Sunday, January 17, 2016

தீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன? எண்ணையும் அதன் பயன்களும்

தீபம் ஏற்றுவதால் பயன்கள் என்ன?

எண்ணையும் அதன் பயன்களும்

விளக்கு எண்ணெய் – துன்பங்கள் விலகும்
பசுநெய் – சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் – பீடை விலகும். எம பயம் அணுகாது
ஆமணக்கு எண்ணெய் – தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் – பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது

தீபம் ஏற்றும் திசைகள்
கிழக்கு நோக்கி தீபமேற்ற – துன்பங்கள் நீங்கி பீடை விலகும்
மேற்கு நோக்கி தீபமேற்ற – கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்
தெற்கு நோக்கி தீபமேற்ற – பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற – திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.

விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள்
ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் – அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் – குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி – வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள். என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.

திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது


Ganesan Pondicherry

"காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?

"காசி" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலமாக மாறிப்போனது எதனால்..?



இதை முழுவதுமாக படியுங்கள்.
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.
ஓம் நமசிவாய!

கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை


கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை
1. முருகன் - வைகாசி விசாகம்
2. ஐயப்பன் - பங்குனி உத்திரம்
3. ராமர் - புனர்பூசம்
4. கிருஷ்ணன் - ரோகினி
5. ஆண்டாள் - ஆடிபூரம்
6. அம்பிகை - ஆடிபூரம்
7. சிவன் - திருவாதிரை
8. விநாயகர் - ஆவணி விசாகம்
9. பார்வதி - ஆடிபூரம்
10. அனுமன் - மார்கழி அமாவாசை
11. நந்தி - பங்குனி திருவாதிரை
12. திருமால் - திருவோணம்
13. பரதன் - பூசம்
14. லக்குமன் - ஆயில்யம்
15. சத்ருகன் - மகம்
16. நரசிம்மமூர்த்தி, ஸ்ரீசரபேஸ்வரர் - பிரதோச நேரம்
17. வீரபத்திரர் - மாசி மாதம் பூச நட்சத்திரம்
18. வாமனர் - ஆவணி திருவோணம்
19. கருடன் - ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம்
இதுவே கடவுள்களின் அவதாரம் செய்தது ஆகும்
33 கோடி தேவர்கள் யார் என்று பார்ப்போம்
1. ஆதித்தர் - 12 கோடி பேர்
2. உருத்திரர் - 11 கோடி பேர்
3.அஸ்வினி - 2 கோடி பேர்
4. பசுக்கள் - 8 கோடி பேர்
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்தட்டும் என்று சொல்வார்கள்
பூஜை என்றால் என்ன? பற்றிப் பார்ப்போம்
ஆத்ம சாதகன் அடைந்துவரும் மனபரிபாகத்தின் புறச்செயல் ஆகும் எல்லா கிரியங்களை நிறைவுபடுத்துவது ஆகும் ஆன்ம ஞானத்தை உண்டு பண்ணுவது ஆகும் இது பஞ்சபூதவகையை சேர்ந்தது ஆகும்
ஆறு கால பூஜை பற்றிப் பார்ப்போம்
1. உஷத்காலம் - காலை 6 மணி
2. காலசந்தி - காலை 8 மணி
3. உச்சி காலம் -பகல் 12 மணி
4. பிரதோசம் - மாலை 6 மணி
5. சாயரட்சை - இரவு 8 மணி
6. அர்த்தசாமம் - நடுஜாமம் 10.30 to 11.30 வரை
தீப ஆராதனை ( கிரியை) பற்றிப் பார்ப்போம்
1. கற்பூரம் - இறைவனோடு ( சிவனோடு) ஜீவன் ( ஆன்மா ( அ) உயிர்) இரண்டறக் கலக்கும் பக்குவநிலை உணர்தல் ஆகும் ஆன்ம ஜோதியில் கற்பூரம் கரைவது போல, சிவத்திலே ஜீவன் கரைந்து இரண்டற்ற தன்மை உண்டாக்குவது ஆகும் அத்தகைய நிலையை நாம் நமக்குள் அகக்கண்ணால் அடைய வேண்டி கற்பூர ஒளியை கையில் ஒற்றி கண்களில் வைத்துக்கொள்வது ஆகும் நமக்கு அஞ்ஞானத்தை ( அறியாமையை, இருளை) போக்கி மெய்ஞானத்தை ( ஞானஅறிவை, ஒளியை) அருளுவது ஆகும்
2. தேங்காய் - ஆன்மாவின் ( உயிரின் ) மும்மலத்தை ( ஆணவம், கன்மம், மாயை, ) நீக்கி பேரின்பம் பெறவேண்டும் என உணர்த்துதல் ஆகும் மேல்மட்டை - மாயா மலம், உரித்தெடுக்கும் நார் - கன்ம மலம், உள்ளே ஓடு - ஆணவ மலம், வெள்ளைப்பருப்பு - பேரின்பம் ( வீடுபேறு, முக்திபேறு ) ஆன்மா நீர் - ஆண்டவன் திருவருள் ஆகும்
பழம் - சாதகனின்( அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு மெய்ஞானத்தை அடைந்தவன்) நல்வினை பலன்களை குறிக்கும்
விபூதி ( திருநீறு) - பசு சாணத்தை சாம்பலாக்கி செய்யப்படுவது ஆகும் உடல் சாம்பல் ( அ) மண் ஆகலாம் என்ற தத்துவத்தை குறிப்பது ஆகும் திருநீறு உடலில் உள்ள அசுத்தம் அகற்றி நோய் கிருமிகளை போக்கி பிணி அகற்றும் மருந்து ஆகும் பதி,பசு,பாசம், என்ற மூன்றாக கோடுகளை படித்த வண்ணம் சைவமும், நின்ற வண்ணம் வைணவமும் இடும் உடம்பில் திருநீறு இடும் இடங்கள் 16 ஆகும் திருநீறை பேணி அணிபவர்களுக்கு எல்லா செல்வங்களையும் மேலும் எல்லா நலன்களையும் தர வல்லது திருநீறு ஆகும்
குங்குமம் - தேவியின் அருளையும், நிறத்தையும் குறிக்கும் நெற்றி புருவத்தின் மத்தியில் வைப்பார்கள் குங்குமம் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி இரத்தக்கொதிப்பு, இரத்த அழுத்தம் குறைவு, நினைவாற்றல் அதிகரிக்கும், வெப்பத்தைக் குறைக்கும் தன்மை குங்குமத்திற்கு உள்ளது
கோவிலில் வெள்ளை, சிவப்பு, கோடு இருப்பது எதற்கு? என்று பார்ப்போம்
வெள்ளைக்கோடு ( சுக்கிலம்) சிவமயம், சிவப்புகோடு ( சுரோணிதம்) சக்தியை குறிப்பது இரண்டும் சேர்ந்து உயிரம்சம் இரண்டும் சேர்வதால் தான் உடலும் அதனை தாங்கி இயங்கும் உயிரும் உண்டாகிறது ஆகும்
திருக்கோவில் செல்வது யான், எனது, என்ற செருக்கு போவதற்காகத்தான் மேலும் தாழும்தன்மை பெறுவதற்காகத்தான் இந்த கோவில் வழிபாடுகள் எல்லாம் நம்மை செம்மையாக்கி நல் வழி படுத்துவது ஆகும்

