Tuesday, May 25, 2021

திருவிளையாடல் புராணம். நாகம் எய்த படலம்.

 *திருவிளையாடல் புராணம்* 

 *நாகம் எய்த படலம்* 

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.
நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது.

சமணர்களின் சூழ்ச்சி

அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சோமசுந்தரக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. இதனை அறிந்த சமண சமயக் குரவர்கள் சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும், மதுரையையும் அழிக்க நினைத்தனர்.
ஆதலால் அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி (மரண வேள்வி) ஒன்றினைத் தொடங்கினர். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான்.

நாகம் மதுரையை அழிக்க வருதல்

அவ்வவுணன் சமணர்களிடம் “எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது?” என்று வினவினான். சமணர்கள் அவனிடம் “நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும், அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு” என்று கட்டளையிட்டனர்.
அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.

நாகத்தினை அழித்தல்

மதுரை நகரின் புறத்தே வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விசமூச்சுக் காற்றால் அவ்விடத்தில் இருந்த மரங்கள், பயிர்கள் எல்லாம் கருகின.
நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும், செயலையும் தெரிவித்தனர்.
நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான்.
இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான்.
இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது.

மக்களைக் காத்தல்

நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது.
மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து “இறைவா, மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள்.
கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள்.
தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினான்.
அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை மதுரையின் மீது சிந்தச் செய்தார்.
இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.

நாகம் எய்த படலம் கூறும் கருத்து

தீயவர்களின் சூழ்ச்சியினை இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே நாகம் எய்த படலம் கூறும் கருத்தாகும்.

ஶ்ரீ பராசக்தி மஹிமை:



*ஶ்ரீ பராசக்தி மஹிமை:*

*"குழந்தே!! இங்க வா!!" சற்றே நடுங்கும் குரலில் அப்பய்ய தீக்ஷிதர் தனது ஒன்று விட்ட பெயரனை அழைத்தார்.* 

சுற்றி இருப்பவர்களுக்கு ஆஸ்சர்யம். "இத்தனை பேர் இருக்கும் போது சிறுபிள்ளையை அருகில் அழைக்கிறாரே அப்பய்ய தீக்ஷிதர்!! அதுவும் பரசிவத்தோடு அபின்னமாகும் தருவாயில்!!" என.

நீலகண்டன் தாத்தாவின் அருகில் வந்தான். "ஆஹா!! என்ன தேஜஸ்!! அப்பய்ய தீக்ஷிதருக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ஏதோ ஹாஸ்யத்தைக் கண்டது போல் கடகடவென நகைத்தார்.

"ஆபதி கிம் ஸ்மரணீயம்!!?" என அக்குழந்தையிடம் கேட்டார். சுற்றியுள்ள அனைவரும் "தீக்ஷிதருக்கு பித்து பிடிச்சுடுத்தோ!! சின்ன குழந்தை கிட்ட போய் "ஆபத்து வந்தா என்ன செய்வே"ன்னு கேக்கறாரே" என ப்ரமித்து நின்றனர்.

குழந்தை க்ஷணம் கூட தாமதிக்கவில்லை. கணீர் எனும் குரலில் "ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:" எனக் கூறினான். 

எவ்வளவு ஸத்யமான வார்த்தை. ஆபத்து காலத்ல அம்பாளுடைய சரணத்தை நினைச்சுண்டு, அவோ பாதத்தை கெட்டியா பிடிச்சுப்பேன்னு ஒரு குழந்தை சொல்லனும்னா எப்பேற்பட்ட மஹாக்ஞானம் அந்த குழந்தைக்கு இருக்கனும்.

அப்பய்ய தீக்ஷிதர் ஆஸ்சர்யத்துடன் "தத்ஸ்மரணம் கிம் குருதே!!" என பதிலுக்கு கேட்டார். "ஏண்டா குழந்தே!! அப்படி பண்ணா என்னடா ஆகும்!!" ன்னு அர்த்தம் அதற்கு.

ஒரு க்ஷனமும் தாமதிக்காத நீலகண்டன் கூறினான் "ப்ரஹ்மாதீனபி கிங்கிரி குருதே!!" என

"தாத்தா!! அம்பாளுடைய பாதத்தை ஸ்மரிச்ச மாத்ரத்ல, சிவன், விஷ்ணு, ப்ரஹ்மா முதற்கொண்டு முப்பத்துமுக்கோடி தேவர்களும் கிங்கராளா வேலை செய்ய மாட்டாளோ!!??" ன்னு அர்த்தம்.

