Wednesday, October 16, 2013

சாமியாரின் கனவில் வந்த புதையல் 1000 டன் தங்கத்தை தோண்ட தொல்பொருள் அதிகாரிகள் முடிவு


உன்னவோ: உ.பி. மாநிலம் உன்னவோ நகர் அருகே தான்டையா கேதா எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள மிகப்பழமையான கோட்டை ராஜா ராவ் ராம் பகஸ்சிங் எனும் அரசரின் அரண்மனையாக இருந்தது. 1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட அரசர் இறந்துவிட்டார். இதற்குபின் கோட்டை சிதிலமடைந்துகொண்டே வந்தது.இந்தக் கோட்டையில் ஆயிரம் டன் தங்கப்புதையல் இருப்பதாக இறந்த அரசர், தனது கனவில் வந்து கூறியதாக சுபோன் சர்கார் என்ற சாமியார் கூறினார். மறைந்த அரசர் பகஸ்சிங், கோட்டையில் ஏராளமான தங்கத்தை தான் புதைத்து வைத்திருப்பதாக என் கனவில் வந்து சொன்னார். 1000 டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று சாமியார் கூறியுள்ளார்.

இதுகுறித்து சாமியார், மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த் திடம் கூறினார். கனவில் வந்த தங்கப்புதையல் விசயத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இரண்டு முறை சர்காரின் ஆசிரமத்திற்கு சென்று, இது குறித்த தகவல்களை சேகரித்தார். தேவையான உதவிகளைச் செய்வதாக சாமியாருக்கு உறுதியளித்தார்.இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும், இந்திய புவியியல் ஆய்வு மையமும் இணைந்து இக்கோட்டையில் ஆய்வு செய்ய முடிவு செய்தன. கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகள் முழுவதும் சர்வே செய்யப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் கோட்டையின் அனைத்து பகுதியிலும் தோண்டிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment