விநாயகப் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார் அவ்வைபிராட்டி. அந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,
சேரமானும் ஆகாய மார்க்கமாக திருக்கயிலாயத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், அவ்வையையும்
தன்னுடன் வருமாறு அழைத்தனர்.
http://aanmeegamarivom.blogspot.in/
அனைத்திற்கும் ஆதியாக விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் தலத்திற்குச் செல்ல யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆகையால் விநாயகரின் பூஜையை விரைந்து முடிக்க எண்ணினான் அவ்வை. விநாயகப்பெருமானோ, 'அவ்வையே என் மேலான வழிபாட்டை நீ மெதுவாகவே செய்!
http://aanmeegamarivom.blogspot.in/
சுந்தரருக்கும், சேரனுமானுக்கும் முன்னதாகவே, உன்னை நான் திருக்கயிலாயம் கொண்டு சென்று சேர்ப்பேன்' என்று உறுதியளித்தார். அப்போது அவ்வைபிராட்டி, 'சீதக்களபச் செந்தாமரைப்பூம், பாதச் சிலம்பும் பல இசை பாட' என்ற விநாயகர் அகவலைப் பாடி பொறுமையாக ஆனை முகனை ஆராதனை செய்தார்.
அவ்வையின் அமுதத் தமிழ் மொழியில் மயங்கிப் போன விநாயகர், அவரது வழிபாடு முடிந்ததும் தனது துதிக்கையால் அவ்வையை தூக்கிச் சென்று, சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாகவே திருக்கயிலையில் சேர்த்தார்.Ganesan Pondicherry

No comments:
Post a Comment