Friday, July 29, 2016

தோல்வி என்றால்...என்ன ?

தோல்வி என்றால்...என்ன ?

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் எனபொருள்அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி
என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல.சில பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.

தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை. முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.

தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்அல்ல.
இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி
என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல. அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை.
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை  நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்..


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குவேன்! 😊

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: "இராமானுச வைபவம்"

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
"இராமானுச வைபவம்"

 "இராமானுச வைபவம்" என்னும் பெரும் சாகரத்தைச் சொல்லி கடந்துவிட முடியாது எனினும், “இதுதான் அந்த சாகரம்” என்று அதன் கரையில் நின்று தரிசிக்கலாம் அல்லவா? சாகரத்தை மேலும் தரிசிப்போம்..

"விளையும் பயிர் முளையிலேயே தெரியும்" என்ற பழமொழிக்கேற்ப, “இளையாழ்வாராகிய இராமானுசர்” சிறு பிராயம் முதலே பெருமான்மீது மிகுந்த அன்பு நிறைந்த பக்தியோடும், வேத சாஸ்திரங்களில் ஞானத்தோடும் விளங்கினார்.

இது கண்டு பொறுக்க முடியாத அத்வைத வேதாந்தியான யாதவப்பிரகாசர், "இப்படியே இந்த இளையாழ்வார் வளர்ந்துகொண்டு வந்தால் வேதாந்தங்களின் உண்மையான பொருளை எடுத்துரைத்து, அத்வைதம் பட்டுப் போகும்" என அஞ்சினார். "இனி இவரை வளர விடக்கூடாது, தீர்த்துக் கட்டுவது ஒன்றே வழி" என்று தீர்மானித்தார். தனக்கு வேண்டிய அந்தரங்க சிஷ்யர்களை அழைத்து "காசி யாத்திரை செல்வது போல் சென்று, அங்கு கங்கையில்  இளையாழ்வாரை அழுத்திக் கொன்றுவிடலாம்." என்று ஒன்று கூடி சதி திட்டமும் தீட்டலாயினர்.

அப்போது இளையாழ்வாரின் வயது 18. அந்த அப்போதுதான் இளையாழ்வாரின் தந்தையான ஆசூரி கேசவர் பரமபதம் அடைந்தார். பின் இளையாழ்வார் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு குடி பெயர்ந்தார். இளையாழ்வாரின் தாய்க்கு உடன் பிறந்தவரான பெரிய பிராட்டியாரின் (பெரிய திருமலை நம்பியின் இளைய சகோதரி) பிள்ளையே கோவிந்தன் ஆவார். அவரும் இளையாழ்வாருடன் குருகுலத்தில்தான் பயின்றுகொண்டு  இருந்தார்.

யாதவப் பிரகாசர் தன் திட்டத்திற்கு நாள் குறித்து, யாத்திரையை இளையாழ்வாரோடு தொடங்கலானார். இளையாழ்வாரும் தன் தாயிடம் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றார். உடன் கோவிந்தனும் சென்றார்.

யாத்திரையில் விந்திய மலைத்தொடர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது உடன் வந்த அந்த யாதவரின் அந்தரங்க சிஷ்யர்கள் சிலர் யாத்திரையின் சதி திட்டத்தினை கூடிக்கூடிப் பேசுவதை கோவிந்தன் கேட்டுவிட்டார்.
நெஞ்சம் கலங்கினார், இந்த விஷயத்தினை இளையாழ்வாருக்கு சொல்லி அவரை உடனே தப்பிக்கச் செய்ய முடிவுவும் செய்தார்.

ஒரு நாள் காலை நேரம் இளையாழ்வார் தனிமையில் இருக்கும் சமயம் பார்த்து அவரிடம் இந்த சதி திட்டத்தினை எடுத்துக்கூறி உடனே  "இங்கிருந்து சென்றுவிடும்" என்று கூறினார்.
இளையாழ்வாரும் அங்கிருந்து கோவிந்தனைப் பிரிந்து விந்தியத்தின் காட்டில் தெற்கு நோக்கி நடக்கலானார்.

அங்கு இளையாழ்வாரைக் காணாத யாதவரும், சிஷ்யர்களும் தேடிக்கவலையுற்றனர். பின் யாதவப் பிரகாசர் "ஐயோ பாவம்! எந்தக் காட்டு மிருகமோ இளையாழ்வாரை அடித்துக் கொன்றிருக்க வேண்டும்.
என் செய்வது? விதியை வெல்வது யாரால்  முடியும்??" என்று கோவிந்தனுக்கு ஆறுதல் கூறி, தன் எண்ணம் எப்படியோ ஒருவழியாக  நிறைவேறியதை எண்ணி திருப்தி அடைந்தார். யாத்திரையையும் தொடர்ந்தார்.

 திக்கு தெரியாத காட்டினில், வழி கேட்பதற்கும் ஆளின்றி "நல்வழி பிறக்கும்" என்ற நம்பிக்கையில் கால்போன போக்கில் நடக்கலானார் பதினெட்டு பிராயத்தவரான இளையாழ்வார்.
பகல் முழுவதும் உணவின்றி வழிநடந்து களைத்திருந்தார். இனி இராப்பொழுதை எங்கே, எங்கனம் கழிப்பது? என்று கவலையும் உற்றார்.

"ஆவார் ஆர் துணை? என்று அலைநீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிற விக்கட லுள்நின்று நான்துளங்கத்தே
வார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்துஅடி யேனொடும் ஆனானே."

