சிலர் என்னிடம் இப்படி கேட்பது உண்டு ,இதை பற்றி அறிந்து கொள்ளும் முன் நாம் சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டால் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும் ....
முதலில் சித்தர்கள் என்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ளவேண்டும் ..
இவர்களை பற்றி முகநூலில் பல தகவல்கள் வந்து உள்ளது வந்த படி உள்ளது ,
எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால்..
"பிறந்தோம் வளர்ந்தோம் கடமைகளை செய்தோம் வாழ்த்தோம் என்றவர்கள் சாமானி" ,
"எல்லோரை போல நாமும் பிறந்தோம் ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சில அடையாளம்களோடு வளரவேண்டும் வாழவேண்டும் சில சம்பவம்களை சாதித்து புகழ் பெறவேண்டும் என்றவர்கள் அபிமானி"
"இந்த பூமியை விட்டு செல்லும் முன் சில அறிய தகவல்களை கண்டு அறிந்து உலகிற்கு எடுத்து சொல்லி பதித்து மக்களுக்கு பயன்படும்விதம் செய்யவேண்டும் என்றவர்கள் விஞ்ஞானி" ,
"உலகத்தின் சத் விவரங்கள் ,பிரபஞ்ச ரகசியம்கள் ,தெய்வ ரகசியம்கள் போன்றதை அறிந்தவன் ஞானி"
"தன்னை உணர்ந்து, தன்னுள் எல்லாம் இருப்பதை உணர்ந்து , தானே இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவன் மெய் ஞானி "
சித்தர்களை மெய்ஞானிகள் என்று சொல்லலாம்
அகத்தியர் நூல்களில் சித்தத்தன்மையை பற்றி உரைக்கும் பொழுது மனிதன் சித்தர்களாக மாற பல 10 ஆயிரம் ஜென்மங்கள் கடந்து காய சுத்தி, காய சித்தி பெறவேண்டும் என்கிறார்.
பொதுவாக சித்தம் என்பது மனதின் உச்சப்பட்ட விருப்ப செயல்பாடு /குறிகோள் எனலாம் ,
இது பலபிறவிகளாக நம்மில் கலந்து நம்முடன் வந்தபடி இருக்கும் கர்மம் சார்ந்தது
எனலாம்,
உதாரணமாக எல்லோருக்கும் சோதிடம் புரியாது ,
சிலருக்கு விஞ்ஞானம் புரியாது,
சிலருக்கு சத் விவரங்கள் புரியாது ,
ஒருவருக்கு புரிந்தது ஏன் மற்றவருக்கு புரியவில்லை என்று சிந்தனை செய்து பார்க்கும் பொழுது அவர்கள் பிறப்பில் ஜன்மாந்தர வாசனையாக எது உள்ளதோ அதுவே மீண்டும் தொடரும் ,
இதை அகத்தியர் மனிதனின் முளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு அந்த இடைவெளியில் தான் மனிதன் செய்யும் கர்மாக்கள் ,
பூசை பலன்கள் அவனுடைய அறிவு பலன்கள் அனைத்தும் அடைபட்டு இருக்கும் இவைகள் ஆன்மாவில் கலந்துவிடும் கர்மத்தின் பலனாக கிடைக்கும் மறு பிறவியில் ஆன்மாவில் உள்ள அணைத்தும் அவர்கள் சிரசில் புகுந்து கொண்டு மீண்டும் செயல்படும் என்று
நூல்களில் சொல்கிறார் .
இதை கவனிக்கும் பொழுது முற்பிறவியில் உண்டான அறிவு ,
செய்த பூசைகள் பலன் ,அவர்களின் நன்மை /தீமை என்கிற அவர்களின் கர்மா தான் அவர்களுக்கு தற்பொழுது உள்ள பிறப்பில் பட்டம், பதவிகளை தருகிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது .
உபாசகர்கள் சில நபர்களை பார்க்கும் பொழுது பெருமாளுக்கு மலர் கட்டி அலங்கரித்து அழகு பார்த்த கர்ம பலனால் மனிதர்களை
வசீகரபடுத்தும் பொன்னவனின் பொற்தொழிலை செய்கிறாய் என்பார்கள் ,
சில நபர்களை பார்த்து சுயநலம் இல்லாமல் உன் அறிவால் பலருக்கு நீ
நல்ல தீர்வுகளை தந்தால் இப்பிறவியில் நீதிபதியாக உள்ளாய் என்று சொல்வார்கள் ,
நல்ல கர்மாவால் நல்ல நிலையும் தீய கர்மாவால் வாழ்வில் மேன்மை பெறமுடியாமல் வாழ்வதை நாம் கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும் ....
