Friday, September 19, 2014

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர் திருநாவலூர்,விழுப்புரம்

  English
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்:பக்தஜனேசுவரர் (ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்,
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:மனோன்மணி (நாவலாம்பிகை, சுந்தர நாயகி,
 தல விருட்சம்:நாவல்மரம்
 தீர்த்தம்:கோமுகி தீர்த்தம், கருட நதி
 ஆகமம்/பூஜை:காமிக ஆகமம்
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
 ஊர்:திருநாவலூர்
 மாவட்டம்:விழுப்புரம்
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 சுந்தரர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்


அஞ்சுங் கொண்டு ஆடுவார் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார் தஞ்சங் கொண்டார் அடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங் கொண்டார் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங் கொண்டார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.

- சுந்தரர்


தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 8வது தலம். 
 
   
 திருவிழா:
   
 திருநாவலூர் சிவாலயத்தில் காமிக ஆகமத்திலுள்ள விதிமுறைகளுக்கேற்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. சுந்தரர் ஜனன விழா - ஆவணி மாதம் - உத்ர நட்சத்திரம் நாளன்று - 1 நாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். சுந்தரரின் குருபூஜை விழா - ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா - 15 நாட்கள்- சித்திரைப் புத்தாண்டு நாளில் பஞ்சமூர்த்திகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கும் உபயதாரர்களின் உதவியுடன் அபிசேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று மனோன்மணியம்மனுக்குச் சிறப்பு வழிபாடும் உற்சவருக்கு ஊஞ்சல் உற்சவமும் நிகழும். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் துர்க்கை , மனோன்மணியம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால வழிபாடு நிகழும். இவ்வைபவங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்பர் வெள்ளி கிழமைகளில் சுக்கிரனுக்கும் அவர் தாபித்த லிங்கத்திற்கும் சிறப்பு பூஜைகள் நிகழும். வெண்ணெய் வெண்மை நிறமுடைய நெய், மொச்சை, வெண் பட்டாடை ஆகியவற்றுடன் வழிபாடு சிறப்பாக நடத்தப்படும். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற ஆடை மஞ்சள் மலர்கள் மஞ்சள் நிறக் கடலை ஆகிய பொருட்களுக்களை ப் படைத்து சிறப்பாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. தவிர பிரதோச நாட்களின் போதும் ,விசேச நாட்களின் போதும் கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர். 
   
 தல சிறப்பு:
   
 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர். இவர் சுந்தரருக்கு காட்சியளித்தவர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும். 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர் - 607 204, விழுப்புரம் மாவட்டம் 
   
போன்:
   
 +91- 94861 50804, 94433 82945, 04149-224 391. 
   
 பொது தகவல்:
   
 இந்த பக்தஜனேசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுந்தர மூர்த்தி சுவாமிகளை நமக்கு தந்த அரிய தலம். அம்பாள் விரிசடை கோலத்தில் தியான சொரூபமாக உள்ளார் என்பது சிறப்பு. பிரம்மா, விஷ்ணு, பார்வதி, சண்டிகேஸ்வரர், இந்திரன், அஷ்டதிக்பாலகர்கள், சூரியன், சுக்கிரன், கருடன், சப்தரிஷிகள் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

ஐந்தடுக்கு ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் கொண்ட இக்கோயிலின், முதல் பிரகாரத்தின் வலது பக்கத்தில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் சுந்தரருக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் கிழக்கு நோக்கி இருப்பார். ஆனால், இங்கு சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். இவர் இறைவனை தரிசிப்பதாக ஐதீகம்.

இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்த ஜனேசுவரரை வணங்கி தரிசித்த இறைவியாகிய மனோன்மணியை வணங்கி அம்பிகையின் சொல்படி சுக்ரபகவான் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோசம் நிவர்த்தி பெற்ற தலம்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர். 
 
   
 
பிரார்த்தனை
   
 சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது.

சுக்ரனுக்கு வக்ரம் தோசம் பரிகாரம் பெற்ற தலம். சுக்ர தோசம்,திருமண வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற விரும்புவோர் அவசியம் சென்று வழிபட வேண்டிய தலம்.

இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும். 
 
   
நேர்த்திக்கடன்:
   
 வெள்ளிக்கிழமைகளில் வெண்தாமரைப்பூவினாலும் வெண்பட்ட வஸ்திரம் அணிவித்து வெண்மொச்சை நிவேதனம் செய்து வெண்நெய்யால் தீபம் போட்டு வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் எண்ணப்படி எண்ணங்கள் தடங்கலின்றி நிறைவேறப் பெறுவார்கள். 3 மஞ்சள் 3 எலுமிச்சம் பழம் வைத்து குங்கும அர்ச்சனை செய்து பழத்தை பெற்றுச் சென்றால் மங்கல காரியம் நிறைவேற வாய்ப்புண்டு. சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். 
   
 தலபெருமை:
   
 பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.

ஈசனை மூலையில் நவகிரகங்களுக்கு அருகிலேயே சுக்கிரனாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்மார்த்த பூஜை செய்த லிங்கமான பார்க்கவீசுவரர் லிங்கம் உள்ளது. பார்வதிதேவி இங்கு எழுந்தருளி சிவனை பூஜித்து, அவர் மனம் மகிழ மணம் புரிந்தார். இரணியனை கொல்வதற்காக மகாவிஷ்ணு இங்குள்ள சிவனை பூஜித்து நரசிம்ம அவதாரம் எடுக்கும் ஆற்றலை பெற்றார்.

சிவப்பிரியர் என்பவர் சிவனை பூஜித்து சண்டிகேஸ்வரர் பதவி பெற்றதும், ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சினால் கருநிறமடைந்த கருடன், சிவனை பூஜித்து விஷம் நீங்கியதுமான தலம். கிருதயுகத்தில் விஷ்ணு வழிபட்ட லிங்கம், திரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரர் வழிபட்ட லிங்கம், துவாபரயுகத்தில் பிரம்மா வழிபட்ட லிங்கம், கலி யுகத்தில் சுந்தரர் வழிபட்ட லிங்கம் இங்குள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

சுக்கிரன் வழிபட்ட லிங்கம் :
 சுக்கிரன் இத்தலத்தில் ஒரு லிங்கத்தை தாபித்து அதற்கு முறைப்படி பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.சுக்கிரன் நிறுவிய லிங்கம் நவகிரகங்களுக்கருகே அமைந்துள்ளது. வெள்ளிக் கிழமைகளில் இந்த லிங்கத்துக்கு விசேச வழிபாடுகள் நடக்கின்றன.

நவகிரகங்களுள் சூரியன் மேற்கு நோக்கியவாறு இங்கு காட்சியளிக்கிறார்.

பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன.

இத்தலத்தின் சிறப்பை பெருமையை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். 
 
   
  தல வரலாறு:
   
 அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் சாப்பிட்டு நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் இறைவன் தானாக தோன்றப் பெற்று 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இறைவன் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கர்ப்ப கிரகம் மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது.இது மிகப் பழமையான கோயில் ஆகும்.ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில் சுந்தரர் ஜம்பு என்ற வடமொழி பெயரை நாவல் என்று அழைத்து திருநாவலீசன் என்று ஈசனையும் திருநாம நல்லூர் என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்த இத்திருத்தலம் ஒவ்வொரு சைவ சமய அன்பர்களும் சென்று தரிசிக்க வேண்டிய தலம். ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் "சஞ்சீவினி' மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனை தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் "சஞ்சீவினி' மந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார்.

சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. 
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. 

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை

  English
அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
[Image1]
மூலவர்:சந்திரமவுலீஸ்வரர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:அமிர்தாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரியபுஷ்கரிணி
ஆகமம்/பூஜை:-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:வக்ராபுரி
ஊர்:திருவக்கரை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்


ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.


-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 30வது தலம்.

 திருவிழா:
சித்ரா பவுர்ணமி - வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் - 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு - சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.
 தல சிறப்பு:
மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 263 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம்.
போன்:
+91 - 413 2688949
 பொது தகவல்:
இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

சுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான்

அம்பாளின்  பிறபெயர்கள்: அமிர்தாம்பிகை,வடிவாம்பிகை
பிரார்த்தனை
இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.

நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர்,விபூதி, சந்தனம்,பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிசேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிசேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம்செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
 தலபெருமை:
இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார்.

தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.

எல்லாமே வக்கிரம்: கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

பவுர்ணமி இரவு 12 மணிக்கு - அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் - வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.

வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள்.

வக்ர சனி: பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது.  அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  தல வரலாறு:
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

வக்ரகாளியம்மன்: வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.

சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.

முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். 

வாரம்தோறும் பைரவருக்கு செய்யும் பரிகாரம் :

வாரம்தோறும் பைரவருக்கு செய்யும் பரிகாரம் :

• திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும், வழக்கில் வெற்றி கிட்டும். 

• திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் சூட்டி, புனுகு சந்நி, பாகற்காய்கலந்து சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

• புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம்.

• தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால், பாயம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

• வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

• சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால், பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

63 நாயன்மார்கள் போற்றி .................

63 நாயன்மார்கள் போற்றி .................

ஓம் அதிபத்தநாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதிநாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி
ஓம் ஏனாதிநாதரே போற்றி
ஓம் ஏயர்கோன்கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி
ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி
ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறுப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத்தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி
ஓம் திருநாளைப்போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநிலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்டயாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமீநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர்நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி
ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக்குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக்கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி
ஓம் ருத்ரபசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமையானோரே போற்றி
ஓம் அவனோடிணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி
ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமைபகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவரே போற்றி
ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல் குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி
ஓம் பல்லூரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி
ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலமும் வென்றோர் போற்றி
ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி.

Wednesday, September 17, 2014

கேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்!

ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம். இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.

Friday, August 29, 2014

பலி பீடம்

பலி பீடம்
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.
அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.