அதாவது,
"காப்பார் ஒருவரும் அற்று இருக்கும் தனக்கு துணை ஆவார் யார்? என்று, நீரின் அலைகளையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப்போன்று, பிறவியாகிய பெருங்கடலுள் நின்று நான் நடுங்கிக்கொண்டிருக்க, திவ்யமான திருமேனியோடும் திருச்சக்கரத்தோடும் திருச்சங்கினோடும் அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான்"

 என்று நம்மாழ்வரின் நிலையில் இளையாழ்வார் வாடி இருக்க, உடனே ஓர் வேடன் தன் மனையாளுடன் வில்லோடு அவ்வழியில் அங்கு வந்து நின்றான். (வழியும் பிறக்கும்..)

இனி அமுதனார் இராமானுசரை போற்றிய அடுத்த இன்தமிழ் பாசுரத்தையும், அது தாங்கி வந்த பொருளை எளிய தமிழ் நடையிலும் காண்போம்.

"இராமானுச நூற்றந்தாதி"

பாசுரம்:7

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்சம் முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் *
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல் * எனக்கு இனியாது வருத்தமன்றே.

பொருள்:
வார்த்தைகளால் வருணிக்க முடியாதபடி பெரும் புகழையுடையவரும், வேதசாஸ்த்திர கலையில் தலை சிறந்தவரும், ஆத்மஞான அறிவிற்கு தடைக்கற்களாக இருக்கும் முக்குறும்புகளாக(தோஷங்களாக)  விளங்கும்,
கல்விச் செருக்கு, செல்வச் செருக்கு, குலச் செருக்கு ஆகிய படுகுழிகளைக் கடந்தவரும், என் நாதனாகவும் (ஆசார்யன்) இருப்பவர் கூரத்தாழ்வான்.
இப்பேர்ப்பட்ட மகானின் திருவடிகளை நான் அண்டியதன் பலனாக, சர்வ பாபங்களையும் போக்கும் வல்லமை உடையவரான எம்பெருமானாரின் திருக்கல்யாண குணங்களை வாயாரப்பாடும் பாக்கியம் வாய்க்கப்பெற்றேன்.
மேலும் இனி என் ஆத்ம ஸ்வரூபத்திற்கு (அறிவிற்கு) விரோதிகளாக உள்ள தீய வழிகளை எளிதாக கடக்கும் நிலை உண்டாகி விட்டது. ஆகையினால் இனிமேல் வரும் காலங்களில் எனக்கு குறையொன்றுமில்லை.

(“எம்பெருமானாரைத் துதித்து பாட தமக்கு போக்கியதை இல்லை” என்று பின் வாங்கப்பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான்(கூரத்தாழ்வான்) திருவடி சம்பந்தத்தை எண்ணித் தேறி "இஃது இருக்கும் பக்ஷத்தில் நமக்கு அஸாத்யமாகாது" என்று மேலும் பாடத் தயாராகிறார்.)

English Translation:
After taking refuge in our Kurattalvar, -his glory is beyond our words, -who takes us out of the piffalls of deceptive knowledge, I sing the praise of Ramanuja who lifts me above sin.  I have escaped from non-paths, now I have no regrets.

பாசுரம்:8

வருத்தும் புறவிருள் மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி * ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் * இராமானுசன் எம் இறையவனே.

பொருள்:

"பகவத்பாகவத" விஷயங்களைப் பற்றியல்லாத அஞ்ஞானத்தினால் விளையும் மற்ற சப்தாதி விஷயங்கள் ( அந்தரங்க மற்றும் லௌகீக விஷயங்கள்) அனைத்தும் 'புறவிருள்' எனப்படும். முதலில் அவைகள் சுகமளிப்பதை போன்று தோன்றினாலும் அதன் விளைவுகள் ஓர் நாள் துக்கத்தில் மட்டுமே கொண்டு போய்ச் சேர்க்கும்.

அத்தகைய அஞ்ஞான இருளில் (சப்தாதி விஷயங்களில்) பலரும் சிக்கித்தவிக்கின்றனர்.
"பொய்கை ஆழ்வார்"  நமக்கு உபகாரம் செய்து இப்படிப்பட்டதான இருளைப் போக்கும் வண்ணம்,

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று."

-என்று திருவந்தாதி எனும் விளக்கேற்றி வைத்தார்.
அதற்க்கு திரியாக வேதங்களின் சாரமான அர்த்தங்களையும், இனிய தமிழ்ச் சொற்களையும் ஒன்று சேர்த்து திரித்தார்.
(அந்த நிகழ்வை முழுவதும் படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும்:

தன்னம்பிக்கை கதை

தன்னம்பிக்கை கதை

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.

“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.

“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.

அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.

“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.

நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்,,,

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்,,,

1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.

2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
👍
5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
👍
6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
👍
7 கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
👍
8 காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9 பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

10 சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

11 சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

12 விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

13 இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14 கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

15 அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

16 யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

17 எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

18 அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

19 சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

20 வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

21 அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

22 எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

23 மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

24 பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

25 கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

26 வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

27 பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

28 வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

29 கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்!!!

சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள்

சிவலிங்கத்தின் மீதுள்ள 3 திருநீற்று சாம்பல் கோடுகள் மனிதனுக்கு நினைவுபடுத்துவது..
1)உன் உடல் ஒரு நாள் சாம்பல்..
2)உன் வாழ்கையில் கடந்துபோன கசப்பான விசயங்களை சாம்பல் செய்துவிடு.
3)எப்பொழுதும் சிவத்தை தவிர மற்றது எல்லாமே நிலையற்றது  என்ற மூன்றாவது சாம்பலை நினைவில் வைத்துகொள்..இப்படி இருந்தால் என்றும் உன் வாழ்வில் ஆனந்தம் .. இதுவே அதன் அர்த்தம்!!

சென்னை பள்ளிக்கரணையில் ராகு & கேது பரிகாரத் தலம்!

சென்னை பள்ளிக்கரணையில்
ராகு & கேது பரிகாரத் தலம்!