சித்தத்தை வென்றவனை சித்தன் என்பார்கள் ,
அது எப்படி சித்தத்தை வெல்வது என்று சிந்தனை செய்தால் சில ரகசியம்
புலப்படும் ,
அது சலிப்பில் உண்டாகிறது ,ஆம் மனதின் வெறுமை தான் சித்தத்தை உணர செய்ய முடியும் .....
எப்படி?
பொதுவாக சித்தர்கள் என்றால் சித்து வேலை செய்பவர்கள் மந்திர தந்திர செயல்களில் கைதேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் என்றும் மனநிலையை மாற்றி மனிதர்களை குழப்பிவிடுவார்கள் என்ற சில மேலோட்டமாக சில கற்பனைகளை மனிதர்களிடத்தில் நாம் காண முடியும்.
இதன் காரணமாக கூட பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணமும் செய்வது உண்டு ,
மேலும் திருநீர் தரித்து சடை முடிகளை விரித்து பரதேசம் சுற்றிவரும் சிவ சிந்தனை நபர்களை முக்கண்ணன்,
பூச்சாண்டி என்று பிள்ளைகளிடம் கூறி இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தி பால பருவத்திலேயே இப்படி ஒரு பதிவை நம் பெற்றோர்கள்
மனதில் பதித்து விட்டார்கள் என்று சொல்லலாம் .
நான் சிறுவனாக இருந்த பொழுது என் பாட்டியுடன் நான் வெளியில் செல்லும் பொழுது சித்தம் கலங்கிய மனிதர்களை நான் கண்டு பாட்டியிடம் அவர்களை பற்றி கேட்க்கும் பொழுது தப்பு செய்தால் இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்பார்கள் .
கேளிக்கையும் ,பயமும், தவறான நம்பிக்கையும் நம்மிடையே நம் முன்னோர்களால் நமக்கு பதியப்பட்ட காலம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக ஆரம்பித்த காலம் ,சித்தர்களை பற்றிய இந்த தகவல் தொலைக்காட்சிகளினால் என்று சொல்லலாம் ,
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தன்னுடைய நாவல் ,வசனம் போன்றதை ,சின்னத்திரைக்கு தந்து தன்னுடைய சித்த அனுபவத்தை வைத்து எழுதிய நாடகம்கள் ,
மேலும் சித்தர்களால் தரப்பட்ட வைத்தியம் ,அவர்கள் சொன்ன சோதிடம்
போன்ற தகவல்களால் இன்று முக நூல், watsup போன்ற தொடர்புகளால் இன்று மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி கிடைத்து
அவர்களை பற்றிய சிந்தனைகள் விரிவதை நாம் காண்கிறோம் .
சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று என்று சொல்ல காரணம் ..
நாம் வாழ்க்கையில் நம்மை நாம் ரசிக்கும் ,அனுபவிக்கும் உணவு /பிரயாணம் /உடை /பேச்சு /களிப்பு கொண்டாட்டம்/காமம் /போதை போன்றதுகள் ஒரு கட்டத்தில் அலுத்து விடும் இப்படி அலுத்துவிட்ட விட்ட மனம் ஒரு வெறுமையில் உழன்று
நிரந்தர இன்பம் எதில் கிடைக்கும் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் பொழுது சித்தம் விழித்து கொள்ளும் இது ஒரு புறம்
மறு பார்வை
பழைய புண்ணிய கணக்கில் அருளும் சேரும்பொழுது சித்தம் வேகமாக விழித்து செயல்படும்
சித்தம் விழித்தால் ஏன் பசிக்கிறது என்ற கேள்வியே முதலில் எழும் ,
இவைகளுக்கு விடை தேடினால் சர்வ ஞானமும் புலப்படும்,
ஞானத்தின் துவக்கமே மனதில் இருந்து அடக்குமுறையில்
துவங்குவது,
மனதை அடக்க அடக்க ஆற்றலும் அதிகரித்து புரியாதவைகள் எல்லாம் புலப்பட ஆரம்பம் ஆகும் ...
இப்படி புரியப்பட்ட ஆன்மாக்களே சித்தர்கள் ஆக முதல் படி நிலை எனலாம் .
மனதை அடக்குவது என்பது சாதாரண செயல் இல்லை ,
மொழியினால் அடைபட்டு அவைகளுக்கு கட்டுப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்லலாம் ,
மேலும் வெறுமனையாக மனதை வைத்து இருப்பது சிரமமான காரியும் கூட .
