Sunday, August 17, 2014

கேள்விக்கு சரியான பதில்

வாயில் விட வேண்டிய பாலை சிலையிலும், மண்ணில் பட வேண்டிய மூத்திரத்தை வாயிலும் ஹிந்து மதத்தில் உள்ள முட்டாள்கள் விட்டு கொள்கிறார்கள் என்று சொறியாருக்கு சொம்பு துக்கும் க்ரூப் கேட்கிறார்கள். அதுமட்டும் இல்லை. வெறும் கல்லிற்கு எதற்கு இவ்வளவு நகை, பல நூறு ஏக்கரில் இடம் என்று இந்த சொறியார் அன்ட் கோ க்ரூப் சிலர் தொடர்ந்து எனக்கு msg அனுப்பி டார்ச்சர் பண்ணிண்டு இருக்காங்க. நானும் எத்தினை பேருக்கு தான் பதில் சொல்றது. நாராயணா. இந்த கொசு தொல்லைங்க தாங்க முடியலடா. இதுவரை அவ்வாறு கேள்வி கேட்டவர்கள், கேட்க போகிறவர்களுக்காக இந்த பதிவு.

தி.க கட்சிக்கு சொந்தமாக எழும்பூர், ஈரோட் என்று பல இடங்களில் பல நூறு கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கே. அது எல்லாத்தையும் விற்றால் ஏதோ சென்னையில் நடைபாதையில் உள்ள ஏழைகளையாவது ஓரளவு வாழ வெய்க்கலாம். திருப்பதி போன்ற கோவில்களில் உண்டியலில் வரும் பணத்தில் பெரும் பகுதி ஏழை மக்களின் நல்வாழ்விற்கு செலவிட படுகிறது. நாஸ்திக வாதிகள் என்ன செய்துள்ளார்கள். இந்த சமுதாயத்திற்கு. உலகம் உருண்டை என்று சொன்ன ஆரியபட்டா, சந்திரன் கருப்பு, பூமி சூழலும் வேகம் முதலியவற்றை கண்டறிந்த பாஸ்கராசார்யா, சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகளை கண்டறிந்த வராஹ மிக்ரர், 6ம் நூற்றாண்டிலேயே புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்தவர். trignomentry, geomentry முதலான கணித முறைகளை கண்டறிந்த பிரும்ம குப்தா, ராமன், போஸ் என்று இந்திய விஞ்ஞானிகளாகட்டும், எடிசன், ஐந்‌ஸ்டைந் போன்ற வெளி நாட்டு விஞ்ஞானிகள் ஆகட்டும். நூற்றில் 99 சதவீதம் விஞ்ஞானிகள் இறை நம்பிக்கை உடையவர்கள். ஜீ.டி நாய்டு போல் ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர்களும் இறுதியில் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என உணர்ந்தார்கள். நாஸ்திக வாதிகள் என்ன விஞ்ஞான கண்டு பிடிப்பு செய்து கிழித்தார்கள் என்று சொல்ல முடியுமா.
சும்மா ஒன்னும் நாங்க கோமாதா, எங்கள் குல மாதா என்று வணங்கவில்லை. ஹிந்து மதம் என்பது ஒரு மிகப்பெரிய Science Encyclopediya. எதையும் நீங்க வெளி நாட்டு காரன் சொன்னா கொஞ்சும் நம்புவிங்க இல்ல. அமெரிக்கா காரன் மாட்டு மூத்திரத்தை பத்தி சொல்றதை கொஞ்சும் கேளுங்க.
காச நோயையும் , புற்று நோயையும் குணமாக்கும் கிருமி நாசினி என்று கூறி பசுவின் முத்திரத்திற்கு அமெரிக்கா 2003இல் காப்புரிமை வாங்கியது. இந்தச்செய்தி மருத்துவ உலகில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. இதுகுறித்து உலகளாவிய விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. உலகில் உள்ள பல பல்கலைகழகங்களில் ஆராய்ச்சிகள் மேற்க்கொள்ளபட்டன. அதன் விளைவு? இன்று கௌபதி என்ற புதிய மருத்துவ முறையே உருவாகிவிட்டது.
