மதுரையில் மீனாட்சி சிவனுக்கு வலப்புறமாகவும், திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் சிவனுக்கு இடப்புறமாகவும் இருப்பதன் காரணம் என்ன?
சிவன் கோயில்களில் மூன்று விதமாக அம்மன் சன்னிதியை அமைக்கலாம் என்று ஆகம் சாத்திரங்கள் கூறுகின்றன.
ஒன்று,
சிவன் சன்னிதி எந்த திசை ( கிழக்கு அல்லது மேற்கு ) நோக்கி அமைந்துள்ளதோ அந்தத் திசை நோக்கி அம்மனையும் பிரதிஷ்டை செய்வது.
அதாவது, சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கி காட்சி தருவர். இதை ஸமான வீஷணம் என்பர்.
சுவாமியும், அம்மனும் ஒரே திசை நோக்கியடி அமைப்பதில் ஒரு சில கோயில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதியும், சில கோயில்களில் இடப்புறம் அம்மன் சன்னதியும் அமைந்திருக்கும்.
சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி இருப்பதை கல்யாணக் கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சன்னதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர அமைப்பு என்றும் கூறுவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அவிநாசியில் உள்ள கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர் கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ள அமைப்பிலேயே இருக்கின்றது.
இரண்டாவது,
சிவன் சன்னிதி கிழக்கு அல்லது மேற்கு முகமாக இருந்தாலும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாகவே அமைந்திருக்கும்.
இதை அனுக்கிரஹவீஷணம் என்பர்.
சுவாமியை தரிசிக்கும் முறையில் அம்மன் பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
சுவாமியின் அனுக்கிரகத்தைப் பெற்று நமக்கு அருள்வதாகப் பொருள். இந்தநிலை அனேகமாக எல்லா கோயில்களிலுமே உள்ளது.
முன்றாவது,
சுவாமி சன்னிதி மேற்கு நோக்கி இருந்தால் அம்மன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கும்.
நேர் எதிராகப் பார்த்துக்கொள்ளும் நிலை.
இதக அபிமுகவீஷணம் என்பர்.
எதிர்க்காட்சி என்றும் வழக்கத்தில் உள்ளது. இந்த நிலை, மிக அபூர்வமானது.
திருக்கடவூர், காளஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசித்து மகிழலாம்.
No comments:
Post a Comment