 அந்தக் காலத்திலேயே ராகு- கேது தோஷங்களுக்கான பரிகாரத் தலமாகத் திகழ்ந்த ஆலயம் இது என்று சென்னை பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயத்தைப் போற்றுகின்றனர் பக்தர்கள். இன்றைக்கும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், ராகு கேது தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும் என்பது ஐதீகம்!

   கிழக்கு பார்த்தபடி ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் ஸ்ரீசாந்த நாயகியும் ஒரே கருவறையில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். இங்கு, ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபட்டால், திருமண தோஷம்  நீங்கும். கல்யாண வரம் கிடைக்கும்; ஸ்ரீவிநாயகரையும் ஸ்ரீஆஞ்ச நேயரையும் வழிபட்டால், சனி தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்!

  ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீசரஸ்வதிதேவி, ஸ்ரீமகா லட்சுமி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் சாந்நித்தியத்துடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர். தவிர, அறுபத்து மூவருக்கும் கல் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது சிறப்பு!

  ஸ்தல விருட்சம்- வில்வம். அத்துடன் செண்பக மரம், வேம்பு, அரச மரம், மகிழ மரம், வன்னி மரம் ஆகியனவும் உள்ளன. இப்படி விருட்சங்கள் சேர்ந்திருப்பதைத் தரிசித்தால், நம் சந்ததியும் விருட்சம் போல் வளரும் என்பது உறுதி!

  கருணாமூர்த்தியாக ஸ்ரீஆதிபுரீஸ்வரரும் அன்பும் அரவணைப்பும் கொண்டவளாக ஸ்ரீசாந்தநாயகியும் அருள்பாலிக்கும் அற்புதமான இந்தத் தலம்,
  மேலும் நந்தியம்பெருமானுக்கு திருமணம் நடைபெறும் திருத்தலங்கள் மிகக் குறைவு. திருமழபாடி முதலான தலங்கள் போல் இங்கேயும் நந்திதேவருக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்!

 செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீசாந்தநாயகியையும் பிரதோஷம் முதலான புண்ணிய நாளில் ஸ்ரீஆதிபுரீஸ்வரரையும் வந்து வணங்குங்கள். ராகுகேதுவால் உண்டான தோஷங்கள் விலகி ஆனந்தமாக வாழலாம்!

நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரை.
மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை.

ரகசியமாக வைத்திருக்க வேண்டும்

ரகசியமாக வைத்திருக்க வேண்டும்

*இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை
ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்

கோவிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை கோவிலிலேயே விட்டு விடுவது சரியா?

கோவிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை கோவிலிலேயே விட்டு விடுவது சரியா?

கோவிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை கோவிலிலேயே விட்டு விடுவது மிகவும் தவறானது.

கோவிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு சமம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோவிலுக்கு வந்திருக்கிறோம், எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது. ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் என்ன?

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் என்ன?

வடஇந்தியாவில் செவ்வாய்க்கிழமையை மங்கலவாரம் என்று கூறுவது உண்டு. அந்த வகையில் மங்கல காரியங்கள், தெய்வ வழிபாடு மேற்கொள்ள இந்நாள் உகந்தது. தென்னிந்தியாவில் செவ்வாயோ வெறும் வாயோ என்ற வழக்கு உள்ளது. எனவே, அன்றைய தினம் தெய்வ வழிபாடு சிறந்தது எனக் கூறுவர். மேல்நோக்கு நாள், நல்ல நட்சத்திரம் இருந்து அமிர்தயோகமான செவ்வாய்க்கிழமையில் வீடு/மனை வாங்க முன்பணம் அளிப்பதுடன், ஒப்பந்தமும் போடலாம், வியாபாரம் துவங்கலாம், செங்கல் தொழில், கட்டிட கட்டுமானம் ஆகிய தொழில்கள் துவங்கவும் உகந்தது.
பொதுவாகவே, மருந்து உண்பதற்கும், ரத்த தானம் செய்வதற்கும், அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் செவ்வாய்க்கிழமை உகந்தது.
வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்று கூறுவர். அன்றைய தினம் இறைவனை வழிபட்டால் அனைத்து பலன்களும் கிடைக்கும். இறந்தவரை எழுப்புவிக்கும் சஞ்சீவி மந்திரம் அறிந்தவர் சுக்கிராச்சாரி என ஜோதிட கூறுகிறது. சூட்சும சக்தி உடையவராக சுக்கிரன் கருதப்படுகிறார்.
எனவே, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறைவனை வணங்கினால் காரிய சித்தி கிடைக்கும். தோஷக் குறைபாடுகளும் நிவர்த்தியாகும்.

மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது எனக் கூறுவது சரியா?

மாலை நேரத்தில் பிறருக்கு பணம், நகை வழங்கக் கூடாது எனக் கூறுவது சரியா?

அந்திவேளை, சந்திவேளையில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் அந்திவேளை என்பது உச்சி வெயில் காலம்; சந்திவேளை என்பது பகலும், இரவும் சந்திக்கும் மாலை/காலை நேரம். பொதுவாக இரவும், பகலும் இணையக் கூடிய காலத்தில் உடலியல் கூற்றுப்படி பிராண வாயு வெளிப்படுத்தும் விதம், உள்வாங்கும் விதத்தில் இருக்கும் என்பதால் மனம் நிலையாக இருக்காது. எனவே அந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை மேற்கொண்டால் இழப்புகள் ஏற்படும் என்ற காரணத்தை மனதில் கொண்டே முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்தனர். குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணை விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் செயல்பட்டனர். எனவே இரவு நேரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வதல் பல சிக்கல் ஏற்பட்டது. எவ்வளவு கொடுத்தோம் என்பதிலும் உறுதியற்ற நிலை இருந்திருக்கலாம்.
தற்போது மின்சார வசதி உலகம் முழுவதும் இருந்தாலும், மாலை 5.45 முதல் 6.30 மணி வரையிலான கால கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பது, பணம் கொடுப்பது, வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்ல பலனளிக்கும். இங்கே பணம் கொடுப்பது என்று நான் குறிப்பிட்டது ரூ.50, 100 கடனாக வழங்குவதை அல்ல. மாறாக பல ஆயிரங்களை முதலீடு செய்வதையும், கடனாக வழங்குவதையும், முன்பணமாக வழங்குவதையும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கூறியுள்ளேன். ஒரு சிலர் அந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விட்டால் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் எனக் கூறலாம். அதுபோன்ற சமயத்தில் இனிப்பு அல்லது வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அல்லது கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்ளலாம்.

திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

திருக்காளத்தி காளத்தீசுவரர்
திருக்கோயிலில் உள்ள சில
அற்புதமான ரகசியங்கள் ! ! !
ராகு, கேது கிரக தோஷம்,
சர்ப்ப தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
திருமணம் ஆகாதவர்கள்,
குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத
பிரச்சினையில் சிக்கி
திண்டாடுபவர்கள் போன்ற
பிரச்சனைகளுக்கு தீர்வாக
வழிபடக் கூடிய ஆலயமாக
இருப்பது ஆந்திர மாநிலம்
காளஹஸ்தியில் இருக்கும்
காளஹஸ்தீஸ்வரர் கோயில்
என்பது இந்து சமயத்தினரின்
நம்பிக்கை.
தல வரலாறு
திருக்காளத்தி காளத்தீசுவரர்
கோயில் கோபுரம்
சிவன் மீது மிகுந்த பக்தி
கொண்டிருந்த அந்த பாம்பு
பாதாளத்தில் இருந்து
மாணிக்கங்களை எடுத்து
வந்து சிவலிங்கத்திற்க
ு தினமும் பூஜை செய்தது.
பாம்பு பூஜை செய்து
முடித்த பின்னர் அங்கு வரும்
யானை, மாணிக்கங்களை
தனது துதிக்கையால்
அப்புறப்படுத்திவிட்டு
பூக்கள், தண்ணீர், வில்வ இலை
கொண்டு சிவனை
பூஜித்தது.
தான் வைக்கும்
மாணிக்கங்களை
தள்ளிவிடுவது யார் என்பதை
அறிய ஒரு நாள் அந்த பாம்பு
பூஜைக்குப் பின்னரும்
அங்கேயே காத்திருந்தது.
வழக்கம் போல் வந்த யானை,
மாணிக்கங்களை தள்ளிவிட்டு
பூஜை செய்தது. கோபம்
கொண்ட பாம்பு, யானையின்
துதிக்கை வழியாக அதன்
தலைக்குள் புகுந்து, யானை
மூச்சு விட முடியாதபடி
செய்தது. பரிதவித்த யானை
துதிக்கையால்
சிவலிங்கத்தை தொட்டு
வழிபாடு செய்துவிட்டு,
பாறையில் மோதி இறந்தது.
யானையின் தலைக்குள் இருந்த
பாம்பும் நசுங்கி இறந்தது.
இதேபோன்று, சிவன் மீது பக்தி
கொண்டிருந்த சிலந்தி ஒன்றும்
அதே சிவலிங்கத்தை வழிபட்டு
வந்தது. தனது உடலில் இருந்து
வரும் நூலினால் சிவனுக்கு
கோவில் கோபுரம், பிரகாரம்
கட்டி பூஜித்து வந்தது.
காற்றில் நூல் அறுந்து
போனாலும் மீண்டும்
கட்டியது.
ஒரு முறை சிலந்தி கட்டிய
நூல் கோபுரத்தை எரிந்து
சாம்பலாகும்படி செய்தார்
சிவபெருமான். கோபம் கொண்ட
சிலந்தி, எரிந்து
கொண்டிருந்த தீபத்தை
விழுங்க சென்றது.
சிலந்தியின் பக்தியை கண்டு
வியந்த சிவபெருமான்,
அதனிடம் என்ன வர வேண்டும்
என்று கேட்டார். மீண்டும்
பிறவாமை வேண்டும் என்று
வேண்டிய அந்த சிலந்திக்கு
முக்தி கொடுத்து தன்னுடன்
ஐக்கியமாக்கிக் கொண்டார்
சிவன். இதே போன்று, தன் மீது
கொண்டிருந்த அபரிமித
பக்தியால் இறந்து போன
யானை, பாம்பு
ஆகியவற்றுக்கும் முக்தி
அளித்தார் சிவன்.
ஸ்ரீ காளத்தீசுவரர்
ஸ்ரீ ஞானபிரசுனாம்பிக
ை அம்மன்
இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம்
தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு
லிங்கமாக காட்சியளிக்கும்
சிவனின் திருமேனியை
கூர்ந்து கவனித்தால், கீழ்
பாகத்தில் யானை தந்தங்கள்,
நடுவில் பாம்பு, பின்புறம்
சிலந்தி ஆகியவற்றை
காணலாம். இங்கு
எழுந்தருளியுள்ள சிவன்,
காளஹஸ்தீஸ்வரர் என்றும்,
அம்மன் ஞானபிரசுனாம்பிக
ை என்றும் அழைக்கப்படுகின்
றனர்.
பெயர்க் காரணம்
சீகாளத்தில் என்ற சொல்லில், சீ
என்பது சிலந்தியை
குறிக்கிறது. காளத்தி என்பது
காளம், அத்தி என இரு பெயர்
பெறுகிறது. இதில் காளம்
என்பது பாம்பினையும், அத்தி
என்பது யானையையும்
குறிக்கிறது. சிலந்தி,
பாம்பு, யானை ஆகிய உயிர்கள்
