Monday, September 30, 2013

அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில்
மூலவர்:மணக்குள விநாயகர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:-
தீர்த்தம்:மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.
ஆகமம்/பூஜை:-
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:மணக்குளத்து விநாயகர்
ஊர்:புதுச்சேரி
மாவட்டம்: புதுச்சேரி
மாநிலம்:புதுச்சேரி
பாடியவர்கள்:
-
திருவிழா:
விநாயகர் சதுர்த்தி - இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். பிரம்மோற்ஸவம் - ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்
தல சிறப்பு:
விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. கிணற்றின் மீதுதான் மூலவர் : தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவ 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில் , புதுச்சேரி -605001
போன்:
+91-413-2336544
பொது தகவல்:
தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார்.
பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.
பிரார்த்தனை
எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.
நேர்த்திக்கடன்:
உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
தலபெருமை:
அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.
சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே.
தல வரலாறு:
பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் பிரபலமாயிற்று.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறத
இருப்பிடம் :
புதுச்சேரி நகரின் மத்தியில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
புதுச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
புதுச்சேரி
ஆதித்யா +91-413-221 4146 - 48
ஜெயராம் +91-413-221 4314-16
மாஸ் +91-413-420 7001-10
சத்குரு +91-413-233 9022
அண்ணாமலை +91-413-224 7001-10

தகவல்களுக்கு  தொடர்பு கொள்ள கணேசன் பாண்டிச்சேரி 9787472712

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
மூலவர்:வடபழநி ஆண்டவர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
தல விருட்சம்:அத்திமரம்
தீர்த்தம்:திருக்குளம்
ஆகமம்/பூஜை:சிவாகமம்
பழமை:500 வருடங்களுக்குள்
புராண பெயர்:-
ஊர்:வடபழநி
மாவட்டம்: சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள்.
தல சிறப்பு:
இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வட பழநி - 600 026 சென்னை.
போன்:
+91 44 2483 6903
பொது தகவல்:
சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழும் கோயில் உண்டியல் வருமானம் மிக அதிக அளவில் அரசுக்கு வரும் தலங்களில் இது முக்கிய தலம். ராஜகோபுரம் 72 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அண்ணாச்சாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கம் ஆகிய முருக பக்தர்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். தவிர வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கை இக்கோயிலின் மிக முக்கிய வருமானம் ஆகும்.பால் , சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.
தலபெருமை:
பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம்.சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு:
அண்ணாசாமி தம்பிரான்:இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்.தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்) இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர்.இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தினசாமி தம்பிரான்:இவரும் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர்.இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார்.அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.
பாக்யலிங்க தம்பிரான்:இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர்.இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது.இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது

மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

ஒரு வருடத்தை அயனம், பருவம், மாதம், பட்சம், வாரம், நாள், ராசி, திதி, யோகம், கரணம் என்றெல்லாம் கணக்கிட்டு ஒன்றுடன் ஒன்று சேரும்போதும், தனித்தனியே சில மாதங்களில் வரும்போதும் முக்கிய விரதங்களையும், வழிபாடுகளையும் தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு விரதங்களும், வழிபாடுகளும், விழாக்களும், பண்டிகைகளும் இம்மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமைகளும்
பெருமாளுக்கு உகந்தவையாக கொண்டாடப்படுகின்றன. திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது
பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும்
வழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது. ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக
சொல்லப்படுகிறது. புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!

சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரும், சுகபோக இன்பங்களை தருபவருமான சுக்கிரன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய கிரகம் ஆவார். ஒருவர் சாதாரண நிலையில் இருந்து திடீர் ராஜயோக பலன்கள், பதவி, பட்டம், வீடு, வாசல், பங்களா, கார், அதிகாரம் என்று அமையும்போது, ‘அவருக்கென்னப்பா.. சுக்கிர திசை அடிக்கிறது’ என்று சொல்வார்கள். அந்தளவுக்கு வினோதங்கள் புரிந்து ஒருவரது வாழ்வில் வளங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர் சுக்கிர பகவான்.

ஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், காதலின் ஏகபோக சக்கரவர்த்தி, சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். இவரை ‘சிற்றின்பத்தின் திறவுகோல்’ என்றுகூட சொல்லலாம். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு ‘களத்திர காரகன்’ என்ற அந்தஸ்து உண்டு. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

வழிபாடு - பரிகாரங்கள்

சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக!
Ganesan Pondicherry

சுக்கிரன் அம்சங்கள்

கிழமை    : வெள்ளி
தேதிகள்    : 6, 15, 24
நட்சத்திரம்    : பரணி, பூரம், பூராடம்
ராசிகள்    : ரிஷபம், துலாம்
உச்சம்    : மீனம்
நீச்சம்    : கன்னி
ரத்தினம்    : வைரம்
உலோகம்    : வெள்ளி
தானியம்    : மொச்சை
நிறம்    : வெண்மை
ஆடை    : வெண்பட்டு
திசா காலம்    : 20 ஆண்டுகள்

ராஐ யோகங்கள் தரும் உச்ச சனீஸ்வரன்

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனீஸ்வரரின் அதிகாரம்

எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள்.

உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார்.

இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.

வழிபாடு பரிகாரம்

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு, குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கி தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.கணேசன் பாண்டிச்சேரி 

திருவையாறு வடகயிலாயம் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிப்பு


தஞ்சை: திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் பஞ்சநதீஸ்வரர் கோயிலில் புராண கால சோழர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தஞ்சை மாவட்டம் திருவையாறில் வடகயிலாயம் என்று அழைக்கப்படும் உலோகமாதேவீஸ்வரத்தில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோயில் முதலாம் ராஜராஜனின் மனைவியின் பெயரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள கருவறை மற்றும் முகமண்டபத்தின் வெளியில் இரு புறங்களிலும் உள்ள சுவர்களில் காணும் தோரணங்களில் சிற்றுருவ புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றை வரலாற்று ஆர்வலர்கள் பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், மன்னை ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் கண்ணதாசன், புரவலர் ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இக்கோயிலில் கோஷ்டத்தின்மேல் உள்ள தோரணத்தில் பிச்சாடனர், காலசம்ஹாரர், லிங்கத்தை வழிபடும் அரசன் என பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் திரை செலுத்துவதற்காக சிற்றரசர் ஒருவர் திரைப்பொருளுடன் யானை மீது அமர்ந்து யானைகள் மற்றும் குதிரைகளுடன் காட்சி தருகின்றார். இச்சிற்பத்தை அடுத்த தோரண சிற்பத்தில் காளைமாடு தலையை மேலே உயர்த்திய நிலையில் உள்ளது. அதன்மீது கிரீட மகுடத்துடன் ஒருவர் அக்காளையின் திமில் மீது ஒரு கையை ஊன்றியும், ஒரு காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் வடிக்கப்பட்டுள்ளது. இது சூரிய குல தோன்றலான இச்சவாகுவின் மகனும், சோழர் குலத்தின் முன்னோனும் ஆகிய ககுத்தனின் உருவ சிற்பமாகும். இவரைப்பற்றி விஷ்ணு புராணத்திலும், திருவாலங்காட்டு செப்பேடுகளிலும் குறிக்கப்பட்டுள்ளதுடன் கலிக்கங்கத்துப் பரணி, கம்பராமாயணம், குலோத்துங்க சோழனுலா, ராஜராஜனுலா போன்றவற்றில் அசுரர்களுடன் சண்டை செய்வதற்கு இந்திரனை எருதாக்கி (காளை) அதன் திமில் மீது அமர்ந்து சண்டை செய்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இம்மன்னனை பற்றி சாரலா செப்பேட்டிலும், கன்னியாகுமரி கல்வெட்டிலும் குறிப்புகள் உள்ளன. தம் கணவனின் சூரிய குளத்தின் பெருமைகளை நிலை நாட்டும் வகையில் இச்சிற்பத்தை உலோகமாதேவியார் இக்கோயிலில் அமைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். http://aanmeegamarivom.blogspot.in/

நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி


சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும். சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மி முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம். மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம். ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும். நவராத்திரி விரதம் நவராத்திரி ஆரம்பம்: 16-10-12 செவ்வாய் பத்ரகாளி அஷ்டமி: 22-10-12 திங்கள் சரஸ்வதி, ஆயுத பூஜை: 23-10-12 செவ்வாய் ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்: காலை: 10.30-11.00, பகல் 12.00-1.00 மாலை: 4.30-6.00, இரவு 7.00-8.00 விஜயதசமி: 24-10-12 புதன்

வரலட்சுமி விரதம் : மாங்கல்ய தோஷம் நீக்கும் மகாலட்சுமி பூஜை


முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன. ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன. அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாளில் செய்யும் ஸ்வர்ண தன ஆகர்ஷ்ண தேவி பூஜை மிகவும் சிறப்பானது, பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். லட்சுமி பூஜை பற்றிய புராண கதை பத்ரச்ரவஸ் என்ற மன்னன், விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்து கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. ஏதோ பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா. லட்சுமி தேவி ஒரு இடத்திற்கு வருவது சாமான்ய காரியமல்ல. அரண்மனையை தேடி வந்தவளை விரட்டினாள் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு? மணி மகுடத்தையும், செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை விட்டு அகன்ற மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலைபோல் செல்வம் குவியத் தொடங்கியது. பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே ஒரு பானை தங்கமும் கரியாக மாறி விட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சியாமபாலா, வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து, அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இதனால் இழந்த செல்வங்களை மட்டும் இன்றி ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பூஜை செய்வது எப்படி? ஒரு மனையில் கோலம் போட்டு லட்சுமி சிலை அல்லது லட்சுமி படம் வைத்து மலர் மாலை, கதம்ப பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சில வீடுகளில் தங்கம் அல்லது வெள்ளியில் வரலட்சுமி உருவம் வைத்திருப்பார்கள். கலசத்தின் மீது இதை வைத்து பூஜை செய்வார்கள். அவ்வாறு வைத்திருந்தால் கலசம் வைத்து அதன்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனை திரவியங்கள் சேர்க்க வேண்டும் அல்லது கலசத்தில் அரிசி, பருப்பு நிரப்பியும் செய்யலாம். அந்த தேங்காயில் வரலட்சுமி உருவத்தை பொருத்தி அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்யலாம். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், சுண்டல், கேசரி போன்ற நைவேத்யங்கள் படைத்து கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும். உற்றார், உறவினர்கள், அக்கம் பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலா வல்லி மாலை, லலிதா சகஸ்ர நாமம், லட்சுமி காயத்ரி போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம். தீபாராதனை முடிந்ததும் வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழு தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும். பக்தி சிரத்தையுடன் நோன்பிருந்து வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

