Sunday, November 24, 2013

ஓம் என்னும் உயிர்ச்சக்தி

ஓம் என்னும் உயிர்ச்சக்தி

தேவைகள் இரண்டு வகை. ஒன்று புறத்தேவை. மற்றொன்று அகத்தேவை. புறத்தேவைகள் சில மணித்துளிகள் மட்டுமே இன்பம் தரும். அகத்தேவைகள் ஆண்டுக் கணக்கில் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கும்.
எந்த வகையான தேவையாக இருந்தாலும் அவரின் தேவையை அவரவரே அடைந்து கொள்ள வேண்டும்.
மனித உடல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது படைப்பைக் குறிக்கும். வளரும் உடலைப் பேணுதல் வேண்டும். அது காத்தலைக் குறிக்கும். எல்லா உடலுக்கும் இறுதியென ஒன்றிருக்கும். அது அழித்தலைக் குறிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்பவன் முக்கண்ணன் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.

முக்கண்ணன் என்பவர் வேறு எங்கும் வெளியில் இல்லை. அவர் அவரவர் உடம்புக்குள்ளேயே இருக்கின்றார். உள்ளேயிருக்கும் முக்கண்ணனை இயக்குகின்ற விசை நம்மிடமிருக்கிறது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருப்பவர்ளைப் போல, முக்கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அனேகம்.
நம்மிடமிருக்கும் விசையைப் பயன்படுத்தினால் நமக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் நமக்குக் கிடைக்கும். தேவைகளை வேண்டுமென்று விரும்புகின்ற மனம், தேவைகளை அடைவதற்காகத் தினந்தோறும் சிறிது நேரமாவது முயற்சி செய்ய வேண்டும்.
எந்த முயற்சியும் இல்லாமல் அடைகின்ற 'தேவைகளெல்லாம் நீர்க்குமிழிகள் போல் தோன்றி அடுத்த கணத்தில் மறைந்துவிடும். முயற்சி செய்து அடைகின்ற தேவைகள் நீண்ட காலம் நன்மையடையச் செய்வதுடன் இன்பத்தை நுகரச் செய்யும்.

தேவைகளை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகளை சாதனை என்பர். சாதனை செய்யாமல் எந்தத் தேவையையும் சாதிக்க முடியாது. சாதனை செய்பவர்களே சாதனையாளர்கள். சாதனை செய்யாதவர்கள் வெறும் வேதனையாளர்கள்.
மலையின் உச்சியில் மணி வயிரம் இருக்கிறது என்று தெரிகிறது. மலையேறிச் செல்லாமல் மலையாடிவாரத்தில் நின்றுக்கொண்டு மணியே! என்று சொன்னால் மணி வருமா? என்று சிந்திக்க வேண்டும்.
நம்முன்னே மூன்று சக்திகள் இருக்கின்றன. அச்சக்திகளால் தேவைகள் அனைத்தையும் அடைந்துவிடலாம். அச்சக்தியை இயக்கும் விசை 'ஓம்’ ஆகு.

ஓம் என்னும் விசையை இயக்க இயக்க நமக்குள்ளே இருக்கும் மூன்று சக்திகளும் இயங்கத் தொடங்கும்.
ஓம் என்னும் மந்திர ஒலியை, காலையிலும் மாலையிலும் சுமார் ஒரு சில மணி நேரங்கள் சொல்லிக் கொண்டு சாதனை செய்து கொண்டு வந்தால், திறந்து கிடக்கும் ஐம்புலன்களின் ஆசாபாசங்களின் கதவுகள் மூடிக்கொள்ளும். அகக்கதவு திறக்கும். அப்போது வேதனைகள் எல்லாம் மறைந்துவிடும். சாதனை செய்யச் செய்ய தேவைகள் எல்லாவற்றையும் அடைந்துவிடலாம்.

தேவைகள் நிறைவேறும்போது, சித்திகள் கைகூடும், மனத்துக்குள் புது வகையான ஒழுக்கமும் ஞான அறிவும் உதயமாகும். இளமையுடன் இருக்க காயகற்பம் என்னும் மருந்து இருப்பதாகக் கூறுவார்கள். காயகற்பம் உண்டவர்கள் கற்பகாலம் வரை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள்.
அத்தகைய காயகற்பத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். எந்தக் காயகற்பமும் நம் கையில் தான் & செய்யும் சாதனையில்தான் இருக்கிறது.
நரை, திரை, மூப்பு, சாக்காடு என்னும் நான்கு வகையான துன்பள்ஙகளையும் அகற்றி என்றும் இளமையுடனிருக்க வகை செய்யும் காயகற்பமாகவும் விளங்குகிறது. ஓம் என்னும் மந்திர ஒலி.

இக்காயகற்கப்பயிற்சியை காலை, மாலை, இரவு படுக்கைக்குச் செல்லும் போதும், உதயத்தில் எழும்போதும் தினந்தோறும் தவறாமல் ஒரு பத்து நிமிட நேரம் செய்ய வேண்டும்.

வலது நாசி வழியாகக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் ஓம், உள்ளே சென்ற காற்று உள்ளே நிறுத்தும் போதும் ஓம் உள்ளே நின்று காற்று வெளியே வரும்போதும் ஓம் என்றும் உச்சரித்துக் கொண்டுவந்தால் உடல் வெப்பமாகும். மூலத்திலே இருக்கும் முக்கண்ணன் விழித்தெழுவார்.
எண்ணியது நடக்கும். சொல்வது கிடைக்கும் வல்லமை உண்டாகும். நல்லவை தோன்றும். ஞாலமே இனியதாகும். வாழ்வில் இன்பமுண்டாகும்.

No comments:

Post a Comment