Thursday, September 29, 2016

புற்றிடம் கொண்ட ஈசா

🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍

வெற்றிடம் கொண்ட உன்னை
மற்றிடம் தேடியலைந்தேன்
சுற்றயினி யொருமிடமில்லாது...

கூற்றிடம் குலையா திவ்வுடலை
மற்றிடம் புகவே யானும்
புற்றிடம் புகுந்து கொண்டேன்
மாலவன் அரவம்போல...

 கற்றிடம் சேர்ந்து கொண்டேன்
கணக்கனே யவன்
கனியருள் இரசத்ததாலே...

அருளிலார் அவ்விடம்
புகுதாதறிந்து
மருளரை நீக்கியானும்
குருளரை கொடியைப்
போல குறியிடை
 பற்றிக்கொண்டேன்...

பற்றிய பற்றதன் பற்றால்
இருளரை நீக்கியெந்தன்
பிறவிச்சுருளதை வெட்டும்
வாளை என்னக உள்ளுற இருந்தே காட்டிக்கொடுத்த
கருனையே கருனைதானே
குருவதன் குணமதுதானே...

குரு வழி காட்டிய
ஒருவழிப்பாதையாலே
திருவழி சேர்ந்து கொண்டேன்.
சிறுவழிச் சேராதினியே..

திருவடி சார்ந்துகொள்ள
 சதுர்மா மறைமுனிவர்
சார்வழி சாட்சிசொன்னார்
மணிவாசகன் தன்மொழியால்...

இருவடி எடுத்துரைக்கும்
குருவடி பணிந்துகொண்டால்

புருவடி மத்தியில் புணரும்
கருவதையீவார் எவரோ
அவரதின்
கருனைதானே திருவருள்
தேனதாகும் ...

அருளதை பெற்றபேர்கள்
அருளிய பாடல் பெற்றால்
சுருளிய மறையதெல்லாம்
விரிந்ததே விடையைச்
செப்பும்...

விடையிடை விரிந்த மலர்தான்
கடையிடை கிடக்குதய்யா...

மடையதை மறித்துக்கட்டி
சடையதில் சேர்க்க
 வல்லார்தானே
புடையது சூழ எங்கும்
புரவிடை எழுந்த
 அண்ணல்போல
ரவியிடை தண்ணாய்
தகித்திருப்பரே....

விரிமலர் விரிய வேண்டில்...

விரவிய யிருவடி
தெளியவே நீரும்
 திரவிய செல்வம்
இருந்தென்ன்ன...

அறுயிதழ் அங்கு பதிக்கும்
அழகிய பதிகம் யீந்த
நால்வரை பெறவே வேணும்...

நால்வரைப் பெற்றபேர்கள்
ஆழ்வரே அகிலம்தானே...

என்மொழி இனிமையை
நீருடைய நீரும்
தனிமையில் உண்டுபார்த்தால்
தண்டு சிலிர்ப்பதை கண்டுபாரே....

#திருமூலன்Image result for திருமூலர்

1 comment: