. ஓம் தியான லிங்கமே போற்றி
44. ஓம் சித்த லிங்கமே போற்றி
45. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
46. ஓம் சீதள லிங்கமே போற்றி
47. ஓம் சுத்த லிங்கமே போற்றி
48. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
49. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
50. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
51. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
52. ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி
53. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
54. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
55. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
56. ஓம் ஜய லிங்கமே போற்றி
57. ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
58. ஓம் ஜீவ லிங்கமே போற்றி
59. ஓம் ஜோதி லிங்கமே போற்றி
60. ஓம் ஞான லிங்கமே போற்றி
61. ஓம் தர்ம லிங்கமே போற்றி
62. ஓம் தாணு லிங்கமே போற்றி
63. ஓம் தேவ லிங்கமே போற்றி
64. ஓம் நடன லிங்கமே போற்றி
65. ஓம் நாக லிங்கமே போற்றி
66. ஓம் நித்ய லிங்கமே போற்றி
67. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
68. ஓம் பர லிங்கமே போற்றி
69. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
70. ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
71. ஓம் பத்ரி லிங்கமே போற்றி
72. ஓம் பக்த லிங்கமே போற்றி
73. ஓம் பாபநாச லிங்கமே போற்றி
74. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
75. ஓம் பிராண லிங்கமே போற்றி
76. ஓம் பீஜ லிங்கமே போற்றி
77. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
78. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
79. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
80. ஓம் புவன லிங்கமே போற்றி
81. ஓம் பூத லிங்கமே போற்றி
82. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
83. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
84. ஓம் மரகத லிங்கமே போற்றி
85. ஓம் மஹா லிங்கமே போற்றி
86. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
87. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
88. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
89. ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி
90. ஓம் முக்தி லிங்கமே போற்றி
91. ஓம் மூல லிங்கமே போற்றி
92. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
93. ஓம் மேரு லிங்கமே போற்றி
94. ஓம் மோன லிங்கமே போற்றி
95. ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
96. ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
97. ஓம் யோக லிங்கமே போற்றி
98. ஓம் ராம லிங்கமே போற்றி
99. ஓம் ராஜ லிங்கமே போற்றி
100. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
101. ஓம் வாயு லிங்கமே போற்றி
102. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
103. ஓம் விசித்திர லிங்கமே போற்றி
104. ஓம் வீர்ய லிங்கமே போற்றி
105. ஓம் வேத லிங்கமே போற்றி
106. ஓம் வைத்ய லிங்கமே போற்றி
107. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
108. ஓம் லிங்கோத்பவனே போற்றி
1. ஓம் சிவ லிங்கமே போற்றி
2. ஓம் அங்க லிங்கமே போற்றி
3. ஓம் அபய லிங்கமே போற்றி
4. ஓம் அமுத லிங்கமே போற்றி
5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
6. ஓம் அனாயக லிங்கமே போற்றி
7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
9. ஓம் அப்பு லிங்கமே போற்றி
10. ஓம் ஆதி லிங்கமே போற்றி
11. ஓம் ஆதார லிங்கமே போற்றி
12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி
15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
17. ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி
18. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
19. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
20. ஓம் உக்ர லிங்கமே போற்றி
21. ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
22. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
23. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
24. ஓம் கனக லிங்கமே போற்றி
25. ஓம் காருண்ய லிங்கமே போற்றி
26. ஓம் காசி லிங்கமே போற்றி
27. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
28. ஓம் காளத்தி லிங்கமே போற்றி
29. ஓம் கிரி லிங்கமே போற்றி
30. ஓம் குரு லிங்கமே போற்றி
31. ஓம் கேதார லிங்கமே போற்றி
32. ஓம் கைலாச லிங்கமே போற்றி
33. ஓம் கோடி லிங்கமே போற்றி
34. ஓம் சக்தி லிங்கமே போற்றி
35. ஓம் சங்கர லிங்கமே போற்றி
36. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
37. ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
38. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
39. ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
40. ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
41. ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி
42. ஓம் சாந்த லிங்கமே போற்றி
43. ஓம் தியான லிங்கமே போற்றி
44. ஓம் சித்த லிங்கமே போற்றி
45. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
46. ஓம் சீதள லிங்கமே போற்றி
47. ஓம் சுத்த லிங்கமே போற்றி
48. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
49. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
50. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
51. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
52. ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி
53. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
54. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
55. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
56. ஓம் ஜய லிங்கமே போற்றி
57. ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
58. ஓம் ஜீவ லிங்கமே போற்றி
59. ஓம் ஜோதி லிங்கமே போற்றி
60. ஓம் ஞான லிங்கமே போற்றி
61. ஓம் தர்ம லிங்கமே போற்றி
62. ஓம் தாணு லிங்கமே போற்றி
63. ஓம் தேவ லிங்கமே போற்றி
64. ஓம் நடன லிங்கமே போற்றி
65. ஓம் நாக லிங்கமே போற்றி
66. ஓம் நித்ய லிங்கமே போற்றி
67. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
68. ஓம் பர லிங்கமே போற்றி
69. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
70. ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
71. ஓம் பத்ரி லிங்கமே போற்றி
72. ஓம் பக்த லிங்கமே போற்றி
73. ஓம் பாபநாச லிங்கமே போற்றி
74. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
75. ஓம் பிராண லிங்கமே போற்றி
76. ஓம் பீஜ லிங்கமே போற்றி
77. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
78. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
79. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
80. ஓம் புவன லிங்கமே போற்றி
81. ஓம் பூத லிங்கமே போற்றி
82. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
83. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
84. ஓம் மரகத லிங்கமே போற்றி
85. ஓம் மஹா லிங்கமே போற்றி
86. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
87. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
88. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
89. ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி
90. ஓம் முக்தி லிங்கமே போற்றி
91. ஓம் மூல லிங்கமே போற்றி
92. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
93. ஓம் மேரு லிங்கமே போற்றி
94. ஓம் மோன லிங்கமே போற்றி
95. ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
96. ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
97. ஓம் யோக லிங்கமே போற்றி
98. ஓம் ராம லிங்கமே போற்றி
99. ஓம் ராஜ லிங்கமே போற்றி
100. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
101. ஓம் வாயு லிங்கமே போற்றி
102. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
103. ஓம் விசித்திர லிங்கமே போற்றி
104. ஓம் வீர்ய லிங்கமே போற்றி
105. ஓம் வேத லிங்கமே போற்றி
106. ஓம் வைத்ய லிங்கமே போற்றி
107. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
108. ஓம் லிங்கோத்பவனே போற்றி
பசுவின் பால் சைவமா அசைவமா?
