ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை சஷ்டியே கந்தர் சஷ்டி எனப்படும்.
முருகப்பெருமான் சூரபத்மனை வதைத்த சூரசம்ஹார (8.11.2013 அன்று)
திருவிளையாடலைத்தான் கந்தர் சஷ்டியாக வழிபடுகிறோம். முருகன் ஐப்பசி மாத
சுக்கிலபட்ச பிரதமை முதல் ஆறு நாட்கள் போர் புரிந்து ஆறாவது நாள்
சஷ்டியன்று மாமரமாக நின்ற சூரபத்மனை தன் சக்திவேலால் இரண்டாகப் பிளந்தார்.
பிளவுபட்ட சூரபத்மனை மயிலாகவும், சேவற்கொடியாகவும், தானே ஏற்று அருளினார்.
இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வைப் பார்த்துவிட்டு
விரதத்தை முடிப்பது வழக்கம்.
இந்த விரதத்தில் முருகனுக்கு பால், பழம், தினைமாவும் தேனும் கலந்து நிவேதிப்பது விசேஷமானது. சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் எனும்படி இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது ஐதீகம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய பெருமை உண்டு. ஆறு என்பது ஐஸ்வர்யத்தைத் தரும் எண் என்று எண் கணித சாஸ்திரம் கூறுகிறது. 6ம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். இவர் திருமகளின் அம்சமாக வணங்கப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு போன்றவற்றைத் தரக்கூடியவரும் சுக்கிரனே. எனவே, சஷ்டி விரதம் இருந்தால் 16 செல்வங்களையும் பெறலாம். அமரர் இடர் தீர்த்த குமரனின் தாளடிகளைப் போற்றுவோம்.

No comments:
Post a Comment