Saturday, August 23, 2014

வானப்பிரஸ்த தர்மம்

வானப்பிரஸ்த தர்மம்
அறுபது வயதுக்கு மேற்பட்டு பத்தினியுடனோ அல்லது தனியாகவோ காட்டுக்குச் சென்று பூசைகள், உபாசனைகள் செய்வது, முனிவர்களுக்குச் சமமான வாழ்க்கையை மேற்கொள்வது “வானப்பிரஸ்த தர்மம்” எனப்படுகிறது.
பதினாறு வகை தீபங்கள்
தீபங்களில் மொத்தம் 16 வகை உண்டு. அவை; 1. தூபம், 2. மஹாதீபம், 3. அலங்கார தீபம், 4. நாக தீபம், 5. விருட்சப தீபம், 6. புருஷா மிருக தீபம், 7. ஓல தீபம், 8. கமடதி தீபம், 9. கனு தீபம், 10. வியாண்யர தீபம், 11. இம்ம தீபம், 12. துவஜ தீபம், 13. மயூர தீபம், 14. ஐந்தட்டு தீபம், 15. நட்சத்திர தீபம், 16. மேரு தீபம்.
வைதீகச் சடங்குகளில் தர்ப்பைப் புல்
இந்து சமயத்தில் அனைத்து வைதீகச் சடங்குகளுக்கும் தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதன் பின்னனியாவது, மனிதனின் ஆத்மா என்பது வித்து இல்லாமல் ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் விதமாக இந்து சமயத்தில் வித்தே இல்லாமல், அதாவது விதை போடாமல் முளைத்து வளர்கின்ற தர்ப்பைப் புல்லைச் சடங்குளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
நவ அபிசேகங்கள்
இந்து சமயத்தில் இறைவனுக்குச் செய்யப்படும் அபிசேகங்கள் ஒன்பது வகைப்படுகின்றன.அவை; 1. பஞ்சாமிருதம், 2. பால், 3. தயிர், 4. நெய், 5. தேன், 6. சர்க்கரை, 7. சந்தனம், 8. மங்களோதகம் (மஞ்சள் குங்குமம் கலந்தது), 9. சுத்தோதகம் (மகாபிசேகம்). இவை நவ அபிசேகங்கள் எனப்படுகின்றன.
பஞ்சோபசார பூசை
இறைவனை விக்கிரகத்திலோ அல்லது திருவுருவப்படத்திலோ எழுந்தருளச் செய்து, 1. சந்தனம் வைத்தல், 2. மலர்களால் அர்ச்சனை செய்தல், 3. தூபம் போடுதல், 4. தீபாராதனை காட்டுதல், 5. நைவேத்தியம் படைத்தல் எனும் ஐந்து விதங்களில் வழிபடும் பூசை “பஞ்சோபசார பூசை” எனப்படுகிறது.

No comments:

Post a Comment