Saturday, October 18, 2014

கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?

கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?
கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உண
ர்த்துகிறது.

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ..தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க ...
===========================================
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்
43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.
45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று
ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்.

Friday, October 17, 2014

தீபாவளி என்னும்.....

விரதமிருந்தால் உடலும் உள்ளமும் தூய்மையடையும் விரதங்கள் பல அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் கூறுகிறது.
1. சோமவிரதம்:
2. திருவாதிரை விரதம்:
3. உமா மகேசுவர விரதம்:
4. மகாசிவராத்திரி விரதம்
5. கேதார விரதம்
6. கல்யாண சுந்தரர் விரதம்
7. சூல விரதம் (பாசுபத விரதம்)
8. இடப விரதம் (அஷ்டமி விரதம்)
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால் அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார் அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு
கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை.
அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை
தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க.
தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து விடியுமுன் நீராடி புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.
தீப மங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி
வணங்குகின்றார்களன்றோ?
"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞானசம்பந்தர் வாக்கு."
தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று நலம் பெறுவார்களாக.
தீபாவளி விரதம் காலாந்தரத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது. தீபாவளியன்று பகலும் இரவும் வயிறு புடைக்க சாப்பிட்டுத் தூங்கி விழித்து அதிகாலை
எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.
தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும் அதுபோல நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகி
விடும். இதை அப்பர் சுவாமிகள்
"உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக,
மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்,
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே."
"உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக, பசு ஞானமான உணர்வே நெய்யாக, உயிரே திரியாக, சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி, அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும், முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம்."
என்று அற்புதமாக பாடுகின்றார்.
இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் நோக்கம். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம்,மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும்.
இறைவனுடைய திருநாமங்கள் தீய சக்திகளை அழிக்கும் படைக்கலங்கலாகும்.
"படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்;
இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்;
துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே!"
"அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே ! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்."
என்று அருளிச்செய்த நாவுக்கரசரது நற்றமிழ்ப் பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!

Thursday, October 16, 2014

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். 

இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். 

தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும். 

வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம். 

இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

மாயூரநாதர் திருக்கோவில்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. முந்தைய சோழ நாட்டிலும், தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்திலும் காவிரி ஆற்றுக்கு தென்பகுதியில் அமைந்துள்ள மயிலாடுதுறைக்கு பெருமைத் தேடித்தரும் விதமாக கம்பீரமாக நிற்கிறது, அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் திருக்கோவில். 

மயில் உருப்பெற்ற பார்வதிதேவி, சிவனை தரிசித்து அவரால் ஆட்கொள்ளப்பட்ட தலம். கங்கை, யமுனை போன்ற நதிகள் தங்கள் பாவச் சுமையை இறக்கி வைக்க, இந்த ஊருக்கு வந்து காவிரி நதியில் கலந்து புனிதம் பெற்றனர் என்பது தல புராண வரலாறு. இந்த ஐதீகம் காரணமாக ஐப்பசி மாதம் முழுவதும் துலா நீராடலும், ஐப்பசி 30–ந் தேதி கடைசி முழுக்கு அன்று, தீர்த்தவாரியும் நடைபெற்று வருகின்றது. 

ஏகநாதராகிய சிவபெருமான் தோன்றி அருள்பாலிக்கும் அனைத்துத் தலங்களும் சிறப்புடைய தலங்கள்தான். இத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் எழுந்தருளி, திருப்பதிகம் பாடியுள்ளனர். சூதவனம், சிகண்டிபுரம், பிரும்மபுரம், தென்மயிலை, மாயூரம், மயூரம், மாயவரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது இந்த ஊர். பழங்காலத்தில் மயில்கள் அதிகம் நிரம்பிய பகுதியாக இந்த ஊர் இருந்துள்ளது. 

மயில் வடிவில் அம்பாள் : 

மயிலாடுதுறைக்கு கிழக்கே சற்று தொலைவில் செம்பனார்கோவில் அருகே பரசலூர் (திருப்பறியலூர்) என்னும் திருத்தலம் உள்ளது. சிவனை மதிக்காது, தட்சன் யாகம் செய்த தலம் இது. தட்சனின் யாகத்திற்கு பயந்து தப்பி வந்த மயில்களுக்கு அன்னை மலைமகள், அபயம் அளிக்க, அபயாம்பிகை என்று பெயர் பெற்றாள். 

தன்னை அழைக்காது தட்சன் யாகம் நடத்தியதாலும், தான் தடுத்தும் கேளாமல் பார்வதி தேவி யாகத்தில் பங்கேற்று அவமானப்பட்டு திரும்பியதாலும் சிவபெருமான், பார்வதி தேவியை பெண் மயிலாக மாறும்படி சபித்தார். தட்சனின் யாகத்தை அழித்து அவனையும் சம்ஹாரம் செய்தார். 

பெண் மயில் வடிவம் பெற்ற பார்வதி, சிவனை வணங்கிவர, சிவபெருமான் ஆண் மயில் வடிவெடுத்து பார்வதியுடன் இணைந்து நடனமாடி அவரை ஆட்கொண்டதாக கூறப்படுகின்ற வரலாற்றுக்குரிய கோவிலாகும். மயில் வடிவம் எடுத்து சிவன் ஆடிய தாண்டவம், ‘மயூரத்தாண்டவம்’ என்று கூறப்படுகிறது. 

பார்வதிதேவி பெண் மயில் வடிவம் கொண்டு சிவபூஜை செய்ததற்கான சான்றாக திருக்கோவிலின் வடக்கு மதிலை ஒட்டி, கிழக்கு முகமாக அமைந்துள்ள ஆதிமாயூரநாதர் கோவிலையும், அதிலுள்ள தாமிரத்திலான மயிலையும் குறிப்பிடலாம். 

கோவில் அமைப்பு : 

மயிலாடுதுறை மக்களால் பெரியக் கோவில் என்று அழைக்கப்படும், இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். ஒன்பது நிலைகளைக் கொண்ட சிற்ப வேலைபாடுகள் மிகுந்த கோபுரம், இந்தக் கோவிலின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. திருக்கோவிலானது அர்த்த மண்டபம், மகா மண்டபம், கர்ப்பக்கிரகம், அந்தராண மண்டபம், வசந்த மண்டபம், சுற்றுச்சுவருடன், நான்கு புறமும் வளாகங்களும், மாடவீதிகளும் கொண்டு அழகுற காட்சியளிக்கிறது. 

கோபுர தரிசனம் முடித்து தெற்கு முகமாக உள்ளேச் சென்றால் தங்க முனிஸ்வரரையும், கொடிமரத்தின் கீழே உள்ள விநாயகரையும் தரிசிக்கலாம். கொடிமரத்தின் முன்பாக மிகப்பெரிய விநாயகரும், வடக்கு புறமாக ஆறுமுகப்பெருமானும் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். 

வசந்த மண்டபத்தைக் கடந்து நந்தீஸ்வரரை வணங்கி உள்ளே சென்றால், கருவறையில் மாயூரநாதர், சிவலிங்க திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கருவறையின் உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் உற்சவர்களாகவும், மூலவர்களாகவும் மற்றும் நால்வர்களும், சப்தமாதர்களும் காட்சி தருகின்றனர். 

தென் பிரகாரத்தில் குதம்பை சித்தர் ஐக்கியமான விநாயகர் உள்ளார். இந்த விநாயகருக்கு சந்தனகாப்பு மட்டும் சாத்தப்படுகிறது. அடுத்ததாக நடராஜர், ஆலிங்கன சந்திரசேகர், இந்திரன், அக்னி, நிருதி, எமன், வாயு ஆகியோர் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. மேலும் அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சகஸ்ர லிங்க சன்னிதிகளும் இருக்கின்றன. 

கருவறையின் நேர் பின் புறம் வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார். வடக்குப் பிரகாரத்தின் மேற்புறத்தில் சட்டநாதரும், துர்க்காபரமேஸ்வரியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். அருகில் பிரம்மாவும், பிச்சாண்டவரும் காட்சியளிக்கின்றனர். 

அம்பாள் சன்னிதி : 

மாயூரநாதரின் சன்னிதிக்கு வடக்கு புறத்தில் தனிச் சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன், அபயாம்பிகை அம்பாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். கை களில் கிளியும், அபய ஹஸ்தமும் கொண்டு கருணை ததும்பும் முகத்துடன் அன்னை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகுடன் காணப்படுகிறாள். 

அபயபிரதாம்பிகை, ஆங்சல் நாயகி, ஆங்சலை, மயிலம்மை போன்றவை அம்பாளின் வேறு பெயர்களாகும். அம்பிகையின் தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சாந்த சொரூபமாக காட்சி தருகிறார். ஆலயத்தின் உள்ளே நுழையும்போதே இடபுறமாக எதிர்படும் தீர்த்தம், பிரம்ம தீர்த்தமாகும். 

பிரம்மதேவர் தன் படைப்புத் தொழிலை மீண்டும் கைவரப்பெற, இந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வணங்கியதால் இது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. அடுத்ததாக துலாம் மாத உற்சவ தீர்த்தவாரி நடைபெறும், காவிரி ஆற்றின் நடுவில் உள்ள இடம் ‘இடப தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 

நந்திதேவருக்கு ஏற்பட்ட செருக்கை அடக்கி, ஈசன் அருள்பாலித்த இடம் இதுவாகும். இது தற்போது முழுக்குத்துறை என்று பெயர் பெற்றுள்ளது. இறைவன் சன்னிதியில் தட்சிணாமூர்த்திக்கு கீழ்புறம் உள்ள சதுரண கிணறு, ‘அகத்திய தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அகத்தியர் அமைத்ததாகும். 

தல விருட்சம் :

கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. தலவிருட்சம் அமைந்துள்ள இடத்தை சூதவனம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. இந்த மாமரத்திற்கு அடியில் மாமரத்து விநாயகர் என்னும் பெரிய விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்த திருக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் துலா உற்சவம் ஆகும். 

ஐப்பசி மாதம் முழுவதும் இந்த உற்சவத்தின் போது கோவில் களை கட்டி இருக்கும். இந்த நாட்களில் மயிலாடுதுறையில் உள்ள அய்யாரப்பர், காசி விஸ்வநாதர், ஸ்ரீபடித்துறை விஸ்வநாதர், வேதாரண்யேஸ்வரர் ஆகியோரும் துலாக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்கள். 

இது தவிர மாத உற்சவம், பட்ச உற்சவம், பிரதோஷம், சஷ்டி, வசந்த காலத்தில் நடைபெறும் சைத்ரோற்சவம் போன்றவை விசேஷமாக நடைபெறும் விழாக்களாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப பெருவிழாவும், நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது விதமான அலங்காரம் அம்பாள் காட்சியளிப்பதும் சிறப்பான ஒன்றாகும். 

வைகாசி திருவிழாவில் பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படும்.

நவக்கிரகத் தோஷம் போக்கும் தலங்கள்

1. சூரியன் - சூரியனார் கோவில் 
2. சந்திரன் - திங்களூர் 
3. செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் 
4. புதன் - திருவெண்காடு 
5. வியாழன் - ஆலங்குடி 
6. சுக்கிரன் - கஞ்சனூர் 
7. சனீஸ்வரன் - திருநள்ளாறு 
8. ராகு - திருநாகேஸ்வரம் 
9. கேது - திருக்கீழப்பெரும்பள்ளம்

கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்

செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். 

கி.பி. 1564 முதல் 1604-ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:-     

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த 
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித் 
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான். 

கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல 
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே! 
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங் 
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்! 

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய 
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய 
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத் 
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ 

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன் 
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் 
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ 

மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும் 
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும் 
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும் 
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே! 

செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை 
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும் 
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில் 
எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து

திருக்கழுக்குன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள், வியாதிகளை போக்கும் மருந்தாக பார்க்கிறார்கள். 

அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்களது வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துகளும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 18 சக்தி பீடங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் அதிக அம்மன் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அதாவது 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. இந்த சக்தி தலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. அதை அறிந்து வழிபட்டால் நிச்சியம் பலன் உண்டு. பழமை வாய்ந்த அந்த 18 சக்தி பீடங்கள் வருமாறு:-

1. காமாட்சி-காஞ்சீபுரம் (காமகோடி பீடம்), தமிழ்நாடு. 

2. மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு. 

3. பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்), தமிழ்நாடு. 

4. அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (ஞானபீடம்), தமிழ்நாடு. 

5. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை (அருணை பீடம்), தமிழ்நாடு. 

6. கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்), தமிழ்நாடு. 

7. பகவதி - கன்னியாகுமரி (குமரி பீடம்), தமிழ்நாடு. 

8. மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்திபீடம்), தமிழ்நாடு. 

9. அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்), தமிழ்நாடு. 

10. மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்) தமிழ்நாடு. 

11. பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்), தமிழ்நாடு. 

12. லலிதா - ஈங்கோய் மலை, குளித்தலை (சாயா பீடம்) தமிழ்நாடு. 

13. விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்), தமிழ்நாடு. 

14. காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்), தமிழ்நாடு. 

15. பிரம்மவித்யா-திருவெண்காடு (பிரணவ பீடம்), தமிழ்நாடு. 

16. தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்), தமிழ்நாடு. 

17. திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இஷீபீடம்), தமிழ்நாடு. 

18. மகிஷமர்த்தினி -தேவிபட்டினம் (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.

ஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதம்

ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. 

கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான– தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?

Wednesday, October 15, 2014

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

''''நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ''' 

என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்


ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்

பண் : காந்தாரப்பஞ்சமம் (3--22) ராகம் : கேதாரகௌளை
பாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே

புராதன நகரமான கோலார் கங்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அதன் தலைநகராக இருந்தது

புராதன நகரமான கோலார் கங்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் அதன் தலைநகராக இருந்தது. அப்போது கோலாரின் 'பெயர் குலுவலா' பத்தாம் நூற்றாண்டில் தமிழகம் தொடங்கி கோலார் வரை சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கி.பி.977ம் ஆண்டில் ராஜராஜ சோழன் ஒசக்கோட்டையை

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - வஞ்சிக்கொடி

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தலவிருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக்கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையான மரங்கள்

தீர்த்தம், பிரசாதம் ஏன்?

தீர்த்தம், பிரசாதம் ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை

கோயிலுக்கு ஏன் போகணும்?

கோயிலுக்கு ஏன் போகணும்?

அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும்.

சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை நேரம் எடுத்து படித்துகொள்ளுங்கள்

சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை
நேரம் எடுத்து படித்துகொள்ளுங்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்களுக்காக.
படித்துவிட்டு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிவாயநம.
பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம்
1. பெரிய நிலப்பரப்பு

சக்தியின் வெளிப்பாடு
சக்தியின் வெளிப்பாடு>>>

சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது ,நட்சத்திர மண்டலங்கள் வான்வெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாடே காண்கிறோம் .

ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை

ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை
ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.


''''நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ''' 

என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்
3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்
4.தல விருட்சம் : வடகலை, பாஞ்சரார்த்தம்
5.தீர்த்தம் : ஆகமம்/பூஜை
6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்

திருமணபாக்கியம் கொடுக்கும் மந்திரம்.

வெள்ளிக்கிழமை தோறுதிருமணபாக்கியம் கொடுக்கும் மந்திரம்.

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரைவில் திருமண பாக்கியத்தை கொடுக்கும் சக்தி கீழ்க்கண்ட மந்திரத்திற்கு உண்டு .

Thursday, October 9, 2014

பத்மநாபசாமி கோவில் புதையல் வரலாறும் வருங்காலமும்:.

பத்மநாபசாமி கோவில் புதையல் 
வரலாறும் வருங்காலமும்:.


அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்
என்று சொல்கிறார்கள். ஆனால், இன்னும் யாரும்
அவற்றை முறையாக மதிப்பிடவில்லை.

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலிலின்
பாதாள அறைகளில் பாதுகாக்கப் பட்டிருந்த தங்க-
வைர அணிகலன்கள், பொற் காசுகள், ஐம்பொன்
சிலைகள் உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களும்
அவற்றின் மதிப்பும் இந்தியாவையே ஆச்சரியப்
படுத்தியிருக்கிறது.

மனிதன் கோவில் தத்துவம்

மனிதன் கோவில் தத்துவம்
நம் உடல் தான் கோவில் 
மனிதன் தான் கடவுள்..

உடல் கோயில் + ஆன்ம = கடவுள்
உள் + கட = கடவுள்.
நம் மனதை கடந்தால் நாம் கடவுள்
ஆகலாம்,.

நிமிடத்திற்க்கு நிமிடம் நிறம் மாறும் ஆஸ்ட்ரேலிய சிவன். இது உமது 65வது திருவிளையாடலோ.

ஆஸ்திரேலியா, சிட்னியில் 4.5 மீட்டர் உயரம் உள்ள சிவனின் மார்பிள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாரணாசியிலிருந்து வரவழைக்கப்பட்டது இந்த சிலை.இந்த மார்பிள் சிவபெருமான் சிலையைச் சுற்றி 7 வண்ணத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நிமிடத்திற்கு நிமிடம் சிலையின் வண்ணம் மாறிக் கொண்டே இருக்கும்.இந்த கோயில்தான் மனிதானால் கட்டப்பட்ட முதல் நிலவறை ( பூமிக்கு அடியில் கட்டப்பட்டது) கோயில் என்று கூறப்படுகிறது. இந்தகுள்ள லிங்கம் 13வது ஜோதிலிங்கம் என அழைக்கப்படுகிறது.

20 வகை பிரதோஷங்களும் அதன் பலனும்

சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில்  வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும்  [புத்தியும் நன்றாகும்]

Friday, October 3, 2014


ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? ஆரத்தித் தட்டில் காசு போடலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் பதிலளிக்கிறார்...
நாம் பல்வேறு தருணங்களில் ஆரத்தி எடுக்கிறோம். ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? மங்கல காரியங்களில் ஆரத்தி சுற்றினால், தட்டில் காசு போடுவது ஏன்?
- ஜி.ஜெ. ராமன், எரவாஞ்சேரி
கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4
'ஆரார்த்திகம்' என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி எடுப்பர். அலங் காரத்துடன் அழகு ததும்பும் தம்பதி யிடம் திருஷ்டி தோஷம் ஒட்டிவிடக் கூடாது என்பதற்காக, ஆரத்தி எடுப்பது உண்டு. நிகழ்வின் முடிவைக் குறிக்கும் ஆரத்தி. இதேபோல், என்றும் மங்கலம் பொங்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடவுள் துதியுடன் மங்கல ஆரத்தியும் எடுப்பது உண்டு. கெடுதல் மறைந்து, எங்கும் எப்போதும் மங்கலம் பொங்க வேண்டும் என்பதற்காகவும் ஆரத்தி எடுப்பர். செயலைச் செவ்வனே முடித்தவனுக்கு, மங்கல ஆரத்தி மனநிறைவை உண்டுபண்ணும்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; எவரையும் துன்பம் தொடக்கூடாது என்ற தர்ம சாஸ்திரத்தின் குறிக்கோளை ஆரத்தி நடைமுறைப்படுத்துகிறது (ஸர்வே பத்ராணிபச்யந்துமா கசசித் துக்கபாக் பவேத்).
ஆரத்தி எடுத்ததும் தட்டில் காசுபோட வேண்டும்; அது தவறாகாது. காலக்ஷேபத்தின்போது தட்டில் காணிக்கை சமர்ப்பிப்போம். கற்பூர ஆரத்தி எடுத்த அர்ச்சகரின் தட்டில் காசு போடுகிறோம். சொற்பொழிவு ஆற்றும் பெரியோரின் திருப்திக்காகத் தட்டில் காசு போடுகிறோம். கோயில் யானை துதிக்கையைக் காட்டினால், அதிலும் காசு வைக்கிறோம். 'ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி' என்று இறையுருவத்தின் நெற்றியிலும் காசு வைக்கிறோம். கடவுளை வழிபட்டுத் திரும்பும் வழியில் உள்ள ஏழைகளுக்கும் காசு வழங்குகிறோம். இப்படி, காசு போடாத எந்தச் செயல் மிஞ்சியிருக்கிறது... யோசியுங்கள். எவரையும் நம்மால் முழுமையாகத் திருப்திப் படுத்த முடியாது. நம்மிடத்தில் இருப்பது காசுதான். அதை இயன்ற அளவு அளிக்கும்போது, 'நாமும் உதவினோம்' என்கிற மனநிறைவு ஏற்படும் அல்லவா?! அதைப் பெறுபவரின் மனமும் மகிழுமே! இந்த நல்ல நடைமுறையை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும். மனம், வாக்கு, செயல், பணம் இந்த நான்கையும் பிறருக்கு உதவப் பயன்படுத்தலாம். ஆகவே ஆரத்தித் தட்டில் தாராளமாகக் காசு போடுங்கள்.

