Thursday, December 11, 2014

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவர் 51 வழிபாடுகள்

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவர் 51 வழிபாடுகள்


1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும். 

3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.

5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.

6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

7. உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது.

8. தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

9. ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

10. பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

11. ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

12. புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.

13. ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.

14. ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

15. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் மலர் போட்டு வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

16. ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.

17. ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.

18. ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.

19. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.

20. ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.

21. ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

22. ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது.

23. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.

24. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.

25. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.

26. ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.

27. பிகல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.

28. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

30. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.

31. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

32. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

33. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.

34. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

35. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.

37. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.

38. குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.

39. அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.

40. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.

41. ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.

42. சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.

43. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.

44. ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.

45. ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.

46. ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.

47. ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

48. திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.

49. ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.

50. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.

51. சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறது. இத்தலத்தில் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துவது வழக்கம்.

நன்றி :- மாலைமலர்.

விநாயகி...



விநாயகி...

பிள்ளையாரின் பெண்பால் தான் இந்த விநாயகி! கணேசினி, வைநாயகி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுபவன், மன்னிக்கவும், அழைக்கப்படுபவள்!
சாக்த மரபில், எல்லாத் தெய்வங்களையுமே பெண்வடிவில் பார்க்கும் வழக்கமுண்டு. அதைக் குறித்த தெய்வத்தின் சக்தி என்பார்கள். சிவனின் மகேசுவரி, திருமாலின் வைணவி, குமரனின் கௌமாரி, வராகரின் வராகி.. இப்படி நீள்கிறது இந்தப் பட்டியல். இவ்வழக்கமே, எழுகன்னியர்...
(சத்தமாதர்) வழிபாட்டுக்கும் வழிவகுத்தது.
இத்தகைய பெண்வடிவ வழிபாட்டு முறையில், விநாயகனின் வடிவம் தான் “விநாயகி”!
பிள்ளையார் வழிபாடு, புத்த மற்றும் சமண சமயங்களிலும் வழக்கிலிருந்திருக்கிறது. அவற்றையே பிள்ளையார் வழிபாட்டின் மூல சமயங்கள் என்று சொல்வோரும் உண்டு. அதற்கேற்றாற் போல், சில சமண நூல்கள், தாம் வழிபடும் யோகினிகளில் ஒருத்தியாக “விநாயகி”யைச் சொல்கின்றன. சைன பிரபாசூரி என்பவரின், “விதிப்பிரபா” எனும் நூல் (பொ.பி 13ஆம் நூற்றாண்டு) இவளை விதந்து புகிழ்கிறது
“தர்ம கோச சமக்கிரக” எனும் புத்த நூல், அவளை “கணபதி கிருதயா ” என்கின்றது.
வடமொழிக் காந்த புராணத்தில், அம்பிகையைச் சூழ்ந்துள்ள அறுபத்துநான்கு யோகினிகளில் ஒருத்தியாக விநாயகி கூறப்படுகிறாள்.
சில்ப ரத்தினா என்ற சிற்பநூலில் (பொ.பி 16ஆம் நூற்றாண்டு) “சக்தி கணபதி” என்ற பெயரில், யானைத்தலை கொண்ட பெண் வடிவில் அவள் சித்தரிக்கப்படுகிறாள்.
விநாயகி பற்றி, மிக அரிதாகவே புராணக்குறிப்புகள் கிட்டுகின்றன. இது, பிற்காலத்திலேயே, பிள்ளையார் பெண் வடிவில் பிரபலமாகியிருக்கிறார் என்பதற்கு ஒரு சான்றாகும்.
எனினும், வடநாட்டில் கிடைக்கும் சில விநாயகி சிற்பங்களும், தமிழ் நாட்டில், சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், சிதம்பரம், செந்தூர், திருக்குறுங்குடி, பவானி போன்ற தலங்களில், சிற்ப வடிவில் சிரித்துக்கொண்டிருக்கும் விநாயகி வடிவங்களும், ஒருகாலத்தில், அவள் வழிபாடு மிகப்புகழ் பெற்றதாக இருந்திருக்கவேண்டும் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கின்றன
சீனாவில், கூட ஒரு கணேசினி சிற்பம் கிடைத்திருக்கிறதாம்!
எது எப்படியிருந்தால் என்ன, ஒருநாமம் ஓருருவம் இல்லாதானுக்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டும் நாம், இறைவனின் புதுப்புது வடிவங்களில் வியப்பும், புதுமையும் காண்பது வழக்கமான ஒன்றுதான்! இறைவனை விரும்பிய விரும்பிய வடிவங்களில் வழிபடத்தான் நம் நெறியில் பூரண எழுவரல் (சுதந்திரம்) வழங்கப்பட்டுள்ளதே!
முக்கியமான ஒன்று! என்னதான் புதுப்புது தெய்வங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அல்லது பண்டு தொட்டு நிலவிவந்த ஒரு தெய்வ வழக்கம் ஒரு பகுதியில் அருகிச்சென்றாலும், அது சைவ அல்லது வைணவ சமயப் பொதுநீரோட்டத்தில் தன்னைக் முற்றாகக் கரைத்து அழிந்துபோய், தனது சுவடுகளை மட்டும் விட்டுச்செல்வதை, காலம்காலமாக நம் வழிபாட்டுநெறியில் காணமுடிகிறது.
விநாயகிகளும், திருமாலின் அவதாரமாக மாற்றப்பட்ட புத்தர்களும், இன்றும் பல தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் காணக்கிடைக்கும் கேட்டை (மூதேவி)களும் இதைத்தான் நமக்கு சொல்லாமல் சொல்லி, புன்னகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நன்றி: நக்கீரன் இதழ்.