இப்படி மனதை அடக்கி வைத்து இருப்பவர்களை அடைமொழிவைத்து அழைக்கப்பட்டனர் என்று சொல்லவேண்டும் ,
பாம்பாட்டி சித்தர் ,பிண்ணாக்கு ஈசர் ,சிவவாக்கியர் ,தேரையர் ,குதம்பை சித்தர் ,அகத்தியர் என்று அடைமொழியை தான் நம் அறிந்து அழைத்து வழிபடுகிறோம் ,இது இவர்கள் பெற்றோர் வைத்த பெயர் இல்லை ,
இவர்களின் மூலம் யாரும் அறியார் .
இவர்களை குருவாக வணங்குவது என்பதை விட யாரிடம் இவர்கள் நெருங்குவார்கள் என்ற தகவலை அறிந்து கொண்டோம் என்றால் நாம் எளிதாக இவர்களின் ஆசிகளை பெறலாம் .....
இது வசியம் அல்ல .....மந்திரம் அல்ல ....வழிபாட்டு முறையும் அல்ல
..அது என்ன ?
சித்தர்களுக்களின் மூலத்தை அறியமுடியாது காரண பெயரை தான் நாம் அறிந்து அழைக்கிறோம் ,
மனதை அடக்காமல் மனதின் அற்புதத்தை நாம் அறியமுடியாது ,வயிற்றை அடக்காமல் உடலை அறிய முடியாது
சித்தர்களின் முதல் படி நிலையே உடம்பை அடக்குவது,
உதாரணமாக உடல் நிலை பாதிப்பு அடைந்தால் மனம் சோர்ந்து
விடும் ,
மனம் சோர்ந்தால் உற்சாகம் போய்விடும்,
உற்சாகம் என்பது உயிர் உணர்ச்சி சார்ந்த நிலை என்பதால் உயிரின் சக்திகள் குறைய துவங்கி மரணத்தை அழைத்து வரும் .
சித்தர்கள் பொறுத்தவரை உடலை வெல்வதை இரண்டாக கொண்டார்கள்
ஒன்று
உடலை கல்ப முறையில் வெல்வது இதை காய சுத்தி ,காய சித்தி என்பார்கள் ,
இரண்டாவது அனுபவித்து வெல்வது இது காயத்தில் ஏற்படும் அவஸ்தைகளை அனுபவித்து வெல்வார்கள் .
இதை தான் சித்தன் போக்கு சிவம் போக்கு என்பார்கள் .
மேலும் சித்தர்களுக்கு காலம் என்பது நிகழ் காலம் மட்டுமே ,
நாளை என்பது மாயை என்பது அவர்கள் கணக்கு ,
இன்று என்ன நடக்க வேண்டுமோ அதன் படிதான் நடக்கும் என்பதும் அப்படி நடந்து முடிக்க தான் பூமிக்கு வருகிறோம் என்பதும் அவர்கள் கணக்கு ,
இந்த கணக்கு அவர்களிடம் வசப்பட்டு எழுத பட்டது தான் சோதிட கணக்கு என்று சொல்லலாம் ,இதில் கைதேர்ந்தவர்கள் அகத்தியர் ,
புலிப்பாணி, புஜேந்தர் போன்றவர்கள் ,
இவர்கள் நூல்கள் தான் இன்று பலருக்கு வழிகாட்டியாக உள்ளது எனலாம் .
சரி இவர்களை எப்படி வழிபடலாம் என்பதை விட இவர்கள் யாரை தேடி வருவார்கள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .
இது ஒரு ஜென்மாந்திர தொடர் கணக்கு எனலாம்,பல ஜென்மங்களில் சித்தர்களின் வாசனை உடையவர்களுக்கு தான் இந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று உறுதி பட சொல்லமுடியும் .
எல்லோருக்கும் மருத்துவம் புலப்படாது ,
எல்லோருக்கும் சோதிடம் புலப்படாது ,
எல்லோருக்கும் மந்திர ஞானம் ,யந்திர ஞானம்புலப்படாது ,
இந்த மூன்றும் தெய்விக ரகசியமும் தேவர்களின் ரகசியமும் கொண்டது,
எந்த மனிதனுக்கு இந்த ரகசியம்கள் தெய்விகம் சார்ந்தது என்று புலப்படுகிறதோ அவர்களுக்கு சித்தர்களின் ஆசிகள் ஏற்படும் என்பதை
என்னுடைய அனுபவம்களே எனக்கு புரிய வைத்தது என்று சொல்வேன்.
