Friday, September 26, 2014

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி -
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. - 11
பொருள்: அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.
கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே. - 12
பொருள்: என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!
பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே? -13
பொருள்: உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே: - 14
பொருள்: ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!
தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. - 15
பொருள்: அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!
கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே. - 16
பொருள்: கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? - 17
பொருள்: அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே. - 18
பொருள்: அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. - 19
பொருள்: ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.
உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே. - 20
பொருள்: என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே

அஷ்ட லட்சுமி துதிகள்

அஷ்ட லட்சுமி துதிகள்இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.
1 தன லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.
2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.
4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
6 சந்தான லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.
8 ஆதி லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.
மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.
சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.
ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.
வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.
முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.
சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.
ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.
இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?d

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.
ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும்.
காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!

அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!
அம்பாள் சொன்ன திருத்தலங்கள்! அம்பாளின் திருநாமங்கள் மட்டுமல்ல, அவளின் அருள் சுரக்கும் சில தலங்களின் பெயர்களும் மகிமைபெற்றனவாகத் திகழ்கின்றன. இதுகுறித்து சாட்சாத் பார்வதிதேவியே பர்வதராஜனிடம் விவரித்திருக்கிறாள். அம்பிகை சொன்ன அந்த இருப்பிடங்களில் சிலவற்றின் இன்றைய பெயர்கள் தெரியாவிட்டாலும்கூட, அந்த நாமங்களை அப்படியே படிப்பது நமக்கு நன்மை தரும். நவராத்திரி காலத்தில் அவற்றை உச்சரித்து அம்பாளை தியானிப்பதால் கூடுதல் பலன் உண்டு. சரி, அந்த இடங்கள் என்னென்ன தெரிந்துகொள்வோமா? லட்சுமிதேவிக்கு வாசஸ்தானமாகவும் மகாஸ்தானமாகவும் இருக்கும் கோலாபுரம். ரேணுகாதேவியின் இருப்பிடமான மாத்ருபுரம். துர்கா தேவியின் உத்தமமான இருப்பிடங்களான துளஜாபுரம், சப்தஸ்ருங்கம், இங்குலை, ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிரமரி, ஸ்ரீரக்த தந்திரிகா. அன்னபூரணியின் இருப்பிடமாகவும் தனக்குமேல் உயர்ந்த ஒன்று இல்லாததுமான காஞ்சிபுரம். பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்த ஏகாம்பரம். யோகேஸ்வரியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேஜோஸ்தாபம், விந்தியாசலம். பீமாதேவி. விமலா தேவி. நீலாம்பிகை. திருவானைக்காவல். ஸ்ரீநகரம். நேபாளத்தில் குஹ்யகாளி. தகராகாசமாகிய சிதம்பரம். வேதாரண்யம். சீனத்தில் நீல. . .

ஸ்ரீராமனும் நவராத்திரியும்!

