Friday, October 11, 2013

விஜயதசமி வழிபாடு


* வெற்றியின் சின்னமாகத் திகழும் துர்க்கையே! மகிஷனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டியவளே! வேதம் போற்றும் விமலையே! கல்வியை அருளும் கலைமகளாகத் திகழ்பவளே! கல்விச் செல்வத்தைத் தந்தருள்வாயாக! * மும்மூர்த்தியும் போற்றும் உமையவளே! திருமாலின் தங்கையே! கொற்றவையே! திரிசூலத்தைக் கையில் தாங்கியவளே! பதினெட்டு கரங்களைக் கொண்டவளே! நம்பியவரைக் காப்பவளே! எங்களுக்கு செல்வ வளத்தைத் தருவாயாக! * தீமையைப் போக்குபவளே! ஸ்கந்தமாதாவே! மூவுலகையும் காப்பவளே! ஆதிபராசக்தி தாயே! எங்களுக்கு தைரியத்தையும், வீரத்தையும் அருள்வாயாக! * மகிஷாசுரமர்த்தினியே! அபயம் அளிப்பவளே! எட்டுத்திசையும் போற்றும் தயாபரியே! சிங்கத்தின் மீது வருபவளே! மேகம் போல அருள் பொழிபவளே! எங்களுக்கு எப்போதும் துணை நிற்பாயாக.

நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் 8ஆ‌ம் 12.10.2013


http://aanmeegamarivom.blogspot.in நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் 8ஆ‌ம் 12.10.2013 நாளான து‌ர்காஷ‌்ட‌மி எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். து‌ர்‌கை‌க்கு உக‌ந்த அஷ‌்ட‌மியாகு‌ம். ச‌னி‌க்‌கிழமை து‌ர்கா‌ஷ‌்ட‌மி வரு‌கிறது. நே‌ற்று செ‌ய்த அல‌ங்கார‌த்‌தி‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் செ‌ய்து இ‌ன்று நர‌‌சி‌ம்ஹ‌ி வடிவ‌த்‌தி‌ல் தே‌வியை அல‌ங்க‌ரி‌த்து பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். கரு‌ம்பை கை‌யி‌ல் இணை‌க்க வே‌ண்டு‌ம். கொலு பொ‌ம்மைக‌ளி‌ல் பு‌த்தக‌ம், பேனா, ‌வீணை, தாமரை மல‌ர், அ‌ன்ன‌ப் பறவை இட‌ம்பெற‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம். சும்பன் தூதனுப்பியது போல் சண்டிகா தேவியும் சும்பனிடம் சிவபெருமாளையே தூதாக அனுப்பி அசுரர்கள் இனி தேவர்களின் செயலில் தலையிடக்கூடாதென்றும், மீறினால் போரில் தேவியின் ஆயுதங்களுக்கு இறையாக வேண்டியது தான் என்று தெரிவிக்கச் செய்ததனால் "சிவதூதி" என்ற பெயரையும் பெற்றாள். சும்பனின் மருமகனான இரத்தபீஜன் என்ற கடும் அரக்கன் முதலில் போரில் மாண்டான். இவனுடைய இரத்தத் துளி விழும் இடத்தில் மீண்டும் ஒரு அரக்கன் உருவாவான். இது அவன் பெற்ற வரம். சண்டிகாதேவி தன் சூலத்தால் இரத்தபீஜனை அடிக்க, பெருகி வந்த இரத்தம் சாமுண்டிதேவியின் வாய்க்குள் புகுந்தது. மேலும் மேலும் தேவியின் ஆயுதங்களால் தாக்கப்பட்ட இரத்தபீஜன் மாண்டொழிந்தான். அவனுடைய இரத்தத்திலிருந்து தோன்றிய அரக்கர்களும் மாண்டனர். நர‌சி‌ம்ஹ‌ி அ‌ம்மனு‌க்கு உ‌ரிய பாட‌ல்களை ‌பு‌ன்னாகவரா‌ளி ராக‌த்‌தி‌ல் பாட வே‌ண்டு‌ம். மாலை 6 ம‌ணி முத‌ல் இரவு 8 ம‌ணி‌க்கு‌ள் கூ‌ட்டு ‌பிரா‌ர்‌த்தனை செ‌ய்வது ‌சிற‌ந்தது. ச‌னி‌க்‌கிழமையாதலா‌ல் ‌‌சிவ‌ப்பு, வெ‌ளி‌ர் ‌சிவ‌ப்பு, ‌பிரவு‌ன் வ‌ண்ண‌ம் கல‌ந்த ஆடைகளை அ‌ணி‌வி‌க்கலா‌ம். செ‌ம்பரு‌த்‌தி, ரோஜா ம‌ற்று‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற மல‌ர்களை மாலையா‌க்‌கி அ‌ணி‌வி‌க்கலா‌ம். பரு‌ப்பு பாயாச‌த்தை நைவே‌திய‌ம் செ‌ய்யலா‌ம். சு‌ண்ட‌ல், அவ‌ல், பொ‌ரிகடலை, ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து கொலு‌வி‌ற்கு வருபவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌க்கலா‌ம்

