Friday, September 26, 2014

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் பற்றிய அறிய தகவல்கள்
•சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி சுயமாகத் தோன்றிய லிங்கம். இந்த இறைவன் தோன்றிய விதம் பற்றி வரலாறு கூறுவதாவது : சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்த்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஒடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும் என்று கூறிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோயில் உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் தங்கி பல சித்துக்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தங்கிய சித்தர்களின் பெயர்களால் அந்த இடங்கள் அவர் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகிறது.

• சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.
“இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்”.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் “பதினாறு” கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை” என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை “போகர்” சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி” கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

Wednesday, September 24, 2014

அதிர்ஷ்டம் வரும் பழமையான வழி

அதிர்ஷ்டம் வரும் பழமையான வழி

(share) செய்யுங்கள்)
பழமையான ஒரு அன்னதானத்தை உங்களுக்கு சொல்லபோகிறேன் அதில் இருந்து நீங்களே உங்களை சோதனை செய்துக்கொள்ளலாம் நீங்கள் அதிர்ஷ்டசாலியா அல்லது துர்அதிர்ஷ்டசாலியா என்று 
. 
அந்த காலத்தில் சிவனடியார்கள் ஏழைகளின் வீட்டிற்க்கு சென்று சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் பல பணக்காரர்கள் தவம் கிடைப்பார்கள்
சிவனடியார்கள் நம்ம வீட்டிற்க்கு வந்து உணவு அருந்திவிட்டு செல்லமாட்டார என்று பார்த்துக்கொண்டு இருக்கையில் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாத வீட்டிற்க்கு சென்று உணவை கேட்பார்கள். அந்த ஏழையும் அவர்களின் கையில் கிடைத்த உணவை கொடுத்து சாப்பிடச்சொல்லுவார்கள்.
சிவனடியார்கள் சந்தோஷத்தாேடு அதனை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.
சிவனடியார்களிடம் இருக்கும் சக்தி அந்த வீட்டில் இருந்த அனைத்து தரித்திரத்தையும் விரட்டிவிடும். பல ஜென்மங்களில் இருந்து வந்த கர்மா அனைத்தும் விலகிவிடும். ஒரு கோடி ஆத்மாக்களுக்கு செய்யும் அன்னதானம் ஒரு சாதுவிற்க்கு நாம் செய்யும் அன்னதானத்திற்க்கு சமம்.
உங்களின் வீட்டிற்க்கு உண்மையான ஆன்மீகவாதியை அழைத்து சாப்பாடு போடவேண்டும். குறிப்பாக அவர்களுக்கு சாப்பாடு தான் போடவேண்டும். கடையில் இருந்து சாப்பாடு வாங்கி போடாதீர்கள். உங்களின் வீட்டில் அமர்ந்து அவர்கள் சாப்பிடவேண்டும். சாப்பாடு போடும் நேரத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு இருக்கவேண்டும்.
ஒரு உண்மையான ஆன்மீகவாதிக்கு மட்டும் சாப்பாடு போட்டுவிட்டால் அந்த ஆன்மீகவாதி நினைத்தால் கூட உங்களுக்கு வரும் செல்வத்தை தடைசெய்யமுடியாது. ஆன்மீகவாதிகளிடம் இருக்கும் சக்தி உங்களுக்கு மிக உயர்ந்த ஒரு ஆசியை வழங்குகிறது.
உங்களிடம் இருக்கும் உணவை இன்முகத்தோடு அவர்களுக்கு நீங்கள் போடும்பொழுது அவர்களி்ன் முழுசக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.
இதனை நீங்கள் செய்தால் கோவிலுக்கு கூட போகதேவையில்லை.
இதில் என்ன ஒரு விஷேசம் என்றால் சம்பந்தப்பட்ட உண்மையான ஆன்மீகவாதி உங்களை வாழ்த்துவதைவிட அவர்களிடம் இருக்கும் சக்தி தான் உங்களை வாழ்த்தும்.எத்தனையே ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செயலில் நீங்கள் இறங்கி இருப்பீர்கள். இதனை நீங்கள் செய்தது உண்டா? செய்யவில்லை என்றால் உடனே செய்யுங்கள்.
உண்மையான ஆன்மீகவாதிகளை கூப்பிட்டு சாப்பாட்டை போடுங்கள். செல்வ வளம் உங்களின் வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
எதிலும் முன்னேற்றம் இல்லை அனைத்தும் தடைகள் தான் இருக்கிறது என்று நினைப்பவர்கள் உடனே இதனை செய்து பாருங்கள். அதிர்ஷ்ட காத்து உங்களை நோக்கி வீசும்