தெய்வ அவதாரங்களும் புராணக் கதாபாத்திரங்களும் அம்பாளை வழிபட்டு நல்லருள் பெற்ற திருக்கதைகளை புராணங்கள் விளக்குகின்றன. கிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயினி தேவியை குறித்து விரதம் இருந்த தகவலையும், அரிச்சந்திரன் ஸதாட்சி எனும் அம்பிகையைக் குறித்து விரதம் இருந்து அருள்பெற்ற கதையையும் அந்த ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் வியாசர் தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.
சீதாதேவியை ராவணன் அபகரித்துக்கொண்டு போனதும், ராமர் துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது அவரை நாடி, மகதி என்னும் வீணையை மீட்டியபடி நாரதர் வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று வணங்கிய ஸ்ரீராமனும் லட்சுமணனும் அவர் அருகே அமர்ந்தனர். ஸ்ரீராமனின் முகவாட்டத்தைக் கண்ட நாரதர்  பேசத் தொடங்கினார்...
''ராகவா! சாதாரண மானிடனைப் போல் நீ ஏன் துயரப்படுகிறாய்? நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும். சில காரியங்களுக்காக நான் சொர்க்கலோகம் போனபோது, அங்கு நடந்த சில விவரங்களைத் தெரிந்துகொண்டுதான் உன்னிடம் வந்தேன். அதை அப்படியே உன்னிடம் சொல்கிறேன் கேள். தனக்கு மரணம் வரும் என்பது தெரியாமல், ராவணன் சீதையை அபகரித்துவிட்டான். ராவணனை சம்ஹாரம் செய்வதற்காகவே நீ அவதரித்து இருக்கிறாய். ராவணன் சீதையிடம் கொண்ட மோகம், பூர்வ ஜென்மத்தால் ஏற்பட்டது.
போன பிறவியில் சீதை, தவத்தில் சிறந்த முனிவர் ஒருவரின் மகளாக அவதரித்து வளர்ந்து வந்தாள். தவம் செய்த அவளைக் கண்டு மோகம் கொண்ட ராவணன் பலாத்காரமாக அவள் கையைப் பிடித்து இழுத்தான். தனக்கு மனைவியாகும்படி வற்புறுத்தினான். கோபம் தாங்காத அவள், 'தீயவனே! உன்னைக் கொல்வதற்காக நானே அயோநிஜையாக (கர்ப்பவாசம் இல்லாமல்) அவதரிப்பேன். உன்னால் தொடப்பட்ட இந்த உடம்பை இனியும் வைத்திருக்கமாட்டேன்’ என்று சொல்லித் தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அப்படிப்பட்ட கற்புக்கரசியை விவரம் தெரியாமல், பாம்பை எடுத்துக் கழுத்தில் போட்டுக் கொள்வதுபோல, தன் குலமெல்லாம் நாசமடைவதற்காகவே ராவணன் அபரித்துக் கொண்டு போயிருக்கிறான். நீயும் தேவர்களின் பிரார்த்தனைக்காக அஜமகாராஜன் பரம்பரையில் ராவணன் வதத்துக்காகவே அவதரித்து இருக்கிறாய்.
ஆகவே, ராமா! சீதையைப் பற்றிக் கவலைப்படாதே. சீதை அசோகவனத்தில் உன்னையே தியானித்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய உணவுக்காக தேவேந்திரன் காமதேனுவின் பாலை ஒரு பாத்திரத்தில் இட்டு, சீதையிடம் அனுப்பி இருக்கிறான். அதை உண்டு சீதை பசி, தாகம் இல்லாமல் இருக்கிறாள். நானும் பார்த்தேன். நீ தைரியமாக இரு!' என்று ஆறுதலும் தைரியமும் உரைத்த நாரதர், நவராத்திரி விரத மகிமையையும் அவருக்கு விவரித்தார்.
''ரகு குல உத்தமா! ராவணனை சம்ஹரிப்பதற்கான வழியைச் சொல்கிறேன். நவராத்திரியில் விரதம் இருந்து அம்பிகையை பூஜை செய்தால், அது எல்லாவிதமான ஸித்திகளையும் கொடுக்கும். இந்திரன், விஸ்வாமித்திரர், பிருகு, வசிஷ்டர், காசியபர், ப்ருகஸ்பதி முதலானவர்கள் எல்லாம் நவராத்திரி விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டு, அவரவர் வேண்டியதைப் பெற்றார்கள்.
ராமா! சுகத்தை விரும்புபவன் மங்கலகரமான இந்த விரதத்தை அனுஷ்டிப்பான். ராவணனை வதம் செய்தவற்கு உண்டான ஊக்கத்தோடு முயற்சி உள்ளவனாக விதிப்படி இந்த விரதத்தைச் செய்!'' என்றார்.
ஸ்ரீராமன் அவரிடம், ''முனிவரே! தாங்கள் எல்லாம் அறிந்தவர். தாங்கள் வழிபடச் சொன்ன அம்பிகை யார்? அவள் மகிமை என்ன? அவள் எவ்வாறு வடிவம் கொள்கிறாள்? அவளுக்கான விரதம் எப்படிப்பட்டது!'' என்று கேட்டார்.
அவருக்குத் விரிவாக பதில் உரைத்தார் நாரதர்.
''அகில உலகங்களுக்கும் அன்னையான ஆதிசக்தியே அந்த அம்பிகை. அவள் எக்காலத்தும் இருக்கக்கூடியவள். சகல துக்கங்களையும் போக்கடிப்பவள். சகல விதமான விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவள். எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள்.
என் தந்தையான பிரம்ம தேவரிடம் சிருஷ்டி சக்தியாக இருக்கிறாள். மகாவிஷ்ணுவிடம் பரிபாலிக்கும் சக்தியாக இருக்கிறாள். ருத்ரனிடம் சம்ஹார சக்தியாக இருக்கிறாள். பிரம்மன் முதல் சிற்றெறும்பு வரை அனைத்திலும் இருக்கும் சக்திகள் எல்லாம் அந்த பராசக்தியிடம் இருந்து தோன்றிய சக்திகளே. பிரம்மன் முதலான பலரும், பலவிதமாக அவளைப் பற்றித் துதித்து இருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் அளவே கிடையாது!'' என்றார் நாரதர்.
ஸ்ரீராமன் தொடர்ந்து கேட்டார்... ''மகரிஷியே! தேவி விரதத்தின் விதிமுறைகளைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள். அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அவள் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.''
ஸ்ரீராமன் இப்படிக் கேட்டதும், ''ராமா! நானே முன்னால் இருந்து இந்த பூஜையை நடத்துகிறேன். தேவர்களுக்கு அனுகூல ஸித்தி உண்டாகும்படி உனக்கு உற்சாகத்தை விளைவித்து பூஜையை முடித்து வைக்கிறேன்'' என்றார் நாரதர்
மால்யவான் மலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாரதர் முன்னிலையில் முறைப்படி பூஜை தொடங்கப்பட்டது. ஸ்ரீராமன் உபவாசத்தோடு இருந்து பிரதமை முதல் பூஜையை நடத்தி வந்தார். அஷ்டமி தினம். நள்ளிரவு நேரம். அந்த மலையின் உச்சியில், அம்பிகை சிங்க வாகனத்தில் எழுந்தருளி, தரிசனம் தந்தாள். ராவண சம்ஹாரத்துக்காக ராமருக்கு அருள் புரிந்து மறைந்தாள் (இந்த இடத்தில், மகா விஷ்ணு எடுத்த மச்சாவதாரம் தொடங்கி ராமாவதாரம் வரை அனைத்து அவதாரங்களையும் சொல்லி, அவற்றின் பெருமைகளையும் சொல்லி இருக்கிறாள் அம்பிகை).
ஸ்ரீராமனின் வழியில் நாமும், அற்புதமான இந்த நவராத்திரி தினங்களில் அம்பாளை வழிபட்டு அனுகூலம் பெறுவோம்