எடுத்த காரியத்தை ஜெயமாக்கும் பராசக்தி


இந்துக்களின் வழிபாடுகளில் முக்கிய இடம் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள், திதிகளுக்கு ஏற்ப விரதங்கள், பண்டிகைகள் வருகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி, ஆவணி மாதம் ஆவணி அவிட்டம். தை மாதம் தை அமாவாசை என்று கொண்டாடுகிறோம். அந்த வரிசையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே ‘நவராத்திரி’ விழாவாகும். இந்த நோன்பு விழா ஸ்ரீசக்கர நாயகியான அம்பாளுக்காக எடுக்கப்படும் விழா. நவமி முடிந்த அடுத்த நாள் தசமியாகும். நவராத்திரி நவமி முடிந்தவுடன் வரும் தசமி ‘விஜயதசமி’ என்று சிறப்பிக்கப்படுகிறது. நவராத்திரியில் துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாம் நாள் போரில் வென்று வெற்றிக் கொடி நாட்டினாள். இது நவமி திதியில் நிகழ்ந்தது. இது முடிந்த மறுநாள் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால் விஜயதசமி என்று வழங்கலாயிற்று. ‘விஜயீ’ என்றால் வெற்றி என்று பொருள். ‘விஜயீ பவ’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் வாழ்த்துவது இந்த நோக்கத்தில்தான். 9 நாள் நவராத்திரி விழா, விஜயதசமியுடன் சேர்த்து தசரா என்று அழைப்பார்கள். தசம் என்றால் பத்து. பத்து நாட்கள் நடக்கும் விழா என்பதால் தசரா என்று அழைத்தனர். இந்த பத்து நாட்களில் கடைசி மூன்று நாட்கள் மிகவும் விசேஷம். அதாவது அஷ்டமி, நவமி, தசமி ஆகிய இந்த மூன்று திதி களும் மிக முக்கிய மாக கருதி பூஜை செய்யப் படு கிறது. சாதாரண மாக நம் இல்லங் களில் எந்த நல்ல காரி யங்கள், விசேஷங் கள், முக்கிய பேச்சு வார்த்தைகளைகூட இந்த இரண்டு திதிகளில் செய்ய மாட்டோம். ஆனாலும் இறைவன் எல்லா திதிகளிலும் உறைகின்றான் என்பதை உணர்த்தவே இந்த நவராத்திரியில் இந்த திதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள், முக்கிய விசேஷங்களில் நாம் அஷ்டமி, நவமி திதிகளை விலக்கி வைக்கின்றோம். இந்த முறை காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு அப்படியே வழிவழியாக வருகிறது. ஆனால் அஷ்டமி, நவமி திதிகளில் ஆலய வழிபாடுகள் அதிகம். பைரவர், சரபேஸ்வரர், வராஹி போன்ற தெய்வங்களுக்கு அஷ்டமி திதியில் முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படுகின்றன. காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கும் இந்த இரண்டு திதிகளில் முக்கிய பூஜைகள் நடைபெறும். பொதுவாக பிறந்த நாள் கொண்டாடும்போது நட்சத்திரத்தை வைத்து ஜெயந்தி என்று கொண்டாடுவார்கள். ஆனால் ராமர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ராம நவமி என்றும், கிருஷ்ணர் பிறந்த தினத்தை அவர் பிறந்த திதியின் பெயரால் ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம். இதன்மூலம் இந்த திதிகளும் சிறப்பு பெறுகிறது. ஆதி சக்தியாம் அம்பாளை வணங்குவதற்கு ஒன்பது இரவுகளை முன்னோர்கள், மூத்தோர்கள் தேர்வு செய்தனர். இதற்காக புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஒன்பது நாட்களை கணக்கிட்டனர். காரணம் இரவுக்கு அதிபதி சந்திரன், மேலும் அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்பிறையில் இருப்பதாகவும், அம்பாளின் அம்சமாக