Monday, March 2, 2015

சதுரகிரியில் இருக்கிறது பாஷாணக் காடு!

சதுரகிரியில் இருக்கிறது பாஷாணக் காடு!
*****************************************************************

இந்த பாஷாணம் இரண்டு பெரும் பிரிவுகளாக கூறப்பட்டிருக்கிறது. இதில் ஒரு வகை பாஷாணம் என்பது இயற்கையில் கிடைக்கும் மூலகம். பழநியில் குடி கொண்டிருக்கும் நவபாஷான மூலவரின் சிலையானது சதுரகிரி மலையில் செய்யப் பட்டு பழனிக்கு கொண்டு சென்றதாக ஒரு செவிவழிக் கதை உள்ளது. ஆனால் இதை நிறுவும் வகையில் தகவல்கள் ஏதும் சித்தர்களின் பாடல்களில் இல்லை.
ஒரு வேளை சதுரகிரியில் இந்த சிலை செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக இங்கு பாஷாணங்கள் கிடைத்திருக்க வேண்டுமல்லவா!. இந்த தகவலை உறுதி செய்திட எனக்கு கிடைத்த அரிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். ஆம், சதுரகிரி மலையில் பாஷாணம் இருக்கிறது, அதுவும் எங்கே இருக்கிறது என்பதை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.
- அகத்தியர் -
இந்த தேசமெல்லாம் சுற்றிவந்த நான், வளங்கள் நிறைந்த சதுரகிரியிலும் சுற்றினேன். சதுரகிரி மலையில் கிழக்குப் பகுதியில் எளிதில் நுழையக் கூடிய பகுதியில் பாஷாணக் காடு கண்டேன் என்கிறார்.மேலும் அந்தக் காட்டின் மத்தியில் சுனையும் தோப்பும் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து வரும் பாடல்களில் பாஷாணங்களின் வகைகளையும் அவற்றின் பயன் பாடுகளையும் விவரித்துச் செல்கிறார்.
சதுரகிரி மலையின் கிழக்கே உள்ள காட்டில் மூலிகை நிறைந்த நிலப் பகுதியில் பாஷாணங்கள் நிறைந்திருக்கின்றனவாம்..இதை போல இயற்க்கை மூலிகை உள்ள மலைகளில் சென்று வந்தாலே உடம்பில் நோய் நொடி இல்லாமல் சிவன் அருளுடன் வாழலாம் என்பது உண்மை

No comments:

Post a Comment