Wednesday, December 10, 2014

காரைக்கால் அம்மையார் புராணம்

ஓம் நமசிவாய 

காரைக்கால் அம்மையார் புராணம் 


"பேயார்க்கும் அடியேன்"

பிறந்த தலம் - காரைக்கால்
முக்தி தலம் - திருவாலங்காடு
திருநட்சத்திரம் -பங்குனி சுவா
தி


தந்தை தாய் இல்லாத பிறப்பிலியாகிய இறைவன் எம் அம்மை என்று சொல்லிய பெருமைக்கு உரியவர்

காரைக்காலிலே வணிகர் தலைவராய் தனதத்தர் என்பவர் இருந்தார் . அவருக்கு பெண்மகவு பிறந்தது அக்குலம் தழைக்க வந்த அம்மகவுக்கு புனிதவதி என்று பெயரிட்டனர் தளிர்நடை பயிலும் நாள் தொட்டு பரமன் மேல் ஆராக்காதல் கொண்டு விளையாடும் போதும் சிவநாமம் மொழிவார் திருத்தொண்டர்களை கண்டால் அன்போடு தொழுவார் இப்படி வளர்ந்து மங்கைபருவம் அடைந்தார்

நாகையில் வணிகர் குலத்தில் நிதிபதி என்பவர் தனது புதல்வர் பரமதத்தனுக்கு அம்மையாரை மணம் பேசி முடித்தனர் எல்லாவகை சீரோடும் சிறப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது
தனதத்தர் தனது சம்பந்தியின் அனுமதியோடு தன் மகளுக்கு தன் மாளிகை அருகிலேயே தனிக்குடித்தனம் வைத்தார் பரமதத்தன்

வாணிபம் செய்து தன் திருமனைவியாருடன் இனிது வாழ்ந்தார் அப்படி வாழுங் காலத்தில் வாணிபஞ்செய்யுமிடத்தில் இருந்தபோது அவரை காண வந்தவர்கள் இரண்டு இனிய மாங்கனிகளை தந்தார்கள் அவர் அவற்றை பணியாட்கள் மூலம் இல்லத்துக்கு கொடுத்தனுப்பினார் அம்மையாரும் அக்கனி களை வாங்கி வைத்தார் அவ்வமயம் ஒரு திருத்தொண்டர் அங்கு வந்தார் இறைஅடியவ ரைக் கண்டதும் அவருக்கு அமுதளிக்கும் பொருட்டு இருந்தார் அதற்கு சிறிது கால தாமதமாகும் என்று கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை படைத்தார் மூப்பும் பசியும் மிக்க அடியவர் உண்டு களித்து அம்மையாரை வாழ்த்திச் சென்றார்

பரமதத்தரும் உணவருந்தும் பொருட்டு உச்சி
வேளையில் வந்தார் அவருக்கு அம்மையார் அன்னத்தோடு பருப்பு நெய் மற்றும் மாங்கனி படைத்தார் அக்கனி உண்ட பரமதத்தர் அதன் சுவையில் விரும்பி இன்னொரு கனியை எடுத்து வருமாறு அம்மையாரிடம் கூறினார்
இதை கேட்டதும் அம்மையார் இன்னொரு கனியை அடியவருக்கு அளித்து விட்டோம் கணவர் கேட்கிறார் என்ன செய்வது என்று மனம் தளர்ந்தார் கலங்கினார் சிவபெருமானை நினைந்து தேவ தேவா உன்னடியார்க்கு ஒரு கனியைப் படைத்து விட்டேன் கணவர் இவ்வாறு மறு கனியை
கேட்பார் என்று எண்ணவில்லை என் செய்வேன் கருணைக்கடலே அடியார் அல்லல் போக்கும் அருட்கடலே என்று தம்மை மறந்து அவரை நினைந்துருகினார் இறைவன் திருக்கருணையினால் அவர் திருக்கரத்தில் அதிமதுரக் கனி ஒன்று வந்தது அதைக் கணவனுக்கு தந்தார் அவர் அதை உண்டு அமுதினும் இனிய சுவையை கண்டு
அம்மையாரிடம் நான் அனுப்பிய கனி இது அன்று. மூன்றுஉலகத்திலும் இப்படிப்பட்ட கனி கிடைப்பது அரிது இது எப்படி உனக்கு கிடைத்தது ? என்று கேட்டார்

