Wednesday, October 15, 2014

சக்தியின் வெளிப்பாடு




சக்தியின் வெளிப்பாடு>>>

சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது ,நட்சத்திர மண்டலங்கள் வான்வெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாடே காண்கிறோம் .


இந்த சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தினார்கள் .நம் முன்னோர்கள் .

இந்திரன் ,வருணன் ,வாயு ,என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றல்களின் உருவங்களே.

இறைவனின் நாமங்கள் சங்கீர்த்தனம் செய்வதால் வெளியில் பரவியுள்ள தீய சூழ்நிலைகள் நீங்கி தூய்மையான சூழ்நிலை ஏற்படுகிறது.

சுழல் காற்றானது சிறிய துருப்புகளை சுழற்றியடிக்கும்.

ஆனால் கல்ததூணிடம் வாலாட்ட முடியாமல் ஒடுங்கி நிற்கும்.

அதுபோல் ஐம்புலன்கள் அன்பர்களை படாதபாடு படுத்தும்.ஆனால் இறை ஞானம் உள்ளவர்களிடம் அமைதியாக இருக்கும்.

No comments:

Post a Comment