மற்ற ஒரு பார்வை பசியாற்றுதல் ,பிறர் உயிர்களின் பசியை உணர்ந்து உணவு வழங்குதல் எனலாம் .
பொதுவாக நட்புகள் மனிதர்களுக்கிடையே உண்டாவது அவரவர் பழக்கத்தின் விருப்பமே என்று கவனித்து பார்த்தால் புரியும் .
உதாரணமாக விளையாட்டு சிலரின் நட்புகளை துவங்கும் ,
சிலருக்கு மது பழக்கம் நட்பை தரும் ,
சிலருக்கு களிப்பு கொண்டாட்டத்தில் நட்பை தரும்,
சிலருக்கு ஆன்மிகம் நட்பை தரும் ,
சிலருக்கு உணவு பழக்கத்தில் நட்பை தரும் இப்படி ஒரு நபரின் ஆன்மாவில் பதிந்த விருப்பம் பிறரிடம் காணும் பொழுது நட்பை வளர்க்கும்
இது போல சித்தத்தில் சுயநலமில்லாத சேவை துவங்கும் பொழுது விண்மண்டலத்தில் கலந்து உள்ள சித்தர்களின் ஆன்மாக்கள் நம் ஆன்மாவை தொடர்ப்பு கொள்ளும்,
ஆடு மேய்த்த இடைக்காடர், பிட்சை எடுத்து உண்ட பிராந்தர் , வாயில்லா உயிரினம்கள் மீது பரிவு வைத்தவர்கல் ,
பசுவிற்காக தன் உடலை மறைத்து மூலன் உடலில் புகுந்த சிவயோகி திருமூலர் ,
சீன தேசத்தில் இருந்து குருவுடன் வந்த புலிப்பாணி மருத்துவம் சோதிடத்தில் வல்லவர் ,
இவர் குரு போகர் புலிக்கும் ,சிங்கத்திற்கும் ஞான உபதேசம் செய்தவர் ,
சப்த சமுத்திரத்தை தாண்டி சென்று மூலிகை கொண்டுவந்தவர் ,
கிளி முகத்தை உடைய காலாங்கி நாதரையும் சீடனாக கொண்டவர் .
பறவைகளின்/விலங்குகளின் பால் ,மலம் ,மூத்திரம் ,இவற்றின் இயல்புகளையும் இவைகள் மருந்துகளாக பயன்படுத்தும் விதத்தையும் ,
மேலும் மரம் செடி, கொடி,பூ,இலை,கொட்டை ,காய் ,கனி முதலியவற்றின் மருத்துவ பயன்களை சொல்லிய தேரையர்,
ரசவாத விதையில் தேர்ந்த வடக்கில் இருந்து வந்து தெற்கில் முருகனின் இருப்பிடத்தில் உறைந்த போகரின் மற்ற ஒரு சீடர் ,மேலும் அகத்தியரின் முதல் சீடர் என்கிற மச்ச முனி .
இருளர் குளத்தில் பிறந்து பாம்புகளின் தன்மை அறிந்து ,பிறகு தன்னுள் இருக்கும் பாம்பை அறிந்த சட்டைமுனி சீடர் பாம்பாட்டி சித்தர்.
முன் ஞானம் நூறு ,பின் ஞானம் நூறு என 200 பாடல்களை கொடுத்த போகரின் மற்ற ஒரு சீடர் சட்டை முனி .
கஞ்சாவை கண்டு அறிந்து அதை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வயிற்றின் உள்ளே உள்ள உபாதைகளை சரிசெய்யும் கோரக்கர் மூலி என்ற மூலிகையை தந்த மச்சமுனியின் சீடர் கோரக்கர் ,
கொங்கண தேசம் எனும் கேரளத்தில் பிறந்தவரால் கொங்கணர் என்ற போகரால் பெயர் பெற்ற கொங்கணவர் ரசவாதம் செய்வதவரும் அம்பைகையின் ஆசிகளை பெற்றவரும் ஆவர் .
குதம்பை என்கிற மூலிகையை கண்டு அறிந்தவரும் குதம்பை போல உள்ள காதணியை பற்றி பாடியவரும் குதம்பை சித்தர் ,
போலி சாமியார்களை அடையாளம் காட்டியவரும்,
கற்களில் சிலை செய்வதில் ஞானம் உடையவரும் ,கோவில்களில் சிவலிங்க பிரசுதிஷ்டை செய்ய பூசை விதிகளை தந்தவர் கருறார் சித்தர் .