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் நவராத்திரி சிறப்பு

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் நவராத்திரி சிறப்பு

நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் இப்போது தெரிந்துக் கொள்ள இருக்கிறோம். நவராத்திரி உருவான கதை ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான். நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது. “போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள். இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது. கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் உருவான சம்பவம் தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். “நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர். தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா. காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது. கொலுபடிகளின் தத்துவம் காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம். முதல் படி, அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும். இரண்டாம் படியில் – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். மூன்றாம் படியில் – மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். நான்காவது படியில் – நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும். ஐந்தாம் படியில் – ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும். ஆறம் படியில் – ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். ஏழாம் படியில் – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும். எட்டாம் படியில் – தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம். ஒன்பதாம் படியில் – முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.. இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும். பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது. ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம். பூஜை பாடல்கள் துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை – ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம். அத்துடன் தினமும் ஒரு சுமங்களி பெண்களுக்காவது விருந்து படைக்க வேண்டும். இயலாதவர்கள் நவதானியங்களால் செய்யும் சுண்டல்களை ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு தர வேண்டும். ஒன்பது நாளில், உங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஒன்பது பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சல் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவை தர வேண்டும்.

பதினெட்டு சித்தர்கள்

பதினெட்டு சித்தர்கள்

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன.
அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது ஆன்மீகவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.

அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே.

அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக.

ஸ்ரீ கருட மந்திரம் : சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க

ஸ்ரீ கருட மந்திரம் : சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க

ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :
சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.
சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.
ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .
ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.
ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.
கருட உபாசனை பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச் சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.
ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார்.
கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும்காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி மந்திரம் தான்.
கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-
ஓம் க்ஷிப ஸ்வாஹா
ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.
கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.
பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு வர மனோதிடம் உண்டாகும்.
கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-
1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி - மான் போன்ற பார்வை
3.தாரா - குருக்குப்பார்வை
4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ - பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா - கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை
இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?
முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.
ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.கால சர்ப்ப தோஷ பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம்.
தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.
அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது.......................

5 வகை ஸ்நானங்கள் பற்றி காஞ்சி மகாபெரியவர்

5 வகை ஸ்நானங்கள் பற்றி காஞ்சி மகாபெரியவர்

சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். 

இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால்/நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி/ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை/சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா..? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.
புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன்,
ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

சின்முத்திரை

சின்முத்திரை

தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.

கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.

உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின்தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.

ஆலயதத்துவம்

ஆலயதத்துவம்

ஆன்மா லயித்திருக்கும் இடம் ஆலயம். அந்த உண்மையை நமக்கு உணர்த்துவதே ஆலயதத்துவம். பகவான் உலகம் என்ற அண்டத்தைப் படைத்தது போலவே உடல் என்ற பிண்டத்தையும் படைத்திருப்பதால் அண்ட, பிண்ட தத்துவங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த உண்மையைக் கண்டறிந்தவர்கள் யோகிகள். அவர்கள் தான் போகிகளுக்கும், ரோகிகளுக்கும் வேத, ஆகம சாஸ்திரங்களை விளக்கி வைத்து நாமும் புரிந்து கொள்ள வழி செய்தவர்கள் (யோகி - ஒருவேளை உண்பவன், போகி - இருவேளை உண்பவன், ரோகி - பல முறை உண்பவன் ஆதலால் வியாதிகளுக்கும், துன்பங்களுக்கும் அடிமைப்பட்டவன்)

யோகிகள் உணவுக் கட்டுப்பாடுள்ளவர்கள் என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்தி தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள். அதன் பயனால் யோகபலம் பெற்றவர்கள். எதையும் செய்யவும் உணரவும் சக்தி பெற்றவர்கள். குறிப்பாக, ‘லம்பிகா’ என்ற யோகப் பயிற்சியினால், நாக்கினை இருபுருவங்களுக்கும் மத்தியில் செலுத்தி அங்கிருந்து பெருகும் அமிர்தபானத்தைப் பருகுவதால் அவர்களுக்குப் பசி, தாகம் இருக்காது. புருவமத்தியில் (லலாடம்) தவமியற்றுவர்களே இறைவனைக் கண்டு மகிழ்ந்தவர்கள். உடலின் காமகூடத்தில் ஏற்படும் வீரியங்களை உடலின் மேல்நோக்கிச்செலுத்தி, உடலெங்கும் பரவச் செய்து கிடைக்கும் பேரின்பத்தை நன்கு உணர்ந்தவர்கள். ஆதலால், சிற்றின்பத்தை ஒதுக்கி, சரீரபலம், மனோபலம் ஆகியவற்றினால் உடலுள்ளிருக்கும் ஆத்மா, பரமாத்மாவுடன் கலந்து காலம் கழிவதே தெரியாமல் இறையுணர்வாகிய இன்பத்திலேயே திளைத்தவர்கள். ஆதிசங்கரர், இவர்களை “ஊர்த்துவரேதசர்கள்’ என்கிறார்.
வீரிய விந்துகளை வெளியே செலுத்துவதால் (சங்கினி நாடிமூலம்) கிடைப்பது சிற்றின்பம். இதற்கு மற்றவரின் உதவியும் தேவை. சிற்றின்பர்களுக்கு பசியும், தாகமும் இருந்து கொண்டே இருப்பதால் மனக்கட்டுப்பாடு இருப்பதில்லை. சரீரபலம் குறையும். இவர்களுக்கு ஆன்மபலம் அவசியம் தேவை என்பதை உணர்ந்த யோகிகள் அவர்களுக்கு மனபலம் ஏற்பட ஆலயங்களை எழுப்பினார்கள் என்பதே காலம் காட்டும் வரலாறு. அதற்கு பிண்டதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு எளிதில் பழகி தொடர்ந்து ஆலயவழிபாடு செய்வதால் இறையின்பம் காண வழி செய்து கொடுத்தனர்.
ஆலயம்: மனித ஆகிருதியாகிய பிண்டம் - இது அடிப்படை
அதில் கால்கள் - முன் கோபுர(ங்கள்)ம்
பாதப்படலங்கள் - கோபுரத்தின் பக்கங்கள்
பாதங்களின் இடைவெளி - கோபுரவாயில்
குதம் - பலிபீடம்குஹ்யம் (ரகசிய இடம்) - துவஜஸ்தம்பம் (எ) கொடிமரம்
அண்டகோசம் - வாகனங்கள்
வயிறு - மணிமண்டபம்
தொப்புள் - மணிமண்டபத்திலுள்ள மணி
மார்பு - மகாமண்டபம்
கழுத்து - அர்த்தமண்டபம்
