Wednesday, October 15, 2014

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்

சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.


''''நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில் ''' 

என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.

1.மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
2.உற்சவர் : ஸ்ரீ பிரஹலாத வரதர்
3.தாயார் : ஸ்ரீ மரகதவல்லி தாயார்
4.தல விருட்சம் : வடகலை, பாஞ்சரார்த்தம்
5.தீர்த்தம் : ஆகமம்/பூஜை
6.பழமை : சுமார் 1600 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோவில்


7.புராண பெயர் : நரச நாயகர் புரம்
8.ஊர் : நரசிங்கபுரம்
9.மாவட்டம் : திருவள்ளூர்
10.மாநிலம் : தமிழ்நாடு

11.ஊரின் வரலாறு:

‘பிரகலாதர் ‘ எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் சற்று விரிவாக உரைக்கிறது.

சந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர் புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது.

அவ்வூரில் உள்ள கோயிலில் ‘கடவுளின் அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டு ‘புரந்தர நரசிங்க பெருமாள்’ எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. அந்த ‘நரச நாயகர் புரம்’ பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம் என பெயர் மாற்றம் ஆனது.

12.பாடியவர்கள்:

சமீபத்தில் ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோயில் குறிப்பேடு சொல்கிறது

13.திருவிழா:

ஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள், நரசிம்ம ஜெயந்தி , கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்).

14.தல சிறப்பு:

மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.

15.பொது தகவல்:

ஐந்து நிலை கொண்ட கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளது. கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரம் சென்றால் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம். தென்மேற்கில் கிழக்கு நோக்கினால், 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார்.

16.பிரார்த்தனை:

நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.

17.நேர்த்திக்கடன்:

பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

18.தலபெருமை:

---மூலவர் அமைப்பு:

மூலவர் லட்சுமி நரசிம்மர், ஏழரை அடி உயரம் உடையவர். வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்திருக்கிறார். சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டுகிறார். நாளை என்றில்லாமல் இன்றே, இப்போதே அனைவருக்கும் கேட்ட வரங்களை அளித்து அருள்பாலிக்கிறது இந்தக்கரம். நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில் சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச் சிறப்பு.

19.மரகதவல்லித் தாயார் சந்நிதி:

மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த இக்கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது..

20.நாகதோஷ பரிகார தலம்:

பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சந்நிதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கல்யாண மண்டபமும் உள்ளது. 4 அடி உயரத்தில், 16 நாகங்களை அணிகலனாக கொண்ட பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு அருள்கிறார். இவரைத் தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

21.வரலாறு:

இந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார்.

மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

22.சிறப்பம்சம்:

---அதிசயத்தின் அடிப்படையில்:

மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு.பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு.

23.திருக்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை : 7.30 AM TO 12.00 AM
மாலை: 4.30 PM TO 08.00 PM
(பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு)

24.போக்குவரத்து வசதி....

----------பேருந்து போக்குவரத்து வசதி----------

# கோயம்பேடு - பூந்தமல்லி - தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி - காட்டு கூட்ரோடு - பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# தி நகர் - பூந்தமல்லி - தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு - பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# வடபழனி - பூந்தமல்லி - தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி - காட்டு கூட்ரோடு - பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# பூந்தமல்லி - தண்டலம் கூட்ரோடு
(MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி - காட்டு கூட்ரோடு - பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# தாம்பரம் - ஸ்ரீபெரும்பந்தூர் - காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# காஞ்சிபுரம் - தக்கோலம் கூட்ரோடு - தக்கோலம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் - தக்கோலம் கூட்ரோடு - தக்கோலம் - நரசிங்கபுரம்

# திருவள்ளுர் - கடம்பத்தூர் - பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# திருவள்ளுர் - காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி - பேரம்பாக்கம் - நரசிங்கபுரம்

# வேலூர் - பனப்பாக்கம் - நெமிலி - சேந்தமங்கலம் - தக்கோலம் கூட்ரோடு - தக்கோலம்- நரசிங்கபுரம்

# பனப்பாக்கம் - நெமிலி - சேந்தமங்கலம் - தக்கோலம் கூட்ரோடு - தக்கோலம்- நரசிங்கபுரம்

-------------ரயில் போக்குவரத்து வசதி---------------

# சென்ட்ரல் - ஆவடி - கடம்பத்தூர் - பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

# அரக்கோணம் - திருவள்ளாங்காடு - கடம்பத்தூர் -
பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்

------திருக்கோவிளுக்கு பூவிருந்தவல்லிருந்து (MTC) மாநகர பேருந்து தடம் எண் 591C திருக்கோவில் வரை செல்கிறது.

*591C பேருந்துகால அட்டவணை

*பூவிருந்தவல்லிருந்து புறப்படும் நேரம்

1 06:15 AM
2 08:50 AM
3 11:45 AM
4 02:40 PM
5 05:30 PM
6 08:10 PM

*நரசிங்கபுரத்தில்ருந்து புறப்படும் நேரம்

1 07:30 AM
2 10:15 AM
3 01:10 PM
4 04:10 PM
5 06:50 PM
6 09:30 PM

மேலும் விவரங்களுக்கு :

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி சேவா சபா டிரஸ்ட்
நரசிங்கபுரம் அஞ்சல் ,
பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம்-631402
மொபைல் : 9442585638

என்றும் உங்களுடன்

எஸ்.ஐ.ராஜேஷ் முத்து சாமி....

No comments:

Post a Comment