Tuesday, April 1, 2014

தமிழுக்கு மயங்கிய விநாயகர்

விநாயகப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார் அவ்வைபிராட்டி. அந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமானும் ஆகாய மார்க்கமாக திருக்கயிலாயத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், அவ்வையையும் தன்னுடன் வருமாறு அழைத்தனர்.
http://aanmeegamarivom.blogspot.in/
அனைத்திற்கும் ஆதியாக விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் தலத்திற்குச் செல்ல யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆகையால் விநாயகரின் பூஜையை விரைந்து முடிக்க எண்ணினான் அவ்வை. விநாயகப்பெருமானோ, 'அவ்வையே என் மேலான வழிபாட்டை நீ மெதுவாகவே செய்!
http://aanmeegamarivom.blogspot.in/
சுந்தரருக்கும், சேரனுமானுக்கும் முன்னதாகவே, உன்னை நான் திருக்கயிலாயம் கொண்டு சென்று சேர்ப்பேன்' என்று உறுதியளித்தார். அப்போது அவ்வைபிராட்டி, 'சீதக்களபச் செந்தாமரைப்பூம், பாதச் சிலம்பும் பல இசை பாட' என்ற விநாயகர் அகவலைப் பாடி பொறுமையாக ஆனை முகனை ஆராதனை செய்தார்.

அவ்வையின் அமுதத் தமிழ் மொழியில் மயங்கிப் போன விநாயகர், அவரது வழிபாடு முடிந்ததும் தனது துதிக்கையால் அவ்வையை தூக்கிச் சென்று, சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாகவே திருக்கயிலையில் சேர்த்தார்.Ganesan Pondicherry

ஏழு பெண் தேவதைகள்

தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற்றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைமிக்க வரலாறு இங்கே...

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.

அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். "யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே' என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து, "''உனக்கு ஏது இந்தக் குழந்தை?'' எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி, "''பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை'' என்றாள். ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. ``என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே.

நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அழுதபடி கேட்டாள். ``நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்`' என்றனர் மற்ற சகோதரிகள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், "இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள்.

மக்களும் உங்களையே முதன்மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவலர்களாக காவலர்களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்'' என்றருளி மறைந்தார்.

அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள். சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள்.

இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த ஏழு ஊர்களிலும் இந்த ஏழு அம்மன்களின் ஆட்சிதான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த ஏழு ஊர்களில் மட்டுமல்ல; மற்ற கிராமங்களிலும் தீமிதித் திருவிழா நடைபெற இதுவே காரணம் என்கிறார்கள்.

ஆடி மாதம் முதல் வெள்ளியன்று சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் கோவிலில் தீமிதி விழா தொடங்கும். அதற்கு அடுத்த வெள்ளி புலியூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி சித்தூர் அம்மனுக்கும், அடுத்த வெள்ளி குமாரை பச்சையம்மன் மற்றும் காளிங்கராய நல்லூர் அருந்தவத்திற்கும், அடுத்து வெங்கனூர் காத்தாயிக்கும், கடைசி வெள்ளி அரகண்ட நல்லூர் பூங்காவனத்தம் மனுக்கும் தீமிதித் திருவிழா நடக்கும்.

இப்படி வரிசையாக நடப்பது இங்கு மட்டுமே என்கிறார்கள். இந்த ஏழு கோவில்களையும் பச்சையம்மன் கோவில்கள் என்றே அழைக்கின்றனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெருமுளை முத்தையா கோவிலும்; அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் குமாரை பச்சையம்மன், பூமாலையப்பர் கோவிலும்;

திட்டக்குடியிலிருந்து மேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர், வெங்கனூர் அம்மன் கோவில்களும்; திட்டக்குடியிலிருந்து தென்கிழக்கே வெள்ளாற்றைக் கடந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் காளிங்கராய நல்லூர் அம்மனும்; அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சன்னாசி நல்லூர் அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது அரகண்ட நல்லூர் அம்மன் கோவில்.

குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் காணிக்கை

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்க

குலதெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும். பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு செல்வதும் கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகள் மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.

அய்யனார், கடலைமாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர்.

(உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும். சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு.

ஆயிரம் பெருமாள் கோவில் இருந்தாலும் அம்மாதிரி குலதெய்வ கோவில்களுக்கு சென்று வணங்குவது முதல் சிறப்பு. சில இடங்களில் அம்மாதிரி இன்றி பெருமாள் போன்றவர்களையும் குலதெய்வமாக வணங்குவதும் உண்டு. பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும்.

பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே களை கட்டி பொங்கல், கிடா வெட்டு, பலி என்று அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும். ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத் திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் துவங்குவார்கள்.

அதுவே முறையானதாகும். உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள். குலதெய்வம் தெரியாதிருந்தால் ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள். சொல்லி விடுவார்கள். உங்க தாத்தா ஒங்கு குலச்சாமி வெட்டேரி கோவிலுக்கு போகாம எந்த காரியத்தை செஞ்சாரு அந்த காலத்துல என்று பெரும்பாலும் பட்டென்று பதில் வந்து விடும்.

தெரியவில்லை என்றாலும், பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும். இல்லாவிடில் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் தந்தை ஜாதகத்தை ஜோதிடர் யாரிடமாவது காட்டி கேட்டால் உத்தேசமாக சொல்லி விடுவார்கள். ஐந்தாமிடம் அதன் அதிபதியை வைத்து திசை, குறிகளை சொல்லி விடுவார்கள். அதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அந்த தெய்வத்திற்கென்று மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு நாளும் சிறப்பாக வழிபாடு நடக்கும். குல தெய்வத்திற்கென உள்ள வழிபாட்டு முறை மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள்.

உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணை, ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள். குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடையவேண்டும்.

பின்னோர் செழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.

தலைவிதியை மாற்றும் பிரம்மதேவன்

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் திருப்பட்டூர் என்ற சிவ தலம் உள்ளது. சிறுகனூர் என்னும் சிறிய ஊரின் நடுவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்மதேவர் மிக பிரம்மாண்டமான அமைப்புடன் நான்கு முகங்களுடன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

அனைவரின் தலையெழுத்தை எழுதும் பிரம்மதேவர், ஒருமுறை சிவபெருமானை சரணடைந்து, தனது கஷ்டங்களையும், தலை எழுத்தையும் மாற்றி அருளும்படி வேண்டிக்கொண்டார். அதற்காக அவர் தேர்வு செய்து சிவலிங்கத்தை வழிபட்ட தலம் இது என்று கூறப்படுகிறது.

தனது தலைவிதி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆலயம் வந்து பிரம்மதேவனுக்கு மஞ்சள்பொடி சாத்தி, அர்ச்சனை செய்து கொண்டால் வியத்தகு அளவில் மாற்றம், முன்னேற்றம் நிச்சயம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பரம்பொருளான சிவபெருமானை வணங்கிய பிறகே, பிரம்மதேவரை வழிபட வேண்டும்.

இந்த ஆலயத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் பதஞ்சலி முனிவரின் சமாதி உள்ளது. பிரம்ம தேவர் வழிபட்ட 12 லிங்கங்கள் இந்த ஆலயத்தில் இருக்கின்றன. பெரும்பாலும் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், குடும்பத்தினரின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பிரம்மாவின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர்.

Friday, January 24, 2014

பிரதோஷம் பிறந்த கதை!



தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.

இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், "திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், "தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.

எனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.

அவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.

ஒரு தசமித் திதியில், "மந்திரகிரி'' மலையை மத்தாகவும், "வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.

அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் "மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது! உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.

இதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.

இதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொருக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.

வெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது! கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து "ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.