தோள்கள் - உட்பிராகாரங்கள்
கைகள் - வெளிப்பிராகாரங்கள்
விலாப்புறங்கள்/கைகளுக்குள்ள இடைவெளி - இவையும் வெளிப்பிராகாரங்கள்
செவிகள் - பிராகாரப் பலகணிகள் (நுழைவாயில்கள்)
முகம் - ‘அந்தராளம்’ (எ) முன்மண்டபம் (மூலஸ்தானத்திற்குமுன்)
கண்கள் - கர்ப்பக்கிரக நிலைத்தூண்கள்மூக்கு - அவற்றின் மேலுள்ள கல்
தலை - கர்ப்பக்கிரகம்
ஆயிரம் இதழ்கொண்ட தாமரரை - விமானம்
ஆத்மா - விமானத்தின் கீழேயுள்ள விக்ரஹம்
இருதயக்கமலம் - ஆலயத்தடாகம்
இடையும் அதன் வலம், இடப் பக்கங்களும் - பின்னும் பக்கங்களில் உள்ள கோபுரங்களும்
எலும்புகள் - சுவர்களின் கற்கள்
நரம்புகள் - கல்தூண்கள்
மாமிசப்பகுதி - சுண்ணாம்பு/சிமெண்ட் கலவைகள்
ரஸம், ரத்தம், மாமிசம், மேதஸ் - (உடலில் கொழுப்பு,) எலும்பு, மஜ்ஜை, சுக்லம் (கண்ணின் வெள்ளைப்பகுதி) என்ற ஏழு தாதுக்களும் - ஏழு மதிற் சுவர்கள்
அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்ற ஐந்து கோசங்கள் - ஐந்து மதில்களையும்
ஸ்தூல - ஸுக்ஷ்ம - காரணசரீரங்கள் - மூன்று மதில்களையும்
ஒரேமதில் இருந்தால் இந்த அத்தனை தத்துவங்களுமே அதில் அடங்கி விட்டதாகவும் அறிய வேண்டும். சிலயோகிகள், இறைவனின் நிற்கும் திருக்கோலமே கோபுர வடிவம் என்றும் அதைச்சார்ந்த ஆலயத்தை இறைவனின் சயன(படுத்த)க் கோலமாகவும் கூறுவர். ‘கோபுரதரிசனம் கோடிபுண்ணியம்’ என்று கூறியதன் உண்மை இதுதானே?
பூஜை செய்யும்போது (க்ஷோடச) பதினாறு வகை உபசாரம் செய்வதை பஞ்ச பூத. சம்பந்தமானவை என்பதையும் அறியவும்.
1. பூமி - நைவேத்தியம்
2. நீர் - ஸ்நானம்
3. நெருப்பு - தீபம்
4. காற்று - சாமரம்
5. ஆகாயம் - மணிஓசை
ஏனெனில் இவை யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.
குறிப்பாக ஈசன் எவ்வடிவிலுள்ளான் என்பதைக் கூற முடியாது என்றாலும் மனித வடிவில் வழிபடுவது ஏன்? அதற்கு ஒரே காரணம், மனித இனத்தின் மனம், தன்னைப் போன்ற வடிவத்தை ஆதரித்து எளிதாக ஏற்றுக் கொள்கின்றது. (மானைக் காட்டியே மானைப்பிடிப்பது போல்) அதனால்தானோ ஸ்ரீராமன், புத்தர், சங்கரர், ஸ்ரீராமகிருஷ்ணபரம ஹம்சர், இயேசு நாதர், முகமது நபி போன்ற அவதார புருஷர்கள் மனித வடிவில் வந்தனர்? குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம் செய்யும்போது அருச்சுனனுக்கு விஸ்வரூபம் எடுத்து தரிசனம் காட்டிய போது அதைக் காண ஞானக்கண் பெற்றும் கூட, பவந்து பகவானை மீண்டும் மனித வடிவிற்குத் திரும்பிவரப் பிரார்த்தனை செய்தான்.
ஆதலால் இறைவனின் உண்மையான திருவுருவத்தைக் காண நம்மால் இயலாது என்பதே நிதர்சனம். வேறு பல வடிவங்களிலும் நம்மால் காண இயலாது. நினைத்துப் பார்க்கவும் மனம் இடம்தராது.
“கண்ணுறும் வடிவத்திலேயே கடவுள் உளன்” என்று நினைத்தலே இறைவன் நாம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது தெளிவாகிறது. யோகிகள், நமக்குக் காட்டிய பக்தி மார்க்கமே ஆலய வழிபாடு மூலம்தான். பக்தியற்ற இறைவழிபாடு உயிரற்ற உடலுக்குச் சமம்.

