*_இன்றைய ஆன்மீக சிந்தனை_*
*************தீபம்****************
தீப கதிர் வீச்சு சுற்றுப்புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
நெய் தீபம் ஏற்றினால் உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் போன்றவற்றிக்கு உகந்ததாகக் கூறுகின்றனர்.
நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும், தீய சக்திகளும் நீங்குகின்றது. மேலும் நீண்ட கால தீராத பிரச்சனைகளை உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி போன்றவற்றின் பாதிப்பில் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வ வழிபாடு, பராசக்தி வழிபாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் அமாவாசை அன்று இலுப்பை எண்ணெயில் 8 விளக்கேற்றி பைரவரை வழிபடலாம்.
விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குலதெய்வம் அருள் குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை ஆகியவை உண்டாகும்.
தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் பிள்ளையாரின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
பஞ்சதீப எண்ணெயில் (ஐந்து வகை தனித்தனியே அகல்விளக்கில்) ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, வறுமை, நோய் ஆகியவற்றை நீங்கும். ஐந்து வகையானவற்றை ஒரே பாட்டிலில் கலந்து விற்கபடுவதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றி விட வேண்டாம்
பொதுவாக நெய் தீபமும், நல்லெண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது.
கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம்.
மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன்தொல்லை, சனி தோஷம் நீங்கும்.
வடக்கு நோக்கி தீபம் ஏற்றினால் திருமண தடைகளை நீங்கும்.
தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும்.
வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகள் வாசம் செய்வாள்.
பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியமாகும்.
வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.
இரும்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் சனி தோஷம் நீங்கும்.
சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலைஎண்ணெய்யில் விளக்கேற்றக்கூடாது. இதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்படும்.
குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.
No comments:
Post a Comment