நவராத்திரி திருநாள் 7 ஆம் நாள் 11.10.2013


நவராத்திரி திருநாள் 7 ஆம் நாள் 11.10.2013 அம்மனின் அவதாரம்/அலங்காரம்-ஞான சக்தி ரூபம் மான சரஸ்வதி தேவி பூ -தாழம்பூ&தும்பை இலை-தும்பை பழம்- பேரீட்சை நைவோத்தியம்-எலுமிச்சை சாதம் பயிறு- கடலை பருப்பு &சத்துமாவு கோலம்- சங்கு கோலம் இடவும் ராகம்- பிலஹரி (மேலும் தகவல்களுக்கு

Wednesday, October 9, 2013

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி?


திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம். ஆலங்குடி (குரு) கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில்அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்ப வேண்டும். திருநாகேஸ்வரம் (ராகு) திருநாகேஸ்வரம் (ராகு) கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும். சூரியனார் கோவில் (சூரியன்) சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில்மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும். கஞ்சனூர் (சுக்கிரன்) சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும்.அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும். வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும். திருவெண்காடு (புதன்) வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும். கீழ்பெரும்பள்ளம் (கேது) திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தி தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள். திருநள்ளாறு (சனி) நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம். ithu sariyanathu alla நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி? enbathu matume

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா


திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்

திருச்செந்தூரின் கடலோரத்தில்


திருச்செந்தூரின் கடலோரத்தில்

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
(சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா)

முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன்

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!


சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

(சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!)

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!

விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

(சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!)

மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது



முத்தைத்தரு பத்தித் திருநகை


முத்தைத்தரு பத்தித் திருநகை

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.



மனமே முருகனின் மயில் வாகனம்


மனமே முருகனின் மயில் வாகனம்

மனமே முருகனின் மயில் வாகனம்

மனமே முருகனின் மயில் வாகனம் - என்
மாந்தளிர் மேனியே குகன் ஆலயம்
மனமே முருகனின் மயில் வாகனம் - என்
குரலே செந்தூரின் கோவில் மணி
குரலே செந்தூரின் கோவில் மணி - அதில்
குகனே சண்முகனே என்றொலிக்கும் இனி!

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்


குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை

(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

(குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் - அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்)

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த
வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படைவீடு

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள்
தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண
திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள்
கன்னித் தமிழர் திருத் தணிகை மலை

(அறுபடை வீடு கொண்ட திருமுருகா)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை

அழகென்ற சொல்லுக்கு முருகா


அழகென்ற சொல்லுக்கு முருகா

பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா

ggg


சரஸ்வதி ஸ்தோத்திரம் மகாலட்சுமி ஸ்தோத்திரம் நவராத்திரி வழிபாடு அம்மன் போற்றி மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

விளக்கேற்றும் பலன்கள் என்ன?



காலை 6 மணி முதல் 7 மணி வரை  வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.

வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.

ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .

ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும்.

கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும்.

மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .

பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்