இந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.

அவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புகை சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.

எனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.

நந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் "பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், "சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது! இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை "ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.

இதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.

அதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.

ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.

அடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான்! இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.

பின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.

மறுநாள் "திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்!

இதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது!

இது ரிஷபப் பெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும்! பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியைத் தொட்டு, "சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.

மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். *

ஏன் நந்தியின் குறுக்கே போகக்கூடாது?

ஏன் நந்தியின் குறுக்கே போகக்கூடாது?
சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது.

அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது.

இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்பது வழக்கில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

Monday, January 6, 2014

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :சேத்தியாதோப்பு

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் :

இக்கோவிலின் முதல் மரியாதைகளும் உரிமைகளும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள "பூதங்குடி " பகுதி "சேத்தியார் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பத்திடம் உள்ளது ....

இந்த கோவிலை பற்றிய செய்தி:

சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு, வனம் போன்ற பகுதியாக பூதங்குடி இருந்தது. குடியிருப்பு மிகக் குறைவாக இருந்த காலம். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த அமரர் ஜெயராமன் இவ்வூரைச் சேர்ந்தவர். இவரது பரம்பரைக்கு சேத்தியார் குடும்பம் என்ற பட்டப்பெயர் உண்டு. அத்தகைய சேத்தியார் குடும்பத்து வாலிபர் ஒருவர் ஒருசமயம் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அப்படிப் போகும் வழியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறு பெண்பிள்ளை காட்டில் தன்னந்தனியாக சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். மிருகங்கள் வாழும் இப்படிப்பட்ட கொடூரமான காட்டுப் பகுதியில் எப்படி இந்தச் சிறுமி தன்னந்தனியாக சிறிதும் பயமின்றி நடமாடுகிறாள் என்று வியப்பும் ஆச்சரியமும் மேலிட, அந்தச் சிறுமியை அணுகி, ""எப்படியம்மா இந்தக் காட்டிற்குள் தனியாக வந்தாய்'' என்று விசாரித்தார். அந்தச் சிறுமியோ மிகத் தெளிவாகப் பேசினாள். ""இந்தக் காட்டுவழியே உறவினர்கள் ஊருக்குப் போக என் பெற்றோருடன் வந்தேன். வரும் வழியில் பாதை தவறிவிட்டேன். பெற்றோர் சென்ற பாதை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறேன்'' என்று சொன்னாள். அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர்,

""பயப்படாதே, என்னோடு வா'' என்று தமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சிறுமியோடு ஊருக்கு வந்தபிறகு, "இப்படிப்பட்ட சிறுமியை காட்டில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளோம். அவளது பெற்றோர், உறவினர்கள் யாராவது இருந்தால் வந்து அழைத்துப் போகலாம்' என்று அக்கம்பக்க ஊர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பினார். ஆனாலும் யாருமே அக்குழந்தையைத் தேடி வரவில்லை. "சரி, இவள் யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் இருக்கட்டும்; இனிமேல் இது நம் வீட்டுக் குழந்தை. நாமே வளர்ப்போம்' என்று முடிவு செய்து, அந்தச் சிறுமிக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.

அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அந்தக் குடும்பத்தில், வனத்தில் கண்டெடுத்த நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தேவதையாக வளர்ந்து பருவ வயதை அடைந்தாள்.

இந்நிலையில் நாச்சியாரை மகள்போல் வளர்த்து வந்தவர், திடீரென்று உடல்நலம் கெட்டு இறந்து
போனார். சேத்தியார் மறைவு அப்பகுதி மக்களை கடுந்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது உடலைத் தகனம் செய்யக் கொண்டு போனார்கள். அப்போது நாச்சியார், ""நானும் இடுகாட்டிற்கு வருவேன்'' என்றாள். ஊர்ப்பெரியவர்கள், ""பெண் பிள்ளைகள் வரக்கூடாது'' என்றார்கள். ""காட்டிலே தனியாக நின்ற என்னை இங்கு கொண்டு வந்து வளர்த்த தந்தை அவர்.

