Wednesday, October 16, 2013

பலன் தரும் ஸ்லோகம் : (விருப்பமெல்லாம் நிறைவேற, கண்ணன் திருவருள் கிட்ட!)



ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

பொதுப் பொருள்:

எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

(கிருஷ்ண ஜெயந்தியன்று (28.8.2013) இத்துதியை பாராயணம் செய்தால் விருப்பமெல்லாம் நிறைவேறும்; கிருஷ்ணனின் திருவருள் கிட்டும்.)

பலன் தரும் ஸ்லோகம் : (விபத்துகள் நேராமல் காக்க...)


பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.
(நமசிவாய துதி)

பொதுப்பொருள்:

நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அப்பர் பல கடும் சோதனைகளைக் கடந்தார். அவர் அருளிய நமசிவாய பதிகத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்தால் விபத்துகள் ஏதும் நேரிடாமல் நமசிவாய நாமம் காக்கும்  என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மந்திரம் தன்னை ஜபிப்பவரை வழித்துணையாக வந்து காக்கும்.

பலன் தரும் துதி : (பஞ்சமற்ற, சுக வாழ்வு கிட்ட...)


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

பொதுப்பொருள்: மூவடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமனுடைய சிறப்பை பாடியபடி பாவை நோன்பு நோற்போம். இவ்வாறு அவன் புகழ் பாடினால், உலகம் முழுதும் மும்மாரி மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். நெல் செழித்தோங்கி வளரும். மீன்கள் வயல்வெளிகளில் துள்ளிக் குதிக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேனருந்தி கிறங்கிக் கிடக்கும். பசுக்கள் பாலை நிரம்பத் தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த பாசுர பாராயண பலன் தரும்.

(வாமனஜெயந்தி அன்று (16.9.2013) இப்பாடலைப் பாடி வாமனரின் பேரருளால், ஆண்டாளின் திருவருளால் பஞ்சம், பட்டினி அற்றப் பெருவாழ்வு பெறுவோம்.)

பலன் தரும் ஸ்லோகம் : (தீவினைகள் அகல, திருமால் திருவருள் கிட்ட...)



செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

(பெரியாழ்வார் திருமொழி)

பொதுப்பொருள்: மிகப்பெரிய தீவினைகளையும் அழித்திடும் வல்லமை மிக்க பெருமாளே! நெடிதுயர்ந்த திருவுருகொண்ட வேங்கடவா! நின் பக்தர்களும் தேவர்களும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்ற நாட்டிய நங்கையரும் ஏங்கி எதிர்நோக்கும் உன் தரிசனம் காணும்படியாக இருந்து உன் பவளவாயை எந்நேரமும் தரிசிக்க அருள்புரிவாய்.

(இத்துதியை புரட்டாசி சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வர தீவினைகள் அகன்று திருமால் திருவருள் கிட்டும்.)

எண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி மாலை


காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத்  திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமுகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த  விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே  அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது. ஆகவே இப்பாடல்களுக்குத் தனியே விளக்கவுரை தேவைப்படாது. 

பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலக முழுவதும் நீக்கமற
ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள்
உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை
ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும்
நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி
வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை
யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ் செயினும்
சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண்
தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால்
படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும்
திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம்
தயங்க இருபத் தொரு
முறைமை
பொங்கும் உழுவ லால் கிளப்பின்
பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும்
தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

இந்த காரிய சித்தி மாலையை தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்தால் சகல காரியமும் சித்தி பெறும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் அரசர்களும் வசியமாவர். கல்வி, செல்வம் விருத்தியாகும் என விநாயகப்பெருமானே திருவாய் மலர்ந்தருளிய துதி இது.

பலன் தரும் மந்திரம் : (பாவங்கள் நீங்க, நோய்கள் அகல...)


நீர்மை கெட வைதாரும் நின்னொடு எதிர்த்தாரும்
சீர்மைபெற நின் அடிக்கீழ்ச் சேர்க்கையினால் -
நேர்மை இலா
வெவ்வுளத்தினேன் செய்மிகையைப் பொறுத்து
அருளி எவ்வுள் அத்தனே! நீ இரங்கு.
பிள்ளைப்பெருமாள்
ஐயங்கார் பாசுரம்.

பொதுப்பொருள்:

திரு எவ்வுள்ளூர் (திருவள்ளூர்) என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் என் தலைவனே! உந்தன் முன் அவதாரங்களில் உன்னை முறையில்லாமல் அறியாமையால் வசை பாடியவர்களும், உன்னை எதிர்த்துப் போரிட்டவர்களும்கூட சிறந்த முக்தியை அடையுமாறு உன் திருவடியில் சேர்ந்து அருள் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, நேர்மையற்ற, கொடிய மனம் கொண்ட அடியேன் செய்த பிழைகளையும் பொறுத்தருளி, என்பால் இரங்குவாயாக.

(இத்துதியை மஹாளய அமாவாசை(4.10.13) அன்று ஆரம்பித்து ஒவ்வொரு அமாவாசையன்றும் துதித்து வர பாவங்கள் நீங்கும். தீராப்பிணிகளும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருவருளால் தீரும்.)

எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக

பலன் தரும் மந்திரம் : (எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக)

கருத்துகள்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ கூறிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி
காமாட்சி.
துக்க நிவாரணி அஷ்டகம்

பொதுப்பொருள்:

வாட்டி வருத்தும் தொல்லைகள் இனிமேல் இல்லை என்ற ஆறுதலான உன் அமுத மொழியை எனக்குக் கூறிடுவாய் அம்மா. சுடர்  போன்ற ஒளி பொருந்திய அமுதம் போன்றவளே, உன் இனிய மொழியால் ஆறுதல் அளித்து எனக்கு சுகத்தை அளிப்பாய். என்னை வாட்டும்  வினைகளை, இருட்டில் ஒளிபோல் வந்துப் பொசுக்கி விரட்டிடம்மா. சங்கரி, கௌரி, க்ருபாகரி, சர்வ துக்க நிவாரணியான காமாட்சியே, எனக்குத் திரு வருள் புரிவாய் அம்மா.

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்

வறுமை விலக்கி எல்லா வளங்களையும் பெருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம்


ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி. ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.

 மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.

‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். இன்றும் அந்த நிகழ்விற்கு சத்திய சாட்சியாய் கேரளாவில் அந்த வீடு ‘ஸ்வர்ணத்து மனை’ எனும் பெயரில் திகழ்கிறது. வரலட்சுமி தினத்தன்று ஆரம்பித்து இத்துதியை அனுதினமும் பாராயணம் செய்தால் அனைவரும் சகல செல்வவளங்களும் பெறுவது உறுதி.

அங்கம் ஹரே: புளக பூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:


பொதுப் பொருள்: மகாவிஷ்ணுவின் திருமேனி நீலமேக வண்ணம் கொண்டது. அதாவது, மேகம்போல கருத்திருக்கும். ஆனால், தனக்கு நேர்
எதிரான, பொன் போன்று தகதகக்கும் திருமேனி கொண்ட மகாலட்சுமி, தனக்கு மனையாளாக அமைந்திருக்கிறாளே என்ற பெருமகிழ்ச்சியில் அவர் உடலே சிலிர்க்கும். அந்த சிலிர்ப்பில் உண்டான ரோமாஞ்சனம் எப்படி இருக்கிறது? சிறு சிறு மலர் மொட்டுகள் போலிருக்கிறது! மகாவிஷ்ணுவின் இந்த மகிழ்ச்சியை மகாலட்சுமி தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

அந்த விழிகள் பொன்வண்டுகள் போன்றிருக்கின்றன. தமால விருட்சம் என்ற தேவலோக மரத்தின் மீது அரும்பியிருக்கும் மலர்மொட்டுகளிலிருந்து தேனை உண்ண அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்துவரும் பொன்வண்டுகள் போன்ற கண்கள் ஸ்ரீதேவியினுடையது. எப்படி பொன்வண்டுக்கு மொட்டிலுள்ள தேன் மட்டுமே தோன்றுகிறதோ, அதேபோல தன் பக்தனின் நற்குணங்களை மட்டுமே மகாலட்சுமி கவனிக்கிறாள். அவனுடைய தோஷங்களை அவள் பொருட்படுத்துவதில்லை. மகாவிஷ்ணு தமால விருட்சம் போன்றவர்.

எப்படி ஒரு பிரமாண்டமான மரம் எல்லா ஜீவராசிகளுக்கும் நிழல் கொடுத்து அவர்களுடைய களைப்பைப் போக்கிப் புத்துணர்வு பெற வைக்கிறதோ அது போன்ற கருணை கொண்டவர் மகாவிஷ்ணு. இத்தகைய மகாவிஷ்ணுவின் ரோமாஞ்சனத்தைத் தன் கடைக்கண்ணால் நோக்கும் மங்கள தேவதையான மகாலட்சுமியின் அந்த கடாட்சம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்லது. அந்த லட்சுமி கடாட்சம் எனக்கு எல்லா நலன்களையும், சௌகர்யங்களையும் வழங்கட்டும்.
(லட்சுமி கடாட்சத்துக்கு இந்த கனகதாரா ஸ்தோத்திரமே பிரதான உபாயமாகும். அதிலும் இந்த முதல் ஸ்லோகம் மிகவும் அந்தரங்கமான உபாயம் என்றும் சொல்லப்படுகிறது)

முக்தா முஹுர்விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதானி கதாகதானி
மாலாத்ருஸோர்மதுகரீவ மஹோத்பலே யா
ஸாமே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:


பெரியதாக, நறுமணமிக்கதாக உள்ள நீலோத்பல மலரின் தேனை சுவைப்பதற்காக வண்டுகள் அணிவகுத்து வருவதும் பிறகு ரஸம் அருந்தித் திரும்புவதுமாக இருப்பதுபோல மகாலட்சுமியின் விழிகள் தன் நாயகனின் மலரனைய முகத்தின் மீது பார்வையாய் அமர்வதும், பிறகு வெட்கம் காரணமாக மீள்வதுமாக இருக்கின்றன. அதாவது, பக்தனின் மேன்மையான குணத்தால் ஈர்க்கப்பட்டு அவனுக்கு தன் பார்வையால் அனுக்ரகம் புரிய வரும் மகாலட்சுமி, அவனது குறைகளைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டுவிடுவாள். இந்தகைய பெருந்தன்மையுள்ள மகாலட்சுமி அனைத்து ஐஸ்வர்யங்களையும் எனக்கு வழங்க வேண்டும்.

ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்தம் அநிமேஷம் அனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்திதகநீநிகபக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந்மம புஜங்கஸயாங்கனாயா:


பேரழகு மிக்க இந்த மகாலட்சுமியைத் தன் மனையாளாக அடைந்த ஆனந்தத்தினால் அவளையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மகாவிஷ்ணு. இதனால் அவர் பேரானந்தத்தை அடைகிறார். ஆனால், மகாலட்சுமியின் கண்களோ கருவிழிகளாலும் இமைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீர்க்கமாக விளங்குகின்றன. இப்படி மகாவிஷ்ணுவிற்கே பேரானந்தத்தை அளிக்கும் லட்சுமிகடாட்சமானது எனக்கும் எல்லா வளங்களையும் அருளட்டும்.

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:


மகாவிஷ்ணுவின் மார்பில் கௌஸ்துப மாலை துலங்குகிறது. அதனை மிகுந்த வாஞ்சையுடனும் மதிப்புடனும் மகாலட்சுமி நோக்குகிறாள். உத்தம பத்தினியான அவளுடைய கருமை மிகுந்த விழிகள் நீல மணிபோல பிரகாசிக்கின்றன. அவளுடைய கடாட்சத்தாலேயே மகாவிஷ்ணுவும் எல்லா மேன்மைகளையும் பெற்றவராகிறார். அத்தகைய மகிமைமிக்க லட்சுமி கடாட்சம் எனக்கும் எல்லா மங்களங்களையும் அருள்வதாக.