அக்னியின் பெருமை

அக்னியின் பெருமை
    அக்னியின் பெருமை

    ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னியை சாதாரண நெருப்பாகக் கருதக்கூடாது. அக்னிதேவன் மற்ற தெய்வங்களின் தூதர் போலவும், அவர்களது வாய் போலவும் செயல்படுகிறார். மனிதன் மற்ற தெய்வங்களுடன் தொடர்பு கொண்டு பேச அக்னியை பயன்படுத்திக் கொள்கிறான். உணவும் அக்னி மூலமே கொடுக்கப்படுகிறது.

    கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

    கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)
      கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)

      ஒரு மனிதனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருப்பதே அவனது திறமைதான். ஆனால், சிலர் இதை உள்ளடக்கி வைத்து இருப்பார்கள். கனகதாரா ஹோமம் பரம ஏழையைக் கூட செல்வந்தன் ஆக்கிவிடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தியுடையது. 

        மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

        மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
          மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)

          திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும் வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.

          வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)

          வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
            வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)

            மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், படிப்பில் மட்டும் கவனம் செல்லவும்,  நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும். 

            லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)

            லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
              லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)

              சர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்.

              மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)

              மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
                மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)

                பிறந்தநாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காக இது சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தை செய்தால் ஆயுள் விருத்தியடையும். நீண்டநாட்களாக தொடரும் வியாதிகள் நீங்கும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

                ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)

                ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
                  ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)

                  குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும். குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள் இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம் சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம். ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின் ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து வரலாம்.

                  அவஹந்தி ஹோமம் (விவசாயம்)

                  அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
                    அவஹந்தி ஹோமம் (விவசாயம்)

                    விவசாயத்தில் நல்ல மகசூல் பெறவும், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், ஆன்மிக வளர்ச்சி ஏற்படவும், "அவஹந்தி ஹோமம் நடத்த வேண்டும்.

                    முக்கிய ஹோமங்கள்கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)

                    சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.
                    • கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
                    • அவஹந்தி ஹோமம் (விவசாயம்)
                    • ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளுக்கு)
                    • மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி)
                    • லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)
                    • வித்யா ஹோமம் (கல்வியில் மேன்மை)
                    • மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை பாக்கியம்)
                    • கனகதாரா ஹோமம் (திறமையை வெளிப்படுத்த)
                    • அக்னியின் பெருமை
                    • கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)
                    • கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)

                      கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
                      கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.
                      ஹோமம் செய்யும் முறை:
                      அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
                      ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்
                      சங்கல்பம்:
                      சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
                      நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
                      ÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
                      ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
                      ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.
                      (தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.
                      எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.
                      (அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)
                      1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).
                      2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.
                      3. பரிஷேசனம்
                      அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
                      ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ
                      4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
                      இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
                      நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
                      சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
                      ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
                      நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.
                      5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.
                      6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:
                      7. பஞ்ச பூஜை:
                      லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
                      ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
                      யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
                      ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
                      வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
                      ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
                      (பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)
                      8. நெய்யால் ஹோமம்
                      ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
                      ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம
                      9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்
                      - நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,
                      ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).
                      10. நெய் ஹோமம்
                      கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
                      ஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)
                      11. நெல் பொரியால் ஹோமம்
                      உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.
                      12. தேங்காய் மூடியால் ஹோமம்
                      ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)
                      13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்
                      மூல மந்திரத்தால் 8 முறை செய்க.
                      14. 8 திரவியத்தால் ஹோமம்
                      ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம
                      15. கணேச காயத்ரீ ஜபம் - 10 முறை.
                      16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.
                      17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.
                      18. உத்தராங்கம்
                      பூ : ஸ்வாஹா அக்யை இதம்
                      புவ : ஸ்வாஹா வாயவ இதம்
                      ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்
                      அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)
                      19. பூர்ணாஹுதி
                      அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
                      பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
                      மூலமந்திரம் + வெளஷட்
                      பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
                      பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே
                      ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா
                      பிராணாயாமம் செய்க.
                      20. பரிஷேசனம்
                      அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
                      தே ஸவித : ப்ராஸாவீ :
                      வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்
                      21. பிரம்ம உத்வாஸனம்
                      ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
                      ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
                      (நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).
                      22. உபஸ்தானம்
                      ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
                      மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
                      யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
                      ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
                      யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
                      அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)
                      23. ரøக்ஷ
                      ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ
                      24. ஸமர்ப்பணம்
                      குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
                      ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
                      ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.