அப்படிப்பட்டவரின் இறுதிச் சடங்கின்போது நானும் உடனிருந்து பார்க்கவேண்டும்'' என்று பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி நாச்சியாரையும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் முழுவதும் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றாள் நாச்சியார். அவளைத் தடுத்து, ""நீ வாழவேண்டிய பெண். உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை'' என்று ஊர்ப்பெரியவர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் நாச்சியார் மிகப் பொறுமையாக- நிதானமாக- உறுதியோடு சொன்னாள். ""நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரண பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள். மற்ற பெண்கள்போல் கணவன்- மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்று சாதாரண வாழ்க்கை வாழ வந்தவள் அல்ல நான். உங்களையும் உங்களைப் போன்ற மக்களையும் தெய்வமாக இருந்து வாழவைக்க வந்தவள் நான். உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் நான் சொல்வதுபோல செய்யுங்கள். ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியபடி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து பஸ்பமாக மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் தீயில் எரியாமல் நீங்கள் எப்படி என் கையில் கொடுத்தீர்களோ அதேபோன்று இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்குப் புரியும்.

அதன்பிறகு என்னை தெய்வமாக நினைத்து வணங்குங்கள். உங்களுக்கு எல்லா நலமும் கிடைக்கச் செய்வேன்'' என்று நாச்சியார் சொல்லிமுடித்தாள்.

ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு நாச்சியார் தீயில் பாய்ந்தாள். நாச்சியார் மறைந்து போனாள். அவள் சொன்னதுபோலவே, தாம்பூலத் தட்டும் அதிலிருந்த பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்த அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியார் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவழியினர் வழிபட்டு வந்தார்கள்.

# chiyan vasanth

Saturday, December 28, 2013

திருப்பாவை

ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்

 தனியன்கள்

  நீளாதுங்கஸ்தநகிரிதடீஸப்தமுத்போத்யக்ருஷ்ணம்
பாரார்த்யம்ஸ்வம்ச்ருதிசதசைரஸ்ஸித்தம்த்யாபயந்தீ -
ஸ்வோச்சிஷ்டாயாம்ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்யபுங்க்தே
கோதாதஸ்யைநம்இதமிதம்பூயஏவாஸ்துபூய:
 

  அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
 

  சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
 

474 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
1

475 வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
2

476 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
3

477 ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
4

478 மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
5

479 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
6

480 கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
7

481 கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்
8

482 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்
9

483 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
10

484 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
11

485 கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
12

486 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
13

487 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
14

488 எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
15

489 நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
16

490 அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.
17

491 உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
18

492 குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
19

493 முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
20

494 ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
21

495 அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
22

496 மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
23

497 அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
24

498 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
25

499 மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
26

500 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
27

501 கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
28

502 சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
29

503 வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
30

  கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.
 

  திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே
 


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



Sunday, December 1, 2013

••• நாளை சோமவார பிரதட்சிண அமாவாசை : 2 .12.2013 •••

••• நாளை சோமவார பிரதட்சிண அமாவாசை : 2 .12.2013 •••
••• திங்கட்கிழமை அன்று அமையும் அமாவாசைக்கு , “ பிரதட்சிண அமாவாசை” என்று பெயர் . இந்நாளில் அரச மரம் , அரசுடன் இனைந்த வேப்ப மரம் , அரசு+அத்தி மரம் + பனை மரம் இனைந்த தலங்களில் , இதனைச் சுற்றிக் குறைந்தது 16 ,32 , 64 ,108 முறை “விருட்சப் பிரதட்சிணம்” ஆற்றுவது , பன்மடங்காய்ப் பலங்களைப் நல்கும் . பிதுர் தோஷங்களை அகற்றும் . உற்றம் , சுற்றத்தில் உள்ள மனக் கசப்புகளைத் தீர்த்து நல அமைதியைத் தரும் .
••• மிகக் கொடூரமாய்த் தீய செயல்களைப் புரிந்து பூமியில் வாழ்ந்த பாவிகளுக்கு , அவர்கள் தற்போது வீழ்ந்து கிடக்கும் அதல பாதாள நரக லோகங்களிலும் கூட தக்க பிரிகார நல்வழி முறைகள் வார்க்க வல்லதுமே சோமவார அஸ்தவப் பிரதட்சிண பூஜைப் பலன்கள் .,
••• முன்னோர்களின் தீவினைக் கர்மங்கள் ,நடப்பு சந்ததியினனரத் தாக்காது தற்காத்துக் கொள்ளவும் சோமவார பிரதட்சிண அமாவாசை வழிபாடு , நல்ல காப்பு ரட்சா சக்தி மாமருந்தாம் .
••• ஏனனய விளக்கங்களையும்., ஸ்ரீ ராமர் ஆதி சேது கரையில் பூஜித்த “த்ரிபுண்ட்ர சாரவிருட்சம்” பற்றியும் டிசம்பர்2013 மாத ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் காணவும் . •••
===============================================
••• குறிப்பு : வருடத்திற்கு ஒர்/இரு முறையோ அல்லது இரண்டு , முன்று வருடத்திற்க்கு ஒரு முறையோ மட்டும் தாம் திங்கட்கிழமை அன்று அமாவாசை அமையும் .., ஆக நாளைய [2.12.2013] நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்...,
•••• இந்நாளில் அரச மரம் , அரசுடன் இனைந்த வேப்ப மரம் , [அரசு+அத்தி மரம் + பனை மரம்] இனைந்த தலங்களில் , இதனைச் சுற்றிக் குறைந்தது 16 ,32 , 64 ,108 முறை “விருட்சப் பிரதட்சிணத்தை முடிந்த வரை ஆற்றுங்கள் முடிந்தால் 1008 முறை பிரதட்சணம் செய்யுங்கள் ..,
•••ஆன்ம பக்குவ நிலைகளிலும் “ASTRAL TRAVEL”
பயணத்திற்கு /இது பற்றிய அறிவுப்பூர்வமான அறிவு துலங்க“ பிரதட்சிண அமாவாசை” மிகவும் முக்கியமானதாம் ...,
••••[“ASTRAL TRAVEL”]இது பற்றிய ஏனைய திவ்ய விளக்கங்களை ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் 1998 ஆகஸ்ட் ,செப்டம்பர் ,அக்டோபர் இதழ்களில் காண்க .,••••

Saturday, November 30, 2013

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!
1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