சட்டென்று குழந்தையை அணைத்துக் கொண்ட அப்பய்ய தீக்ஷிதர் தேவீ மாஹாத்ம்ய ஓலைச்சுவடியை அளித்து "குழந்தே!! அம்பாளைத் தவிர்த்து ஸத்யம் ஒன்னுமில்லேடா!! அவளையே கெட்டியா பிடிச்சுக்கோ!!" எனக் கூறினார்.

ஆம்!! அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் நீலகண்டருக்கு மட்டும் கூறவில்லை. நமக்கும் சேர்த்துத்தானே கூறினார்!!

அம்பாளைத் தவிர்த்து ஸத்யமான வஸ்து ஒன்று உண்டோ உலகில்!!

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே!

**கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனை தீர வில்வ இலையில் இதை எழுதி மரத்தில் கட்டினால் போதுமே!**

கடன் பிரச்சினை என்பது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் என்றாலும் ஒரு சிலருக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு துன்புறுத்தலாக இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும் ஜாதகர்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பார்கள். சிவன் கோவில்களுக்கு சென்று அங்கு உள்ள வில்வ மரத்தை சுற்றி வந்தால் எத்தகைய வேண்டுதல்களும் பலிக்கும். அத்தகைய அதிக சக்தியுள்ள வில்வ இலையில் இதனை எழுதி வைக்கும் பொழுது கழுத்தை நெறிக்கும் கடனும் நொடியில் தீரும் என்பது ஐதீகம். அப்படி நாம் எதை எழுதி வைக்க வேண்டும்? எந்த மரத்தில் எப்படி கட்ட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

கடன் தொல்லை தீர்வதற்கு ‘சிவாய நம ஓம்’ என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை தினமும் உச்சரித்து வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம். சிவ நாமத்தை உச்சரித்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் கெடுதல்கள் என்பதே ஏற்படுவதில்லை. அவ்வகையில் சிவனுக்கு உகந்த வில்வ இலையைக் கொண்டு செய்யும் பரிகாரம் எப்பேர்ப்பட்ட கடனையும் நொடியில் தீர்க்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே முடியவில்லை என்பவர்களும், கொடுத்த கடனுக்கு வட்டியும் வரவில்லை, அசலும் வரவில்லை என்று புலம்புபவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

வில்வ இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதனை சுருட்டி ஏதாவது ஒரு நூல் கொண்டு இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய பூஜை அறையில் வைத்து உங்களுடைய கடன்கள் யாவும் தீர்வதற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு கோவிலுக்கு சென்று மூலஸ்தானத்தில் நின்று மனதார உங்களுடைய கடன் பிரச்சனைகளை வேண்டி என் கடன் எல்லாம் தீர வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அந்த இலையை வேப்பமரத்தில் கட்ட வேண்டும். கோவில்களில் இருக்கும் வேப்ப மரத்தின் உச்சியில் சென்று வடக்கு பார்த்த கிளையாக பார்த்து கட்டி விடுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாழ்க்கையில் இருக்கும் கடன் தொகைகள் அத்தனையும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கடன் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கும் மனம் கலங்காமல் இறைவனை முழுமையாக நம்புவது நல்லது.

அதிலும் சிவபெருமான், ஸ்ரீமன் நாராயணன், கால பைரவர், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தாலும் கடன் தொகைகள் யாவும் தீரும். ராகு கால துர்க்கை பூஜை செய்பவர்கள் கடன் தொல்லை தீரவும் வேண்டிக் கொண்டால் சுப காரியம் மட்டுமல்ல! கடன் இல்லா சுப நேரமும் வரும்.

பைரவருக்கு விளக்கு தீபமேற்றி வந்தாலும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம் உள்ளது. நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 27 மிளகுகளை வைத்து கருப்பு துணியில் கட்டி பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கடனும் காணாமல் காற்றில் கரையும். அவ்வரிசையில் இந்த வில்வ இலை பரிகாரமும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.

