Monday, August 18, 2014

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

துளசி
         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
சந்தன மரம்
              சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.
அத்திமரம்
                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.
மாமரம்
               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.
அரசமரம்
              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.
ஆலமரம்
                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.
மருதாணிமரம்
                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
ருத்ராஷ  மரம்
                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
ஷர்ப்பகந்தி
                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.
நெல்லி மரம்
                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
வில்வமரம்
                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
வேப்பமரம்
                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
கருவேல மரம்
                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.
காட்டுமரம்
                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.
அசோக மரம்
                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
புளிய மரம்
                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.
மாதுளம் மரம்
                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி
மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி
தானே விரும்பி எடுத்துக்கொண்ட
குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
எந்த யோகப்பயிற்சிமுறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட
தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.
எல்லா யோகிகளுக்கும் யோகமுதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்
என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன
மேலும் சில சூபி ஞானியாரின்
பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,
சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர் களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி
இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது
விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . 
ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.
இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.
இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்
. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது.
இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்
நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
பிரதி மாதம் அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு செந்தில்குமார்
திருநெல்வேலி cell :98420 78733

Sunday, August 17, 2014

கேள்விக்கு சரியான பதில்

வாயில் விட வேண்டிய பாலை சிலையிலும், மண்ணில் பட வேண்டிய மூத்திரத்தை வாயிலும் ஹிந்து மதத்தில் உள்ள முட்டாள்கள் விட்டு கொள்கிறார்கள் என்று சொறியாருக்கு சொம்பு துக்கும் க்ரூப் கேட்கிறார்கள். அதுமட்டும் இல்லை. வெறும் கல்லிற்கு எதற்கு இவ்வளவு நகை, பல நூறு ஏக்கரில் இடம் என்று இந்த சொறியார் அன்ட் கோ க்ரூப் சிலர் தொடர்ந்து எனக்கு msg அனுப்பி டார்ச்சர் பண்ணிண்டு இருக்காங்க. நானும் எத்தினை பேருக்கு தான் பதில் சொல்றது. நாராயணா. இந்த கொசு தொல்லைங்க தாங்க முடியலடா. இதுவரை அவ்வாறு கேள்வி கேட்டவர்கள், கேட்க போகிறவர்களுக்காக இந்த பதிவு.

Saturday, August 16, 2014

1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்

27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன். 
நாளை 17.08.2014 தேய்பிறை அஷ்டமி

Friday, August 15, 2014

தீய_பழக்கங்களில், தவறான_தொடர்புகளில்_இருந்து_விடுபட..

தீய_பழக்கங்களில்
#தவறான_தொடர்புகளில்_இருந்து_விடுபட

நமக்கு அறிமுகமான அல்லது குடும்பத்தில் யாரேனும் மது,சூதாட்டம் ,போதைப்பொருள் அல்லது தவறான காமத்தொடர்பு போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அவர்களை நேர்வழிக்கு வரச்செய்ய சக்தி வாய்ந்த இந்த தாந்த்ரீகப் பரிகார முறையைப் பின்பற்றி நலம் பெறுங்கள்.

கல்வியில்_சிறக்க... குருவந்தனம்!

கல்வியில்_சிறக்க... #குருவந்தனம்!


குழந்தைகளை சூரிய உதய காலத்தில் நீராடச் செய்து, அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக் குறி (திருநீறு அல்லது திருமண்) இடச் செய்து, மூன்று முறை திரியம்பகம் - மாம்ருதாத் மந்திரத்தைச் சொல்லச் சொல்லி, பிறகு துளசி தீர்த்தத்தைப் பருகக் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக... ஸ்ரீஞானசரஸ்வதி மற்றும் ஸ்ரீயாக்ஞவல்கியரின் திருவுருவப் படத்தை அலங்கரித்து, பூஜையறையில் கிழக்குமுகமாக வைத்துக்கொள்ளுங்கள். முதலில் 'ஸ்ரீவித்யா கணபதயே நம’ என்று மூன்று முறைச் சொல்லி அருகம்புல் சமர்ப்பித்து பிள்ளையாரை வழிபட வேண்டும்.

பின்னர் கலைவாணி குறித்த துதிப்பாடல்கள் சொல்லி வழிபடுவதுடன், 'ஸ்ரீயாக்ஞவல்கியர் வித்யா துதி’யையும், மூன்று முறைச் சொல்லி வணங்கவேண்டும். பிறகு, தூப-தீப காட்டி, தேங்காய் - பழம் தாம்பூலம் மற்றும் பால் சாதம் சமர்ப்பித்து, மீண்டும் கற்பூர ஆரத்தி காட்டவேன்டும். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.
ஸ்துதி

ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:

விஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:

வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே
கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:

ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:
ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:

க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்

யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே

(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,
கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேரட்டும்

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம் ...

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம் ...