அம்மையார் திருவருளை வெளிப்படுத்து வதும் தவறு பொய் உரைப்பதும் தவறு என்று முன்னிலும் கலங்கினார் முடிவில் உண்மையை உரைப்பது என்று நடந்ததை கூறியருளினார் திருவருளை தெளியாத பரமதத்தன் அம்மையாரை நோக்கி சிவபிரான் அருளால் வந்தது உண்மையா யின் இன்னும் ஒரு கனி தருவித்து கொடு
என்றார் . அம்மையார் அரனாரை சிந்தித்து இன்னொரு கனி தாரும் இல்லையேல் எனது மொழி பொய்மையாகும் அருட்கடலே எனை ஆட்கொள்ளும் என்று வேண்டினார்
மணிகண்டர் திருவருளால் மாங்கனி வந்தது அதை கணவன் கையில்தந்தார் அவர் வாங்கியதும் அக்கனி மறைந்தது

இச்செயல் கண்ட பரமதத்தன் நடுநடுங்கி அம்மையாரை தெய்வம் என்று எண்ணி தன் சிறுமையை நினைந்து வருந்தினான்
தெய்வமாகிய அவர் தனக்கு தொண்டு செய்வதா என்று கருதி பிரிந்து வாழ்வதே தக்கது என்று முடிவெடுத்தான் கடல் கடந்து வாணிபம் செய்வதாகக் கூறி புறப்பட்டார் தான் தெய்வமாக எண்ணி மனதால் வழிபடும்
அம்மையாருக்கு மன வணக்கஞ் செலுத்தி கலமேறி புறப்பட்டான்

அயல்நாட்டில் வாணிபத்தில் பெறும் பொருள் ஈட்டி தாய்நாடு வந்து காரைக்கால் வராமல் பாண்டிநாடு சென்று தங்கி பண்டங்களை விற்று பெரும் தனவந்தனான் அவ்வூர் வணிகன் தன் மகளை மணம் செய்து வித்தான் பரமதத்தன் தனது புது மனைவி யுடன் வாழ்ந்தாலும் காரைக்காலில் உள்ள அம்மையாரிடம் அச்சம் கொண்டே இருந்தார் குபேரன் போல் அளவற்ற நிதி குவிந்தது இளைய மனைவி கருவுற்று பெண் மகவைப் பெற்றாள் அக்குழந்தைக்கு புனிதவதி என்று அம்மையாரின் திருநாமம் சூட்டினார்

அங்கே காரைக்காலில் அம்மையாரின் உறவினர்கள் பரமதத்தன் பாண்டி நாட்டில் இருப்பதை அறிந்து அம்மையாரை அழைத்து கொண்டு கணவனுடன் சேர்க்கும் பொருட்டு சென்று ஒரு சோலையில் தங்கி அம்மையா ருடன் வந்திருப்பதை ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்கள் அச்செய்தி கேட்ட பரமதத்தன் தமது இளைய மனைவியை அழைத்துக் கொண்டு விரைந்து வந்தார் கணவனை கண்டு இளம் பெண்மான் போல் நின்ற அம்மையின் அடியில் பணிந்து உமது திருவருளால் வாழ்வேன் இக்குழந்தைக்கு உமது திருநாமம் சூட்டியுள்ளேன் அருள் செய்யும் என்றான்

அது கண்ட அம்மையார் ஒதுங்கினார் சுற்றத்தினர் பரமதத்த இது என்ன புதுமை மனைவியை வணங்குகிறாய் உன் செயலின் உட்பொருள் யாது என்று வினவினார்கள்
பரமதத்தன் ஐயன்மீர் இவர் மானுடமல்லர் இவர் நற்தெய்வமாகும் இதை நான் முன்னமே அறிவேன் அதனால் தான் என் மகளுக்கு இத்தெய்வத்தின் பெயரை சூட்டியுள்ளேன் ஆதலால் அடி பணிந்தேன்
நீவிரும் அடிபணியுங்கள் என்றான் சுற்றத்தினர் அதுகேட்டு அதிசயித்தனர்
அது கேட்ட அம்மையார் கொன்றை அணிந்த இறைவன் கழல் போற்றி ஒன்றிய சிந்தையுடன் உரைக்கின்றார் கணவனுக்காக சுமந்த இந்த அழகு தசைப்பொதியை கழித்து உன்பால் உள்ளவர்கள் போற்றும் பேய் வடிவம் எனக்கு அருளும் என்று இறைவனைத் துதித்தார் அப்போது அம்பலவாணர் திருவருளால் என்பு வடிவாகி விண்ணும் மண்ணும் போற்றும் பேயுருக் கொண்டார் மலர்மழை பொழிந்தது வான துந்துபி ஒலி உலகமுழுதும் நிறைந்தது சுற்றத்தினர் இந்த அற்புதம் கண்டு தொழுது அஞ்சி ஓடி விட்டார்கள் அம்மையார் ஒருங்கிணைந்த மெய்ஞான உணர்வுடன் உமாபதியை அற்புத திருவந்தாதி என்ற திருநூல் பாடித் துதித்தார் பொற் பதம் போற்றும் நற்கணங்களில் நானும்
ஒன்றானேன் என்று மகிழ்ந்தார் பின்னர் இரட்டை மணிமாலை என்ற பிரபந்தம் பாடியருளினார்

சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கயிலையை சென்று நேரில் தரிசிக்க நினைத்தார் அம்மையாரின் பேயுருக் கண்டு வியந்து கண்டவர்கள் அஞ்சி ஓடுகின்றார்கள் அவ்வுரு கண்டவர்கள் தாங்கள் நினைத்ததை கூறுகின்றார்கள் அதை கேட்ட அம்மையார் அண்டர் நாயகர் என்னை அறிவார் அறியாத இம்மாக்களுக்கு நான் எவ்வுரு கொண்டிருந் தாலென்ன என்றார் மனவேகத்தினும் மிக விரைவாக கயிலை அருகில் சென்றார் பரமன் இருக்கும் மலையை பாதத்தினால் மிதிக்க அஞ்சி தலையால் நடந்து சென்றடைந்தார் . அம்பிகை அது கண்டு அதிசயித்து தேவதேவரே தலையினால் என்பு வடிவுடன் வரும் இவ்வுருவின் அன்பு தான் என்னே என்று வினவினார்

உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை. பெருமை மிக்க இவ்வடிவத்தை நம்பால் வேண்டிப்பெற்றனள் என்று கூறி அருகில் வந்த அம்மையாரை நோக்கி பிறப்பில்லாத புண்ணியர் "அம்மையே " என்று இந்த உலகம் உய்ய அழைத்தருளினார்

அங்கணன் அம்மா என்று அழைத்ததும் அம்மையார் அப்பா என்று பங்கய பாதமலரின் மேல் பணிந்தார் அவரை நோக்கி இறைவர் " நம்பால் வேண்டுவது யாது? என்று அருள் புரிந்தார் அம்மையார் அடிபணிந்து கேட்கின்றார் அறவாழி அந்தணரே உம்மிடம் ஒருபோதும் நீங்காத இன்ப அன்பு வேண்டும் , பிறவாமை வேண்டும் ஒருக்கால் பிறப்புண்டேல் உம்மை ஒருபோதும் மறவாமை வேண்டும் என்று வேண்டினார் இறைவர் அவ்வரங்களை அளித்து தென் திசையில் தொண்டை வளநாட்டிலே பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் நமது திருநடனத்தினைக் கண்டு கொண்டிரு என்று கருணை புரிந்தார்

கயிலையில் பெருமானிடம் விடை பெற்று திருவாலங்காடு அருகில் வந்து கால் வைக்க அஞ்சி தலையால் நடந்து சென்று பெருமானின் ஊர்த்துவ தாண்டவக்காட்சியை கண்டு இன்புற்று மூத்த திருப்பதிகங்கள் இரண்டு பாடியருளினார் இறைவன் திரு நடனம் என்றும் காணும் பேற்றை நடராஜர் அருகில் அம்மையாரை நாம் காணலாம்

அம்மையப்பர் இல்லாதவரும் உலகுக்கே அம்மையப்பராகவும் உள்ள அரனார் அம்மையே என்று அழைக்க பெற்று அவருடைய திருநடனத் திருவடியின் கீழ் என்றும் இருக்க பெற்ற அம்மையாருடைய
பெருமையை அளக்க அகில உலகத்திலும் ஆளில்லை இதை சேக்கிழார் பெருமான்

மடுத்தபுனல் வேணியினார் அம்மையென மதுரமொழி
கொடுத்தருளப் பொற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்
எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றாரை
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆரளவா யினதம்மா


என்று கூறுகின்றார்
பெருமையை அம்மையார் விரும்பவில்லை
பெருமை தானே வந்து தான் சிறப்படையும் பொருட்டு அம்மையாரை சார்ந்தது என்ற அழகு உள்ளத்தை உருக்ககூடியது

அம்மை அடிமலர் வாழ்க
அம்மையாரின் அவர் பெற்ற அந்த நற்பேறு நமக்கும் கிட்டும் பொருட்டு அரனார் பாதம் பணிவோம்


போற்றி ஓம் நமசிவாய



திருச்சிற்றம்பலம்

http://aanmeegamarivom.blogspot.in/

ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்? ஜெய் சனிதேவா v

ஏழரை சனி" னா என்ன ? அதுக்கு என்ன செய்யனும்? ஜெய் சனிதேவா 


ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்து , முறுக்கிப் பிழிந்து, காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி

பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு.


மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. 

தாய் மூகாம்பிகை சிறப்பு…

தாய் மூகாம்பிகை சிறப்பு…

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார்.

கருடபகவானின் பெயர்

சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது. அவ்வளவு மகிமை வாய்ந்த அந்த இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது. அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார்.

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
மீனாட்சி அம்மன் திருக்கோவில் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக் கோபுரம் . 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் . 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் . 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக் கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.)