                    நவராத்தில் முதல் மூன்று நாட்கள்

                    நவராத்தில் முதல் மூன்று நாட்கள்
                    24-9-2014
                    25-9-2014
                    26-9-2014
                    சக்தியாகவும்.
                    2வது மூன்று நாள்
                    27-9-2014
                    28-9-2014
                    29-9-2014
                    ஸ்ரீதேவி
                    லஷ்மியாகவும்
                    3 வது மூன்று நாட்கள்
                    30-9-2014
                    01-10-2014
                    02-10-2014
                    சரஸ்வதியாகவும் வழிபாடவேண்டும்
                    03-10-2014 விஜயதசமி

                    Tuesday, September 23, 2014

                    "விநாயகர் 108 போற்றி"

                     "விநாயகர் 108 போற்றி"
                      
                    ஓம் சக்திவிநாயகா போற்றி
                    ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
                    ஓம் முழுமுதற் பொருளே போற்றி
                    ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
                    ஓம் உமையவள் மதலாய் போற்றி
                    ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
                    ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
                    ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
                    ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
                    ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
                    ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
                    ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
                    ஓம் காவிரி தந்த கருணை போற்றி
                    ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
                    ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
                    ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
                    ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
                    ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி
                    ஓம் பிரணவ சொரூபமே போற்றி
                    ஓம் வேதாந்த வித்தகனே போற்றி
                    ஓம் வாதாபி கணபதியே போற்றி
                    ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
                    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
                    ஓம் இளம்பிறை சூடினோய் போற்றி
                    ஓம் தம்பிக்கு உதவினாய் போற்றி
                    ஓம் கற்றோர்க்கு இனியாய் போற்றி
                    ஓம் கல்லார்க்கும் எளியாய் போற்றி
                    ஓம் உற்ற துணை நீயே போற்றி
                    ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி
                    ஓம் விண்ணோர் தலைவா போற்றி
                    ஓம் இருவினை தீர்ப்பாய் போற்றி
                    ஓம் அம்மையின் பிள்ளாய் போற்றி
                    ஓம் ஆதிமூல விநாயகா போற்றி
                    ஓம் துண்டி விநாயகா போற்றி
                    ஓம் கருணை செய்வாய் போற்றி
                    ஓம் வழித்துணை வருவாய் போற்றி
                    ஓம் வேதவிழுப்பொருளே போற்றி
                    ஓம் வேண்டும் வரமருளாய் போற்றி
                    ஓம் மூஞ்சூறு வாகனனே போற்றி
                    ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி
                    ஓம் ஆனைமுகத்தானே போற்றி
                    ஓம் ஒற்றைக்கொம்பனே போற்றி
                    ஓம் வேழமுகத்தானே போற்றி
                    ஓம் வரமருள் வள்ளலே போற்றி
                    ஓம் காலத்தை வென்றாய் போற்றி
                    ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
                    ஓம் வியாசருக்கு உதவினாய் போற்றி
                    ஓம் கயிலை சேர்ப்பிப்பாய் போற்றி
                    ஓம் திருமுறை காட்டியவனே போற்றி
                    ஓம் முத்தமிழ் வித்தக சாமியே போற்றி
