ஆலய வரலாறு : போலந்து நாட்டின் வார்சா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரலடசுமி நரசிம்மர் ஆலயம். போலந்தில் உள்ள 2 இந்துக் கோயில்களில் இது மிகவும் புகழ் பெற்றதாகும். 2009ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி திறக்கப்பட்ட இவ்வாலயத்தில் முக்கிய தெய்வங்களாக மகாலட்சுமியும், நரசிம்மரும் காட்சி தருகின்றனர். வர என்றால் கருணை என பொருள். கருணையே வடிவாக மகாலக்ஷ்மி அருள்பாலிப்பதை குறிக்கும் விதமாக இவ்வாலய அன்னை வரலக்ஷ்மி என்ற திருநாமத்தால் அழைப்படுகிறார். சனிக்கிழமைதோறும் மகாலக்ஷ்மி, நரசிம்மர், கிருஷ்ணர், சிவலிங்கம் ஆகியவற்றிற்கு மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்படுகிறது. இவ்வாலயத்தில் மகாலக்ஷ்மி, நரசிம்மர் தவிர பாபாஜி, கிருஷ்ணன், சிவலிங்கம் ஆகிய தெய்வங்களும் சிறிய விக்ரஹங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நரசிம்மரின் இடப்புறத்தில் இயேசு கிறிஸ்து, மேரி சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலய முகவரி : VARA LAKSHMI NARASIMHA TEMPLE,
Grzybowska 37A, Warszawa, Poland.
தொலைப்பேசி : +48 604 56 09 55
இமெயில் : warszawa@bhaktimarga.org
இணையதளம் : www.varalakshminarasimha.pl
No comments:
Post a Comment