காலாம்புதாளிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்தஜகதாம் மஹனீய மூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்கவநந்தனாயா:


நீருண்டு, கருத்து, வானில் நிறைந்திருக்கும் மேகத்தினூடே மின்னல் கொடியாக மின்னுவதுபோல நாராயணனுடைய திருமார்பை ஸ்ரீதேவி ஆலிங்கனம் செய்கிறாள். பார்க்கவ மகரிஷியின் மகளான அவள் எல்லா உலகங்களுக்குத் தாயாகவும் விளங்குபவள். அவளுடைய பேரழகை யாரால் வர்ணிக்க முடியும்! அந்த சௌந்தர்ய தேவி எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதுனி மன்மதேன
மய்யாபதேத்ததிஹ மந்தரம் ஈக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலகன்யகாயா:


எந்தப் பார்வையின் பெருமையால் மங்களங்களுக்கு இருப்பிடமானவரும், மது என்ற அரக்கனை ஒழித்தவருமான மகாவிஷ்ணுவிடம் முதன் முதலாக மன்மதனுக்கு இடம் கிடைத்ததோ, அந்த சமுத்திர குமாரியான மகாலட்சுமியின் குளுமை மிக்க கடைக்கண் பார்வை என்மேல் கொஞ்சம் பட்டு எனக்கு எல்லா நலன்களையும் அருளட்டும்.

விஸ்வாமரேந்த்ரபத விப்ரமதானதக்ஷம்
ஆனந்தஹேதுரதிகம் முரவித்விஷோபி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணம் ஈக்ஷணார்த்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:
மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் சிறி


தளவாவது பெற்றவன், ஒரு சக்கரவர்த்தி போன்று, இந்திரன் போன்று அகண்ட ஐஸ்வர்யத்தோடு கூடியவனாகத் திகழ்வான். இந்தப் பார்வை, முரனை வென்ற திருமாலுக்கும் ஆனந்தப் பெருக்கை உண்டாக்கக்கூடியது. நீலோத்பல மலரின் உள் மென்மை போன்ற மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை ஒரு க்ஷண நேரமாவது என் மேல் விழட்டும்.

இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதரதீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:


அச்வமேதம் முதலிய யாகங்களினால்கூட சுத்தமாகாத மனதை உடையவர்களையும் தன் கருணைப் பார்வையால் தூய்மையாக்குபவள் மகாலட்சுமி. அந்தப் பார்வையால் அத்தகையவர்களும் சொர்க்கப் பதவி அடைவார்கள்! நன்கு விரிந்த தாமரை மலரின் நடுப்பாகம் போன்ற தண்மையான, மென்மையான அந்த கனிவுப் பார்வை, என் மனதைத் திருத்தி, சித்தியை அருளட்டும்.

தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மிந்நகிஞ்சன விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்மதர்மமபனீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம்புவாஹ:
கருணையாகிற அனுகூலக் காற்றுடன்


மகாலட்சுமியினுடைய கண்களாகிற நீருண்ட மேகம், கொடிய வறுமையால் துன்பப்படும் இந்த ஏழைக்கும் கருணை காட்டட்டும். மழைத் துளிக்காக
ஏங்கி நிற்கும் சாதகப் பறவை போல என்னிடமும் தோன்றும் பாவ கர்மமாகிய தாபத்தை என்னிடமிருந்து விலக்கி, மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை, பொருள் மழையைப் பொழியட்டும்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவனைககுரோஸ்தருண்யை


சரஸ்வதி தேவி என்றும், கருட வாகனனாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்றும் சாகம்பரியாகிற பூமிதேவி என்றும் பார்வதி என்றும் போற்றித் துதிக்கப்படுகிற மகாலட்சுமியே, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று பெரும்பணிகளை விளையாட்டாக செய்து பிரபஞ்சத்தையே பரிபாலிக்கிறவளே, மூவுலகிற்கும் குருவான நாராயணனுடைய பத்தினியே, நமஸ்காரம். என் ஏழ்மையைத் தொலைத்து ஐஸ்வர்யம் பெருக அருள்வாயாக.

ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸூத்யை
ரத்யை நமோஸ்து ரமணீயகுணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸதபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தமவல்லபாயை


நல்ல கர்மாவின் பலத்தைக் கொடுக்கின்ற வேத ரூபிணியே நமஸ்காரம். அழகிய குணங்களுக்கு இருப்பிடமான ரதிதேவியே, நமஸ்காரம். தாமரையில் அமர்ந்த சக்தி ரூபிணியே, நமஸ்காரம். புருஷோத்தமனுடைய மனைவியான புஷ்டி தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து நாளீகநிபானனாயை
நமோஸ்து துக்தோததிஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருதஸோதராயை
நமோஸ்து நாராயணவல்லபாயை


தாமரை போன்று மலர்ந்து சிரிக்கும் முகம் கொண்ட தேவியே நமஸ்காரம். பாற்கடலில் பிறந்த தேவியே நமஸ்காரம். தாபத்தை நிவர்த்தி செய்யும் சந்திரன், மரணமிலாப் பெருவாழ்வளிக்கும் அமிர்தம் இவற்றோடு தோன்றிய தேவியே, நமஸ்காரம்.