சிவலிங்கத்தை பூஜித்து
முக்தி பெற்றதால் அவற்றின்
பெயரால் இவ்வூர் சீகாளத்தி
எனப் பெயர் பெற்றது
என்கிறார்கள் சிலர்.
ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு
உருவானது என்பதற்கும் ஒரு
கதை சொல்லப்படுகிறது.
சிவபெருமான் ஆணைப்படி
பிரம்மன் கயிலாயத்தை படைத்த
போது அதில் இருந்து ஒரு
பகுதி பூமியில் தவறி
விழுந்து விட்டது. அந்த
இடமே சீகாளத்தி என்ற
இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி
என்கிறார்கள் சிலர்.
கோயில் அமைப்பு
திருக்காளத்தி காளத்தீசுவரர்
கோயில் வளாகம்
கோவிலின் உள் பிரகாரத்தில்
சிவனுக்கும், பார்வதிக்கும்
தனி சன்னதிகள் உள்ளன. காசி
விஸ்வநாதர், பால ஞானாம்பா,
நந்தி, விநாயகர்,
சுப்பிரமணியர்,
அஷ்டோத்ரலிங்கம்,
சுயம்புநந்தி, வாயுலிங்கம்,
கண்ணப்பன், சகஸ்ரலிங்கம்,
சனிபகவான், துர்கா, 63
நாயன்மார்களுக்கு தனி
சன்னதிகள் உண்டு.
ஞானபிரசுன்னாம்பிகை
சன்னதியை கடந்து
சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு
சென்றால் அங்கிருந்து
கண்ணப்ப நாயனார் மலை
சிகரத்தை காணலாம்.
தென் கயிலாயம் என்று
போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி,
பஞ்சபூத தலங்களில் வாயு
(காற்று) வுக்கு உரிய
தலமாகும். இங்குள்ள லிங்கம்
வாயு லிங்கமாகும்.
இன்றைக்கும் காற்றுப்புக
முடியாத கர்ப்பக கிரகத்தில்,
சுவாமிக்கு ஏற்றி
வைத்திருக்கும் அகல் தீபம்
படிப்படியாக சுடர் விட்டு
மேலெழுந்து அங்கும், இங்கும்
அசைந்தாடுவது ஓர் அற்புத
நிகழ்ச்சியாகும்.
பாதாள விநாயகர்
கோவிலின் வெளிப்பிரகாரத்த
ில் பாதாள கணபதி கோவில்
உள்ளது. ஒரு சமயம் அகத்தியர்
சிவபெருமானையும்,
விநாயகரையும் வழிபட
மறந்தார். இதனால் விநாயகரின்
கோபத்தால்
ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி
ஓடும் பொன்முகலி என்ற
சொர்ணமுகி ஆறு
வற்றிவிட்டது. தன் தவறை
உணர்ந்த அகத்தியர் விநாயகரை
பூஜை செய்து வழிபட்டு
விநாயகரின் அருளுக்கு
உரியவர் ஆனார் என இக்கோவில்
தலபுராணம் கூறுகிறது.
காலப்போக்கில் விநாயகர்
கோவில் இருந்த பகுதியை
விட, அதை சுற்றியிருந்த
பகுதிகள் எல்லாம் உயர்ந்து
விட்டன. அதனால் விநாயகர்
கோவில் பாதாளத்திற்கு
போய் விட்டது. இதனால்
இங்குள்ள விநாயகர், பாதாள
கணபதி என்று
அழைக்கப்படுகிறார்.
படிக்கட்டுகள் வழியே 20 அடி
கீழே இறங்கிச் சென்று இந்த
விநாயகரை வழிபட வேண்டும்.
தோஷங்கள் விலக பரிகார
பூஜை
ஸ்ரீகாளஹஸ்தி,
காளஹஸ்தீஸ்வரர் கோவில்
ராகு மற்றும் கேது
கிரகங்களின் பரிகார
தலமாகவும் திகழ்கிறது.
ராகு, கேது கிரக தோஷம்,
சர்ப்ப தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
திருமணம் ஆகாதவர்கள்,
குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத
பிரச்சினையில் சிக்கி
திண்டாடுபவர்கள் இங்கு வந்து
ராகு மற்றும் கேது
சர்ப்பதோஷ நிவாரண பூஜை
செய்து கொண்டால்,
பிரச்சினையில் இருந்து
விடுபடுகின்றனர்.
பயண வசதி
ஆந்திர மாநிலத்தில்
திருப்பதிக்கு கிழக்கே 40
கிலோ மீட்டர் தொலைவில்
சென்னை செல்லும்
சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி
அமைந்துள்ளது.
சென்னையிலிருந்த
ு நேரடியாக இந்த ஊருக்கு
பேருந்து வசதியும்
செய்யப்பட்டுள்ளது.