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம், ஒரு ஒற்றை வில்வ இலை, சிவபூஜையில் ஓராயிரம் மலர்களுக்கு சமமாகிறது. இந்த வில்வம் ஒரு கல்ப மூலிகையும் கூட உஷ்ணம் தப்பதில் ...வில்வம் முன்னிலை வகிக்கறது. இதற்கு நேரானது “ துளசி “ இது உஷ்ணாகாரம் இதன் குணம். உடலின் வெப்பத்தைத் தணிப்பதில் வில்வம் நிகரற்றது. ஒரு ஆச்சரியம்... சிவமாகிய பரமன் அழித்தல் தொழில் புரிபவன். அழிப்பது என்பது ஒரு வினை. எதை அழித்தாலும் அது ஒன்றாகி இரண்டாகிப் பிரிஉம் இறுதியில் சாம்பலே மிஞ்சும். இந்த விளைவால் வெப்பம் உருவாகும். அணு விஞ்ஞானம் இதன் அடி ஒற்றியே உள்ளது. சிவத்தைத் தியானிக்கும் மனதிலும் காம, குரோத, லோப, மத, மாச்சரியங்கள் அழியும். அதனால் உருவாகும் வெப்பம் தணியவே வில்வம் முன் நின்றது. வில்வார்ச்சனை என்பது வெப்பம் தணிப்பது. அகத்திலும், புறத்திலும் வெப்பம் தணிய வைப்பது. உடலில் உயிரும் வெப்பச் சுரளாகவே உள்ளது. வெப்பத்திடம் இயக்க கதியே பிரதானம். அது குளிர்ந்தால் இயக்கமற்ற சமநிலை வாய்க்கிறது; சிவமும் வில்வமும் இப்படிப் பல சூட்சுமங்களைக் கொண்டு விளங்குவதை என்னென்பது

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்


கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்
கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார்.

Thursday, August 14, 2014

எலும்புக் கூடான பிருங்கி முனிவர்

காளிகாம்பாள் கோவிலில் காமடேசுவரர், அருணாசலேசுவரர், நடராசர் ஆகியோர் திருச்சந்நிதிகளும் உள்ளன. நடராசப் பெருமாள் திருச்சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் எலும்பும் தோலுமான உடலுடன் காட்சி தருகின்றார். 

இம்முனிவர் இவ்வாறு மூன்று கால்களுடன் காட்சியளிப்பது இத்தலத்திலும், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோவிலிலும் மட்டும் தான். இம்முனிவர் இவ்வாறு நடராசர் சந்நிதியில் மெலிந்து நின்றதற்குக் காரணம், அன்னை சக்தியை அவமதித்தார். அதனால் தமது சக்தியை இழந்து மெலிவடைந்தார். 

பெருந்துறவியான பிருங்கி முனிவர், துறவிகட்கெல்லாம் திருவருள் புரியும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். சக்தியின் அருள் தமக்குத் தேவையில்லை என்று கருதி, எப்போதும் சக்தி சிவனுடன் இல்லாத தருணம் நோக்கி, சிவன் தனித்திருக்கும்போது வழிபட்டு வந்தார். 

எனினும், ஒரு சமயம், சிவனும் சக்தியும் நெருக்கமாக இருக்கக் கண்டு, முனிவர் வண்டு உருவெடுத்து இருவருக்கும் இடையே துளைத்துக் கொண்டு சென்று வலம் வந்து சிவனை மட்டும் வழிபட்டார். அதைக் கண்ட அன்னை சக்தியானவள், இந்த வண்டு இவ்வாறு செய்கின்றதே என்று சிவத்திடம் வினவ, சிவன் அன்னையிடம் உண்மையைக் கூறினார். 

உண்மை அறிந்த உமாதேவியர், இனி நான் உங்களில் ஒரு பாகமாகக் கலந்திட வேண்டும் என்று தமது ஆவலைக் கூற, அதற்கு அண்ணல், அங்ஙனமாயின் நீ விரதம் இருக்க வேண்டும் என்று கூறியருளினார். அவ்வாறே அன்னை சக்தியும் விரதம் இருந்து-தவம் இருந்து-இறைவனோடு இரண்டறக் கலந்து விளங்க, இறைவன் அப்போது அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்தார். 

அர்த்தநாரீசுவரர் தலமே திருச்செங்கோடு அன்று அன்னை சக்தி கேதாரநாத்தில் தவம் இருந்தாள். அதனையொட்டியே, இன்றும் பெண்கள் தங்கள் கணவன்மாரைப் பிரியாதிருக்க வேண்டி கேதார கவுரி விரதம் இருந்து வருவதுண்டு. 

இவ்வாறு அன்னை சக்தியை முனிவர் அவமதித்ததன் காரணமாக, சக்தியிழந்து மெலிந்த மேனியோடு நடராசர் திருச்சந்நிதியில் விளங்குகின்றார். எனவே, அன்னை சக்தியாகிய காளிகாம்பாளை அவமதிப்போருக்கு, அவள் அருள் கிட்டாதது மட்டுமின்றி, அல்லல்களும் தீரும் என்பது உண்மை.

Wednesday, August 13, 2014

108ன் சிறப்பு தெரியுமா?

108ன் சிறப்பு தெரியுமா?
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

நமது முன்னோர்களின் கணித அறிவு

நமது முன்னோர்களின் கணித அறிவு

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?!

சிவஸ்தலம் பெயர் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)

சிவஸ்தலம் பெயர் : திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)
பஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.
சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இவ் ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்விடம் சிறப்பாக சொல்லப்படுகிறது.
அன்புக்குச்சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி; அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.
'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி ' பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.
அருச்சுணன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
மலையடிவாரத்தில் உள்ளது கோயில்; இம்மலை, 'கைலாசகிரி ' (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது. (இந்நிலப்பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் 'தொண்டைமான் நாடு ' என்னும் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் 'தொண்டமநாடு ' என்று வழங்குகின்றனர்.)
இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம் ' என்றழைக்கப்படுகிறது