கடலூரில் இருந்து திருவதிகை வழியே...திருமாணிக்குழி தாண்டி.... சின்ன நரிமேடு என்று ஒரு இடம்.... அங்கு ஒரு மிகப் பழைமையான சிவாலயம் உள்ளது....


கடலூரில் இருந்து திருவதிகை வழியே...திருமாணிக்குழி தாண்டி.... சின்ன நரிமேடு என்று ஒரு இடம்.... அங்கு ஒரு மிகப் பழைமையான சிவாலயம் உள்ளது....
அதை தன்னால் இயன்றவரை கவனித்து வருபவர் உண்மையான சிவனடிமை ஒருவர். அவரது சிவபக்தி அலாதியானது.... சிவன் என்று நீங்கள் சொனால் அவர் உடல் சிலிர்க்கும்...அவர் கண்களில் கண்ணீர் பெருகும்....
மிகப்பெரிய பற்றுதலோடு சிவலிங்கத்தை பூஜிக்கிறார்...
கல்வி கேள்விகளில் பட்டம் பெறாதவராயினும், மிகப்பெரிய விஷயங்களை சாதாரண தமிழில் போட்டு உடைப்பார்.... சிவனார் அருளால் சிவஞானம் கைவரப் பெற்ற உன்னத தவ சீலர்.
இவருடைய பூர்வீகம் மரக்காணத்தை அடுத்த ஒரு சிற்றூர். பெரிய நிலச்சுவாந்தார்.... இவர் போகாத சிவ ஸ்தலமில்லை.... எல்லா இடங்களுக்கும் நடந்தே போய்வந்தவர்.... கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு சின்ன நரிமேடு வந்து அங்கேயே ஐக்யமாகிவிட்டார்....
அங்குவரும் அன்பர்களை அன்போடு உபசரிப்பார்.
இவரை நான் அடிக்கடி சந்திப்பேன். முதலில் அங்குள்ள கங்காதரேஸ்வரரையும்... அதன் பிறகு இவரையும்.!!