கடன், சங்கடங்கள் போக்கும் ' திருபுவனம் சரபேஸ்வரர் '

கடன், சங்கடங்கள் போக்கும் ' திருபுவனம் சரபேஸ்வரர் '
தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள 'திருபுவனம் ' சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் 'சரபேஸ்வரரை' வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

சிவாய - குருக்கள்

சிவாய - குருக்கள்
கும்பகோணம் , மயிலாடுதுறை , புதுக்கோட்டை சுற்றி பின்வரும் கோயில்கள் கலந்து வருகின்றன. நாம் அதே தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் தொண்டர்கள் தேடும் . எண் கோவிலில் குருக்கள் தொலைபேசி எண் 1 Achyutamangalam ( நன்னிலம் வட்டம் ) இலங்கை Viswanathaswami கோயில்) 2 Adampar இலங்கை வண்டார்குழலி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஸ்ரீ கண்ணன் குருக்கள் 99410 38138 3 ஆலங்குடி Nedar கிராமம் ஸ்ரீ கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ Brahmapuriswarar அருள்மிகு ஜெயா 9790380738 4 Asoor இலங்கை . Thaanthonriswarar Thiru.Ravi , ஆசிரியர் 4352443897 5 Chitrakudi ( Budalur தாலுக்கா) இலங்கை Jagadambika சமேத ஸ்ரீ Jagannatheswarar அருள்மிகு கனகராஜ் 948 717 2163 6 Enanallur ( மேற்கு Thirukannapuram 3 கி.மீ. தூரத்தில் ) இலங்கை Kuduminathaswami கோவில் டாக்டர் செல்வம் ( P.Kottur என்ற ) 0435 237154 7 Eraharam இலங்கை . கைலாசநாதர் Thiru.Hari 9245884635 8 Kallaperambur ( ஆலங்குடி வட்டம் ) இலங்கை Periyanayagi அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஸ்ரீ தியாகராஜன் 0436 2285429 9 Kanjanur Sri.Kasiviswanathar Thiru.Ganesan 10 Kazhukanil Muttam இலங்கை காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ Kailasnathar கோவில் 11 ( கும்பகோணம் அருகில்) Kizhkorukkai இலங்கை Pushpakavalli அம்பாள் சமேத ஸ்ரீ Gnanapuriswarar கோவில் திருமதி Kurvammal 9443460812 12 Kollapuram ( உடையார்பாளையம் வட்டம் ) இலங்கை அபிராமி அம்பாள் சமேத aparatha rakshakaswami அருள்மிகு சண்முகம் Iyya 9942656945 13 கோட்டூர் Sri.Kasiviswanathar திருமதி . ( கும்பகோணம் அருகில்) அமுதா 14 Kovilacheri இலங்கை Shembagavalli அம்பாள் சமேத ஸ்ரீ Kakoleswarar கோவில் 15 Maaligai திடல் ( Thirukarugavoor பின், திருவாரூர் மாவட்டம் ) இலங்கை Soundaranayagi அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் ராமதுரை ( மன்னார்குடி அருகே ) 9677818267 16 மகாதேவா பட்டினம் இலங்கை Mahadevaswami அருள்மிகு பாரதி மோகன் 9443565300 17 Mahimalai ( Ammapettai , வலங்கைமான் தாலுக்கா அருகில் ) இலங்கை அன்னபூரணியம்மாள் அம்பாள் சமேத ஸ்ரீ Chandramouleeswarasawmi அருள்மிகு கண்ணப்ப சிவாச்சாரியார் 9443907990 18 Manambadi Sri.Viswanathar Thiru.Pakirisami 9976190992 19 Mangudi Sri.Sivalokanathar Thiru.Kasinathan 9965767146 20 மயிலாடுதுறை இலங்கை Vadaaranyeswarar கோவில் சுவாமிநாதன் 9976071212 21 Melakaveri Sri.Brahmapuriswarar சிவஸ்ரீ . பாலு குருக்கள் 04352421235 22 Melakaveri Sri.Kasiviswanathar Thiru.T.Ambalavanan 9443106741 23 Merkannamangalam ( அருகில் Srivanchiyam , நன்னிலம் வட்டம் ) ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் சங்கர் 9787825210 24 Nambarai ( அருகில் Thimiri , ஆற்காடு வட்டம் ) இலங்கை மரகதவல்லி சமேத ஸ்ரீ Gowriswarar அருள்மிகு பழனி 9489343639 25 Nandiyalam ( சென்னை அருகில் க்ரெடிட் பக்கங்களின் ஸ்கான்களை - வேலூர் நெடுஞ்சாலையில் ) இலங்கை காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ Nandhiswarar அருள்மிகு பாண்டியன் 9443144501 ( ஆலங்குடி அருகே வலங்கைமான் தாலுக்கா, ) 26 Narikudi இலங்கை emaneswari அம்பாள் சமேத ஸ்ரீ emaneswaraswami அருள்மிகு Vaidyalinga உடையார்பாளையம் 9751593421 27 நத்தம் @ கருப்பூர் ( கும்பகோணம் அருகே ) இலங்கை Agastheeswrar அருள்மிகு சிவப்பிரகாசம் 9944475662 28 Nedar கிராமம் தஞ்சாவூர் மீது ( வழியில் பசுபதி கோயில் கிராமத்தில் - கும்பகோணம் சாலை ) இலங்கை Mangalambika சமேத ஸ்ரீ Kalahasthiswara சுவாமி கோயிலில் Palaniswami 93650634669/04362292593 () S.Pudur 29 Pigiyanganallur இலங்கை சிவன் கோயில் ஸ்ரீ ரங்கநாதன் 9445109914 / 04352465878 30 பிள்ளையார் petai இலங்கை விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ Viswanathaswami அருள்மிகு Sattanatha குருக்கள் 9344147857 31 Porappadi இலங்கை Mangalambika சமேத ஸ்ரீ Thirumoolanadaswami அருள்மிகு ஜெயராமன் 0435 2467643 32 Poundarikapuram இலங்கை Soundaranayagi சமேத ஸ்ரீ சோமநாதர் கோயிலில் விநாயகர் குருக்கள் 0435 2463930 33 Puliyanserry ( கும்பகோணம் - நன்னிலம் சாலை) ஸ்ரீ கைலாசநாதர் கோவில் இலங்கை மகாதேவா குருக்கள் 34 Puthagalur ( நன்னிலம் வட்டம் ) இலங்கை Paramasundari அம்பாள் சமேத பரமசிவன் சுந்தர சுவாமி கோயிலில் Vaazhkai உதய குமார் 9345808198 35 Puzuthikudi Sri.Thirumulanathar Thiru.Duraiarasan 9976191701 36 Seedakkamangalam ( நன்னிலம் வட்டம் ) இலங்கை Thirumulanadhaswami அருள்மிகு வெங்கடாசலம் 9788524229 37 Solapuram Sri.Bhairaveswarar Thiru.Jayakumar 9345618527 38 Solapuram Sri.Kasiviswanathar Thiru.Veeramani 9994694067 39 Thiagasamudram Sr.Boolakanathar Sivasri.Senthilvelava குருக்கள் 9994367296 40 Thirukazhithattai இலங்கை Vedhanayagi சமேத ஸ்ரீ Vedapuriswarar அருள்மிகு சங்கர் குருக்கள் 9952805744 41 Thirukondeeswaram ( நன்னிலம் வட்டம் ) இலங்கை Dharmambika சமேத ஸ்ரீ Dharmapuriswarar அருள்மிகு Rajaganapathi சிவாச்சாரியார் 9486912793 42 Thirumandangudi Sri.Thiribuvaneswarar Sivasri.Nagaraja குருக்கள் 4352941879 43 Thirumetraligai Sri.Brahmapuriswarar Thiru.Selvasekar 9442512703 44 Thiruvalliangudi Sri.Sozhiswarar Sivasri.Ramakrishna குருக்கள் 4352457459 45 திருமங்கலம் Sri.Boolakanathar Sivasri.Mohan குருக்கள் 46 Tukhili Sri.Vedapuriswarar Thiru.Palaniswami 47 Tukhili Sri.Chokanathaswami திரு . Palaniswami 48 Uththani Sri.Iravatheswarar Thiru.K.Murugan 4374220601 49 Vadapakkagrahram Sri.Chidambareswarar Thiru.Mohan 9952573094 50 Vadavansar ( மணல்மேடு அருகில் Pattavarthi - வைத்தீஸ்வரன் கோவில் சாலை ) இலங்கை காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஸ்ரீ சங்கர் 9787399201 51 