🌺நாகம் சன்னியாசியான கதை🌺
🌷சாமியார் ஒருவரிடம் ஒருவன் வந்தான்.'சாமி, எனக்கு வாழ்க்கை அலுத்துப் போச்சு.மிச்ச காலத்தை இறைச் சேவையில் கழிக்கணும் என்றுதான் ஆசையா இருக்கு.எனக்கு நீங்கதான் சன்னியாசம் கொடுக்கணும்' என்றான்.
சாமியார் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.அருகில் இருந்த நாலு முழ காவித்துணியை எடுத்து நீட்டினார். 'சரி, இதைக் கட்டிக்கிட்டு எம்பின்னோட வா!' என்றார்.அவன் அரண்டு போனான்.
'சாமி. நான் வரேன்னுதானே சொன்னேன். இப்பவே வரேன்னா சொன்னேன்?' என்றான்.'சரி எப்போ வர்றே.....???''எம் புள்ள படிச்சிட்டு பொறுப்பில்லாம இருக்கான் சாமி. அவனைக் கல்லாவில் உக்காத்தி வெச்சுத் தொழில் கத்துக் குடுத்திட்டு வந்திடறேன்' என்றான்.
சாமியார் சிரித்து விட்டு, 'சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்' என்று சொல்லிப் போய்விட்டார்.அடுத்த முறை வரும்போது அழைத்தார்.அவன் சொன்னான். 'சாமி. அவனுக்கு வியாபாரம் செஞ்சாலும் நுணுக்கமெல்லாம்தெரியலை.ஏமாத்திருவாங்க தோஸ்துங்க. கொஞ்சம் நிகா புரிஞ்சதும் வரேன்' என்றான்.
இவ்வாறாக ஒவ்வொரு முறையும், 'கல்யாணம் ஆகட்டும்', 'குழந்தை பிறக்கட்டும்' 'குழந்தையை பள்ளியில் சேர்க்கட்டும்' என்றே சொல்லி வந்தான்.ஒரு முறை சாமியார் வந்தபோது, வழக்கமாக வரும் அவனைக் காணவில்லை.விசாரித்தபோது, அவன் இறந்து விட்டான் என்று தெரிந்து கொண்டார்.
ஞான திருஷ்டியில், இறந்த பின்னாலும் அவன் அந்த வீட்டு கஜானாவின் பின்னால் உள்ள பொந்தில் பாம்பாகப் பிறப்பெடுத்து அதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டார்.
அவன் பையனைக் கூப்பிட்டார். 'அப்பா..... உன் வீட்டு கஜானாவுக்குப் பின்னால் ஒரு பாம்பு இருக்கிறதே, உனக்குத் தெரியுமா....???' என்று கேட்டார்.அவன் அரண்டு போனான். ஓடிப்போய் கஜானாவை நகர்த்திப் பார்த்தால், ஒரு பொந்து; அதற்குள் ஒரு பாம்பு. குச்சியை உள்ளே நுழைக்கவும் அது சீறியது.'
அப்பா, அதை அடிக்காதே......!!!' என்றார் சாமியார்.'ஏன் சாமி...???' என்று கேட்டான் மகன்.'அந்தப் பாம்பு வேறு யாருமில்லை. உன் தகப்பனார்தான்' என்றார் சாமியார்.அவன் ஒரு கணம் யோசித்தான். 'மெய்யாவா சாமி?' என்று கேட்டான்.'ஆமப்பா. உண்மையாகத்தான்.....!!!''சரிங்க சாமி. எங்கப்பாருன்னு சொல்றீங்க. அதை அடிக்கலை' என்றான் அவன்.'ஆனா குஞ்சு குளுவான்கள் நடமாடுற இடமில்லையா....???இதை ஒரு பானைக்குள்ளாற பிடிச்சுப் போட்டுக் குடுத்திடறேன்.எங்காச்சும் காட்டுப் பக்கம் கொண்டு போய் விட்டுறுங்க....!!!' என்றான்.அப்படியே செய்தும் அவர் கையில் மூடிய பானையைக் கொடுத்தான்.
சாமியார் காட்டு வழியே போகும்போது சொன்னார்:'அட மூடனே.....!!! நான் கூப்பிட்டபோதே என்னுடன் வந்திருந்தால், உனக்கு மரியாதை இருந்திருக்கும்.இப்போதும் நீ என்னுடன்தான் வருகிறாய், ஆனால், நீ பெற்ற மகனால் விரட்டியடிக்கப்பட்டு வருகிறாய்,இதுதான் உன் விதி......!!!
🌷'நீதி: இருக்கும்போது துறப்பதுதான் துறவு.இழந்தபின்னர் எஞ்சுவது வெறுப்பு.......!!!🌷
🌺இறைவனின் நினைவே இனிய காலை வணக்கம்🌺

No comments:
Post a Comment