Monday, June 16, 2014

சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்

சங்கஷ்ட நாசன கணேச ஸ்தோத்திரம்
மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்
நான்மூகன் மைந்தன் நாரதர் அருளியது
மனநிம்மதி பெற
இதைப் பாராயணம் செய்வதால் ஸர்வ கார்ய சித்தி ஏற்படும். எல்லாவிதமான இடையூறுகளும் விலகி, காரிய சித்தி, தனலாபம், புத்ர லாபம் முதலியவைகள்
ஏற்படும். குடும்பம் ÷க்ஷமமாக விளங்கும்

Friday, June 13, 2014

கர்ப்ப தோஷம் விலக முருகனுக்கு 27 செவ்வாய்க்கிழமை அர்ச்சனை

லக்கினத்திற்கு நான்காவது வீடு செவ்வாயின் ஆட்சி வீடாக வந்தால் அந்த ஜாதகத்தை கர்ப்ப தோஷமுள்ள ஜாதகம் என்று கூறுவார்கள். அதற்காக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். இதை மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை துவங்கி இருபத்து ஏழு செவ்வாய் கிழமைகள் வரை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

கடைசி செவ்வாய் அன்று பள்ளிக்கூட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். இப்படி செய்தால் கர்ப்ப தோஷம் விலகும். கண்ணனை போன்ற குழந்தை பிறக்கும்

குழந்தை பாக்கியம் அருளும் வெயிலுகந்த அம்மன்


குழந்தை பாக்கியம் அருளும் வெயிலுகந்த அம்மன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சன்னதிபஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற வெயிலுகந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. புராண வலாற்று சிறப்பு கொண்ட இந்த கோவிலானது ஒரு காலத்தில் தென் கால் கண்மாய் கரையில் இருந்ததாக செவிவழி செய்தி கூறுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆனி, ஆவணி மற்றும் சித்திரை மாதங்களில் அம்மனை சூரியபகவான் தரிசனம் செய்யகூடிய அற்புத காட்சியை காணலாம். அதாவது கோவிலின் கருவறையில் வெயிலுகந்த அம்மன் சிரசு,முகத்தில் சூரிய (வெயில்) ஒளிக்கதிர்கள் நேரடியாக விழும். 

இந்த அற்புத காட்சியை தரிசனம் செய்ய அந்த 4 மாதத்திலும் கோவிலுக்கு பக்தர்கள் படை எடுப்பார்கள்.மாசி மாதத்தில் 10 நாட்கள் அம்மனுக்கு விழா எடுக்கப்பட்டு வருகிறது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நலனுக்காகவும் திருப்பரங்குன்றம் நகரில் உள்ள ஒவ்வொரு தெருவாக பொதுமக்கள் ஒன்று கூடி முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபடுவார்கள். 

இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக ஆவணி மாதத்தில் நடந்து வருகிறது. இதே போல ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம மக்களும் திரளாக கூடி பொங்க லிட்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய வரம் தந்து வெயிலுகந்த அம்மன் அருள் பாலித்து வருகிறார். 

அம்மனை நேரடியாக வழிபட்டால் தீராத வயிற்று வலி நீங்கும். நீண்ட கால தடை நீங்கி திருமணம் கை கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகல சக்தி வல்லமை கொண்ட வெயிலுகந்த அம்மனின் தீர்த்தம் அருந்தினால் அம்மை குணமாகும். 

தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபடுகிறார்கள். நீண்டகால திருமண தடையால் அவதிப்பட்டவர்கள் தங்களுக்கு திருமணம் கை கூடியதும் அம்மனுக்கு பட்டு சேலை மற்றும் தங்கபொட்டு சாத்தி வழிபடுகிறார்கள். 

குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு பக்தர்களும் தங்களது வேண்டுதலை அம்மனிடம் முறையிடுகிறார்கள். அது அம்மனின் சத்தியால் நிறைவேறி வருகிறது. ஆகவே இங்கு நாள்தோறும் திருவிழா போல பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதை காணலாம்.

நிரந்தர கடன்காரர் ஜாதகம்

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும் ஆறாமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சாகும் வரையிலும் கடன்போகாது என்பது விதி. ஆனால் பத்தாமிடம் வலுப்பெற்று இருந்தால் கடனே மூலதனமாக இருக்கும்.

மூலதனத்தை விட கையிருப்பு பலமடங்கும் இருக்கும் தன் பணத்தை முதலீடு செய்யாமல் மற்றவர் பணத்திலேயே உழைத்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதும் விதியாகும்.

எனவே கடனைப்பற்றி கலங்க வேண்டிய அவசியமில்

மாங்கல்யம் நிலைக்கச் செய்யும் விஷ்ணு துர்க்கை

மாங்கல்யம் நிலைக்கச் செய்யும் விஷ்ணு துர்க்கை
பெரும்பாலான கோவில்களில் கோஷ்ட தெய்வமாகவோ, பரிகார தேவதையாகவோ தான் விஷ்ணு துர்க்கை காணப்படுவாள். 