சந்திரன் திகழ்வதாலும் இந்த வழிபாட்டை மேற்கொண்டனர். இந்த காலகட்டத்தில் அம்பாளை வணங்குவதால் நம் அறியாமை எனும் இருள் நீங்கி பக்தியும், புத்தியும், ஞானமும், செல்வமும் ஒருங்கே வந்து சேரும். நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் மட்டுமின்றி எல்லா கோயில்களிலும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் இருக்கும். அம்மன், அம்பாள் ஸ்தலங்கள், நவதிருப்பதிகள், திவ்ய தேசங்கள் போன்றவற்றில் உற்சவங்களும், பிரம்மோற்சவங்களும் நடைபெறும். அம்பாள் தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்சத்தில் அலங்கார ரூபிணியாக அருள்பாலிப்பாள். கவுரி அம்மனாகவும், சரஸ்வதியாகவும், பத்மாசினியாகவும், மகேஸ்வரியாகவும், ராஜராஜேஸ்வரியாகவும், மீனாட்சியாகவும், காமாட்சியாகவும், அன்னபூரணியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் வலம் வருவாள். நவராத்திரியில் வரும் நவமி மகா நவமி என்றும் ஆயுத பூஜை என்றும், சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிறிய கடை முதல் பெரிய தொழிற்சாலைகள், கல்வி கூடங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். புத்தகங்கள், நோட்டு பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து மாணவர்கள் வணங்குவார்கள். எல்லா துறைகளில் இருப்பவர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் பொருட்களை வைத்து வணங்குவார்கள். இயந்திரங்களுக்கு மாலை அணிவித்து பொட்டு வைத்து தமக்கு வாழ்வளிப்பதற்காக அதற்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள். லாரி, பஸ், கார், பைக், சைக்கிள் முதற்கொண்டு எல்லா வாகனங்களுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு திருஷ்டி கழித்து, எலுமிச்சம்பழத்தில் ஏற்றி வாகன ஓட்டத்தை தொடங்குவார்கள். இதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். இன்றைய தினம் புதிதாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள், புதுக்கணக்கு ஆரம்பிப்பார்கள். ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். ஒப்பந்தங்கள் போடுவார்கள். இயல், இசை, நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வணங்குவார்கள். அவரவர்கள் சார்ந்துள்ள தொழில்களில் இன்றைய தினம் புதிதாக ஆரம்பம் செய்வார்கள். இதற்கு காரணம் இது வெற்றியை குறிக்கும் தினம். ஆகையால் எல்லா செயல்களும் வெற்றி பெற வேண்டும் என்று பூஜை செய்து வேண்டிக் கொள்வார்கள். நவராத்திரியின் தத்துவமே ஆதிசக்தியான அன்னை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறாள் என்பதே. எல்லா உருவங்களிலும் அவளின் சக்தி வெளிப்படுகிறது என்பதை உணர்த்தவே பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து வணங்கும் கலாசாரம் ஏற்பட்டது. இந்த ஒன்பது இரவுகளிலும் தனி சக்தியாக விளங்கும் ஜெகன்மாதா பத்தாம் நாள் விஜயதசமியன்று ஈஸ்வரனை வணங்கி சிவசக்தி சொரூபமாக, ஐக்கிய ரூபிணியாக, அர்த்த நாரீஸ்வரராக உருவெடுக்கிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு. நவராத்திரியிலும் ஆயுத பூஜையன்றும் விஜயதசமியன்றும் அன்னை பராசக்தியை வணங்குவோம். அவள் அருள் பெறுவோம்.