ஸ்ரீமந்நாராயணனுக்கு மிகவும் பிரியமான தேவியே
நமஸ்காரம்.
நமோஸ்து ஹேமாம்புஜபீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை


தங்கத் தாமரையை ஆசனமாகக் கொண்ட தேவியே நமஸ்காரம். பூமண்டலத்திற்குத் தலைவியே நமஸ்காரம். தேவர்களுக்குக் கருணை
காட்டும் தேவியே நமஸ்காரம். சார்ங்கபாணியான மகாவிஷ்ணுவின் இதய தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
பிருகு ரிஷியின் புத்திரியான தேவியே


நமஸ்காரம். மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் தேவியே நமஸ்காரம். தாமரையை இருப்பிடமாகக் கொண்ட லட்சுமியே நமஸ்காரம். தாமோதர
மூர்த்தியான மகாவிஷ்ணுவின் பிரியத்துக்குப் பாத்திரமான தேவியே நமஸ்காரம்.

நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை


ஜோதி மயமானவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தேவி, நமஸ்காரம். ஐஸ்வர்ய ஸ்வரூபிணியே, உலகங்களைப் படைத்தவளே, தேவி, நமஸ்காரம். தேவர் முதலின அனைவராலும் பூஜிக்கப்படும் தேவியே, நமஸ்காரம். நந்தகுமாரனான கோபாலனின் பிரிய நாயகியே நமஸ்காரம்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தனானி துரிதாஹரணோத்யதானி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மான்யே


தாமரைபோன்ற கண்களை உடையவளே, எல்லோராலும் பூஜிக்கப்படுகின்றவளே, தாயே, நமஸ்காரம். உன்னை நமஸ்கரித்தால் என் எல்லாவித பாவங்களும் தொலைந்து நான் பரிசுத்தவானாகிறேன். உனக்கு நான் சமர்ப்பிக்கும் நமஸ்காரம், சகல சம்பத்துகளையும் கொடுக்கிறது; எல்லா இந்திரியங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கிறது; மாபெரும் சாம்ராஜ்ய பொக்கிஷத்தை அருள்கிறது. என் நமஸ்காரங்கள் என்றென்றும் உனக்கே உரித்தாகும்.

யத்கடாக்ஷஸ முபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத:
ஸந்தனோதி வசனாங்கமானஸை:
த்வாம் முராரி ஹ்ருதயேச்வரீம் பஜே


தேவி, உந்தன் கடைக்கண் கடாட்சம் உன்னை உபாசனை, செய்யும் அனைவருக்கும் எல்லா சம்பத்துகளையும் ஏராளமாக அள்ளிக் கொடுக்கும். முராரியான மகா விஷ்ணுவின் ஹ்ருதய நாயகியான உன்னை வாக்கு, காயம், மனம் எல்லாவற்றாலும் துதிக்கிறேன்.

ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவளதமாம் ஸுககந்தமால்ய ஸோபே
பகவதி ஹரிவல்லபே மனோக்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்


தாமரையை இருப்பிடமாக உடையவளே, தாமரையைக் கைகளில் ஏந்தியவளே, பிரகாசிக்கும் வெண்மை வஸ்திரம், சந்தனம், மாலை இவற்றால் ஒளிர்பவளே, மகிமை வாய்ந்தவளே, மகாவிஷ்ணுவின் ப்ரிய நாயகியே, மனதை ரமிக்கச்செய்பவளே, மூவுலகத்திற்கும் ஐஸ்வர்யத்தைக் கொடுப்பவளே, எனக்கும் கருணை செய்வாய் அம்மா!