பசுவின் மூத்திரம், சாணம் உள்ளடக்கிய பஞ்ச கவ்ய சிரிக்கா என்ற மருத்துவம் குறித்து இந்தியர்களுக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது. ஆனால்/? இக்கால மருத்துவம் கண்மூடித்தனமான மூடநம்பிக்கையால் ஏற்பட்ட பழமையான சிகிச்சை என்று கேலி செய்தது. இன்று அதன் பெருமையை உணர்ந்து கொண்டது. வெள்ளைக்காரன் இந்த கௌபதிய வெச்சே க்ரோர்பதி ஆய்ட்டான். நமது மெய்ஞானம் என்பது என்ன? மெய் எனும் சொல்லிர்க்கு உண்மை என்று ஒரு பொருள். உடல் என்றும் ஒரு பொருள். நாம் நோய் நொடி இல்லாது வாழ நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பெறும்கொடை இந்த மெய்ஞானம். அது எவ்வாறு? பொய்ஞானம் ஆகும். அன்று நமது மெய்ஞானத்தை மூடத்தனம் என்று சொன்ன விஞ்ஞானத்திற்கு இன்று மூலதனமே நமது மெய்ஞானம் தான். இன்று பசுவில் இருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. வறட்டியை எரித்து செய்யப்படும் ஹோம தீயால் சுற்றுசுழல் பாதிக்கப்படுவதாக அன்று சிலர் கருதினர். ஆனால் அந்த தீ சுற்றுசூழலையே தூய்மையாக்குகிறது என்று இன்றைய விஞ்ஞானம் உணர்ந்து உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் போபால் விச வாயு சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பிறகு தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறைய கோவில்கள் கட்ட ஆரம்பித்தது, வேள்விகள் செய்ய ஆரம்பித்தது எல்லாம். கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவையே பெரும் ஒரு பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றியது மாட்டு சாணம் தான். இது சொறியார் க்ரூப்க்கு தெரியுமானு தெரியல.
உக்ரைன். அன்றய ஸோவியத் யூனியனில் ஒரு அங்கமாக அது இருந்தது. 1991இல் அது தனி நாடானது. அந்த உக்ரைனில் உள்ள ஒரு நகரம் தான். செர்னோபில். 26/4/1986 அன்று செர்நோபில் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு டாங்க் வெடித்துச் சிதறி உடனே பல ஆயிரம் பேர்கள் இறந்தனர்.
இச்சம்பவம் நடந்த உடனே ரஷ்ய விமானங்கள் நமது நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் அடிக்கடி பறந்தன. அவை நமது நாட்டுக்கு வந்து டன் கணக்கில் உப்புகலந்த பசுஞ்சாணத்தை அள்ளிக்கொண்டு போய் செர்நோபில் பகுதி முழுவதும் வீசின. இதனால் அணுக்கதிர் வீச்சு பெருமளவு பரவாமல் தடுக்கப்பட்டது.
காரணம் இல்லாமலா நமது முன்னோர்கள் பசுவை கோமாதா எங்கள் குலமாதா என்று சொன்னார்கள். பசுவிற்கு கறவை நின்று போனால் கூட அதன் மூத்திரம், சாணி ஆகியவை நமது நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிறு புள்ளைக்கு கூட புரியர மாதிரி விளாவரியா சொல்லியாச்சு. இனி எந்த சொறியார் சொம்பு தூக்கியாது எனக்கு இது சம்பந்தமா msg பண்ணட்டும். அப்ப இருக்கு.
ஹிந்து மதத்தை மூஞ்சி புக்கில் யாராவது விமர்சித்தால் இதே போல் பிற மதங்களை விமர்சிக்க வேண்டியது தானே என்று சில ஹிந்து மதத்தில் உள்ள முட்டாள்கள் கேட்கிறார்கள். ஒரு நல்ல மனிதன். எந்த மதத்தையும் இழிவு படுத்த மாட்டான். என்பதை சொல்லி விடை பெறுகிறேன்.
கிருஷ்னார்ப்பன வஸ்த்து.

No comments:

Post a Comment