பரணி ராசியில் பிறந்தவர்களின் பாரிகார தலம்


பரணி ராசியில் பிறந்தவர்களின் பாரிகார தலம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:அக்னீஸ்வரர் உற்சவர்:- அம்மன்/தாயார்:சுந்தரநாயகி தல விருட்சம்:வன்னி, வில்வம் தீர்த்தம்:- ஆகமம்/பூஜை:சிவாகமம் பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்:திருநல்லாடை ஊர்:நல்லாடை மாவட்டம்: நாகப்பட்டினம் மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: - திருவிழா: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, வைவெள்ளி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம். கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு. தல சிறப்பு: இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், நல்லாடை-609 306 தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 4364-285 341,97159 60413,94866 31196 பொது தகவல்: பரணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:நன்றி உணர்வு கொண்டவர்களாகவும், எதிரிகளைச் சுலபத்தில் வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பர். தானதர்மங்களைச் செய்யும் இயல்பால் மற்றவர்கள் இவரைப் பாராட்டுவர். அதிர்ஷ்ட தேவதையின் அருளால் தொட்டவையாவும் துலங்கும். தன்னுடைய தேவைகளைத் தானே சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் பெற்றிருப்பர். இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் கி.பி. 1146-1163 வரை இப்பகுதியை ஆட்சி செய்தான். அவனது காலத்தில் தான் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவனது பிரதிநிதியான சோமாந்தோழர் என்பவனால் பிற பகுதிகள் கட்டப்பட்டுள்ளது.இதற்கான கல்வெட்டு கருவறையின் கிழக்கு சுவற்றில் இன்றும் காணப்படுகிறது. தற்போது நல்லாடை என வழங்கப்படும் இவ்வூர் முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத்திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடந்துள்ளது. திருவாதிரையின் போது மாணிக்கவாசகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வந்துள்ளனர். இக்கோயிலில் காசிபன் கூத்தனான மும்முடி சோழபட்டன் என்பவன் தலைமையில் ஊர்சபை கூடி கோயிலை நிர்வகித்து வந்ததும், கோயிலில் திருவிளக்கு எறிக்கவும், இறைவனுக்கு நைவேத்தியம் செய்யவும் மன்னன் உபயமாக நிலம் கொடுத்தது பற்றியும் இக்கல்வெட்டுகள் மூலமாக அறிய முடிகிறது. கோயில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன. பிரார்த்தனை பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தலபெருமை: கார்த்திகை மாத பரணி:பரணி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று விசேஷ வழிபாடு செய்வது சிறப்பு. பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கி அமைந்ததாகும். மேற்கு நோக்கிய கோயில்களில், முழு நம்பிக்கையுடன் செய்யப்படும் பிரார்த்தனைக்கு அதிக பலனுண்டு. இந்தக் கோயில்களில் இறைவன் மிகுந்த உக்கிரத்துடன் இருப்பார் என்பது ஐதீகம். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சுவாமி அக்னி சொரூபமாக உள்ளதால், அதனைத் தணிக்கும் வகையில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது சிறப்பம்சம். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆன நேர்த்திக்கடன்: பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இத்தலத்தில் ஹோமம் செய்து, சிவனுக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்கிறார்கள் அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்

அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்


திருவாதிரை நட்சத்திரம் அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:அபய வரதீஸ்வரர் உற்சவர்:- அம்மன்/தாயார்:சுந்தர நாயகி தல விருட்சம்:வில்வம்,வன்னி தீர்த்தம்:- ஆகமம்/பூஜை: பழமை:1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர்: ஊர்:அதிராம்பட்டினம் மாவட்டம்: தஞ்சாவூர் மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: - திருவிழா: பங்குனி உத்திரம் இத்தலத்தின் முக்கிய திருவிழா. தவிர திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, ஆருத்திரா அபிஷேகம். தல சிறப்பு: இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திறக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். முகவரி: திரு.உத்திராபதி அவர்கள் அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்-614 701 பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 99440 82313,94435 86451 பொது தகவல்: திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர். பிரார்த்தனை திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். நேர்த்திக்கடன்: சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தலபெருமை: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர். எம பயம் போக்கும் தலம்:தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது. தல வரலாறு: முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

Sunday, September 29, 2013

ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயம், வடக்கு கரோலினா


ஆலய குறிப்பு : வடக்கு கரோலினாவின் ப்ளூ ரிட்ஜ் மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயம். இக்கோயில் வேத சிவ ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. வேத ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட இக்கோயில் பக்தர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தில் சிவன் பிரதான தெய்வமாகவும், விநாயகர்,முருகன், துர்க்கை,நவகிரகங்கள் ஆகியன உ‌ப தெய்வங்களாகவும் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலய நேரம் : காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. இணையதளம் : http://srisomesvara.org/

ஸ்ரீ வரலக்ஷ்மி நரசிம்மர் ஆலயம், போலந்து


ஆலய வரலாறு : போலந்து நாட்டின் வார்சா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரலடசுமி நரசிம்மர் ஆலயம். போலந்தில் உள்ள 2 இந்துக் கோயில்களில் இது மிகவும் புகழ் பெற்றதாகும். 2009ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி திறக்கப்பட்ட இவ்வாலயத்தில் முக்கிய தெய்வங்களாக மகாலட்சுமியும், நரசிம்மரும் காட்சி தருகின்றனர். வர என்றால் கருணை என பொருள். கருணையே வடிவாக மகாலக்ஷ்மி அருள்பாலிப்பதை குறிக்கும் விதமாக இவ்வாலய அன்னை வரலக்ஷ்மி என்ற திருநாமத்தால் அழைப்படுகிறார். சனிக்கிழமைதோறும் மகாலக்ஷ்மி, நரசிம்மர், கிருஷ்ணர், சிவலிங்கம் ஆகியவற்றிற்கு மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்படுகிறது. இவ்வாலயத்தில் மகாலக்ஷ்மி, நரசிம்மர் தவிர பாபாஜி, கிருஷ்ணன், சிவலிங்கம் ஆகிய தெய்வங்களும் சிறிய விக்ரஹங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நரசிம்மரின் இடப்புறத்தில் இயேசு கிறிஸ்து, மேரி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய முகவரி : VARA LAKSHMI NARASIMHA TEMPLE, Grzybowska 37A, Warszawa, Poland. தொலைப்பேசி : +48 604 56 09 55 இமெயில் : warszawa@bhaktimarga.org இணையதளம் : www.varalakshminarasimha.pl

ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த உதாரா ஆலயம், போர்ச்சுகல்


ஆலய குறிப்பு : போர்ச்சுகலின் லிரியா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த உதாரா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பிரார்த்‌தனைகளும் பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் கீதை மற்றும் தியான வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. ஆலய முகவரி : RadhaKrishna Bhakta Udara Temple Rua Emídio Agostinho Marques n.446 Leiria, Portugal. தொலைப்பேசி : +351 91944 7953 / +351 24409 8195 இமெயில் : matajigitanjali108@gmail.com

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம், லண்டன்


ஆலய குறிப்பு : லண்டனின் புறநகர் பகுதியான ஸ்டோனிலிங் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம். இக்கோயில் ஸ்டோனிலிங் அம்மன் ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் வீற்றிருக்கிறாள். அருள் கடலாக விளங்கும் அன்னை ராஜராஜேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இவ்வாலயத்தில் முருகன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. ஆலய நேரம் : திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் பகல் 3 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. ஆலய முகவரி : Sri Raja Rajeswary Amman Temple, 4 Dell Lane, Stoneleigh, Surrey, London. தொலைப்பேசி : 0208 393 8147 இணையதளம் : http://www.rajarajeswary.com/

Saturday, September 28, 2013

கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசர் கோவில்


கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசர் கோவில் திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலை யானை மட்டும் தான் ``வெங்கடேசா'' என்பார்கள். மற்ற தலங்களில் அவர் தோன்றுவதை ``பிரசன்ன வெங்கடேசர்'' என்பார்கள். தமிழ்நாட்டில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்ற பெயரில் ஏராளமான வைணவத் தலங்கள் உள்ளன. அதில் தனித்துவம் கொண்டது, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம். இத்தலத்தில் உள்ள மூலவர் அப்படியே திருமலையில் உள்ள ஏழுமலையான் போலவே காணப்படுகிறார். இதனால் திருப்பதி தலத்தில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ... ... அவை எல்லாவற்றையும் இங்கு செய்யலாம் என்பது ஐதீகம். அதனால் தான் கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வழிபட்டால், திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட எல்லா பலன்களும் கிடைக்கும் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையானின் சிறப்பை புகழ்ந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்னமாச்சாரியார் பாடிய பாடல்கள், கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. இந்த வைணவ அடியார் 1400களில் சென்னை வந்தபோது கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேசரை வணங்கி மனம் உருகினார். இது ஒன்றே போதும்... திருப்பதிக்கும் இத்தலத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிபடுத்துவதற்கு. இந்த தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழ மன்னர்கள் இந்த கோவிலை கட்டியது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. அடையார் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீர்நிலைகள் சூழ்ந்த பகுதியில் மிக, மிக ரம்மியமான இயற்கை எழிலுடன் இருந்தது. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக இத்தலம் உள்ள பகுதியின் சுற்றுச்சூழலே இன்று மாறி, ஒரு சிறிய கோவில் போல காட்சி அளிக்கிறது. இந்த தலம் ஒரே ஒரு பிரகாரத்துடன் உள்ள போதிலும், இதன் கீர்த்தியும், இத்தலம் தரும் புண்ணிய பலன்களும் அளவிடற் கரியது. சென்னை நகர மக்கள் இதை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமே. இத்தலத்து மூலவரை எத்தனை முறை பார்த்தாலும் சரி, மனதில் சலிப்பே வராது. ஒவ்வொரு தடவை அவரை பார்க்கும் போதும் நம் மனதில் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும். இத்தகைய சிறப்புடைய பிரசன்ன வெங்கடேசர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசையை நோக்கியபடி உள்ளார். இவரைத் தொடர்ந்து அலர் மேல் மங்கை தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீசுதர்சன சக்கரத்தாழ்வார், ஸ்ரீ வேணுகோபால சுவாமி, நவக்கிரகங்கள், பக்த ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனியே 6 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த 6 சன்னதிகளிலும் வழிபாடு செய்தால் அரிய பலன்களைப் பெறலாம். அலர் மேல் மங்கை, ஆண்டாள் சன்னதியில் ஐதீகப்படி வழிபாடுகள் செய்யும் பெண்களுக்கு ஆசை பட்டப்படி அருமையான கணவர் அமையப் பெறுவார்கள். சுதர்சன சக்கரத்தாழ்வார் சன்னதியில் வியாழக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் எவ்வளவு பெரிய எதிரி நம்மை மிரட்டினாலும், சக்கரத்தாழ்வார் பார்வைப்பட்டு காற்றில் கரைந்து போய் விடுவார்கள். அதுபோல ஸ்ரீ வேணுகோபால சுவாமியும் சக்தி வாய்ந்தவர். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், ரோகிணி நட்சத்திர நாளில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால்....... வீட்டில் நிச்சயம் தொட்டில் ஆடும். பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக சன்னதி அமையப் பெற்றிருக்கும். ஆனால் இத்தலத்தில் நவக்கிரக சன்னதி இருப்பது மிக, மிக அபூர்வமாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், எத்தகைய கிரக தோஷம் இருந்தாலும் சரி, அவை நிவர்த்தியாகி விடும். இங்குள்ள பக்த ஆஞ்சநேயரும் பக்தர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த ஆஞ்சநேயருக்கு அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் நாட்களில் வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் நினைத்தது நிறை வேறும். மிகச் சிறந்த பிரார்த்தனை தலமான இத்தலத்தில் நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் வெற்றி உண்டாகும். பொதுவாக பெருமாளை வழிபட்ட பிறகு அவரது ஸ்ரீ சடாரியை நம் தலையில் ஏந்த வேண்டுëம். நம் தலை மீது ஸ்ரீ சடாரி வைக்கப்பட்டால் தான் நமது வழிபாடு முழுமை பெறும். இத்தகைய சிறப்பான இத்தலத்து ஸ்ரீ சடாரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம நவமி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, மாத சிரவணம், புரட்டாசி சனிக்கிழமைகள், ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. முக்கியமாக புரட்டாசி மாதம் வரும் 4 சனிக்கிழமையும் இத்தலத்தில் கோலாகல வழிபாடுகள் நடைபெறும். அன்றிரவு சுமார் 7 மணிக்கு மாட வீதி உலா நடை பெறும். இது மட்டுமின்றி சனிக்கிழமைகளில் இத்தலத்தில் அங்க பிரதட்சனம் செய்வதை பக்தர்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள். இங்கு அங்க பிரசட்சணம் செய்தால் நாம் விரும்பியதை பெருமாள் தருவார் என்பது ஐதீகம். திருப்பதிக்கு இணையாக இத்தலம் கருதப்படுவதால், அங்கு செலுத்த வேண்டிய பிரார்த்தனை, காணிக்கைகளை இங்கு செலுத்தி பயன் பெறலாம். திருப்பதியில் நடத்தப்படும் ``கல்யாண உற்சவம்'' மிகவும் புகழ்பெற்றது. ஆனால் ஆசைப்படும் எல்லாருக்கும் அந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்கான தேதி கிடைப்பது இல்லை. கல்யாண உற்சவம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று கவலைப்படுபவர்கள் இத்தலத் தில் வந்து கல்யாண உற்சவத்தை நடத்தினால் அதற்குரிய புண்ணிய பலன்கள் கிடைக்கும். இத்தலம் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், பிறகு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். இத்தலம் தொடர்பான மேலும் தகவல்களை இவ்வாலய மேலாளர் குப்புசாமியை 9803170178 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். கொம்புகளால் தாங்கப்படும் தலம்: கோட்டூர்புரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆட்சிகைக்குட்பட்டு, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மருந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் இப்பகுதி, ``சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து கோட்டூர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோடு+ஊர்=கோட்டூர். கோடு என்றால் தமிழில் 27 விதமான அர்த்தம் உள்ளது. அதில், ``விலங்குகளின் சொம்பு'' என்பதும் ஒரு அர்த்தமாகும். இந்த அர்த்தத்தில் தான் இத்தலத்தின் வரலாறு அடங்கி இருப்பதாக கருதப்படுகிறது. மகா விஷ்ணுவின் தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பன்றி உருவம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கு அடியில் கொண்டு சென்ற இரண்யாட்சன் என்ற அசுரனுடன் விஷ்ணு (வராக உருவில்) சுமார் 1000 ஆண்டுகள் போரிட்டு வென்றார் என்பது வரலாறு. பூமியை மீட்ட வராகர், அதை தன் கொம்புக்கு இடையில் வைத்து தாங்கிக் கொண்டு அருள் செய்தார். அப்படி வராகரால் தாங்கப்பட்ட புண்ணியத் தலமாக கோட்டூர்புரம் தலம் கருதப்படுகிறது. இத்தலத்தை ஆதி காலத்தில் கோட்டு இடை என்றே அழைத்தனர். கோட்டு இடை என்றால் வராகத்தின் கொம்புகளின் இடையில் உள்ள தலம் என்று அர்த்தமாகும். இந்த கோட்டு இடை நாளடைவில் கோட்டூர் ஆகியது. வெளியூர் மக்கள் அங்கு குடியேறியதால் அப்பகுதி விரிவடைந்து கோட்டூர்புரம் ஆனது. அடையார் சிஎல்ஆர்ஐ (லெதர் இன்ஸ்டிடியூட்) பின்புறம் இத்தலம் அமைந்துள்ளது. வராக அவதாரத்தில் விஷ்ணுவால் தாங்கப்பட்ட தலம் என்பதால், இத்தலத்தில் மனம் உருகி வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இத்தலத்துக்கு என இருந்த புஷ்கரணி, தீர்த்தங்கள் குடியிருப்புகளாகி விட்டன. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தலத்தின் விருட்சமாக மாமரம் இருந்தது. இப்போது தல மரம் இல்லை. புதிதாக தல மரம் ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இத்தலத்துக்கு சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செல்ல பஸ் வசதி உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து நிறைய பஸ்கள் இங்கு செல்கின்றன.