நமக்கே தெரியாத 22 அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்

நமக்கே தெரியாத 22
அதிசயங்கள் நிறைந்த நமக்கு
தெரிந்த கோவில்கள்

1. ராமேஸ்வரம் ராமநாத
சுவாமி கோயிலிலுள்ள
உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன்
போன்ற தோற்றத்துடன் உள்ளார்.
இரு கரங்களைக் கூப்பி மான்,
மழுவுடன் உள்ளார். மான்
மழுவினை மறைத்து விட்டுப்
பார்த்தால் இந்த நந்தி அனுமன்
போன்றே காட்சியளிப்பார்.
2. மதுரை மீனாட்சியம்மன்
கோயிலின் கீழ் கோபுரத்தின்
நடுவிலிருந்து மேல்
கோபுரத்தை நோக்கி ஒரு
கோடு போட்டால், அது
சிவலிங்கப் பெருமான்
வழியாகச் செல்லும். அது
போல் வடக்கு – தெற்கு
கோபுரங்களுக்கிடையே
கோடிட்டுப் பார்த்தால், அது
சுந்தரேசர் சன்னதியை
இரண்டாகப் பகிர்ந்து செல்லும்.
இந்த அமைப்பு அக்கால
சிற்பிகளின் அபரிமிதமான
திறனை வெளிப்படுத்துகி
றது.
3. திருவண்ணாமலையில
ிருந்து 16 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ளது
தேவிகாபுரம். இங்குள்ள
பொன்மலைநாதர் கோயிலில்
அருள்பாலிக்கும்
கனககிரீஸ்வரருக்கு தினமும்
வெந்நீரில் அபிஷேகம்
செய்கிறார்கள். காலையில்
இரண்டு மணி நேரம் மட்டுமே
பூஜை செய்வார்கள்.
சிவராத்திரியன்று விசேஷ
பூஜைகள் உண்டு.
4. 108 திவ்யதேசங்களில்
முதன்மை ஆலயமான
ஸ்ரீரங்கத்தில் பள்ளி
கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப்
பெருமாளுக்கு அமாவாசை,
ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய
நாட்களில் வெந்நீரால்
அபிஷேகம் செய்வார்கள்.
வேறு எந்த திவ்ய தேசத்திலும்
இதுபோல் செய்வதில்லை.
5. கும்பகோணம் நல்லம்
தலத்திலுள்ள ஆலயத்தில்
நடராசர் சுயம்பு வடிவில்
காட்சி தருகிறார். இவர்
கையில் ரேகையும், காலில்
பச்சை நரம்பும் நன்கு
தெரிகின்றன. இவரை சற்று
தொலைவிலிருந்து
பார்த்தால் 50 வயது
முதியவர்போலவும்,
அருகிலிருந்து பார்த்தால் 30
வயது இளைஞர்போலவும்
காட்சி தருகிறார்.
6. விழுப்புரத்தையடுத்த
ரிஷிவந்தியத்திலுள்ள
முத்தாம்பிகை சமேத
அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின்
மூலவரான லிங்கத்திற்கு
தேனாபிஷேகம்
நடைபெறும்போது லிங்க
பாணத்தை நன்கு கவனித்துப்
பார்த்தால், அம்மன் தன் கையில்
கிளி வைத்துக் கொண்டு
நிற்பது போன்ற தோற்றத்தைக்
காணலாம். மற்ற நேரங்களில்
லிங்கம் சாதாரணமாகத்தான்
தெரியும்.
7. சோட்டானிக்கரை பகவதி
அம்மன் ஒரு நாளுக்கு மூன்று
விதமான ஆடைகள் அணிந்து
மூன்று வடிவங்களில் காட்சி
தருகிறாள்.காலையில்
வெண்ணிற ஆடையுடன்
சரஸ்வதி தேவியாகவும்; உச்சி
வேளையில் செந்நிற
ஆடையுடன் லட்சுமி
தேவியாகவும்; மாலையில்
நீல நிற ஆடையில் துர்க்கா
தேவியாகவும் காட்சி
தருகிறாள். இந்த மூவகை
தரிசனத்தைக் காண்பவர்கள்
நினைத்தது நிறைவேறும்.
8. அருப்புக்கோட்டை
அருகிலுள்ளது திருச்சுழி
என்ற ஊர். இங்குள்ள சிவன்
கோயில் காணப்படும் நடராசர்
பச்சிலை மூலிகையால்
ஆனவர்.
9. தஞ்சை அருகே தென்குடித்
திட்டையிலுள்ள
வசிஸ்டேஸ்வரர் ஆலய
கருவறை விமானம் சந்திர
காந்தக்கல் வைத்துக்
கட்டப்பட்டுள்ளது. இக்கல்
சந்திரனிடமிருந்து
கிரணங்களைப் பெற்று நீராக்கி,
அதை 24 நிமிடங்களுக்கு
ஒருமுறை மூல
லிங்கத்தின்மீது வீழச் செய்து
அபிஷேகம் செய்கிறது. நாம்
சாதாரணமாக கோயில்
உண்டியலில் பணம்,
ஆபரணங்களைத்தான்
காணிக்கையாகப்
போடுவோம். ஆனால், இலங்கை
கதிர்காம முருகன் ஆலயத்தில்
காணிக்கையாக காசோலை
(செக்) எழுதிப் போடுகின்றனர்.
10. உலகிலேயே மிகவும்
உயரமான முருகன் சிலை
மலேசியா நாட்டின்
தலைநகரான கோலாம்பூரில்
இருந்து 12 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது. 140 அடி
உயரம் கொண்ட சிலை இது.
தமிழக சிற்பிகள் 15 பேர்
சேர்ந்துதான் இச்சிலையை
உருவாக்கினார்கள்.
11. திருக்கண்ணமங்கை தலத்தில்
உள்ள தாயார் சன்னதியில் இரு
ஜன்னல்கள் உள்ளன. இதில்
தேனீக்கள் கூடு கட்டுகின்றன.
தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை சூரியன் வலப் பக்கம்
சஞ்சாரம் செய்யும் போது
தேனீக்கள் வலப்புற ஜன்னலில்
கூடு கட்டுகின்றன. ஆடி
மாதம் முதல் மார்கழி வரை
சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம்