சத்திய வாகீஸ்வரர் கோவில், களக்காடு

*சத்திய வாகீஸ்வரர் கோவில், களக்காடு*

களக்காடு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியவாகீசுவரர் கோயில் பழமையான சிவன் கோவில்.

இறைவர் திருப்பெயர் : சத்தியவாகீஸ்வரர், பொய்யாமொழியார்.

இறைவியார் திருப்பெயர் : கோமதியம்பாள், ஆவுடைநாயகி.

தல மரம் : புன்னை.

தீர்த்தம் : பச்சையாறு, சத்திய தீர்த்தம்.

வழிபட்டோர் : தேவர்கள், இராமன், சீதை, இலக்குவனன்.

 'களக்காடு' களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தினம் ஒர் சித்தர் வரலாறு 24.பெயர் புண்ணாக்கீசர் சித்தர்

தினம் ஒர் சித்தர் வரலாறு 

24.பெயர் புண்ணாக்கீசர்சித்தர் 
வரலாறு சுருக்கம்
கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் புண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், புண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், புண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார். இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் புண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார். தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

தீபம்

*_இன்றைய ஆன்மீக சிந்தனை_* 


*************தீபம்****************
 தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

 நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.

 நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும், தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

 வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு, பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது.        சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம்.

 விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால்  குலதெய்வம் அருள்   குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.

 தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

 பஞ்சதீப எண்ணெயில் (ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில்)  ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, வறுமை, நோய் ஆகியவற்றை நீங்கும். ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம்  

பொதுவாக நெய் தீபமும், நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.

 கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.

 மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை, சனி தோஷம் நீங்கும்.

 வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும்.

 தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

 மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
 வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள்.

 பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும்.

வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

 இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.

 சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.
 குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.            

🌷🌷

இன்றைய ஆன்மிக சிந்தனை

*_இன்றைய ஆன்மீக சிந்தனை_* 


*************தீபம்****************
 தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

 நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.

 நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும், தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

 வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு, பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது.        சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம்.

 விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால்  குலதெய்வம் அருள்   குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.

 தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

 பஞ்சதீப எண்ணெயில் (ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில்)  ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, வறுமை, நோய் ஆகியவற்றை நீங்கும். ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம்  

பொதுவாக நெய் தீபமும், நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.

 கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.

 மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை, சனி தோஷம் நீங்கும்.

 வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும்.

 தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

 மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
 வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள்.

 பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும்.

வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.

 இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.

 சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.
 குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.

18 படிகளின் தத்துவம்..

புதன் கிழமை விரதம்...

*🙏🕉️“புதன் கிழமை விரதம் ”*

பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கீரைகள் என அனைத்தும் பச்சை நிறத்திலேயே இருக்கின்றன. நவகிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு, செல்வ வளமையை தரும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். அவரின் அருளை நாம் பெற மேற்கொள்ள கூடிய “புதன் கிழமை விரதம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.

பௌர்ணமியும் அதன் சிறப்பும்

பௌர்ணமியும் அதன் சிறப்பும் 
 பௌர்ணமி மாதத்திற்கு ஒருமுறை வரும். அந்நாளில் வீடுகளில் தீபம் வைத்து வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்தால் நன்மைகள் வீடு தேடி வரும். தமிழ் மாதத்தில் வரும் பௌர்மணியின் சிறப்பை இங்கு பார்ப்போம்.
🌖 சித்ரா பௌர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.
🌖 வைகாசி பௌர்ணமி - முருகனின் பிறந்தநாள்.
🌖 ஆனிப் பௌர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.
🌖 ஆடிப் பௌர்ணமி - திருமால் வழிபாட்டிற்கு உகந்தது.
🌖 ஆவணிப் பௌர்ணமி - ஓணம், ரக்ஷாபந்த திருநாள்.
🌖 புரட்டாசி பௌர்ணமி - உமாமகேசுவர பூ+ஜை உகந்த நாள்.
🌖 ஐப்பசி பௌர்ணமி - சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைப்பெறும்.
🌖 கார்த்திகைப் பௌர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு.
🌖 மார்கழிப் பௌர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்.
🌖 தைப் பௌர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்.
🌖 மாசிப் பௌர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்.
🌖 பங்குனிப் பௌர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்.
 ஒவ்வொரு மாத பௌர்ணமியின் சிறப்பையும் அறிந்து பூ+ஜை மற்றும் தீபம் ஏற்றினால் நன்மைகள் தேடி வரும்.

சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது.

*_சிவ தாண்டவங்களை எண்ணிக்கையில் அடக்க இயலாது._*
 

 *_ஆனந்த தாண்டவம் –_* 

சிவன் நடனமாடும் தளங்களில் முதன்மையானது தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரம். இந்த தளத்தி்ல் சிவன் பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர்களுக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது.

அனைத்து நடத்திற்கும் உள்ள ஏக தத்துவத்தை விளக்கும் வடிவமாக நடராஜர் நடனம் விளங்குகிறது. மிகையில்லாத உண்மையை வெளிப்படுத்தும் இந்த நடத்தை, பரத கலையின் சின்னமாக மக்கள் போற்றுகின்றனர். இது ஆனந்த தாண்டவம் எனவும் வழங்கப்படுகிறது.

இந்த ஆனந்த தாண்டவத்தை குற்றாலத்திலும், சிதம்பரத்திலும் காணலாம்.

 *_காளிகா தாண்டவம்_* 

பிரம்மாவுக்கு படைத்தல், விஷ்னுவுக்கு காத்தல், சிவனுக்கு அழித்தல் என பொதுவாக சொன்னாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களை ஈசன் செய்கிறார். இதைக் குறித்து ஆடும் நடனம் காளிகா தாண்டவம் எனப்படுகிறது.

இந்தக் காளிகா தாண்டவத்தை திருநெல்வேலியில் காணலாம்.

 *_சந்தியா தாண்டவம_* 

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள்.

மற்ற தாண்டவங்களைப் போல இடதுகாலை தூக்கி ஆடாமல் சிவன், வலது காலை தூக்கி ஆடுவது மேலும் சிறப்பு.

இந்த சந்தியா தாண்டவத்தை மதுரையில் காணலாம்.

 *_ஊர்த்துவ தாண்டவம்_* 

சிவனுக்கும், சக்திக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஒரு காலை தலைக்கு மேல் தூக்கி நடமாடினார் சிவன். அதைப் போல சக்தியால் நடனமாட இயலவில்லை. இந்த தாண்டவத்தை ஊர்த்துவ தாண்டவம் என்கின்றனர்.

இந்த ஊர்த்துவ தாண்டவத்தை திருவாலங்காட்டில் காணலாம்.

 *_கஜ சம்ஹாத் தாண்டவம்_* 

தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். இந்த தாண்டவத்தில் சிவன் யானையின் மீது ஆடுவார்.

இந்த கஜ சம்ஹாத் தாண்டவத்தை நன்னிலம் அருகேயுள்ள திருச்செங்காட்டாக்குடியில் காணலாம்.
🌷🌷

மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?



மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?

சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம் சாத்திரங்கள் கூறுகின்றன.

ஒன்று,

சிவன் சன்னிதி எந்த திசை ( கிழக்கு அல்லது மேற்கு ) நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது. 

அதாவது, சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை ஸமான வீஷணம் என்பர். 

சுவாமியும், அம்மனும் ஒரே திசை நோக்கியடி அமைப்பதில் ஒரு சில கோயில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதியும்,  சில கோயில்களில் இடப்புறம்  அம்மன் சன்னதியும் அமைந்திருக்கும்.

சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி இருப்பதை கல்யாணக் கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சன்னதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர அமைப்பு என்றும் கூறுவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர் கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ள அமைப்பிலேயே இருக்கின்றது.

இரண்டாவது,

சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும். 

இதை அனுக்கிரஹவீஷணம் என்பர். 

சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்மன் பிரதிஷ்டை அமைந்திருக்கும். 

சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று நமக்கு அருள்வதாகப் பொருள். இந்தநிலை அனேகமாக எல்லா கோயில்களிலுமே உள்ளது.

முன்றாவது,

சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். 

நேர் எதிராகப் பார்த்துக்கொள்ளும் நிலை. 
இதக அபிமுகவீஷணம் என்பர். 

எதிர்க்காட்சி என்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த நிலை, மிக அபூர்வமானது.

திருக்கடவூர், காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசித்து மகிழலாம்.