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி

பன்னீர் இலை விபுதி "
திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி

:திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி.

பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது.
எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.
திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள்.
முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும்.
பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும்.
அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார்.
இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார்.
மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.
இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார்.
அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார்.
சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார்.
அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது.
அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா!
நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும்.
பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம்.
இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும்.
முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும்.
பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...
1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2.கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில்,எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் .
3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்,ஆனால்
பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.
4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5.இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை .
6.இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை.
மீந்து போய் வீணானதும் இல்லை.
7.இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம்.
8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது .
ஆனால் ...
அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் . இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

பசுவும் புண்ணியங்களும்

பசுவும் புண்ணியங்களும்
* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.
* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.
* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.
* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.
பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
* `மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.
* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.
* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.
* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
* கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.
* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

12 சங்கராந்திகள்!

12 சங்கராந்திகள்!
சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே.அந்த வகையில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு.


1. தான்ய சங்கராந்தி(சித்திரை): சூரியன் மேஷராசியில் நுழையும் வேளையே தான்ய சங்கராந்தி.சூரியனை பூஜித்து தானிய தானம் செய்வதன் மூலம் ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள்.


2. தாம்பூல சங்கராந்தி (வைகாசி):சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளையே தாம்பூல சங்கராந்தி.இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெற்றிலை பாக்கு திரவியங்கள் வைத்து தம்பதிகளை பூஜித்து அதை அளித்தல் மகா புண்ணியம்.

3. மனோதர சங்கராந்தி(ஆனி): சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை மனோதர சங்கராந்தி இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெல்லம் வைத்து பூஜித்து தானம் அளித்தால் ஆசைகள் நிறைவேறும்.

