Monday, September 26, 2016

ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தம் .

ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தம் .

ஜீவன்கள் பிறப்பதற்க்கு காரணமான
ப்ரக்ருதி புருஷர்கள் ,
ஜகன்மாதாவான ஸ்ரீமஹாலக்ஷ்மியை
உபாசித்த மந்த்ரமே ஸ்ரீசூக்தமாகும் .
ஸ்ரீசூக்தத்திர்க்கு அதிஷ்டான தேவதை ஸ்ரீதேவி
இந்த  ஸ்ரீசூக்தம் 15 ருக்குகளாக இருந்து 15 வேதமந்த்ரத்தால் கீர்த்தியாகின்றது.
ப்ரதமை முதல்,பௌர்ணமி வரை திணமும் ஒவ்வொரு கலை வீதம் வ்ருத்தியாகி பௌர்ணமியன்று 16கலையாக அபிவ்ருத்தியாகும் ஜகன்மாதாவின்
சந்த்ரகலா ரஹஸ்ய சங்கேதமாக சொல்லப்படுகிறது,

பௌர்ணமியன்று ஜகன்மாதா ஷோடசியாக காட்சியளிக்கிறாள்,
ஸ்ரீசூக்தத்தை சாதாரண மாணிடர் கூட உபாசிக்கலாம் ,ஆனால் குரு முகமாக தெரிந்து கொள்வதே சாத்பல்யமாகும்,
ஸ்ரீ சூக்தத்தை சத் க்ரமமாக வினியோகிக்கும் சாதகனுக்கு
15ருக்கிர்கும் 15சக்திகளை தேவி ப்ரசாதிக்கிறாள்,
 அவை ,தாரித்ரிய நாசனம்,துக்க நாசனம்,கஷ்டங்கள் தொலைவது,
அண்ண வஸ்த்ரத்ரத்திர்க்கு குறைவின்மை,ஸ்த்ரீகளுக்கு சம்சாரிக சௌக்யம் சௌபாக்யம்[முக சௌந்தரயத்துடன் சதுர்வித கலைகளுடன் இருப்பது}
புருஷர்களுக்கு அஷ்டைஷ்வர்ய சித்தி,சம்ராஜ்ய அதிகார ப்ராப்தி,போகம் ,ஆனந்தம்,சத்சந்தானம்,வம்சவ்ருத்தி,ஸ்ரீ மாதா சாக்ஷ்க்ஷாத்காரம்,மோக்ஷ்க்ஷ ப்ராப்தி,போக மோக்ஷ்க்ஷ ஸ்வரூபமாக ஜீவன் முக்தி ப்ரசாதிக்கும் இந்த 15சக்திகளையும் ,15 மந்த்ர படனம் மூலம் ப்ராதிக்கிறாள் ,

ஆனால் உண்மையான நிகுடார்தமான ஸ்ரீசூக்த ரஹஸ்யமே வேரு ,மேல் சொன்னது கேவளம் ஸ்ரீசூக்தத்தை படனம் செய்வதாள் வரும் பலஸ்ருதியே ,ஸ்ரீசூக்த ரஹஸ்யமே நமது தேஹ ரஹஸ்யம்

ஸ்ரீவித்யாரண்ய சுவாமி ஸ்ரீசூக்த ரஹஸ்யார்த்தத்தை தனது வித்யாரண்ய பாஷ்யத்தில் விவரமாக கூறியுள்ளார் ,அதுவும் ப்ராப்தம் உள்ளவர்கே புரியும் ,

ஸ்ரீவித்யையில் உபாசிக்கும் தேவதா மந்த்ரமுடன் ஸ்ரீ சூக்த ருக்குகளை தகுந்தார் போல் சம்புடிகரணம் செய்ய அந்த தேவதாளின் சூட்சுமம் விளங்க வைத்து சாதகனுக்கு தகுந்த மார்கத்தை உணரவைக்கும் .

சந்தஸ்

த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,ப்ருஹதி அனுஷ்டுப்,விராட் ப்ரஸ்தார:பம்க்தி
என்ற சந்தஸ்களில்  இந்த 15ருக்குகளும் வரிசையாக சொல்லப்பட்டுள்ளது.

பீஜம்>>ஹிரண்யவர்ணாம் ,என்பது இதன் பீஜம்.

சக்தி>>தாம்ம _ஆவஹ ஜாத ,எனபது இதன் சக்தி

கீலகம்>>>கீர்த்தி வ்ருத்திம் ததாதுமே ,என்பது இதன் கீலகம்.

வினியோகம் >>>ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத சித்யர்தே ,என்பது இதன் வினியோகம்

இந்த 15ருக்களுக்கும் யந்த்ரங்கள் உண்டு அவையனைத்தும் சேர்த்தாள்
ஸ்ரீசக்ரமாக வரும்

ஸ்ரீவித்யையில் ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தத்தை தெரிந்து கொள்வது சாதகனின் பூர்வ ஜன்மானு கர்மவினையை பொருத்தது .

No comments:

Post a Comment