செய்யும் போது இடப்புற
ஜன்னலில் கூடு கட்டுகின்றன.
இந்த அதிசயத்தை இன்றும்
காணலாம்.
12. புதுக்கோட்டை மாவட்டம்,
பரக்கலக் கோட்டை
ஆவுடையார் கோயில்
திங்கட்கிழமை மட்டுமே
திறந்திருக்கும். நள்ளிரவு
12.00 மணிக்கு மட்டுமே
வழிபாடு. பிற நாட்களில்
கோயில் மூடியிருக்கும்.
13. ராமநாதபுரத்திற்கு
வடகிழக்கே பத்து கிலோமீட்டர்
தூரத்திலுள்ள
திருப்புல்லாணி
ஆதிஜெகந்நாதப் பெருமாள்
கோயிலில் உள்ள அரசமரம்
விழுது விடுகிறது. அதன்
விழுது நிலத்தில் படிந்து
மரமாகி விட்டால் மூலமரம்
பட்டுப் போய்விடுமாம்.
பிறகு புதிய மரம் வளர்ந்து
விழுது விடுமாம். இப்படி ஓர்
அதிசய அரசமரம் தலவிருட்சமாக
பெருமை சேர்க்கிறது.
14. திவ்யதேசமான
திருவட்டாறில்
சயனக்கோலத்திலுள்ள
பெருமாளை மூன்று வாசல்
வழியாக தரிசக்க வேண்டும்.
முதல் வாசலில் சிரசை
தரிசிக்கலாம். இரண்டாவது
வாசலில் சரீர தரிசனம்
பெறலாம். மூன்றாவது
வாசலில் பாத தரிசனம்
பெறலாம். கேரள கோயில்
என்பதால் கமகமக்கும் சந்தனத்தை
அரைத்து பிரசாதமாகக்
கொடுக்கிறார்கள்.
இவ்வூருக்கு திருவட்டாறு
என்று பெயர்.
15. மயிலாடுதுறைக்கு
அருகிலுள்ள திருக்கடையூர்
அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயிலில் நடராஜர்
சன்னதிக்கு வலப்புறம்
குழந்தையை (முருகனை)
இடுப்பில் ஏந்திய நிலையில்
உள்ள பார்வதி அம்மனை
தரிசிக்கலாம். இந்த அபூர்வக்
காட்சி எங்கும் காணக்
கிடைக்காதது.
16. பெரும்பாலும்
கோயில்களில் எல்லாம்
வெண்கலம், பஞ்சலோகம் அல்லது
கற்சிலைகள் தான் இருக்கும்.
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில்
உள்ள கிருஷ்ணர், பலராமர்,
சுபத்திரா உருவங்கள்
மரத்தினால் ஆனவை. அரிசி,
பருப்பு, காய்கறிகளைச்
சேர்த்து சமைத்ததே
பிரசாதமாகப்
படைக்கப்படுகிறது. இதற்கு
பாக் என்று பெயர்.
17. பொதுவாக
ஆஞ்சநேயருக்குத் தான்
வடைமாலை சாற்றுவார்கள்.
ஆனால் திருவையாறு
தலத்தில் தெற்கு கோபுர
வாசலில் வீற்றிருக்கும்
ஆட்கொண்டேஸ்வரருக்கு
வடைமாலை சாற்றும் வழக்கம்
இன்றும் நடைபெறுகிறது.
சில சமயம் லட்சம் வடைகளைக்
கொண்ட மாலைகள் கூட
சாற்றப்படுவது உண்டு.
18. கிருஷ்ணகிரி மாவட்டம்
கோட்டையூரில்
நூற்றியொரு சுவாமி
மலைப்பகுதியில் உள்ள ஒரு
குகையில், சுமார் ஓரடி
உயரமுள்ள கல் அகல்விளக்கு
இருக்கிறது. இந்த விளக்கில்
இளநீர் விட்டு எரித்தால்,
விளக்கு அழகாக எரிகிறது.
இவ்வாறு விளக்கு
ஏற்றுபவர்களின் குடும்பத்
துன்பங்கள் நீங்கி,
மனஅமைதியும் சாந்தியும்
கிடைக்கிறதாம். இளநீர்
விளக்கை அது இருக்கும்
இடத்திலிருந்து சற்றே இடம்
மாற்றினாலும் அது
எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.
19. முருகப்பெருமானுக்கு
கட்டப்பட்ட முதல் திருக்கோயில்
என்ற சிறப்பை
புதுக்கோட்டைக்க
ு அருகிலுள்ள
ஒற்றைக்கண்ணூர் தலம்
பெறுகிறது. முதலாம் ஆதித்த
சோழன் இக்கோயிலைக்
கட்டியதாகக் கூறுகின்றனர்.
இக்கோயிலில் முருகனுக்கு
வாகனமாக யானை உள்ளது.
முருகப் பெருமான் ஒரு
திருக்கரத்தில்
ஜெபமாலையுடனும் மறு
திருக்கரத்தில்
சின்முத்திரையுடனும்
இருந்து அருள்பாலிக்கிறார்.
20. ஆந்திர மாநிலம் சித்தூர்
அருகே உள்ள விநாயகபுரம்
நவசக்தி விநாயகர் கோயிலின்
கருவறைக்குப் பின்புறம்
ஆவுடையார் லிங்கம் உள்ளது.
இந்த லிங்கம் காசியில் இருந்து
கொண்டுவரப்பட்டது. இந்த
லிங்கத்திற்கு அபிஷேகம்
செய்தால், காசியிலுள்ள
லிங்கத்திற்குச் செய்த பலனாம்.
இதற்கு பக்தர்கள் அனைவருமே
அபிஷேகம் செய்யலாம்.
இந்தக்கோயிலின் பாதிப்பகுதி
தமிழ்நாடு எல்லையிலும்,
மீதிப்பகுதி ஆந்திர
எல்லையிலும் உள்ளது.
21.எல்லாப் பெருமாள்
கோயில்களிலும் தீர்த்தம்,
துளசி, குங்குமம் மட்டும்தான்
கொடுப்பார்கள். ஆனால்
இவற்றுடன் மிளகும் சேர்த்துக்
கொடுப்பது கோவை
மாவட்டம் சூலூரில் உள்ள
திருவேங்கடநாதப் பெருமாள்
கோயிலில் மட்டும்தான்.
22. நெல்லையிலிருந்த
ு திருச்செந்தூர் செல்லும்
சாலையில்,
பாளையங்கோட்டையைக்
கடந்தவுடன் ஒரு பிள்ளையார்
கோயில் உள்ளது. இங்கு
தேங்காய் விடலை போட்டால்,
சிரட்டை (கொட்டாங்குச்சி)
தனியாகவும், தேங்காய்
தனியாகவும் சிதறும். இந்தப்
பிள்ளையார் சிரட்டைப்
பிள்ளையார் என்றே
அழைக்கப்படுகிறார்.