Vallamangalam Sri.Sethupuriswarar திரு . Magendran 9486402428 52 Vanavanallur ( அருகில் Anaikkarai சாலை சந்திப்பு ) இலங்கை காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் ஸ்ரீ Ramanatha ஐயர் 53 Varagadai ( அருகில் மயிலாடுதுறை ) இலங்கை Varundeeswarar கோவில் சுவாமிநாதன் 9976071212 54 Vazuththur Sri.Kailasanathar Sri.Ramanujam ஐயங்கார் 9790325139 55 Vizhudhiyur ( குடவாசல் வட்டம் ) இலங்கை மயிலாடுதுறை Soundaranayagi சமேத ஸ்ரீ Chokkanathaswami அருள்மிகு Guruswami 9095922701 கோயில் விளக்குகள் செயல்பாடுகள்: மற்றும் மயிலாடுதுறை சுற்றி : 1 . புஞ்சை கிராமத்தில் கோயில்கள் : - அருள்மிகு ParvathaRajapuththiri சமேத NatrunaiNaathaEasWARAR கோயில், மற்றொரு Ambaal namly Madanthai ஆகிறது . - அங்கு மற்றொரு கோயில் Arulmiguri ThirumalaiRajeswari SamethaArulmigu இராஜராஜேஸ்வரர் கோயில் இருக்கிறது . இந்த இரண்டு இலங்கை நடராஜ குருக்கள் / இலங்கை பாலசுப்ரமணிய gurukkal.Phone இலக்கங்கள் : 9486902773 2 . Siddimalli கிராமம் : அருள்மிகு காமாட்சி Ambaal சமேத கைலாசநாதர் கோயில் , குருக்கள் தொலைபேசி எண் -9487312475 3 . அருள்மிகு Balagujambigai சமேத VennaieswararKoil , VennaiNallur அருகில் MArudur.Gurukkal பெயர் இலங்கை நவநீத சாந்தி phn no.9444170161 4 . அருள்மிகு காணும் வகையில் சமேத Vaidyanatheswarar கோயில், Pandur கிராமத்தில் , இலங்கை சதாசிவ குருக்கள் : 04364236849 5 : எந்த போன் . அருள்மிகு Thyalnayagi சமேத அருள்மிகு Vaidyanatheswarar கோயில், THALIGNAYIRU அருகே Manneer பள்ளம் எந்த village.phn : Padmanaban ; 9444526253 . 6 . அருள்மிகு Soundaranayaki சமேத Shangaarayanyeswarar கோயில், Thalachchangaadu.Gurukkal பெயர்: பாலா / சுவாமிநாதன் Phn எந்த :04364 - 280615 & 04364-280032 7 . அருள்மிகு Soundaranayaki சமேத சுந்தரேஸ்வரர் கோயில், Kesingan கிராமம் , திரு மோகன் பொறுப்பாளர் : 9443503573 --------------------------- புதுக்கோட்டை பகுதியில் : அருள்மிகு VisalakshiAmbaal சமேத KasiViswanathar கோயில் ; Ammasathram ; Vairavamurthy குருக்கள் 04339-202943 அருள்மிகு VisalakshiAmbaal சமேத கைலாசநாதர் கோயில் ; Uppilikkudi ; சந்தோஷ் குருக்கள் ; Narthaamalai . 9376474622 அருள்மிகு சுந்தர Choleeswarar thirukkoil ; Kolaththur , வெங்கடாசலம் ; 9843609453 அருள்மிகு Brahadaambaal சமேத Uththamanathar கோயில் ; கீரனூர் ; துரைசாமி Gurukkal.043396 - 262788 அருள்மிகு Sadasiveswar Thangamani ; 9047177469 . அருள்மிகு Subadranayaki சமேத Walarmadeeswar கோயில் ; Neerpazhani ; K.Arjunan மாற்று Kuttaiyer ; 9842393913 அருள்மிகு Dharmambigai சமேத மகாலட்சுமி கோயில் ; Alaththur ; Iluppur தாலுகா ; 94443807873 அருள்மிகு VisalakshiAmbaal சமேத காசி விஸ்வநாதர் கோயில் ; Athanakootaha ; ரவி பாஸ்கர் ; 9865515111 அருள்மிகு சிவகாமி Ambaal சமேத Chidambareswar கோயில் , Thondamanallur ; Thirumurthy 9751212115 அருள்மிகு Karpakaambigai SamethaAgneeswarar கோயில் ; Kalamavoor ; கந்தசாமி 9360779163 . Nanjur , Kilakurinji , Letchmanappatti & Kadappillyarpatti - கிரிதரன் மகாதேவன்-