Thursday, October 9, 2014

நிமிடத்திற்க்கு நிமிடம் நிறம் மாறும் ஆஸ்ட்ரேலிய சிவன். இது உமது 65வது திருவிளையாடலோ.

ஆஸ்திரேலியா, சிட்னியில் 4.5 மீட்டர் உயரம் உள்ள சிவனின் மார்பிள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாரணாசியிலிருந்து வரவழைக்கப்பட்டது இந்த சிலை.இந்த மார்பிள் சிவபெருமான் சிலையைச் சுற்றி 7 வண்ணத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நிமிடத்திற்கு நிமிடம் சிலையின் வண்ணம் மாறிக் கொண்டே இருக்கும்.இந்த கோயில்தான் மனிதானால் கட்டப்பட்ட முதல் நிலவறை ( பூமிக்கு அடியில் கட்டப்பட்டது) கோயில் என்று கூறப்படுகிறது. இந்தகுள்ள லிங்கம் 13வது ஜோதிலிங்கம் என அழைக்கப்படுகிறது.
ரூ. 28 கோடியில் உருவான கோயில்: இந்த கோயிலில் ஆயிரத்து 128 சிறிய கோயில்கள் உள்ளன. இந்த கோயிலின் கருவறைப் பகுதியில் உள்ள 10 மீட்டர் ஆழமுள்ள பகுதியில், ஓம். நமசிவாய என்று உலகம் முழுவதும் இருந்து பக்கதர்கள் எழுதி அனுப்பிய 20 லட்சம் கையெழுத்து பிரதிகள் உள்ளன. இந்த கோயிலில் 81 நதிகளின் தீர்த்தம் உள்ளது. 5 கடல்களின் நீரும் உள்ளது. இந்த கோயிலை உருவாக்க இதுவரை 50 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் ( சுமார் 28 கோடி ரூபாய்) செலவானதாக கூறப்படுகிறது. அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் இந்த கோயிலில் 16 அர்ச்சகர்கள் வேத முறைப்படி அனைத்து பூஜைகளையும் செய்வர். முதல் முடி இறக்குதல், கை ரேகை பார்த்தல், ஜாதகம் எழுதுதல், யோகா, தியானம், நடனம், இந்தி, சமஸ்கிருதம் கற்றுத் தருதல், இந்து பண்டிகைகளைக் கொண்டாடுதல், பஜனை செய்தல், திருமணம் நடத்துதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன. இந்த கோயிலின் ஒருங்கிணைப்பாளராக பிரேம் மிஸ்ரா இருக்கிறார்.

No comments:

Post a Comment