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும். 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின்றன.
மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போட்டது நினைவிருக்கலாம்.

ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும், அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட வேண்டும் என்பதை மதுரையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . அது மீனாட்சி அம்மன் கோவிலையும் அதைச்சுற்றி உள்ள வீதிகளையும் கருத்தில் கொண்டே.

கால பைரவ மூர்த்தியைப் போலவே க்ஷேத்திர பாலகரின் வழிபாடும் எதிர் காலத்தில் வளம் பெறும்

கால பைரவ மூர்த்தியைப் போலவே க்ஷேத்திர பாலகரின் வழிபாடும் எதிர் காலத்தில் வளம் பெறும் என்பது சித்தர்களின் வாக்கு. கால பைரவரின் வழிபாடு கால தேசங்களைக் கடந்த அனுகிரக சக்திகளை அளிக்க வல்லது என்னும் கோட்பாட்டை வலியுறுத்தவே சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார். ”பெத்த மனம் பித்து ….” என்றபடி பிள்ளைகள் பெற்றோர்களை மறந்து நன்றி இல்லாதவர்களாக எதிர்காலத்தில் மாறுவார்கள் என்பதை உரைப்பதற்காக நாய்களுடன் காட்சி தந்தார் எம்பெருமான்.

இதற்காகவே கால பைரவ மூர்த்தியும் நாயை வாகனமாகப் பெற்று நன்றி கெட்ட நிலை வராதிருக்க இறைவனை என்றும் மறக்காதிருக்க வரம் தரும் மூர்த்தியாக திருக்கோயில்களில் எழுந்தருளி உள்ளார்.
நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் இறையருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.
இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின் வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா? இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.
பைரவ மூர்த்தியின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாயின் மட்டும் எடுத்துக் கொண்டு விசாரம் செய்தாலே அதன் இரகசியத்தை உணர ரிஷிகளுக்கே எட்டு சதுர்யுக காலம் தேவைப்படும் என்றால் சாதாரண மனிதர்கள் அந்த ரகசியத்தை உணர எத்தனை யுகங்கள் ஆகும்?

Monday, December 8, 2014

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்


இந்த கட்டுரை , ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் . பல சூசகமான விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சப்த கன்னிகள் பற்றி ஒரு அருமையான நாவல் எழுதி இருக்கிறார். வெகு நாட்களுக்கு முன்பு வந்த , மிக சுவாரஸ்யமான நாவல்.

அதை அவர் எழுதி , லட்சக் கணக்கில் வாசகர்கள் படித்து இருந்தாலும், அதை எவ்வளவு பேர், சீரியஸாக எடுத்து வழிபாடு செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.

நம் வாசகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் , ஸ்ரீ வராஹி உபாசகர். மாதத்தில் , சில குறிப்பிட்ட தினங்களில் - வராஹி அம்மனை , நேரில் தரிசிப்பதாக கூறுகிறார். பல நேரங்களில் , மனம் குழப்பமடைந்து , முடிவெடுக்க தடுமாறும் தருணங்களில், இவரிடம் ஆலோசனை கேட்டு , பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்த அநேகம் பேர் - இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

கடவுள் இல்லை , கடவுளை நம்புபவன் முட்டாள் - என்று இவர்களிடம் சொன்னால், ஏதோ வேற்றுக்கிரக ஜந்துவைப் போல் ஒரு பார்வை பார்க்கிறார்கள். நல்லதுங்க தம்பி., உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்னு சொல்லிவிட்டு , அமைதியாக செல்கிறார்கள். இதே வராஹி மந்திரம் ஜெபித்து - வசியம், மாந்திரீகம் என்று ஒரு கூட்டமே பல அமானுஷ்யங்களை நிகழ்த்திக் கொண்டும் இருக்கிறது.

கடவுளை பார்த்தால் தான் நம்புவேன் என்று ஆசைப்படும் அன்பர்கள், இந்த மந்திரங்களை ஜெபித்து , உருவேற்றினால் - கன்னிமார்கள் பிரசன்னம் நிச்சயம் உண்டு.

ஸ்ரீ வராஹி மாலை என்று - தமிழில் 32 பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் , நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம் ஒன்று உண்டு. இதை முழு நம்பிக்கையுடன் பாடி , வராஹியை தரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், இவர்கள் யாரும் இதை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை.. !

வராஹி மாலைக்காக பலப்பல வருடங்களாக தேடிக்கொண்டு இருப்பவர்களும் உள்ளனர். நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது , நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். அபூர்வமான சில விஷயங்கள், எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், ஒன்று முயற்சி செய்யலாம்... நீங்கள் சந்திக்க விரும்பும் தேவதைக்குரிய காயத்ரியை , மனதுக்குள் உங்களால் முடிந்தவரை ஜெபித்துக் கொண்டு இருங்கள்.. ! அதன் பிறகு நீங்களே உணர்வீர்கள்.. !

இந்த கட்டுரை முழுக்க - அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.



ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.

தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

இந்திராணி:

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.

தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

ஆன்மீக சிந்தனையில் அடியேன்
Ganesan Pondicherry-

Monday, November 24, 2014

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

நட்சத்திர அதிசயங்கள்! கார்த்திகை

மாத்ரி மண்டல நட்சத்திரம்


நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!

மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!

ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!

கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!



அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா

ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும் சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.

வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.

இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!

மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.


விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.


அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!

மயில்வாகனன் முருகன்

முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து, “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!

புகழ், கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் வணங்கி மகிழலாம்!

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்




மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : பாகம்பிரியாள்
தல விருட்சம் : இலுப்பை
தீர்த்தம் : தேவதீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர்
ஊர் : திருச்செங்கோடு
மாவட்டம் : நாமக்கல்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: 


திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன் தாள்தொழுவர் வினையாய பற்றறுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம்.

போன்:

+91-4288-255 925, 93642 29181

பொது தகவல்:

சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன.

சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. இத்தலம் 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் ஏற, 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம்.



பிரார்த்தனை

கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

செங்கோட்டு மலை: திருச்செங்கோடு என்பதற்கு "அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், "செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.

இந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.

இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு.

தல சிறப்பு: சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.

ஒற்றுமை விரதம்: இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது.

நாக சிலை: 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர். பல வழக்குகள் இந்த படியில் தீர்க்கப்படுகிறது.


தல வரலாறு:

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் "அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் "இணைந்த வடிவம்' எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

பார்த்தஸாரதிப் பெருமாள் ஸ்தோத்திரம் இதை மனதார சொல்லி பார்த்தசாரதியின் அருளை பெறலாம்

பார்த்தஸாரதிப் பெருமாள் ஸ்தோத்திரம் இதை மனதார சொல்லி பார்த்தசாரதியின் அருளை பெறலாம் 

ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்

பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்

பொருள் : பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்த சாரதியை வணங்குகிறேன்.

1. ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம
நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்
சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ
ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)

பொருள் : கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேச்வரனின் நண்பர், சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி
முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்
பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த
வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)

பொருள் : பீஷ்மர், துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

3. லோகாவனாயாத்தலீலம் பூஜி
தானேக தேவேந்த்ர லோகைக பாலம்
ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு
தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்

பொருள் : உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய பல தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின் பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.

4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச
ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்
ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர
பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)

பொருள் : இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

5. வாமேகரே சாருசக்ரம்-வார
ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்
காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய
ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)

பொருள் : இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க
நாதே தேவேன நித்யம் ஸமேதம்
பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய
பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)

பொருள் : ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி
தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை
நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு
தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)

பொருள் : ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு பல நன்மைகள் நடக்கும்

அர்த்தமுள்ள ஆன்மிக கதை இதை உணர்ந்தால் நன்மையே

அர்த்தமுள்ள ஆன்மிக கதை இதை உணர்ந்தால் நன்மையே 

அம்மன் சந்நிதிகளில்ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையைஅலங்காரம் செய்வர். இதற்கு சாகம்பரி அலங்காரம் என்று பெயர்.சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நுõலான கனகதாராஸ்தோத்திரத்தில் கீர்தேவதேதி என்னும் பாடலில் சாகம்பரீதி எனக் குறிப்பிடுகின்றார்.ஸ்ரீ தேவீ பாகவதம் சாகம்பரி தேவியைப் பற்றி விரிவாகவே குறிப்பிடுகிறது. அந்த சாகம்பரி தேவியைப் பற்றிய அபூர்வமான விபரத்தைப் பார்க்கலாம். மன்னர் ஒருவர் நல்லவிதமாக ஆட்சி செய்து வந்தார். திடீரென்று ஒரு சமயம்.....அந்நாட்டில் பயிர் பச்சைகள் எல்லாம், பாதி, முக்கால் வளர்ந்ததும் கருகத் தொடங்கின. என்னென் னவோ முயற்சி செய்து பார்த்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை.மன்னர் வருந்தினார். வேத விற்பன்னர்களிடம் போய், துயர் தீர வழிகாட்டுமாறு வேண்டினார்.அதற்கு அவர்கள், மன்னா! சாகம்பரி தேவியைப் பூஜை செய்! அவள் தான் இந்த பயிர், பச்சைக்கெல்லாம் அதிகாரி. முழு மனதோடு அவளை வணங்கு ! அவள் அருள்புரிவாள். உன் துயரம் தீரும், என்று வழிகாட்டினார்கள்.