ஆனால் பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் உள்ள பாலதன்றி என்ற கிராமத்தில் தனிக்கோவிலில் மூலவராக விஷ்ணு துர்க்கை வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

மாங்கல்யம் நிலைக்கவும், குடும்ப ஒற்றுமைக்காகவும், வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைபெறவும் இந்த துர்க்கையை வணங்கி பயன்பெறுகின்றனர்.

திருமண தடை நீக்கும் ராஜதுர்க்கை

தர்மபுரி காமாட்சி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை, ராஜதுர்க்கை என்று அழைக்கிறார்கள். இந்த அம்மனுக்கு சாத்திய மாலையை திருமண தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். 

அவர்கள் இந்த மாலையுடன் மூன்று முறை ஆலயத்தை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் உள்ள நாக கன்னியர் அருகே அந்த மாலையை ஒன்பது துண்டுகளாக்கி போட்டு விடுவார்கள். 

பிறகு ராஜ துர்க்கைகை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

குருபெயர்ச்சி: மேஷம், கடகம், துலாம், தனுசு ராசிகளுக்கான பரிகாரம்

மேஷ ராசியினர் செவ்வாய்க்கிழமை தட்சிணா மூர்த்திக்கு குங்குமம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஜவ்வாது சேர்த்த சந்தனக்காப்பிட்டு செந்நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மாலை சூட்ட வேண்டும். மாதுளை, துவரம்பருப்பு, சாதம, ஜிலேபி நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். வீரபத்திரருக்குரிய காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட தோஷம் விலகும். 

கடக ராசியினர் திங்களன்று தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம் செய்து அன்னக்காப்பிட வேண்டும். சந்தனக்கலர் பட்டு உடுத்தி, வாழைப்பழம், சாத்துக்குடி, முள்ளங்கி சாம்பார் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அம்பாள் மற்றும் சந்திரனுக்குரிய காயத்ரி, பாடல்களை பாட வேண்டும். 

துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமையன்று தட்சிணா மூர்த்திக்கு நெய் அபிஷேகம் செய்து ஜவ்வாது, கஸ்தூரி சேர்த்த சந்தனக் காப்பிட வேண்டும். வெண்பட்டு உடுத்தி மல்லிகை மாலை சூட்டி சேமியா பாயாசம், சாம்பார் சாதம், மாம்பழம் நைவேத்யம் செய்து தட்சிணாமூர்த்தி, சுக்கிரன், சக்கரத்தாழ்வார் காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட வேண்டும். 

தனுசு ராசியினர் தட்சிணாமூர்த்திக்கு எலுமிச்சை சாறு கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். கொண்டைக்கடலையால் காப்பிட்டு, முல்லைப்பூ மாலையிட்டு மஞ்சள் பட்டு உடுத்த வேண்டும். ஆரஞ்சு, சர்க்கரை கலந்த வேகவைத்த கடலைப்பருப்பு உருண்டை, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். தட்சிணாமூர்த்தி, குரு, தத்தாத்ரேயர் காயத்ரி ஓதி வர நல்வாழ்வு அமையும்.

Saturday, June 7, 2014

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்


செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு சந்தனம், புஷ்பம், தூப-தீபத்துடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, ஸ்ரீசெவ்வாய் பகவானின் திருநாமப் போற்றிகளைக் கூறி, அவரை மனதார வழிபடவேண்டும். அத்துடன், செவ்வாய் பகவானின் திருமுன் (யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக) அடுப்புக் கரியைக் கொண்டு கிழக்கு- மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, கீழ்க்காணும் ஸ்தோத்திரப் பாடலைப் படித்தவாறு அந்தக் கோடுகளை இடது காலால் அழித்து, அங்காரகனைப் பிரார்த்திக்க, கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும். 

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல 
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய 
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ: 
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா 
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே 
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா: 
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே 
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம் 

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்

ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும்பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும். 

இதை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோ, அல்லது வளர்பிறை வியாழக்கிழமையோ ஆரம்பித்துச் செய்யவேண்டும். அனுமனின் சன்னிதியிலோ அல்லது ஒரு அரச மரத்தடியிலோ அமர்ந்து சொல்வது மிக நல்ல பலன்களைத் தரும். 48 முறைகளோ, 108 முறைகளோ உள்ளார்ந்த பக்தியுடன் ஜபித்து வருவதும், அசைவம் தவிர்ப்பதுமே மிக முக்கியமான விதியாகும். வேறு நியதிகள் பெரியதாக இம்முறைக்கு இல்லை.

மந்திரம் கீழ்வருமாறு: 

'ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே 
ஆதி வராஹாய பஞ்ச 
முஹி ஹநுமதே லம்லம் 
லம்லம் ஸகல 
ஸம்பத்கராய ஸ்வாஹா'.