திக்கஸ்திபி: கனககும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்


எல்லா திசைகளிலிருந்தும் தங்கக் குடங்களில் நிரம்பிய கங்கையின் பரிசுத்தமான நீரினால் திருமஞ்சனம் செய்யப்பட்டவளே, உலகங்களுக்கெல்லாம் தாயே, எல்லா உலகத்திற்கும் நாயகனான மகாவிஷ்ணுவின் பத்தினியே, பாற்கடலின் புத்திரியே, உன்னைக் காலைப் பொழுதில் நமஸ்கரிக்கிறேன்.

கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபூரதரங்கிதைரபாங்கை:
அவலோகய மாம கிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
தாமரை போன்ற கண்களை உடைய மகா


விஷ்ணுவின் இதயத்துக்கு நெருக்கமானவளே, மகாலட்சுமியே, கருணை வெள்ளத்தில் அலைமோதும் உன் கடைக்கண் பார்வையால், வறுமை பிடித்தாட் கொண்டிருக்கும் என்னையும், உன் கருணைக்கு உண்மையான பாத்திரவானாக என்னை ஆக்குவாயாக.

ஸ்துவந்தி யே ஸ்துதிபி ரமீபி பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகின:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:


மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியாகத் திகழ்பவளே,  மூவுலகிற்கும் தாயுமான மகாலட்மியே, இந்த ஸ்தோத்திரங்களினால் தினமும் உன்னை யார் துதிக்கிறார்களோ, அவர், இவ்வுலகில் எல்லா நற்குணங்களும்  நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்யசாலிகளாகவும், சான்றோர் கொண்டாடும் புத்திப் பலம் உள்ளவர்களாகவும் ஆகிறார்கள். உனக்கு தண்டனிட்ட நமஸ்காரம், தாயே!

Tuesday, October 15, 2013

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.


சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார். அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.

உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா?

டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம். இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.

அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.

மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150.கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று. ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு,மானங்கள். இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!

இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!”

இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா?
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

Sunday, October 13, 2013

ஆரோக்கியமும் புண்ணியமும் ....




வணக்கம் நண்பர்களே !
காலைல எழுந்து வேகமாக  நடை பயணம் போகிறோம் . உடல் ஆரோக்கியத்திற்காக வைற்றை குறைக்க ... பிறகு அதற்க்கு தேவையான அளவு ஐஸ் கிரீம் சாப்ட எப்டி விறு குறையும் ... கொஞ்சம் யோசிங்க ... உடல் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் ....அதன் கூட புண்ணியமும் சேரும் ...அதெப்டி என்றுகேட்கிரீர்கள ....
உடல் ஆரோக்கியத்திற்கு .... காலை வேளையல்.சுத்தமான இடத்தில் வலம் வர வேண்டும் அதுவும் வெறும் பாதத்தில்  மேடும் பள்ளமாக பதித்து இருக்கின்ற வெளி பிரகாரத்தில் நடக்கும் போது உங்கள் பாதம் உண்மையான  ஒரு உணர்வை ஏற்படுத்தும் , வெளி பிரகாரத்தை 51 சுற்று அல்லது 101 சுற்று சுற்றவேண்டும்  வெறும் பாதத்தில்  நீங்கள் கோவிலை வலம் வரும் பொது அக்குபஞ்சர் முறை உங்கள் உடல்  ஆரோக்கியம் அடையும் .இது புன்னியதுடன் கூடிய ஆரோக்கியம் நம் உடல் உறுப்புகளின் அனைத்து நரம்புகளும் பாதங்களின் இணைந்துள்ளன , பீச்  மற்றும்  சாலைகளில் நடப்பதை தவிர்த்து ,வெறும் பாதங்களில்  கோவிலை வலம் வாருங்கள் , புண்ணியமும் கிடைக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும் .இதற்க்க்காகத்தன் வெளிபிரகாரங்களை அமைத்து இருக்கிறார்கள் , நம் முன்னோர்கள் , சிதம்பரம் நடராஜர்  கோவிலின் வெளி பிரகாரத்தில் பார்த்தல் உங்களுக்கே தெரியும் .புதுவை அதாவது பாண்டிச்சேரி அருகில் உள்ள வில்லியனூர் ,திருகாமீச்வரர் ஆலயத்திலும் காணலாம் , இதுதான் 2இன் 1 ,நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தவைகளை நாம் மறந்து போனோம்,  காலம் நாகரீகம் அடைந்ததால் ,எல்லாமே மாறி போச்சிபா ...சிவாலயங்கள்  மட்டுமல்லாது ,மன்னர்கள் காலத்து கோவில்கள்  அனைத்திலும்  காணலாம்