பூசையால் சிறப்புறும் ஐந்து ஆலயங்கள்பூசையால் சிறப்புறும் ஐந்து ஆலயங்கள் : பொதுவாக ஒரு தலத்தின் பெருமை மூர்த்தி, தீர்த்தம், புராணம் முதலியவற்றால் விளங்கும். அத்துடன் கூட பூசை விசேடத்தாலும் பொலியும் சிவத்தலங்கள் உண்டு. காலை, மதியம், மாலை, இரவு, நடு இரவு என வழிபாட்டு முறைகள் சிறப்பதும் ஐந்து அற்புதமான சிவத்தலங்களில் என அறியலாம்.
காலசந்திப் பூசை – ராமேஸ்வரம்; உச்சிக்காலப் பூசை – திருவானைக்கா; சாயங்காலப் பூசை – திருவாரூர்; இராக்காலப் பூசை – மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ; அர்த்தசாமப் பூசை – சிதம்பரம்.]
லிங்கங்கள் ஐந்து : தவ முனிவர்களால் பூசிக்கப்பட்டது ஆர்ஷலிங்கம். தேவர்களால் வழிபடப்பட்டது தெய்வீகலிங்கம், பாணாசுரன் என்பவனால் வணங்கப்பட்டது பாணலிங்கம், மானுடச் சிற்பிகளால் வடிக்கப்பெற்றது மானஷலிங்கம், மலைகள், நதிக்கரைகள், மரத்தடிகள், காடு, சோலை வனங்களில் தானே தோன்றியது சுயம்புலிங்கம்.
ஐந்து ஆரண்யங்கள் : வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், வித்யாரண்யம், தர்ப்பாரண்யம்.
நந்திகள் ஐந்து : இந்திரநந்தி, வேதநந்தி, ஆன்மநந்தி, மால்விடை நந்தி, தருமநந்தி.
பரமசிவனுக்குப் பஞ்ச கவ்யம் : பஞ்ச கவ்யங்களில் அபிசேகம் செய்வது சிவபிரானுக்கு மிகவும் உகந்த ஒன்று! ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்கிறது தேவாரம்!
பஞ்ச கவ்யங்கள் : பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோ ஜலம். இவை ஐந்தும் பசுவிடமிருந்தே பெறப்படுகின்றன. எனவே, கோமாதா விசேஷமாகப் பூசிக்கப்படுகிறது.
சிவபிரானின் சிறந்த வடிவங்கள் ஐந்து : ஈஸ்வரனின் ஆலயத்தில் பிரதானமாக மூலஸ்தானத்தில் சிவலிங்கம் விளங்குகிறது. பிரகாரங்களிலோ அல்லது வேறு தனிச் சந்நிதிகளிலோ சிவபெருமானின் ஐந்து வடிவங்களை அழகிய கோலங்களில் நாம் பார்த்து மகிழலாம்.
ஆனந்த வடிவம் – நடராஜர்; சாந்த வடிவம் – தட்சிணாமூர்த்தி; கோப வடிவம் – பைரவர்; வசீகர வடிவம் – பிட்சாடனர்; கருணை வடிவம் – ோமாஸ்கந்தர்.
ஐந்து அழகுத் தலங்கள் : பிறக்க முக்தி அளிக்கும் திருவாரூரில் தேர் உற்சவம் மிகவும் புகழ் பெற்றது. தேர் அழகு – திருவாரூர்; வீதி அழகு = திருவிடை மருதூர்; விளக்கு அழகு – வேதாரண்யம்; அகழிக்கோட்டை அழகு – வேலூர்; கோபுரம் அழகு – தஞ்சாவூர்.
பிரதோஷம் ஐந்து : நித்ய பிரதோஷம் : தினமும் சுமார் மாலை 4. 30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமே நித்ய பிரதோஷம்.
பட்சப் பிரதோஷம் : மாதம் தோறும் வளர்பிறை திரயோதசி நாட்களில் வருவது.
மாதப் பிரதோஷம் : தேய்பிறைத் திரயோதசி நாள், மாலை நேரம்.
சோமப் பிரதோஷம் : திங்கட் கிழமைகளில் வருவது.
சனிப் பிரதோஷம் : சனிக்கிழமைகளில் வருவது. இது தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுவதற்குக் காரணம், ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாகச் சந்தியா தாண்டவம் நிகழ்ந்தது.
ஐந்து ஐந்தாக விளங்கும் சிவபெருமானை அனுதினமும் அன்போடு ஆராதிப்போம். இவ்வுலகம் ஐம்பூதக் கூட்டணி (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்).
இவ்வுடம்பு – ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி).
இவ்வுலகில் இம்மானிட உடம்பு நலம் பல பெற்று நாளும் வாழ ஐந்தெழுத்து நாயகர் அருள் புரிவாராக!