வழி தெரிந்த பின், மன்னர் சும்மா இருப்பாரா? மனம்முழுவதையும் சாகம்பரிதேவியின் திருவடிகளில் பதித்து தவம்செய்தார். தவத்தின்பயனாக...சாகம்பரிதேவி காட்சி அளித்தாள். அவள் திருவடிகளில் விழுந்து வணங்கிய மன்னர், தாயே! நீ இங்கிருந்து பயிர்களைக் காத்து நல்ல விளைச்சல் அளிக்க வேண்டும், என்று வேண்டினார்.சாகம்பரி தேவியும் சம்மதித்தாள். ஆனால், நிபந்தனை ஒன்றையும் விதித்தாள். மன்னா! நான் இங்கிருந்து உன் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். ஆனால், உன் நாட்டில் யாராவது இல்லாதது பொல்லாததுமாக கோள் சொன்னால், அங்கு நான் இருக்க மாட்டேன், என்றாள்.மன்னர் ஒப்புக் கொண்டார். நாடு வளம் பெற்று எங்கும் பயிர்கள் செழித்து வளர்ந்தன. ஆனால் ஒருநாள்... மன்னர் கனவில் தோன்றிய சாகம்பரிதேவி,உன் தேசத்தில் மக்கள் ஆங்காங்கே கோள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்... என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மன்னர், தாயே! யார் அது என்று சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டார்.அதற்கு சாகம்பரியோ,யார் என்பதை நான் சொல்லிவிட்டால், கோள் சொன்ன பாவத்திற்கு ஆளாகி விடுவேன். ஆகையால் சொல்ல மாட்டேன். என்று பதில் சொன்னாள். அதோடு கனவு கலைந்து விட்டது. கோள் சொல்லும் பாவத்திற்குப் பயந்து தெய்வமே மறுத்து விட்டது என்பதை இந்த சம்பவம்நமக்கு உணர்த்துகிறது. கோள்சொல்வதை கைவிட்டால் பெரும் பாவங்களும், பிரச்னைகளும் கூட நம்மை விட்டு விலகிப் போகும்

பைரவக் கடவுளின் மகிமை

பைரவக் கடவுளின் மகிமை

தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர்கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும் எல்லா கிரகணங்களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கினாலே போதும் ! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம் !

ஸ்ரீ பைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள்

குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீ பைரவக் கடவுளை வணங்கலாம் பாவ விமோச்சனம் பெறலாம்.

ஸ்ரீ பைரவரும், தமிழ் மாதமும்

தமிழ் மாதம் ஸ்ரீபைரவர்
1 சித்திரை ஸ்ரீ சண்டபைரவர்
2 வைகாசி ஸ்ரீ ருரு பைரவர்
3 ஆனி ஸ்ரீ உன்மத்த பைரவர்
4 ஆடி ஸ்ரீ கால பைரவர்
5 ஆவணி ஸ்ரீ சொர்ண பைரவர்
6 புரட்டாசி ஸ்ரீ வடுகநாத பைரவர்
7 ஐப்பசி ஸ்ரீ சேஷத்ர பால பைரவர்
8 கார்த்திகை ஸ்ரீ பீஷனண பைரவர்
9 மார்கழி ஸ்ரீ அசிதாங்க பைரவர்
10 தை ஸ்ரீ குரோதன பைரவர்
11 மாசி ஸ்ரீ ஸம்ஹhர பைரவர்
12 பங்குனி ஸ்ரீ சட்ட நாத பைரவர்

இத்தகைய தமிழ் மாதங்களில் ஸ்ரீ பைரவர் சுவாமியை அந்தந்த மாதத்திற்கு ஏற்றவாறு வழிபடுவது நல்ல பலன்களாக குவியும்.

நவ பைரவ கிரகணங்கள்

நவ கிரகணங்கள் ஸ்ரீபைரவர்
1 சூரியன் ஸ்ரீ சொர்ண பைரவர்
2 சந்திரன் ஸ்ரீ கால பைரவர்
3 செவ்வாய் ஸ்ரீ சண்ட பைரவர்
4 புதன் ஸ்ரீ உன்மத்த பைரவர்
5 குரு ஸ்ரீ அசிதாங்க பைரவர்
6 சுக்கிரன் ஸ்ரீ ருரு பைரவர்
7 சனி ஸ்ரீ குரோதன பைரவர்
8 ராகு ஸ்ரீ சம்ஹர பைரவர்
9 கேது ஸ்ரீ பீஷனண பைரவர்

Sunday, November 23, 2014

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.


நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்த இலங்கை வேந்தன் இராவணன், சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருக்கும் படிக் கட்டுகளில் படுக்க வைத்து, தான் அரியணையில் ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொன்றாக வரிசையாக மேல்நோக்கி படுத்துக் கொண்டிருக்கும். ஆனால், நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும் (தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால்), மேல் நோக்கிப் படுக்காமல் கீழ் (தரையை) நோக்கி குப்புறப்படுத்திருந்தது.

இதை கவனித்த நாரதர், இராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, இராவணன் சபைக்கு வந்து, ராவணன் நவக்கிரஹங்களை காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், ராவணா! உனது கட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில் கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா! என்று கூற, ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.

