Friday, August 29, 2014

விநாயகர் அகவல்- மூலாதாரம் என்றால் என்ன?

விநாயகர் அகவல்-
மூலாதாரம் என்றால் என்ன?
விநாயகர் அகவலில், மூலாதாரத்தில் மூண்டெழுகனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்து என்று அழகாக பாடியுள்ளார் ஔவையார்!
மூல ஆதாரம் கண், அதில் தவம் செய்வதால் எழும் கனல் பெருஞ்ஜோதியாக எழும்.
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து-கால் என்றால் பாதம்-இறைவனின் திருவடி. கண்ணாகிய மெய்ப்பொருளில் கருத்து வைத்தால் கனல் மூண்டெழும். கண்ணே-இறைவனின் கால் திருவடி!

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
என சிவவாக்கியர் பாடுகிறார். மூலம் ஆகிய குளம் நம் கண் நீர் நிறைந்துள்ளதால் குளம் என்றார்.நம் கண்ணே மூலம் என்பது தெளிவாகிறதல்லவா?
இதில் முளைக்கும் கோரைபுல் என்னவன்றால் அந்தகரணங்களால் தினம் தினம் ஏற்படும் இருவினையாகிய கோரையை அறுத்தெரிய வேண்டும் என்றார். இதில் இன்னொரு இரகசியமும் வெளிப்பட்டது.
கண்ணால் பார்ப்பதால் தான் மனம் புத்தி சித்தம் அகங்காரத்தால் வினைகளாகிய கோரை முளை விடுகிறது.அதை தினமும் அறுத்துத் தள்ளுவதே தியானம்.
மூலமுதல் ஆதாரம் ஆறினையும் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறுதலத்தை பாரு பாரு!
ஆறுதலமாக ஆறுமுகமாக உள்ளது இரு கண்கள்.

No comments:

Post a Comment