இவ்வாறு சிவன் கோயில்களில் மூன்று திசைகளில் அம்மன் அருள்பாலிப்பதில் எந்த வேறுபாடும் கிடையாது. மூன்றுமே ஒன்றுதான்.....

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் 
கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)சித்திரை வைகாசி விதிவிலக்கு

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 
16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்து விடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் 
குறியுங்கள்.

துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?

துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?

ஞாயிறு அன்றுதுர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும்  என்ற கருத்தை படித்த தகவலை பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே சரணம் !
ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
 
ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
 வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
 தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்று இன்று பாடி தொழநமது கவலை தீரும் !கஷ்டங்கள் தீரும் ! வெற்றிகள் நிச்சயம் !
.நல்வாழ்வும்  நிச்சயம் !ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

("தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்று வரும்பொழுது விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.)

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

திருமால் அவதாரங்கள்

""திருமால் அவதாரங்களில் மிகக் குறுகிய கால அவதாரம் #நரசிம்ம #அவதாரம்."

24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகவும் உக்கிரமான அவதாரம்.

இந்த குறுகிய கடிகை நேரத்தில் நரசிம்மருக்கு "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?

பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!

 ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!

தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!

அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறார்!

ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்?

நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்!

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே அதனால் அல்லவோ நரசிம்மர் இதயம் உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறார்? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மருக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

நரசிம்மருக்கு ஏன் வருத்தம் வந்தது?

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
- பெரியாழ்வார்

பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்! அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது! இன்றோ தந்தையே இல்லாமல் போனது! அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்!

ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டார் பெருமாள்!

இப்படி சுயநலமில்ல "உக்கிரம்" கண்டு, பெருமாளின் செந்தாமரை இதயத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ லட்சுமி அன்னை உணர்ந்தாள்! வியந்தாள்! இறைவனையும் பக்தனையும் சேர்த்து வைக்கிறாள்! பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம்
என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அன்னை தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ"

என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை! பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்!

"ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் திருவடிகளே சரணம் "

விசாகம் 2021

வைகாசி_விசாகம்... 2021 முக்கியத்துவம், 

புராண கதை : வைகாசி விசாக 

பூஜைக்கான_நேரம்..

தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

வைகாசி 11ம் தேதி (24 மே 2021) வரக்கூடிய விசேக நட்சத்திர தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
    
முருகன்பெருமான்...

தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.
வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும்.

இந்த வைகாசி விசாகம் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும்.

வைகாசி விசாகம் 2021 தேதி மற்றும் பூஜைக்கான நேரம் :

வைகாசி விசாக தேதி : 25 மே 2021, செவ்வாய்க் கிழமை
வைகாசி நட்சத்திரம் 

தொடங்கும் நேரம் - மே 25, காலை 7.06 மணி முதல்

வைகாசி நட்சத்திர முடியும் நேரம் : மே 26, காலை 4.11 மணி வரை..

தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும். முருக பெருமானின் பிறந்த நாளை வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகம் சிறப்புகள்...

இந்த விசேச தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். 

பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.

வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.

தமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயிலின் வரலாறும், சிறப்புகளும்...
தஞ்சை பெரிய கோயிலில் பொக்கிசமாகப் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.

இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.

முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.

வால்மீகி ராமாயணத்தில் ராம - லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும். 

இதனை கேட்பவர்களுக்கு அவர்களின் பாவம் நீங்கி புண்ணியத்தை அடைவார்கள் என்றும், இந்த நிகழ்வை குமார சம்பவம் என வால்மீகி குறிப்பிடுவார்.

இதை தழுவியே வட மொழி கவிஞர்கள் குறிப்பாக காளிதாசர் முருகப்பெருமானின் அவதாரம் குறித்து அவரின் நூலான குமார சம்பவம் என்று குறிப்பிடுகிறார்.

நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.

இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.

200க்கும் அதிகமான ஜீவசமாதி ஒரே இடத்தில்...

200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:--- 

  சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.

ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.

ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை   ஆட்கொள்கிறது.

நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன.

அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,

அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும்   டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனை தொடும்போது 
நமது மூச்சுநிலை  பிராணாயாமத்தை 💥உணரலாம்

*ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை  விளக்கும் அரிய சிற்பம் உள்ளது.

ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது.

இது சத்தியமான உண்மை.அனுபவித்தேன்.