4. அசோக சங்கராந்தி(ஆடி): சூரியன் கடகராசியில் நுழையும் வேளையை அசோக சங்கராந்தி என குறிப்பிடுவதுண்டு.இது விஸ்வத் புண்ய காலமாகும்.

5. ரூப சங்கராந்தி(ஆவணி): சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை ரூப சங்கராந்தி.இந்த வேளையில் சூரிய பூஜை செய்து பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து வேதியர்களுக்கு தானம் அளித்தால்,நோய்கள் அண்டாது.

6. தேஜ சங்கராந்தி (புரட்டாசி): சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளையை தேஜ சங்கராந்தி என்பர்.செந்நெல் அரிசி கொண்டு அதன்மேல் கலசம் வைத்து மோதகம் முதலானவை நிவேதித்து வேதியர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.

7. ஆயுள் சங்கராந்தி (ஐப்பசி): சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளையை ஆயுள் சங்கராந்தி என அழைப்பர். பசும்பால் வெண்ணெய் இவற்றை கும்பத்தில் நிரப்பி பூஜித்து தானம் கொடுப்பதால் நீண்ட ஆயுள் தங்கும்.

8. சவுபாக்ய சங்கராந்தி (கார்த்திகை):சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளையை சவுபாக்ய சங்கராந்தி நாளாக அழைப்பர்.சூரிய பூஜை செய்து வஸ்திரம் சார்த்தி வேதியர்களுக்குத் தானம் செய்ய வேண்டும்.இதில் உப்புதானம் (லவண பர்வதானம்)செய்தால் சகல சவுபாக்யங்களும் பெறலாம்.

9. தனுஷ் சங்கராந்தி (மார்கழி): சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் வேளை தனுஷ் சங்கராந்தி.இந்த வேளையில் தீர்த்தத்தை ஒரு கலசத்தில் நிரப்பி பூஜித்து அன்னதானம் இவற்றைச் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

10. மகர சங்கராந்தி (தை): சூரியன் மகர ராசியில் நுழையும் நாள்.இது தேவர்களுக்கு விடியல் காலம் தட்சிணாயன ஆறுமாத காலத்தில் கொடிய உருவம் கொண்டு மனிதர்களையும் புலிகள் உருவம் கொண்டு பசுக்களையும் வருத்திய காரணத்தால் தேவர்களின் வேண்டு கோளை ஏற்று ஈஸ்வரன் தை முதல் தேதியில் இத்தகைய துன்பங்களை நீக்கினார்.12 சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் புண்ணியம் வாய்ந்தது.சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.

11. லவண சங்கராந்தி(மாசி): சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளையை லவண சங்கராந்தி என அழைப்பர்.இந்த நல்ல நாளில் சூரிய பூஜை செய்வதன் மூலம் மோட்சம் அடையலாம்.

12. போக சங்கராந்தி (பங்குனி): சூரியன் மீன ராசியில் நுழையும் வேளையை போக சங்கராந்தி என அழைப்பார்கள்.பங்குனி மாத ஆரம்பம் முடிவு நாட்களில் சூரியபூஜை செய்து தனதான்யம், பசு முதலானவற்றை தானம் செய்வதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்.

பூஜைக்குரிய மலர்கள்

பூஜைக்குரிய மலர்கள்
`~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~``
ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா?

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? 

பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக்க வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்

எளிய கடன் நிவர்த்தி முறை

எளிய கடன் நிவர்த்தி முறை :-
கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.
(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.
(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.
(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.
(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.
(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)
(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.

குமாரஸ்தவம்

ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஓம் சுபநிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம:
ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஓம் கவிராஜ பதயே நமோ நம:
ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இஹபர பதயே நமோ நம:
ஓம் புகழ்முநி பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம:
ஓம் நயநய பதயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம:
ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
ஓம் இஷ்டி பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம:
ஓம் ஸுபோத பதயே நமோ நம:
ஓம் வ்யூஹ பதயே நமோ நம:
ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம:
ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம:
ஓம் ப்ராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம:
ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம:
ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம:
ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம:
ஓம் குமார பதயே நமோ நம:
---குமாரஸ்தவம் முற்றிற்று--

Saturday, January 9, 2016

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம்


வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்

ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்

ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்

கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

கருத்து: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:

தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

கருத்து: சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்

தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

கருத்து: வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

கருத்து: பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள – ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.


ஆன்மீக  சிந்தனையில்  அடியேன் 
Ganesan Pondicherry-