Saturday, September 27, 2014

நலம் தரும் நாட்கள்

நலம் தரும் நாட்கள்

நாளைய நாட்கள் நலமிக்கவைதானா அல்லது நலமிழந்த நாட்களா என்பதை கணிக்கும் இலக்கண அரிச்சுவடிதான் ஜோதிடக்கலை. 

இதை அனைவரும் அறிந்திருந்தாலும் அதிலும் எங்கனம் அவற்றின் அளவை செய்வது என்பது அரிதான வித்தைதான். ஏனெனில் ஏணிப்படி சிறிது வழுக்கினாலும் எட்டி பிடிக்க வேண்டிய இடம் தடுமாறிவிடும், தடமாறிவிடும்.

ஒருவர் சிம்ம லக்னமாக அமைந்து சூரியன் ரிஷபத்தில் நின்று சந்திரனோடு கூடி அமாவாசையாக, செவ்வாயும் கூடி விட்டால் எத்தனை கிரகங்கள் இமயமென உயர்ந்து இருந்தாலும், நாட்கள் நலம் ஆக்குவதில்லை. நலம் தருவது போல் தோன்றி ஏமாற்றிவிடும்.

அதே போன்று விருச்சிகத்தில் சந்திரனும் கடகத்தில் செவ்வாயும் மேஷத்தில் சனியும் நின்று நீச்ச நிலையை உயர்ந்துவிடில் வேறு என்ன கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் நல்லது நடக்காது.

எப்போதும் இடைவிடாத பினித்தொல்லை, எவரையும் பார்த்து அச்சம் கொள்ளும் நிலை என்று அல்லல் பட வைக்குமே தவிர ஆனந்த பட வைக்காது.


மூன்று  கிரகங்களும் அதற்கு மேலும் நீச்சமடைந்திடில் அந்த ஜாதகர் தத்தி தத்திதான் வாழ்வை மற்றவர் தயவால் நடத்தி செல்லும் நிலை ஏற்படும்.

அதிலும் செவ்வாய் சூரியனோடு இணைந்து இதில் ஓன்று நீச்சமடைந்திடில், இவர்களோடு புதனும் சேர்ந்து இருந்தால் தீய பழக்கங்கள் தலை எடுத்து அதில் இருந்து மீள முடியாத அடிமையாகிவிடும்.

மூன்று கிரகங்கள் உச்சம் அடைந்தால், அவர் என்னதான் இழிதான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உயர்வான வாழ்க்கையை அடைவது உறுதி. ஆனால் மற்றைய கிரகங்கள் நிச்சமடையாமல் இருக்க வேண்டும்.


சிலருக்கு இரண்டு மூன்று கிரகங்கள் நீச்சமுற்ற நிலையில் இருக்கும் போது, சிம்ம லக்னத்தில் உதித்து சூரியன் உச்சமானால் விசித்திரமான குணம் உடையவர்கள்.

அடங்கா கோபம், யாரையும் துச்சமாக நினைக்கும் சுபாவம், அலசிய போக்கு கொண்டவர்கள்.மற்றவர் பார்த்து பேசிய சில நிமிடங்களில் இவரின் அடங்கா குணத்தை பார்த்து விலகி விடுவார்கள்.

அதே போன்று 7 இல் செவ்வாயும் சுக்கிரனும் இருக்க பெற்றவர்கள் இழிவான நடத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.


இவர்களின் நல்ல நாட்கள் எது என்று கேட்டால் அவர்கள் சுதந்திரமாக அநீதி வழி அலையும் நாட்களே ஆனந்தம் என்பார்கள்.

கடக லக்கனத்தில் பிறந்து அங்கேயே குருவும் சந்திரனும் இணைந்து நிற்கிற நிலைமை ஏற்பட்டால், இந்த உலகத்தில் மிக உயர்வான நிலை என்று சொல்லாலாம்.

ராமபிரானுக்கு அந்த அமைப்பு என்று புராணங்கள் சொல்கின்றன.

எனவே..இனிய நாட்கள் அவரவர் கிரக நிலையை பொறுத்து உருவெடுக்கும்.  எனவே லக்னத்தையோ சந்திரனையோ குரு பார்வையையோ, அல்லது இணைவோ ஏற்பட வேண்டும்.

அந்த குரு உச்சம் பெற்று இருக்கா விட்டாலும் நீச்சமடைந்து இருக்க கூடாது. 

பெண் இனத்தாருக்கு கடகத்தில் சனியோ, ராகு கேது செவ்வாய் ஆகிய தீய கிரகங்கள் நின்றிடில் வாழ்வில் எந்த சூழலிலாவது அவஸ்தைகள், அவமானங்கள், அல்லல் தொல்லைகள் என்று இருந்தே தீரும்.

சாதாரணமாக புதனும் குருவும் பரிவர்த்தனை நிலை ஏற்பட்டால் குறைபட்ட குசந்தைகள் பிறப்பார்கள் என்கிறது சாஸ்த்திரம்.

இவ்விதம் கணவன் மனைவிக்கும் இருந்தால் நிச்சயமாக உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறந்தே தீரும். 

அந்த நிலைபட்டவர்கள் விவாகத்திற்கு முன்பே அவ்வித நிலை இல்லாதவரை மணந்தால் ஒருவாறு தப்பிக்கலாம்.


அதே போன்று குழந்தைகள் பிறக்கும் சமயம் சுக பிரசவமா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை கூட ஜாதகத்தை பார்த்து சொல்லிவிடலாம்.

லக்கனத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை வலுவுடன் இருந்தால் சுகபிரசவமாக இருக்காது.


அதே போன்று லக்னத்திற்கு 8 லோ, அல்லது சந்திரனுக்கு 8 லோ மூன்று கிரகங்கள் இருந்தால் அந்த குழந்தை ஒரு வருடத்தை தாண்டாது. ஆனால் குரு பார்வை இருந்தால் தப்பிக்கலாம்.

பெண்கள் ஜாதகத்தில் 5 அல்லது 9 இடத்தில் இருந்தால் சனி செவ்வாய் ராகு கேது இவற்றில் 2  அல்லது 2 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் பிரசவம் சுகமாக ஏற்படாது.

ஸ்ரீமத் ஜெயவீரதேவா 

No comments:

Post a Comment