*.இன்னும் பலசிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது.யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது.

Photo ஆலயபராமரிப்புசெய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு.பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம்
முடிந்தால் காணிக்கை செலுத்தலாம்.கட்டாயமில்லை.

ஆலய அமைவிடம்:-தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.

கடையநல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது.

சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம்.

ஓம் சிவாய வசி.நன்றி.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

நன்றி:சித்தர்கள் ரகசியம் முகநூல் பதிவு.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏

ஆலவாயர் அருட் பணி மற்ற தந்தையே நமஸ்காரம்

உலகின் முதல்வன் எம் பெருமான் ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🙏🙏

Monday, May 24, 2021

வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் ஜீவசமாதி...

வேலூர் மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் ஜீவசமாதி...

சித்தர்கள் அடங்கிய இடங்களில் கோவில்கள் ,ஜீவசமாதிகள் எழுப்பி வணங்கி வருகின்றனர்.

ஆன்ம அமைதி வேண்டி அவ்வாறான ஜீவசமாதிகளைத் தேடித் தேடித் சிலர் செல்கின்றனர்; அமைதியும் அடைகின்றனர்.

சித்தர்கள் தமக்காக வாழ்ந்தவர்கள் அன்று .எனவே ,அவர்கள் பூரணத்துவம் பெற்ற பிறகும் நம்மை ஆசீர்வதித்து
 வருகிறார்கள்.

🌷 சுப்பையா சாமி சித்தர்

இவர் சமாதி அடைந்த தினம் 9 .9 .1948 வியாழக்கிழமை அதிகாலை 5 .மணிக்கு சப்தமி் திதி அனுஷம் நட்சத்திரத்தில்.

வேலூர் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள மேற்கு  பாலக்கரையில் முத்து மண்டபம் அருகில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.

அவரது சீடர் பாலாஜி ஸ்வாமிகள் ஜீவசமாதி
வேலூர் பேருந்து நிலையம் பின்புறம்..
பாலாற்றங்கரையில்..
இவரது மூலம் யாருக்கும் தெரியவில்லை. வேலூரில் பலஇடங்களில் 1948 வரை வாழ்ந்தவர். இவரால் பயன்பெற்றவர் நிறைய பேர். வேண்டிக் கொண்டால் கூடவே இருப்பார் என்று அங்குள்ள சமாதி பராமரிப்பு செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் கூறினார். விதியுள்ளவர்கள் தான் இந்த இடத்துக்கு வரமுடியும். போவோர் வருவோர் யாரும் இங்கு வருவதில்லை. இவரால் பயன்பெற்ற 70 குடும்பங்கள் சேர்ந்து இங்கு தினமும் அன்னதானம் செய்கிறோம் என்று கூறினார். பக்கத்தில் அவரது சீடர் பாலாஜி ஸ்வாமிகள் அடக்கமான இடத்தில் லிங்கம் வைத்திருக்கின்றனர். உடல் உள்உறுப்புகளையெல்லாம் இரவில் தனித்தனியே கழற்றி வைத்து யோகம் புரிவாராம். இங்கு சக்தி இருப்பு அதிகம் தெரிகிறது.
தேடலுள்ளவர்கள் செல்லக் கடவர்.

🔥 நாகமணி சித்தர்

ஆற்காடு ~புதுப் பாடி சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூங்கோடு கிராமத்தில் உள்ள பாலாற்றங் கரையில் இவரது சமாதி உள்ளது.

🔔 கங்காராம் சுவாமி

இவர் பிறந்தது 15 .3. 1852 .சமாதியடைந்தது 4.9. 1952 .ஆற்காடு நகர காவல் நிலையம் எதிரில் உள்ள தோப்புக்காணா பகுதியில் இவரது சமாதி உள்ளது.

🍁 விலட்சண ஆனந்தர்

குடியாத்தம் அருகில் உள்ள மேல் மாயில் கிராமத்தில் இவரது சமாதி உள்ளது.

🌿 சிவலிங்கேஸ்வரர்

வாணியம்பாடிக்கு வடக்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கஸ்பா~ஏ என்ற பகுதியில் உள்ள சோமலாபுரம்
 சாலையில் இவரது சமாதி உள்ளது.

