Friday, October 3, 2014

பூசையால் சிறப்புறும் ஐந்து ஆலயங்கள்



பூசையால் சிறப்புறும் ஐந்து ஆலயங்கள் : பொதுவாக ஒரு தலத்தின் பெருமை மூர்த்தி, தீர்த்தம், புராணம் முதலியவற்றால் விளங்கும். அத்துடன் கூட பூசை விசேடத்தாலும் பொலியும் சிவத்தலங்கள் உண்டு. காலை, மதியம், மாலை, இரவு, நடு இரவு என வழிபாட்டு முறைகள் சிறப்பதும் ஐந்து அற்புதமான சிவத்தலங்களில் என அறியலாம்.
காலசந்திப் பூசை – ராமேஸ்வரம்; உச்சிக்காலப் பூசை – திருவானைக்கா; சாயங்காலப் பூசை – திருவாரூர்; இராக்காலப் பூசை – மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ; அர்த்தசாமப் பூசை – சிதம்பரம்.]
லிங்கங்கள் ஐந்து : தவ முனிவர்களால் பூசிக்கப்பட்டது ஆர்ஷலிங்கம். தேவர்களால் வழிபடப்பட்டது தெய்வீகலிங்கம், பாணாசுரன் என்பவனால் வணங்கப்பட்டது பாணலிங்கம், மானுடச் சிற்பிகளால் வடிக்கப்பெற்றது மானஷலிங்கம், மலைகள், நதிக்கரைகள், மரத்தடிகள், காடு, சோலை வனங்களில் தானே தோன்றியது சுயம்புலிங்கம்.
ஐந்து ஆரண்யங்கள் : வேதாரண்யம், ஸ்வேதாரண்யம், வில்வாரண்யம், வித்யாரண்யம், தர்ப்பாரண்யம்.
நந்திகள் ஐந்து : இந்திரநந்தி, வேதநந்தி, ஆன்மநந்தி, மால்விடை நந்தி, தருமநந்தி.
பரமசிவனுக்குப் பஞ்ச கவ்யம் : பஞ்ச கவ்யங்களில் அபிசேகம் செய்வது சிவபிரானுக்கு மிகவும் உகந்த ஒன்று! ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்கிறது தேவாரம்!
பஞ்ச கவ்யங்கள் : பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோ ஜலம். இவை ஐந்தும் பசுவிடமிருந்தே பெறப்படுகின்றன. எனவே, கோமாதா விசேஷமாகப் பூசிக்கப்படுகிறது.
சிவபிரானின் சிறந்த வடிவங்கள் ஐந்து : ஈஸ்வரனின் ஆலயத்தில் பிரதானமாக மூலஸ்தானத்தில் சிவலிங்கம் விளங்குகிறது. பிரகாரங்களிலோ அல்லது வேறு தனிச் சந்நிதிகளிலோ சிவபெருமானின் ஐந்து வடிவங்களை அழகிய கோலங்களில் நாம் பார்த்து மகிழலாம்.
ஆனந்த வடிவம் – நடராஜர்; சாந்த வடிவம் – தட்சிணாமூர்த்தி; கோப வடிவம் – பைரவர்; வசீகர வடிவம் – பிட்சாடனர்; கருணை வடிவம் – ோமாஸ்கந்தர்.
ஐந்து அழகுத் தலங்கள் : பிறக்க முக்தி அளிக்கும் திருவாரூரில் தேர் உற்சவம் மிகவும் புகழ் பெற்றது. தேர் அழகு – திருவாரூர்; வீதி அழகு = திருவிடை மருதூர்; விளக்கு அழகு – வேதாரண்யம்; அகழிக்கோட்டை அழகு – வேலூர்; கோபுரம் அழகு – தஞ்சாவூர்.
பிரதோஷம் ஐந்து : நித்ய பிரதோஷம் : தினமும் சுமார் மாலை 4. 30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமே நித்ய பிரதோஷம்.
பட்சப் பிரதோஷம் : மாதம் தோறும் வளர்பிறை திரயோதசி நாட்களில் வருவது.
மாதப் பிரதோஷம் : தேய்பிறைத் திரயோதசி நாள், மாலை நேரம்.
சோமப் பிரதோஷம் : திங்கட் கிழமைகளில் வருவது.
சனிப் பிரதோஷம் : சனிக்கிழமைகளில் வருவது. இது தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுவதற்குக் காரணம், ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாகச் சந்தியா தாண்டவம் நிகழ்ந்தது.
ஐந்து ஐந்தாக விளங்கும் சிவபெருமானை அனுதினமும் அன்போடு ஆராதிப்போம். இவ்வுலகம் ஐம்பூதக் கூட்டணி (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்).
இவ்வுடம்பு – ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி).
இவ்வுலகில் இம்மானிட உடம்பு நலம் பல பெற்று நாளும் வாழ ஐந்தெழுத்து நாயகர் அருள் புரிவாராக!

No comments:

Post a Comment