Wednesday, October 15, 2014

கோயிலுக்கு ஏன் போகணும்?

கோயிலுக்கு ஏன் போகணும்?

அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும்.
ஆனால், இருக்கிற விலைவாசியில், அந்தப் பக்கமெல்லாம் எல்லாராலும் போய் வர முடிகிறதா என்ன!
இந்தக் குறையைத் தீர்க்கத்தான், உள்ளூரிலேயே கோயில்களைக் கட்டி வைத்தார்கள். 
கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும். சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும்.
இதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இனிமேலாவது, உங்கள் ஊர் கோயில்களைப் புதுப்பியுங்கள். தினமும் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கோயில்களுக்கு தினமும் சென்று வாருங்கள். உங்கள் உடலுக்கு நல்லது...புரிகிறதா

No comments:

Post a Comment