💥 அருளானந்தர் சுவாமி

இவர் 20 .11 .1877 இல் பிறந்தார.் 2. 9. 1965 இல் சமாதி அடைந்தார்.
 அரக்கோணத்தில் இருந்து 5 கிலோ மீட்டர்
 தூரத்தில் உள்ள காவனூர் நரசிங்க
 புரத்தில் இவரது சமாதி உள்ளது.

🔔 ஓம்🔔

🌍 வரதராஜ சுவாமி

காஞ்சிபுரத்தில் 31. 8 .1939 இல் பிறந்தார்.
 2006 இல் மார்கழி மாதம் ரேவதி
 நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
 அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் 4
 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
 வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள
 காமராஜர் தெருவில் இவரது சமாதி. உள்ளது.

💦 அமலானந்தா்; விமலானந்தா்.

இவர்கள் இருவரும் அருளானந்தர் சுவாமியின் சீடர்கள.் அரக்கோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகவேடு கிராமத்தில் இருக்கும்
 அமலானந்தா் மடத்தில் இவர்கள்
 இருவரின் சமாதிகள் உள்ளன.

🌺 அருணாசல சித்தர்

29 .12 .1 9 4 6 இல் சமாதி அடைந்தார். அரக்கோணத்தை அடுத்த நெமிலிக்கு அருகில் உள்ள கறியாக் குடல் கிராமத்தில் இவரது சமாதி உள்ளது.

❄ சிவாஜி சுவாமி.

சுப்பையா சுவாமி சித்தர் மடத்தில் இவரது சமாதி இருக்கிறது.

🔔 ஓம்🔔

☔  அமிர்தலிங்க சுவாமி

இவருக்கு வழங்கப்படும் வேறு பெயர் புண்ணாக்கு சுவாமி .வேலூருக்கு நடுவில்
 நல்லான் பட்டறை என்னும் பகுதியில்
 இருக்கும் ரங்கூன் ராமசாமி முதலியார்
 திருமணக் கூடத்திற்கு எதிரில் இவரது
 சமாதி உள்ளது.

🌀 குப்புசாமி தேசிகர்

வேலூருக்கு மேற்கே 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விரிஞ்சிபுரத்தில் இவரது சமாதி இருக்கிறது. இவரது சமாதி
 அருகே இவரின் இரு சீடர்களின்
 சமாதிகளும் உள்ளன.

🔥 மிளகாய்ச் சித்தர் 

காட்பாடி ~குடியாத்தம் சாலையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மயிலாடும்பாறை மலை அடிவாரத்தில் இவரது சமாதி இருக்கிறது.

🌻 தேவானந்தா் சுவாமி 

வேலூரில் இருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் மகாதேவ மலைக்கு செல்லும் பாதை உண்டு.

 அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஆட்டோவில் சென்றால் மகாதேவ மலை அடிவாரத்தை அடையலாம் .அங்கே இவரது சமாதி உள்ளது.

📱 மலையம்மா

 மகாதேவ மலை அடிவாரத்தில் இவரது சமாதி இருக்கிறது.

🔔 ஓம்🔔

💎 நரசிங்க சுவாமி 

வேலூரில் உள்ள சலவன் பேட்டை பகுதியில் நரசிங்க மடத்துக்கு தெருவில் இவரது பெயரிலான மடமும் ,இவரது சமாதியும் இருக்கின்றன.

🐡 மயிலை சுந்தர் ராம் குருஜி 

மந்திரம் யந்திரம் வைத்தியம் இவற்றில் வல்லவர் .திருப்பதி ஏழுமலையான் உபாசகர் .இவர் 11.5 .1999 சித்திரை மாதம் பூரட்டாதியில் சமாதி அடைந்தார்.

 வேலூருக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளிமலை வந்தால், அங்கு இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "தங்கால் " கிராமத்தில் இருக்கும் மௌனகுரு சாமி சமாதிக்கு இடதுபுறம் இவரது சமாதி உள்ளது.

🔔 திருப்புகழ் சச்சிதானந்த சுவாமி

கோவை மாவட்டம் பவானி அடுத்த பூ நாச்சி புதூர் கிராமத்தில் 25 .11. 1870 இல் பிறந்தார் .சித்திகள் கைவரப்பெற்றவர்.

 இவர் பரிபூரண நிலையை அடைந்தார் 23.
 11 .1950 கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம்
 திரயோதசி திதி அசுவினி நட்சத்திரத்தில் தினத்தன்று .