காகத்திற்கும் அன்னத்திற்கும் பிறந்தவர் என்றும் ,
சிவன் சக்தி முருகன் இவர்கள் மூவரும் ஒருவரே என்று சொன்னதும் ,
1008 சீடர்களை உடையவரும் ,
காகம் போல பார்வையும் ,மூக்கும் உடையவர் என்றும்
முருக பெருமானின் அம்சமே என்று அழைக்கப்படும் வைணவ சித்தர் காக புஜேந்தர் .
பேயாக அலையும் மனதை பற்றி 100 பாடல்கள் பாடிய அகப்பேய் சித்தர் ,
அமுக்கனி மூலிகை கண்டு அறிந்து வாத காவியத்தில் சொல்லிய அமுக்கனி சித்தர் ,
பிறப்பால் இஸ்லாமியராக பிறந்து பல மாந்திரிக விவரமக்களை மூலிகையில் தந்த யாக்கோபு என்கிற ராமதேவர் .
புஜண்டரின் மகன் என்று சொல்லப்படும் ரோமா ரிஷி ,
ஆயுர்வேத முறைகளை தந்தவர் என்றும் ,சுசுருத்தர் என்ற வைத்திய மேதையை சீடராக உடையவரும் வாகட நூலில் வல்லவரான தன்வந்திரி சித்தர் ,
இவர்கள் எல்லோராலும் ஆசான் என்று போற்றப்படுபவரும் ,
பொதிகை மலையில் சிரஞ்சீவியாக இருப்பவரும் ,
சிவனை குருவாக கொண்டவரும் ,
நட்சத்திர வடிவில் விண்ணில் இருப்பவரும் ,
ராமபிரானுக்கு ஆதித்திய மகா மந்திரத்தை உபதேசித்தவரும் ,
முருகனை குருவாக ஏற்று தமிழ் சங்கத்தை நிறுவியவரும் ,
"அகத்தியம் என்கிற நிலையால் பசுவாக உருமாறி பல மூலிகைகளை உண்டு அவைகள் என்ன பலன்கள் தருகிறது என்று அறிந்து பிறகு சுவடிகளில் பதித்து மனிதர்களுக்கு மிக பெரிய மருத்துவ மூலிகைகளை தகவல்களை தந்த
குறு முனி ,குட முனி,கும்ப முனி என்று பெயர் பெற்ற அகத்திய முனி "
(இவர் பசுவாக மாறி எந்த மூலிகை நஞ்சை முறிக்கிறது அறிய எல்லா
தவிரம்களையும் உண்டு அது படி அறிந்த மூலிகை தான் இன்று நாம் உண்ணுவதும் பசுக்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக்கீரை )
எந்த மனிதன் தன் சுயநலத்தை விட்டு தான் கற்ற கலையை பிறருக்கு நன்மையாக பயன்படும் படி வாழ்கிறானோ அவர்களை ,
எவர் தன் தனது தர்மத்தை மதிப்பிடாமல் செய்கிறானோ அவர்களை ,
எவர் தான் போல பிற உயிர்களின் பசியை போகிறானோ அவர்களை ,
எவர் தெய்வ ரகசியம்களை காத்து /பாதுகாத்து சத்தியபடி வாழ்கிறார்களோ அவர்களை ,
எவர் மந்திர ,யந்திர முறைகளை தான் உடலில் உள்ள சக்கரத்தில் ஏற்றி பிறரின் ஊழ்வினையை கழிக்கிறானோ அவர்களிடம் ...
சித்தர்கள் தானாக வாசம் செய்வார்கள் ....
சித்த பூசைகள் என்ற முறைகள் உண்டு அவைகள் சுவடிகள் மூலம் தனி தனியாக நம்முடைய புண்ணிய பலத்தை பொறுத்து நமக்கு பதிக்க பற்றிருக்கும் அவைகளை கண்டு புரிந்து செய்வது மேன்மை தரும் .
அகத்தியரை பொறுத்தவரை அம்மையப்பனை முறையாக அபிஷேகித்து விரும்புவர்களையும்,
சுயநலமில்லாமல் மருத்துவம் ,சோதிடம் சொல்பவர்களும்,
தன்னலம் காணாது தர்மம் செய்பவர்களையும் ஆசீர்வதிப்பார் .
இவருக்கு மந்திரம் உண்டு " அது "ஐயா என்னை காப்பாற்றுங்கள்"
என்கிற கண்ணீர் சொற்கள் ......
அகத்திய முனி நாதமுனி --ஆசிகளுடன்....