பசுவின் பால் சைவமா அசைவமா?
மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.
ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம்.
பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.
பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.
பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும்பயன்படுகிறது.
அது புனிதமானது என்பதால் தான், "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்", என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் ஒளவைப்பாட்டி.
சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள்
சிவராத்திரி தோன்றிய வரலாற்றைச் சொல்லும் கதைகள் புராணங்களில் பல உள்ளன. அதே போல் சிவராத்திரியைப் போற்றும் பல திருத்தலங்களும் உள்ளன.
பொதுவாக எல்லா சிவாலயங் களிலும் மகாசிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பிக்கப் படுகிறது.
கிருத யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் உமாதேவியும்; திரேதா யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் முருகனும்; துவாபர யுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விநாயகரும்; கலியுகத்திற்கு முற்பட்ட பிரளய காலத்தில் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதாக புராண நூல்கள் சொல்கின்றன.
மாசியில் பிரம்மதேவரும், பங்குனி யில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரிய னும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்லும்.
சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இதை „லோக சிவராத்திரி‘ என்று சொல்வார்கள். இவ்வாண்டு திங்கட்கிழமையில் சிவராத்திரி அமைவது குறிப்பிடத் தக்கது. அன்று விரதம் கடைப்பிடித்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.
சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். இரவெல்லாம் சிவபெருமானைப் பூஜித்தாள். உமையவள் பூஜித்த இடம் தேவிகாபுரம். அந்த நாள் சிவராத்திரி.
தன் பக்தனான மார்க்கண்டேயரை எமனிடமிருந்து சிவபெருமான் காத்த நாளும் சிவராத்திரியே. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் அடி, முடி காண கட்டளை இட்டார். அவ்வாறு காணமுடியாமல் அவர் கள் தோல்வியுற்றபோது, சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி காட்சி கொடுத்து மலையாக மாறினார். அந்த நாள் சிவராத்திரி ஆகும். சிவபெருமான் ஜோதி வடிவில் கல்மலையாக மாறிய திருத்தலம் திருவண்ணாமலை.
ஆதிசேஷன் அதிக உடல்பலம் பெற சிவபெருமானை தியானித் தான். அப்போது ஆதி சேஷன்முன் தோன்றிய ஈசன், சோழ நாட் டில் காவிரிக்கரை யில் உள்ள தலங்களுக்குச் சென்று மகா சிவராத்திரியில் வழிபடுமாறு கூறினார். அதன் படி கும்ப கோணம் அருகிலுள்ள நாகேஸ்வரத்தில் முதல் காலத்தில் வழிபட்டபின், நாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை இரண்டாம் காலத்திலும், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்புரேஸ்வரரை மூன்றாம் காலத்திலும், நாகூரில் உள்ள நாகேஸ்வரரை நான்காம் காலத்திலும் வழிபட்டு ஆதிசேஷன் பேறுகள் பெற்றான் என்று புராணம் கூறும்.
இதுபோல சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் பல உள்ளன. அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகைப்பட்டினம், கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் சிவபக்தர்கள் சிவராத்திரியன்று விரதம் கடைப்பிடித்து பன்னிரண்டு சிவன் கோவில் களுக்குச் செல்வார்கள். திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, திருமலை, திற்குறிச்சி, திற்பரம்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, திருநட்டாலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங் களுக்கு நடையும் ஓட்டமு மாகச் செல்வார்கள். இவர்கள் அன்றிரவு சுமார் 70 கிலோமீட்டர் தூரம் ஓடுவார் கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓடும் போது „கோவிந்தா கோவிந்தா‘ என்று குரல் கொடுத்த வண்ணம் ஓடுவர். இது சைவ- வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் என்பர்.
சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவ பெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. இயலாத வர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங் களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும்.
அன்று தானதர்மங்கள் செய்வது சிறப்பிக்கப் படுகிறது.
சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!

Friday, March 4, 2016
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்கவேண்டும் என்பது ஏன் ?
முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது
Subscribe to:
Posts (Atom)