பாண்டிச்சேரி  கணேசன்


திருவோணம் நட்சத்திரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

திருவோணம் நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
மூலவர்:வரதராஜப்பெருமாள்
உற்சவர்:-
அம்மன்/தாயார்:பெருந்தேவி
தல விருட்சம்:-
தீர்த்தம்:-
ஆகமம்/பூஜை:-
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பசுபதிகோவில்
ஊர்:பசுபதிகோவில்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
மார்கழி கேட்டை, புரட்டாசி சனிக்கிழமைகள்
தல சிறப்பு:
ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பசுபதி கோயில் அய்யம்பேட்டை 614 201, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 97903 42581, 94436 50920
பொது தகவல்:
இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.
பிரார்த்தனை
கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இத்தல பெருமாளுக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை போன்ற பதார்த்தங்கள் வைத்து, நெய் தீபம் ஏற்றுகின்றனர். மேலும், மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது இன்னும் விசேஷ பலன் தரும்.
தலபெருமை:
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
தல வரலாறு:
ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.
பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்அதிசயத்தின் அடிப்படையில்:ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.
இருப்பிடம் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி
தங்கும் வசதி :
தஞ்சாவூர்

Saturday, October 12, 2013

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக சிவன் ஸ்தோத்திரம்


குடும்பத்தில் மன அமைதியை இழந்து தவிப்பவர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெறவும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் தீரவும் கீழ்க்கண்ட ப்ருதிவிஸ்வராய தியான ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யலாம். அதிகாலையிலும் மாலையிலும் இரவிலும் இச்சுலோகங்களைச் சொல்லி சிவனை வழிபட வேண்டும் .

நமோ நமஸ்தே ஜகதீச் வராயசிவாய
லோகாஸ்ய ஹிதாய ஸம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோ
நமஸ்தே ப்ருதிவீஸ்ராய விஸ்வாதி
காய அதிவிமானகாய ஸோமாய
ஸோமார்த்த விபூஷணாய ஸ்ரீகாள
கண்டாய க்ருபாகராய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய ஆஸாம் பராய
அம்பர வர்ஜிதாய திகம்பராய
அம்பிகாய யுதாய குணத்ரயாத்யை:
அபவர்ஜிதாய நமோ நமஸ்தே
ப்ருதிவீஸ்வராய மாயா விகாராதி
விவர்ஜிதாய மாயாதி ரூடாய
தபஸ்திதிய கலாதி ரூடாய கபர்தினே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர் ஜிதாய
கதம்பமாலா கவிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே
ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய

தினசரி திதிப் பிள்ளையார் வழிபாடு



ஓம் காலஸ்வரூபாய வித்மஹே காலாதீதாய
தீமஹிதந்தோ கலயோக ஷோடக ஷோடக
கணபதி ப்ரசோத்யாத்

- ஸ்ரீவிநாயகர் திருவுருவத்தை எந்த இடத்தில் தரிசித்தாலும் அன்றைய திதிக்குரிய கணபதியின் நாமத்தை ஆத்மார்த்தமாக ஸ்மரித் அளித்து, தோல் வியாதிகளை தடுக்கும். முதுகெலும்பையும், மார்பு எலும்பையும் சீராக இயக்குகிறது. சில ஜீரண பிரச்சினைகளை சரி செய்கிறது

அருள்தரும் பொள்ளாப் பிள்ளையார்


களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது.

`பொள்ளா' என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள். அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர். இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், "இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா'' என்றார். மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத்தைப் படைத்தான்.

`அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக்குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா' என்றான். பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா? அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார்.

பையனுக்கு அழுகை வந்தது. "இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்'' என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான். அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார்.

தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார். அவரிடம், "விநாயகா! எப்படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப்பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்'' என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத்தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர். மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது.

அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான். அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.