மேஷ ராசியினர் செவ்வாய்க்கிழமை தட்சிணா மூர்த்திக்கு குங்குமம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஜவ்வாது சேர்த்த சந்தனக்காப்பிட்டு செந்நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மாலை சூட்ட வேண்டும். மாதுளை, துவரம்பருப்பு, சாதம, ஜிலேபி நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். வீரபத்திரருக்குரிய காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட தோஷம் விலகும்.
கடக ராசியினர் திங்களன்று தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம் செய்து அன்னக்காப்பிட வேண்டும். சந்தனக்கலர் பட்டு உடுத்தி, வாழைப்பழம், சாத்துக்குடி, முள்ளங்கி சாம்பார் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அம்பாள் மற்றும் சந்திரனுக்குரிய காயத்ரி, பாடல்களை பாட வேண்டும்.
துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமையன்று தட்சிணா மூர்த்திக்கு நெய் அபிஷேகம் செய்து ஜவ்வாது, கஸ்தூரி சேர்த்த சந்தனக் காப்பிட வேண்டும். வெண்பட்டு உடுத்தி மல்லிகை மாலை சூட்டி சேமியா பாயாசம், சாம்பார் சாதம், மாம்பழம் நைவேத்யம் செய்து தட்சிணாமூர்த்தி, சுக்கிரன், சக்கரத்தாழ்வார் காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட வேண்டும்.
தனுசு ராசியினர் தட்சிணாமூர்த்திக்கு எலுமிச்சை சாறு கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். கொண்டைக்கடலையால் காப்பிட்டு, முல்லைப்பூ மாலையிட்டு மஞ்சள் பட்டு உடுத்த வேண்டும். ஆரஞ்சு, சர்க்கரை கலந்த வேகவைத்த கடலைப்பருப்பு உருண்டை, எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். தட்சிணாமூர்த்தி, குரு, தத்தாத்ரேயர் காயத்ரி ஓதி வர நல்வாழ்வு அமையும்.

No comments:
Post a Comment