அம்பாள் சொன்ன திருத்தலங்கள்!
அம்பாள் சொன்ன திருத்தலங்கள்! அம்பாளின் திருநாமங்கள் மட்டுமல்ல, அவளின் அருள் சுரக்கும் சில தலங்களின் பெயர்களும் மகிமைபெற்றனவாகத் திகழ்கின்றன. இதுகுறித்து சாட்சாத் பார்வதிதேவியே பர்வதராஜனிடம் விவரித்திருக்கிறாள். அம்பிகை சொன்ன அந்த இருப்பிடங்களில் சிலவற்றின் இன்றைய பெயர்கள் தெரியாவிட்டாலும்கூட, அந்த நாமங்களை அப்படியே படிப்பது நமக்கு நன்மை தரும். நவராத்திரி காலத்தில் அவற்றை உச்சரித்து அம்பாளை தியானிப்பதால் கூடுதல் பலன் உண்டு. சரி, அந்த இடங்கள் என்னென்ன தெரிந்துகொள்வோமா? லட்சுமிதேவிக்கு வாசஸ்தானமாகவும் மகாஸ்தானமாகவும் இருக்கும் கோலாபுரம். ரேணுகாதேவியின் இருப்பிடமான மாத்ருபுரம். துர்கா தேவியின் உத்தமமான இருப்பிடங்களான துளஜாபுரம், சப்தஸ்ருங்கம், இங்குலை, ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிரமரி, ஸ்ரீரக்த தந்திரிகா. அன்னபூரணியின் இருப்பிடமாகவும் தனக்குமேல் உயர்ந்த ஒன்று இல்லாததுமான காஞ்சிபுரம். பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்த ஏகாம்பரம். யோகேஸ்வரியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேஜோஸ்தாபம், விந்தியாசலம். பீமாதேவி. விமலா தேவி. நீலாம்பிகை. திருவானைக்காவல். ஸ்ரீநகரம். நேபாளத்தில் குஹ்யகாளி. தகராகாசமாகிய சிதம்பரம். வேதாரண்யம். சீனத்தில் நீல. . .
No comments:
Post a Comment