ஞானிகள்,

: ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.
[6:27 PM, 7/29/2016] Sudagar Woil: கோபுர தரிசனம் கோடி புன்னியம்

Sunday, July 24, 2016

🌺நாகம் சன்னியாசியான கதை🌺

🌺நாகம் சன்னியாசியான கதை🌺

🌷சாமியார் ஒருவரிடம் ஒருவன் வந்தான்.'சாமி, எனக்கு வாழ்க்கை அலுத்துப் போச்சு.மிச்ச காலத்தை இறைச் சேவையில் கழிக்கணும் என்றுதான் ஆசையா இருக்கு.எனக்கு நீங்கதான் சன்னியாசம் கொடுக்கணும்' என்றான்.

சாமியார் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.அருகில் இருந்த நாலு முழ காவித்துணியை எடுத்து நீட்டினார். 'சரி, இதைக் கட்டிக்கிட்டு எம்பின்னோட வா!' என்றார்.அவன் அரண்டு போனான்.

 'சாமி. நான் வரேன்னுதானே சொன்னேன். இப்பவே வரேன்னா சொன்னேன்?' என்றான்.'சரி எப்போ வர்றே.....???''எம் புள்ள படிச்சிட்டு பொறுப்பில்லாம இருக்கான் சாமி. அவனைக் கல்லாவில் உக்காத்தி வெச்சுத் தொழில் கத்துக் குடுத்திட்டு வந்திடறேன்' என்றான்.

சாமியார் சிரித்து விட்டு, 'சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்' என்று சொல்லிப் போய்விட்டார்.அடுத்த முறை வரும்போது அழைத்தார்.அவன் சொன்னான். 'சாமி. அவனுக்கு வியாபாரம் செஞ்சாலும் நுணுக்கமெல்லாம்தெரியலை.ஏமாத்திருவாங்க தோஸ்துங்க. கொஞ்சம் நிகா புரிஞ்சதும் வரேன்' என்றான்.

இவ்வாறாக ஒவ்வொரு முறையும், 'கல்யாணம் ஆகட்டும்', 'குழந்தை பிறக்கட்டும்' 'குழந்தையை பள்ளியில் சேர்க்கட்டும்' என்றே சொல்லி வந்தான்.ஒரு முறை சாமியார் வந்தபோது, வழக்கமாக வரும் அவனைக் காணவில்லை.விசாரித்தபோது, அவன் இறந்து விட்டான் என்று தெரிந்து கொண்டார்.

ஞான திருஷ்டியில், இறந்த பின்னாலும் அவன் அந்த வீட்டு கஜானாவின் பின்னால் உள்ள பொந்தில் பாம்பாகப் பிறப்பெடுத்து அதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டார்.

அவன் பையனைக் கூப்பிட்டார். 'அப்பா..... உன் வீட்டு கஜானாவுக்குப் பின்னால் ஒரு பாம்பு இருக்கிறதே, உனக்குத் தெரியுமா....???' என்று கேட்டார்.அவன் அரண்டு போனான். ஓடிப்போய் கஜானாவை நகர்த்திப் பார்த்தால், ஒரு பொந்து; அதற்குள் ஒரு பாம்பு. குச்சியை உள்ளே நுழைக்கவும் அது சீறியது.'

அப்பா, அதை அடிக்காதே......!!!' என்றார் சாமியார்.'ஏன் சாமி...???' என்று கேட்டான் மகன்.'அந்தப் பாம்பு வேறு யாருமில்லை. உன் தகப்பனார்தான்' என்றார் சாமியார்.அவன் ஒரு கணம் யோசித்தான். 'மெய்யாவா சாமி?' என்று கேட்டான்.'ஆமப்பா. உண்மையாகத்தான்.....!!!''சரிங்க சாமி. எங்கப்பாருன்னு சொல்றீங்க. அதை அடிக்கலை' என்றான் அவன்.'ஆனா குஞ்சு குளுவான்கள் நடமாடுற இடமில்லையா....???இதை ஒரு பானைக்குள்ளாற பிடிச்சுப் போட்டுக் குடுத்திடறேன்.எங்காச்சும் காட்டுப் பக்கம் கொண்டு போய் விட்டுறுங்க....!!!' என்றான்.அப்படியே செய்தும் அவர் கையில் மூடிய பானையைக் கொடுத்தான்.

சாமியார் காட்டு வழியே போகும்போது சொன்னார்:'அட மூடனே.....!!! நான் கூப்பிட்டபோதே என்னுடன் வந்திருந்தால், உனக்கு மரியாதை இருந்திருக்கும்.இப்போதும் நீ என்னுடன்தான் வருகிறாய், ஆனால், நீ பெற்ற மகனால் விரட்டியடிக்கப்பட்டு வருகிறாய்,இதுதான் உன் விதி......!!!

🌷'நீதி: இருக்கும்போது துறப்பதுதான் துறவு.இழந்தபின்னர் எஞ்சுவது வெறுப்பு.......!!!🌷

🌺இறைவனின் நினைவே இனிய காலை வணக்கம்🌺

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு

ஆன்மீகம் அறிவோம்
whatsaap group 
9787472712

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு


அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.Image result for வள்ளலார்

Tuesday, July 5, 2016

கனகல் மரம் - மஹா பெரியவர்

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள். 
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.
‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா. 
அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.
(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”