வைகாசி_விசாகம்... 2021 முக்கியத்துவம்,
புராண கதை : வைகாசி விசாக
பூஜைக்கான_நேரம்..
தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
வைகாசி 11ம் தேதி (24 மே 2021) வரக்கூடிய விசேக நட்சத்திர தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
முருகன்பெருமான்...
தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.
வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும்.
இந்த வைகாசி விசாகம் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும்.
வைகாசி விசாகம் 2021 தேதி மற்றும் பூஜைக்கான நேரம் :
வைகாசி விசாக தேதி : 25 மே 2021, செவ்வாய்க் கிழமை
வைகாசி நட்சத்திரம்
தொடங்கும் நேரம் - மே 25, காலை 7.06 மணி முதல்
வைகாசி நட்சத்திர முடியும் நேரம் : மே 26, காலை 4.11 மணி வரை..
தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும். முருக பெருமானின் பிறந்த நாளை வைகாசி விசாகம் என்ற பெயரில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முக்கியமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் சிறப்புகள்...
இந்த விசேச தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோயிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
இந்த திருநாளில் திருச்செந்தூர் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்த அந்த மீன்கள் சாப விமோசனம் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள்.
பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.
தமிழர்கள் கட்டிய பிரமிக்க வைக்கும் மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயிலின் வரலாறும், சிறப்புகளும்...
தஞ்சை பெரிய கோயிலில் பொக்கிசமாகப் பல கல்வெட்டுகள் உள்ளன. அதில் பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, ஆண்டுதோறும், வைகாசி விசாக தினத்தில் நாடக கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம்.
இந்த சிறப்பான நாளில் தான் பெரும்பாலான கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.
முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் ராம - லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு மற்றும் அவரின் அருமை பெருமைகளை விளக்கி கூறுவது போல அமைந்திருக்கும்.
இதனை கேட்பவர்களுக்கு அவர்களின் பாவம் நீங்கி புண்ணியத்தை அடைவார்கள் என்றும், இந்த நிகழ்வை குமார சம்பவம் என வால்மீகி குறிப்பிடுவார்.
இதை தழுவியே வட மொழி கவிஞர்கள் குறிப்பாக காளிதாசர் முருகப்பெருமானின் அவதாரம் குறித்து அவரின் நூலான குமார சம்பவம் என்று குறிப்பிடுகிறார்.
நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.
இப்படி பல சிறப்புகள் நிறைந்த வைகாசி விசாக தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம்.
No comments:
Post a Comment