Thursday, September 26, 2013

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்


***அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். **** பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். ****கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர். ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர். மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர். பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர். உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர். அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர். சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர். சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர். விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர். அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர். கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர். மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர். பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர். உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர். திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர். அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர். சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர். பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர். உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர். ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்


மூலவர் முத்துக்குமாரசுவாமி உற்சவர் அம்மன் நடைதிறப்பு காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இடம் பண்பொழி முகவரி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலி மாவட்டம் தகவல் விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர். இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள். பிரார்த்தனை விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார். நேர்த்திக்கடன்: கோயில் பிரகாரங்களில் தீபம் ஏற்றுகின்றனர். தலபெருமை: இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது. மூக்கன்: இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது. பந்தளமன்னர் எழுப்பிய கோயில்: பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில், என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழை மட்டையில் கல் ஏற்றி இழுத்தவர்: பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் கோரினார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத் தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது. இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார். மலைப்பாதை: திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தைத் தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சன்னதியில் உள்ளன. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும். அஷ்டபத்ம குளம்: மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. உமையவளின் ஏழு சக்திகளே சப்தகன்னியர் ஆவர். விசாக நட்சத்திர கோயில்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர். மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார்: மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை ÷க்ஷõடச விநாயகர் என்பர். 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்னதானம்: ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை 6மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. திருவிழா சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம். போக்குவரத்து மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.

கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?


கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது.

கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?


கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன?


முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும். பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும். தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும். பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும். நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும். தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும். அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும். அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

கணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா?


எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும் போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும் போதும் கூட பிள்ளையார் சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்

கடவுளுக்கு எந்த எண்ணெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்?


* கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். * முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. * ருத்ராரி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் ஏற்றது. * தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம். * நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். * மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். * சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. * குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.

நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?


கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்


ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள் திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான். ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு வருடம் முழுவதும் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை.ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன. ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன், வெப்பம் காரணமாக ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையலறை) மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. திருமலையானுக்கு தினமும் ஒரு மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் இட்டு இதை மட்டுமே நிவேதிக்கிறார்கள். இது தவிர மேலே குறிப்பிட்ட எந்த பிரசாதமும் கர்ப்பகிரகத்திலுள்ள குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக் கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். உள் சாத்து வஸ்திரம் சாத்த இருபதாயிரம் ரூபாய் கட்டணம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சீனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு, 51 வட்டில் பாலும் சேர்த்து கரைத்து அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும். ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய். சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி என்கிறார்கள். இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை; மொத்தமாக சாத்தி அழகு பார்க்க நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் இங்கு மட்டும்தான் இருக்கிறது; வேறெங்கும் இல்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி. திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகள் மற்றும் மார்கழி மாத அர்ச்சனைகளில் வில்வ இலை உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாவாகவும் சிவாம்சம் பொருந்தி ஈஸ்வரனாகவும் சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சாமி தீட்க்ஷிதர் ஏழுமலையான் மீது சேஷ£சல நாமம் பாடலை வராளி ராகத்தில் பாடியுள்ளார். அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. ஏழுமலையான் கோயிலின் தல விருட்சம் புளிய மரம். எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார். பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. அதன் பிறகு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சிலர் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால், அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள், அந்தக் கோயிலின் நடைமுறைப்படி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்றும் கவலைப்பட்டார்கள்! திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு அணிவிக்கப்படும், பருத்தியால் ஆன உள்பாவாடை, கத்வால் என்ற ஊரில் தயார் செய்யப்படுகிறது. செங்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். இப்படித் தயாரிக்கும்போது அவர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்; மது, மாமிசம் உண்ண மாட்டார்கள். ஏழுமலையானை வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் பாவித்து பூஜை செய்கிறார்கள். ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் என்பது இந்த புஷ்கரணியின் நீராடல் சம்பிரதாயமாகும். கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர், பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தௌலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன. திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909வரையிலான கல்வெட்டுக்களில் 50தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்களும் தமிழிலேயே உள்ளன.

ஆன்மீகம் அறிவோம்..! ஜோதிட சாஸ்திரமும், ஆன்மிக வழிபாடுகளும் மனிதனின் பிரச்னைகளையும், சிக்கல்களையும், சங்கடங்களையும் தீர்க்கின்ற அருமருந்தாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம். அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது. அஷ்டமி சிறப்பு நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன. நவக்கிரக பைரவர் பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அஷ்டமி செவ்வாய் தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும். தேங்காய் மூடி விளக்கு ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும். பைரவ காயத்ரி மந்திரம் ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத். இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.