Tuesday, May 25, 2021

துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?

துர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும் ?

ஞாயிறு அன்றுதுர்கையை ஞாயிறு ராகு கால நேரத்தில் ஏன் வழிபட வேண்டும்  என்ற கருத்தை படித்த தகவலை பதிவு செய்துள்ளோம். ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே சரணம் !
ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
 
ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும்.அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
 வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
 தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே என்று இன்று பாடி தொழநமது கவலை தீரும் !கஷ்டங்கள் தீரும் ! வெற்றிகள் நிச்சயம் !
.நல்வாழ்வும்  நிச்சயம் !ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

வாழ்வும்  ஆனவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

செம்மையானவள் துர்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மை ஆனவள் துர்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமையானவள்
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

கன்னி துர்க்கையே இதயக் கமலா துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

("தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே" என்று வரும்பொழுது விரதம் இருப்பவர்கள் நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது.)

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

No comments:

Post a Comment