                    ஓம் பெற்றோர் வலம் வந்தாய் போற்றி
                    ஓம் எருக்க மலர் ஏற்றாய் போற்றி
                    ஒம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
                    ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
                    ஓம் மாற்றுரைத்த விநாயகா போற்றி
                    ஓம் வல்லபையை மணந்தாய் போற்றி
                    ஓம் பெருவயிறு கொண்டாய் போற்றி
                    ஓம் காட்சிக்கு சாட்சியானாய் போற்றி
                    ஓம் பக்தர்க்கு அருளும் பரமனே போற்றி
                    ஓம் தாயினும் பரிந்தருள்வாய் போற்றி
                    ஓம் வன்னியிலை ஏற்பாய் போற்றி
                    ஓம் காலம் கடந்த கற்பகமே போற்றி
                    ஓம் வெவ்வினை அறுப்பாய் போற்றி
                    ஓம் வேட்கை தணிவிப்பாய் போற்றி
                    ஓம் கண்ணுதற் கடவுளே போற்றி
                    ஓம் முருகனின் அண்ணனே போற்றி
                    ஓம் முக்திக்கு வித்தானாய் போற்றி
                    ஓம் முக்குணம் கடந்தாய் போற்றி
                    ஒம் வெயிலுகந்த விநாயகா போற்றி
                    ஓம் கோடிசூரிய ஒளியினாய் போற்றி
                    ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
                    ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
                    ஓம் ஏழைக்கு இரங்கினாய் போற்றி
                    ஓம் விடலை விரும்பினாய் போற்றி
                    ஓம் எருக்குவேர் ஏற்றாய் போற்றி
                    ஓம் அனலாசுரனை அழித்தாய் போற்றி
                    ஓம் புத்தியருளும் புண்ணியா போற்றி
                    ஓம் ஆபத்தில் காப்பாய் போற்றி
                    ஓம் பாவமறுப்பாய் போற்றி
                    ஓம் விகடச் சக்கர விநாயகா போற்றி
                    ஓம் விண்ணவர் தொழும் விமலா போற்றி
                    ஓம் மண்ணுயிர்க்கொரு மருந்தே போற்றி
                    ஓம் கள்ளவாரணப் பிள்ளையே போற்றி
                    ஓம் திருமுறை காட்டிய திருவே போற்றி
                    ஓம் பேழைவயிற்று பெருமானே போற்றி
                    ஓம் இருவேறு உருவ இறைவா போற்றி
                    ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
                    ஓம் வேண்டும் வரமருள்வாய் போற்றி
                    ஓம் கரிமுகத்து எந்தாய் காப்பாய் போற்றி
                    ஓம் கற்றவர் விழுங்கும் கனியே போற்றி
                    ஓம் ஐந்தொழில் ஆற்றும் அப்பா போற்றி
                    ஓம் பாலும் தேனும் புசிப்பாய் போற்றி
                    ஓம் குணம் கடந்த குன்றமே போற்றி
                    ஓம் எண்ணும் எழுத்தும் ஆனாய் போற்றி
                    ஓம் பிறவிப்பணியை தீர்ப்பாய் போற்றி
                    ஓம் தோணியாய் வந்த துணைவா போற்றி
                    ஓம் மாலுக்கு அருளிய மதகரி போற்றி
                    ஓம் கரும்பாயிரம் கொள் கள்வா போற்றி
                    ஓம் அப்பமும் அவலும் புசித்தாய் போற்றி
                    ஓம் முப்புரி நூலணி மார்பினாய் போற்றி
                    ஓம் கருதிய செயலை முடிப்பாய் போற்றி
                    ஓம் செம்பொன் மேனி பெம்மான் போற்றி
                    ஓம் தடைகளை போக்கும் தயாபரா போற்றி
                    ஓம் சிறுகண் களிற்றுத் திருமுகா போற்றி
                    ஓம் அறுமுகச் செவ்வேள் அண்ணா போற்றி
                    ஓம் உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
                    ஓம் ஆக்கமும் ஊக்கமும் தருவாய் போற்றி
                    ஓம் வையம் வாழ்விக்க வந்தருள் போற்றி! போற்றி!! 

                    நாளை முதல் ஆரம்பிக்கலாமே அன்பு நட்புக்களே !!!

                    நாளை முதல் ஆரம்பிக்கலாமே அன்பு நட்புக்களே !!!
                    தீபம் உங்களுடன் பேசும்
                    அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும். 108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
                    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா........ சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்... இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்