" காலை கடம்பர் ,மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார் "
என்பதாய் முன்று ஸ்தங்களிலும் எந்நாளிலும் குறிப்பாய் .கார்த்திகை மாத ஞாயற்றுக்கிழமைகளில் பக்திப் பூர்வமாய் ஒரே தினத்தில் ஆற்ற வேண்டிய மூன்று தல தரிசன வழிபாட்டு முறை ஒன்றுண்டு.
***திருச்சி-கரூர் இடையில் குளித்தலையும் , முசிறி அருகே ஈங்கோய் மலையும் உள்ளன., மிகவும் சக்தி வாய்ந்த பாதயாத்திரை இது.
***முந்தைய யுகமொன்றில் முத்கல மாமுனி எனும் உத்தம மஹரிஷி அகஸ்தியரின் அறிவுரைப்படி இதனை நித்தய வழிபாடாய் பன்னெடுங்காலம் ஆற்றி வந்தார் .
• முத்கல கோத்திரம் எனும் வகை தற்போதும் உண்டு. முத்கல புராணம் என்பதாய் பிரபஞ்சத்திலேயே ஒரு மஹரிஷியின் பெயரிலேயே ஒரு புராணம் அமைந்திருக்கும் ஒரே மாமுனியே முத்கலர்.
-- ஜுன்2012 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து தொகுத்தது
===============================================
1) காலை (கடம்பவனேஸ்வரர் ) இருப்பிடம் :- கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
2) மதியம் (ரத்தினகிரீஸ்வரர்) இருப்பிடம் - கரூர் - திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது.
நகரின் மத்தியில் கோயில் . திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி எனப் பல பெயர்களை தாங்கியிருக்கும் சக்தி வாயிந்த தலம் ., கிரிவலம் வருதல் மிகச் சிறப்பு
3) மாலை (ஈங்கோய் மலை) இருப்பிடம் :- முசிறி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள இவ்வூருக்கு டவுன்பஸ்சில் செல்லலாம். மாலை 6மணி வரை தாம் திறந்திருக்கும்.,
குறிப்பு : கடம்பர்-ஐயர்மலை நடந்து விடலாம் . ஈங்கோய் சற்று தொலைவில் உள்ளது..,சென்ற வருடம் யாம் முயற்ச்சித்து பார்த்தோம் .. காலை 6மணிக்கு கடம்பர் தலத்தில் தரிசனம் செய்து விட்டு ஐயர் மலை (ஏறி) தரிசனம் செய்து கிரிவலம், வந்து பின்பு மீண்டும் குளித்தலை நோக்கி பாதி தூரம் வருவதற்குள் மணி 4ஆகி விட்ட்து.. பின்பு அங்கிருந்து பேருந்தில் ஈங்கோய் சென்று வழிபட்டோம் .. அவரவரால் முடிந்தவரை முயறச்சி செய்து பார்க்கலாம்.

Sunday, November 24, 2013

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமை

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமையை, அவரின் கருணையை உலகம் இன்னும் முழுமையாக உணரவில்லை. திருவாசகத்திற்கும் இதுவரை யாரும் முறையான உரை எழுத முடியவில்லை,காரணம்,இறைவனிடம் உருகி உருகி நெருங்கும்பொது அவன் அருளால் அது புலப்படும்.அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பதும் மாணிக்க வாசகப்பெருமானின் அனுபவ வாக்காகும்.மரணமிலாப் பெருவாழ்வு அடைய திறவுகோல் திருவாசகமே..

திருப்பெரும்துறை என்னும் ஆவுடையார்கோயிலில் எம்பெருமான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர், மனித உருவில் வந்து மாணிக்கவாசகப் பெருமானுக்கு காட்சியருளி மெய்ப்பொருள் உணர்த்தி ஆட்கொண்டருளினார்கள். குருவாய் இறைவனே வந்து அருளியதால் இதுவே உலகின் குரு தலமாகும்.

குருவின் திருவருள் பெற்றின்புற, பல பிறவிகளில் ஏற்பட்ட குருவின் சாபங்கள் நீங்கி வாழ்வு நலம் பெற, ,நவகோள்களின் தோஷங்கள் நீங்கிட, குறிப்பாக குரு கிரகத்தின் தோஷங்கள் நீங்கி,உங்கள் வாழ்வு சிறக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் இவ்வாலயம் சென்று பக்தியோடு அருள்மிகு ஆத்மநாத சுவாமிகளையும், சத்குரு மாணிக்கவாசக பெருமானையும் பக்தியோடு,மனமுருகி வழிபட்டு வாருங்கள்.வாழ்வில் வளம் சேர்வதை அனுபவத்தில் உணருங்கள்.

புதுக்கோட்டை அல்லது தஞ்சாவூரிலிருந்து, அறந்தாங்கி மார்க்கமாக ஆவுடையார்கோவில் செல்லலாம். புதுக்கோட்டையிலிருந்து 45 கி.மீ தூரம்தான்.

நன்றி: தர்மலிங்கம் அடிகளார்

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!

*தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.


*புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

*தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

*மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

*மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்:


*தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

*எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

*வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.