வேலூர் அருகில் வள்ளி மலை மேல் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று அங்கிருந்து சென்றால் ஆசிரமம் வரும்.
 அந்த ஆசிரமத்திற்கு பின்புறம் உள்ள
 குகையில் இவரது சமாதி இருக்கிறது.

🌸 ஓம் நமச்சிவாய சுவாமி 

வேலூரில் இருந்து 25 கிலோமீட்டர் குடியாத்தத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசுமரத்து ஊரின் வடக்கே ஊர் எல்லையில் நமசிவாயன்
 கோயில் உள்ள கருவறையில் இவரது
 சமாதி இருக்கிறது .இவரது சமாதி மீது
 லிங்க மூர்த்தி பிரதிஷ்டை
 செய்யப்பட்டிருக்கிறது.

💮 தோபா சுவாமி

 இவர் ஒரு  அவதூதர் .சித்துக்கள் பல புரிந்தவர் .1850 பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இவர் சமாதி அடைந்திருக்கிறார். இவரது பெயர் கொண்ட மடமும் ,சமாதியும் வேலூரில்
 உள்ள சைதாப்பேட்டையில் மெயின்
 பஜாரில் இருபத்தி ஐந்தாம் எண்ணில் உள்ள இல்லத்தில் இருக்கிறது.

🔔 ஓம்🔔

🌹 சிவானந்த மவுனகுரு சுவாமி

 விபூதி ,வில்வ இலை மூலம் மக்களின் துயர் தீர்த்தவா் வேலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவல்லம் விஸ்வநாதர் கோயிலுக்கு மிகவும் சமீபத்தில் இவரது மடமும்,
 சமாதியும் உள்ளன.

🌺 சனகர்

 இவர் தட்சணாமூர்த்தியின் சீடர்.
 வேலூரில் இருந்து 16 கிலோமீட்டர்
 தூரத்தில் இருக்கும் திருவல்லம்
 விஸ்வநாத ஈஸ்வரனுக்கு நேர் எதிரில்
 இவரது சமாதி அமைந்துள்ளது.

🐍 புற்றுச் சாமி (யோகீஸ்வரர் )

 வேலூர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் அடுத்து காணப்படும் அங்காளபரமேஸ்வரி புற்றுக் கோயிலில் இவரது சமாதி இருக்கிறது.

🌳சன்னியாசி பாறை சுவாமிகள் 

போளூருக்கு வடக்கில் வேலூர் செல்லும்
 சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில்
 உள்ள கேளூர் என்னும் ஊருக்கு மேற்கே
 உள்ள துாிஞ்சிக் குப்பம் என்னும்
 கிராமத்திற்கு மேற்கே உள்ள ஏரிக்குள்
 இவரது சமாதி உள்ளது.

🌴 குமாரதேவர் சுவாமி 

இராணிப்பேட்டை இல் இருந்து 6
 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடி
 மல்லூர் பிறந்தார் .

1870இல் மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் வழியில் உள்ள பாலத்தின் கடைசியில் இவரது சமாதி உள்ளது.

🔔 ஓம்🔔

🍀 மௌன குரு  சுவாமி 

ஆற்காட்டில் உள்ள தோப்புக்காணா பகுதியில் 5 .11. ஆயிரத்து 886 இவர் பிறந்தார் . 26.9 1950 இல் ஆவணி மாதம்
 அமாவாசை அன்று சமாதி ஆனார்.
 இவரது சமாதி ஆற்காட்டில் உள்ள தர்மராஜா கோயில் தெருவில் உள்ளது.

 🌷அன்பு முகநூல் நண்பர்களே வேலூர் மாவட்டத்தில் உள்ள சித்தர்களின் சமாதி ஜீவ சமாதி பற்றி படித்திருப்பீர்கள் நீங்கள் படித்தது மட்டுமில்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் ஆன்மீக குழுக்களில் பகிர்ந்து மகிழுங்கள் .🌷

🔥வரும் வாரம  வியாழக்கிழமை॥திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் சமாதிகள் பார்க்கலாம்॥🔥

🔔 ஓம்🔔

💥 சர்வம் சிவார்ப்பணம் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே எந்த சர்வம் சிவார்ப்பணம் இதற்கு அர்த்தம்🌹🙏