Wednesday, June 15, 2016

வீணைகளின் 32 வகை பெயர்கள்

ஸகல தேவதா ஹஸ்த வீணா : ( வீணைகளின் 32 வகை பெயர்கள் ) :

வீணை என்று சொன்னதுமே நம் எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் கையில் உள்ள வீணைதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் 32 வகையான வீணைகள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

அவை முறையே 32 தெய்வங்களால் இசைக்கப்படுகின்றன.

இதோ அந்த வீணைகளின் பெயர்கள் :

1) ஞானசாஸ்தா - வேதவதி
2) ப்ரம்மா - அண்டம்
3) விஷ்ணு - பிண்டகம்
4) ருத்ரன் - சராசுரம்
5) கௌரீ - ருத்ரிகை
6) காளீ - காந்தாரி
7) லக்ஷ்மீ - சாரங்கி
8) ஸரஸ்வதீ - கச்சபி என்னும் கலாவதி
9) இந்திரன் - சித்திரம்
10) குபேரன் - அசித்திரம்
11) வருணன் - கின்னரி
12) வாயு - திருக்குச்சிகை
13) அக்னி - கோழாவளி
14) யமன் - அஸ்த கூர்மம்
15) நிருதி - வராளியாழ்
16) ஆதிசேஷன் - விபஞ்ஜகம்
17) சந்திரன் - சரவீணை
18) சூரியன் - நாவீதம்
19) வியாழன் - வல்லகியாழ்
20) சுக்ரன் - வாதினி
21) நாரதர் - மகதியாழ் ( பிருகதி )
22) தும்புரு - கலாவதி ( மகதி )
23) விசுவாவசு - பிரகரதி
24) புதன் - வித்யாவதி
25) ரம்பை - ஏகவீணை
26) திலோத்தமை - நாராயணி
27) ஊர்வசி - லகுவாக்ஷி
28) மேனகை - வணி
29) ஜயந்தன் - சதுகம்
30) சித்திரசேனன் - தர்மவதி
31) ஆஹா ஊஹூ ( தேவர்கள் ) - நிர்மதி
32) ஹநுமான் - ஹநுமதம்

குறிப்பு : இவை தவிர மானுடன் ஒருவனால் இசைக்கப்பட்ட வீணை ஒன்று உள்ளது அது :
33) இராவணேஸ்வரன் - இராவணாசுரம்

தகவல்: Ganesan Pondicherry 9787472712

No comments:

Post a Comment