Friday, February 13, 2015

**சதுரகிரிமலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்**

**சதுரகிரிமலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்**

சதுரகிரிமலை சித்தர் பூமி.18 சித்தர்களும் தவம் செய்த இடம்..உலாவும் இடம் என்று சொல்வார்கள்.அபூர்வ சக்தி படைத்த மூலிகைகள்,வியப்பு தரும் மரங்கள்,விலங்குகள் நிறைந்த வனம் நிறைந்த மலைசதுரகிரி.
ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோவில் இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ பயணித்தால் வத்திராயிருப்பு வரும்.அங்கிருந்து 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறையை அடையலாம்.இதுதான்சதுரகிரிஅடிவாரம்.இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்றால்சதுரகிரிசுந்தரமஹாலிங்கம்,சந்தன மஹாலிங்கம் கோயிலை அடையலாம். சுனை,அருவி என ரம்மியமாக இருக்கிறது
சதுரகிரிமலைப்பாதையில் 10 கிலோ மீட்டர் நடந்தாலும் அலுப்பு தெரியாது.கால் வலிக்காது இதுதான் அதன் அபூர்வ சக்தி.முதன் முறையாக மலையேறிய என் நண்பரும் இதையே சொன்னார்.
அமாவாசை ,பெளர்ணமியில் 40,000 பக்தர்கள் வரை வருகிறார்களாம்.
மலைப்பாதயில் குரங்குகள் அட்டகாசம் அதிகம்.சந்தன மஹாலிங்கம் அருகில் உள்ள ஒத்தையடி பாதை வழியாக சென்றால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு காளி சிலை உள்ளது.மாலை 6 மணி.நானும் என் நண்பரும்தான் அங்கு இருக்கிறோம்.அதன் அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தில் சித்தர் உருவமும் தெரிகிறது.அதில் விபூசி பூசி அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.,
மொத்தமாக 4 மணி நேரத்தில் மலையேறிவிட்டோம்.வழியெல்லாம் இப்போது கடைகள்.அமாவாசை மற்றும் ஞாயிற்றுகிழமை மட்டும்தானாம்.நெல்லிக்காய் சாப்பிட்டுக்கொண்டே நடந்தால் நாவல் ஊற்று சுனையில் தண்ணீர் குடிக்கும்போது அவ்வளவு சுவை
மலையுச்சியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நெல்லி மரங்களாக இருக்கிறது..
இங்குள்ள ஒரு வகை மரத்தின் பால் முகத்தில் பட்டால் முகம் வீங்கி கொண்டே செல்லுமாம்.அதன்பெயரே மொகரை வீங்கிதான்.மூன்று தினம் சந்தனம் பூசி வந்தால் வீக்கம் குறைந்துவிடுமாம்.
மரத்திற்கு மரம் தாவும் அணில் .இது ரொம்ப பெரிதாக இருக்கிறது
`சதுரகிரிஎன்ற பெயர் ஏன் வந்தது?
சதுரகிரிமலையானது மேரு முதலிய எட்டு வகை மலைகளுக்கும் தலையானது என்கிறதுசதுரகிரிபுராணம்.கிழக்கு திசையில் இந்திரகிரி,மேற்கு திசையில் வருணகிரி,வடக்கு திசையில் குபேர கிரி ,தெற்கு திசையில் ஏம கிரி இப்படி ஒரு சதுரம் போல அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் சிவகிரி,விஷ்ணு கிரி,சித்த கிரி,ஆகிய்ட நான்கு மலைகள்.
மகாலிங்கம் கோயிலுக்கு தென்புறம் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் தவசி குகை அவசியம் செல்ல வேண்டிய இடம்.செல்லும் வழி அடர்ந்த காடு.கரடிகள் நிறைய உலாவும் இடம்.மலைவாசிகள் துணையோடு செல்வது நலம்..
அங்கு கூட்டி செல்லும் கைடுக்கு 400 ரூபாய்..கரடி வந்தா உசார் பண்றதுதான் அவரின் முக்கிய வேலை.
தவசி குகை செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மரம் இருக்கு.அந்த மரத்தில் இருந்து வடியும் பால் ரத்த சிவப்பாக இருக்கிறது.அதன் கீழே தேங்கியிருக்கும் பால் ஆட்டு ரத்தம் கொட்டியது போல திகில் கிளப்பியது.மரத்தின் பெயர் என்ன தெரியுமா? ரத்த காட்டேரி மரம்.
தவசி குகையின் அருகில் மஞ்சள் நீர் நிறம்பிய சுனை இருக்கிறது.தங்கம் போல அந்த நீர் மினு மினுக்கிறது...தங்க பஸ்பம் போல...குடிச்சா வேலை செய்யுமோ.
அரையடி அகலமுள்ள பலகை கல்லால் இன்னொரு கல் கொண்டு செதுக்கப்பட்ட அபூர்வமான வினாயகர் சிலையையும் அந்த அடர்ந்த காட்டுக்குள் பார்த்தோம்.தபசு பாறை என்பது சித்தர்கள் மீட்டிங் போடும் இடம் மாதிரியாம்.அத்ற்கேற்றவாறு வட்ட வடிவான அமரக்கூடிய பலகைகள் 12 இருக்கின்றன...
சந்தன மகாலிங்கம் ,சுந்தர மகாலிங்கம் என இரு லிங்கங்கள் தனித்தனி கோயிலாக உள்ளன..
கோரக்கர் குகை வந்தால்தான் பாதிதூரம் வந்ததாக அர்த்தம்.ஆனா அதுவரை நடப்பதற்குள் உடலில் உள்ள நீர் எல்லாம் வியர்வையாக வந்துவிடும்.கோரக்கர் குகையில் இப்போது சாமியார் பெண்ன்மணி வய்தானவர் இருக்கிறார்.
சந்தன மகாலிங்கம் கோயிலில் சட்டை முனி குகையில் சந்தனகட்டை எரிப்பர்..இந்த வருடம் இல்லை.பெளர்ணமி அன்றும்,அமாவாசை தினம் மட்டும்தானாம்.,
சுந்தரமகாலிங்கம் தானே உருவான லிங்கம்.யானை வழிபட்ட,சித்தர்கள் பூஜித்த லிங்கம்.அங்கு நின்று தரிசனம் செய்யும்போது உடலெங்கும் சிலிர்ப்பு.அந்த லிங்கம் அபூர்வமானது அதிக சக்தி வாய்ந்தது என்பதை நாம் அதன் முன் நிற்கும்போது உணரமுடியும்.
கஞ்சி மடம்...இதை மறக்க முடியாது...பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு போட்டு,தங்கவும் அனுமதிக்கிறார்கள்...இப்போது கோயில் அருகில் பெரிய மண்டபம் இருப்பதால் அங்கு இரவு தங்கலாம்
ஒவ்வொருவரும் சதுரகிரிசெல்ல வேண்டும்.10 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடக்கும்போது மூலிகை காற்று அனுபவித்து மூலிகை நீர் அருந்தி செல்வதால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும்.உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும்.அதிக உயிர் சத்தும் அதிக வசியமும் ,தெளிவான மனநிலையும் உண்டாகும்...
சுந்தர மகாலிங்கத்துக்கு அரோகரா! சந்தன மகாலிங்கத்துக்கு அரோகரா!
-Ganesan Pondicherry-

No comments:

Post a Comment