Tuesday, March 17, 2015

உலகின் சிவன் கோயில்கள்:


உலகின் சிவன் கோயில்கள்:
--------------------------------------------------

மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள்
அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம்,
இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப்
பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள்
மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம்
செய்த காலத்தில் இருந்து சற்றே
மேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை
பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய
கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு
இருந்ததற்கான அடையாளக் கூறுகள்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில்
இருந்தே சைவத்தின் தொன்மையை நாம்
அறிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும்
இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன்
கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும்
1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால்
கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கோயில்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிஉற்ற
நிலையில் காணப்படுகின்றன.டெல்கால் என்ற
ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட
திருவாசகம் ஓதப்படுகிறது.இங்கே
இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால்
ஏதோ மந்திரம் போல் உச்சரித்து
வருகிறார்கள்.மேலும் ஜாவாவில் உள்ள
பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்
கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக்
குறிக்கும் சிற்பங்கள் உள்ளன ,.

சுமத்ராவில் அழிபாடுற்ற சிவன் கோயில்
உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம் ,கணபதி
சிலை,நந்தி சிலை,ஆகியவை
இருக்கின்றன.போர்போநியாவில் உள்ள
மலைகுகையில் சிவன் ,விநாயகர் சிலைகள்
உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியாவிலும்
சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன.
சியாமில் பழைய சிவன்கோயில்
இருக்கிறது.இந்த கோவிலில் இப்போதும்
பொங்கல் விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில்
6000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட
சிவாலயங்களும், அவற்றின் இடிபாடுகளும்
கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த களிமண்
எட்டில் சிவா என்ற பெயர் காணப்படுகிறது.
பாபிலோனியர்கள் தங்கள் கடவுளுக்கு இட்டு
வழங்கும் பெயர்களில் எல்சடை என்ற பெயரும்
உள்ளது. இச்சொல் சூரியனைப்போல சிவந்த
சடையை உடையவன் என்று பொருள்
தரும்.இரண்டு புறங்களிலும் முத்தலை
சூலமும்,கையில் மழுவாயிதமும் கொண்ட
சிவபெருமான் காளையின் மீது நிற்பதாக
இருக்கின்ற சிலை ஒன்று கிடைத்திருக்கிற
து.மேலும் பாபிலோனியர்களின் மாத
பெயர்களில் ஒன்று சிவனின் பெயரைக்
கொண்டதாக இருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன்சிலையும் ,சிவன்
உருவம் பொறிக்கப்பட்ட வெண்கலத்தட்டும்
கிடைத்திருக்கிறது. இந்தத் தட்டில் உள்ள
உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று
கூறுகின்றனர்.இவ்வுருவம் வலக்கையில்
மழுவும் ,இடக்கையில் ஆருமுனைகளைக்
கொண்ட இடியேறுந்தாங்கியபடி இட பத்தின்
மீது நிற்பதைப்போலப் பொறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சிவன்
என்று பெயர் வழங்கி வருகிறது.இங்கு வாழும்
மக்கள் அமன்யூ என்ற கடவுளை
வணங்குகிறார்கள்.அந்தக் கடவுளுக்கு நந்தி
வாகனம் இருக்கிறது.கிரேக்க நாட்டில்
சிவலிங்கங்களைப் பொது இடங்களில்
எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி
வைத்திருக்கின்றனர். பௌத்த மதத்தில் ஒரு
பிரிவான ஷிண்டோயிசம் என்பதில்
சிவலிங்கத்திற்குப் பெருமதிப்பு தரப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக இமயமலைக்கு
அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத்
தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால்
ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு
ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.

மேலே கூறப்பட்ட சான்றுகளின் மூலமாக
உலகின் பல்வேறு இடங்களிலும்
சிவன்கோயில்களும், சிவவழிபாடும்,சிவனின்
பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும்
விழாக்களும் நடந்து வந்தன என்பதை அறிந்து
கொள்கிறோம்.உலகமெங்கும் சிவ வழிபாடு
பரவிக் கிடந்தது என்பது யாராலும் மறுக்க
முடியாத உண்மை.

இந்தியாவில் பல சிவன் கோயில்கள்
இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற
சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274
ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன.
மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ச்சுனனைப்
பார்த்து எவன் ஒருவன் அனுதினமும் சூரியன்
உதிப்பதற்கு முன்னால் எழுந்து
மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம்
செய்கிறானோ அவன் இந்த உலகில்
எல்லாவகையான இன்பங்களையும் அடைவது
நிச்சயம் என்கிறார்.

"ஓம் நமசிவாய " என்ற சிவா நாமத்தை
அன்போடு உச்சரித்தாலே பல பிறவிகளில்
செய்த பாவம் விலகும்.சிவன் கோயிலில்
எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத்
தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத
புண்ணியம் பெற்ற சாதாரண
எலி,மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப்
பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.இந்த
உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல
வழியைப் பெறுவதற்கு துணையாக
சிவமந்திரம் ,சிவதரிசனம் ,சிவவழிபாடு ஆகிய
மூன்றுமே ஆகும்.இவை மூன்றும்
ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும்
இன்றியமையதாவை.

எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன்
சிவபெருமான் .எல்லாம் சிவமயம், எங்கும்
சிவமயம்,எதிலும் சிவமயம் என்பதே ஆன்றோர்
கொள்கை.

செல்வமே சிவபெருமானே - நூலிலிருந்த .

No comments:

Post a Comment