தனது பார்வையால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன் பிடிவாதமாக இருக்கனே, சனியும் படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனியை மாõர்பில் மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின் மீது விழுந்தது. அது முதல் ராவணனுக்கு அனர்த்தம் ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

Tuesday, November 18, 2014

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள்



சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்



3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும் 

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

Monday, November 17, 2014

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், ( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்).

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,
( மாங்காடுகாஞ்சிபுரம் மாவட்டம்).

அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் பிரதானமாக கருதப்படுகிறது. அபிசேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்ரத்துக்கும் செய்யப்படுகிறது.
ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது. மாங்காடு கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. இந்த ஈஸ்வரன், நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.


காஞ்சிபுரத்தைப் போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார்.
பிரார்த்தனை
இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் (அதாவது ஒரு மண்டலம் ) வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது.
அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே குழந்தைக்குதொட்டில் கட்ட அன்னை அருள்புரிவாள்.பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும். பல்லாயிரக்கணக்கோர் ஆறு வார வழிபாட்டால் பலனடைந்து வருகின்றனர். உத்தியோக உயர்வு , உடல் சார்ந்த குறைகள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்)புடவை சாத்துதல், பால் அபிசேகம்,அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
தலபெருமை:
ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரம் ஆதிசங்கரர் : இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும். இத் திருக்கோயிலில் ஸ்ரீ சக்ரத்திற்கே முக்கிய பிராதானம்.மூலிகைகளால் ஆனதால் அபிசேகம் கிடையாது.குங்கும அர்ச்சனை விசேசமானது.இந்த அர்த்தமேரு ராஜ யந்திரமாகும்.இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.இந்தர அர்த்தமேரு மிகப்பெரியது.இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள்.
அன்னையின் தவக்கோலம் : ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும் வலது காலை இடது காலின் தொடைக்கு மேற்புறமாயும் இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் அம்பாள் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ள மாங்காடு திருத்தலத்தில் கடும் தவம் புரிந்தார்.இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரியும் அற்புத காட்சி உற்சவ சிற்பமாக உள்ளது கறிப்பித்தக்கது.
நான்கு அம்பாள் தரிசனம் : மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள். இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
"ஒத்தக்கால்ல நின்னு சாதிச்சுட்டான்'னு சொல்வது ஏன்? : குழந்தைகள் அடம்பிடித்து எதையாவது வாங்கி விட்டாலும் சரி.., அவர்களே தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும் சரி..."ஒற்றைக்காலில் நின்று சாதித்து விட்டான்' என்று சொல்வது வழக்கம். இந்த பேச்சு வழக்கு காமாட்சியம்மனை மையப்படுத்தியே வந்தது. அம்பாளை, சிவன் பூலோகத்திற்கு அனுப்பியபோது அவள் இங்கு தவமிருந்தாள். ஆனால், சிவனது தரிசனம் கிடைக்கவில்லை. எனவே, தீயின் மத்தியில் நின்று பார்த்தாள். அதற்கும் அவர் மசியவில்லை. பின்னர் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று தவம் செய்ய ஆரம்பித்து, அவரது தரிசனம் பெற்றாள். இறைவனை கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என சிலர் விதண்டாவாதம் பேசுவர். இறைதரிசனம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஈசனின் மனைவியே அவரைப் பார்க்க ஒற்றைக்காலில் நிற்க வேண்டி இருக்கிறது என்றால், சாதாரண மானிடர்களான நமக்கு எவ்வளவோ பக்குவம் வேண்டும்!
பக்தனுக்கே முதலிடம்... : திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார். அதைக்கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றி தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார். அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார். திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார். எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள். அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.
கணையாழியுடன் பெருமாள்: சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார். அப்போது மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார். இவரை, "சீர் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.
நிறைமணி தரிசனம்: பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது. ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.
புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தபஸ் மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
முத்தேவியருடன் தங்கத்தேர்: தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி மூவரும் உலா வருகின்றனர். சப்தமாதர்களில் ஒருத்தியான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது. இதற்கு இடதுபுறம் தபஸ் காமாட்சி சன்னதி உள்ளது.
தல வரலாறு:
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். இத்தலத்தில் தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள். காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு "ஆதி காமாட்சி தலம்' எனப்படுகிறது.
அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம் பொதுவாக மூலஸ்தானத்தில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக (மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாக கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இங்கு தவம் புரிந்த அம்பாள், சிவனின் உத்தரவிற்கு பின்பு காஞ்சிபுரம் சென்றாள். அப்போது தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் சுற்றுப் பிரதேசங்களும் தீயின் வெம்மையால் வறண்டன. இந்நிலையில் தேசாந்திரம் செல்லும் போது ஆதி சங்கரர் மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் 8 மூலிகைகளால் ஆன ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்.இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என வரலாறு கூறுகிறது.
சித்திரைத் திருவிழா -10 நாட்கள் - இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர். இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் தீபாவளி, பொங்கல் நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விசேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்களில் இக்கோயில் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிப்பது சிறப்பு.-Ganesan Pondicherry-